450- வது பதிவு..
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்ட மலை தெய்வமே வெற்றி வேலே
வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்ட மலை தெய்வமே வெற்றி வேலே
முருகனின் தந்தை சிவபெருமான் குடி கொள்ளும் இடங்கள் முதுகுன்றங்களாக விளங்கும்! மைந்தன் குடியிருக்கும் இடங்கள் இளம் குன்றங்களாக அமையும்! இந்தக் `குருந்தமலை'யும் இளமையாகக் காட்சியளிக்கிறது.
- சரவணப் பொய்கையிலும் மக்கள் மனப் பொய்கையிலும் நீராடி துணை தந்தருள் முருகனிடம்அஞ்சுதலைச் சொன்னால் அந்த அண்ணலே தந்து வைப்பான் ஆறுதலை...
சற்றுத் தொலைவில் தெரியும் பெரிய மலைகளுடன் ஒப்பிடும் போது... இது. குழந்தைமலையாக வீற்றிருப்பது தெளிவாகிறது.
முருகக் கடவுள், `குழந்தை வேலாயுதசுவாமி' யாக இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது விவசாய நிலங்களுக்கு மத்தியில், கண்களுக்குக் குளிர்ச்சியாய்.. கருத்துக்கு இனிமையாய் பழனிமலையில் நின்றிருப்பது போலவே மேற்கு நோக்கி நின்ற வண்ணம் கோயில் கொண்டு வேலவன் காட்சியளிக்கிறான்.
குருந்தமலைக்கும் தெற்கே சஞ்சீவிமலையும், வடக்கே பகாசூரன்மலையும் தெரிகின்றன. அங்கே பகாசூரன் வசித்ததாகவும், நீலமலைத் தொடரின் ஒரு பகுதியாக விளங்குகிற அதன் அடிவாரத்தில்... ஆரவல்லி, சூரவல்லி கோட்டைகள் இருந்ததாகவும் அறியப்படுகின்றன. குருந்தமலையில்... ஏறிச் செல்ல படி வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.
மலையின் உயரம் நூற்றி இருபத்தைந்து அடிகள் ...ஏறிச் செல்ல எல்லோருக்குமே எளிதாக உள்ளது!
அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் ராஜகம்பீர வினாயகரின் அற்புதத் தோற்றம் கண்களுக்குத் தெம்பூட்டக்கூடிய சக்தியோடு விளங்குகிறது!
தன்னுடைய இளவல் வேலாயுதன் கோவிலுக்குச் செல்லுகிற பக்தர்களை ஆசீர்வதித்து அருள் வழங்கும்... அம்சத்தோடு இந்த. வினாயகப் பெருமான்... வீற்றிருக்கிறார் என்று எண்ணம் உண்டாகிறது..
முருகக் கடவுள் குடியிருக்கும் குன்றுகளிலெல்லாம் இருக்கும் இடும்பனையும் தரிசித்தோம்...
நாகதீர்த்தம், மயில் தீர்த்தம் ஆகியவை அமைந்துள்ள இடங்கள் நாகப்பாம்பினைப் போலவும், மயிலினைப் போலவும் காட்சியளிக்கின்றன..
முன்னர், இம்மலையில் குருந்த மரங்கள் நிறைய இருந்தனவாம்! இக் கோவிலின் ஸ்தல விருட்சமாக `குருந்தமரம்' தான் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தை வேலாயுதனின் குறு நகை தவழும் முகம் நம் எண்ணங்களில் வண்ணமயமாய்... அருள் பொழிகிறது.
விரிசெவி இரண்டும் காக்கும் வேலாயுதனின் காதுகளின் அமைப்பு கவனித்து நோக்கத்தக்கது..
விரிசெவி இரண்டும் காக்கும் வேலாயுதனின் காதுகளின் அமைப்பு கவனித்து நோக்கத்தக்கது..
தேவேந்திரன் புதல்வி தெய்வயானையை மணம் முடித்ததால் ராஜ அலங்காரமும், வேட்டுவர் இன மகளான வள்ளியைக் கைப்பிடித்ததால் வேடுவ அலங்காரமும் இறைவனுக்கு இங்கே செய்விக்கப்படுகின்றன. உருகி வேண்டுவோர்க்கெல்லாம் வரமளிக்கும் ஆனந்தத்தோடு, வேலாயுதத்தை கையில் கொண்டு நான்கடியே உயரமுள்ள ஆண்டவனாக இந்த தண்டபாணி நிற்கிறார்.
அர்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் மீன் சின்னமும், சூரியனையும், சந்திரனையும் சர்ப்பங்கள் தொட்டுக் கொண்டிருக்கிற கோலங்களும் காணப்படுகின்றன.
சூரிய, சந்திர கிரகண அடிப்படையை விளக்குபவைகளாக அவைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
.படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப் ப்ட்டுள்ளது. இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன.
ராஜ நாகலிங்கம் காணக்கிடைக்காத அதிசயம்...
முனிவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந் தவர், மாமுனி எனப் போற்றப்பட்டவர் அகத்தியர். அவர் தவம் செய்து பூஜித்து வணங்கிய தலம் 'குரு இருந்த மலை’ எனப்பட்டு, பிறகு காலப்போக்கில் மருவி, குருந்தமலை என்றாகிப் போனது...
அகத்திய மலைக்குடமுனி மட்டுமல்ல அனந்தனாகிய சர்ப்பமும், சூரியனும்... இந்த முருகக் கடவுளைப் பூஜித்த இடமாகவும்... இக்கோவிலுக்கு அருஞ்சிறப்புகளுண்டு. இன்றைய நாளிலும் கூட மார்ச் 21 , 22 , 23,, ஆகிய நாட்களில் இந்தக் கோவிலில் சூரியப் பூஜை தொடர்ந்து கொண்டிருப்பது கவனத்திற்குரிய அபூர்வமாகும்..
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டம் அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம் யானை வாகனத்தில் உற்சவம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடை பெறுகிறது...
.
புதிதாக கன்னி மூலை கணபதி கொடிமரத்திற்கு அருகில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டிருக்கிறார்..
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் 28 கி.மீ. தூரத்தில் காரமடை உள்ளது. அங்கேயிருந்து மேலும் 5 கி.மீ. தூரத்தில் அத்திக்கடவு செல்லும் பாதையில்... புங்கம்பாளையம் எனும் ஊரையடுத்து... அழகிய மலையாக `குருந்தமலை' அமைந்துள்ளது.
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
பங்கய மலரிதழ் தங்கிய திருவே
பரமனின் குருவே சரணம்
பன்னிரு விழியே புன்னகை மொழியே
பரிவுடன் அருள்வாய் சரணம்
முத்திரைப் பவுனே வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே சரணம்
கந்தா போற்றி
ReplyDeleteகடம்பா போற்றி
அழகா போற்றி
ஆறுமுகா போற்றி
அற்புதமா தரிசனம். மிக்க நன்றி.
450-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
I am making jewels Rajeswari.
ReplyDeleteBut you made a wounderful vaira, muthu, margatha,vaidurya,manika karkal kortha 450 gemstones added precious jewel dear.I am talking about your posts.
I congragulate you for your achievement dear.
Go ahead.
Here I feel lucky i am able to read all your posts very very happily.
O.K. about this post, really wounderful pictures.
I enjoyed a lot.
Thanks dear.
viji
தங்களின் 450 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். vgk
ReplyDelete450 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteதங்களின் 450 பதிவுக்கு என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்.இன்னும் பல ஆலயங்கள் உங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆசை.
ReplyDeleteகுருந்தமலை முருகனின் சிறப்பும் அதன் விபரிப்பும் கண்டு முருகனைப் போற்றிப் பணிந்து அழகுக்கு அவன் அவனே தமிழின் முதல்வன் என்று பாடிப்பணிந்த பரவசம் ..அந்த ஆலயத்தின் சிறப்பினை விபரித்தவிதம் மனதுக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteசூரிய உதயக்காட்சி கண்கொள்ளாக்காட்சி.உங்களுக்கு பகவான் ஒரு அனுக்கிரகத்தைக் கொடுத்திருக்கிறார் இத்தனை ஆலயங்களை தருசனம் செய்வதற்கு.
ReplyDeleteமாமுனி, குருவிருந்த மலை...அப்படிப் பல தசவல்கள் அருமை. நன்றி. 450வது பதிவிற்கும் சேர்த்து இரட்டை வாழ்த்துகள் சகோதரி. 4500 பதிவுகளும் இட வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எத்தனை கோலத்தில் பார்த்தாலும் முருகன் அழகுதான். நன்றி
ReplyDeleteமுருகா... கந்தக்கடவுளே சரணம்...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
தங்களின் 450 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteகுருந்தமலை முருகன் அழகோ அழகு.450க்கு வாழ்த்துகள்.
ReplyDelete450 ஆவது பதிவுக்காக இருபுறமும் உலகமே சுழன்று சுழன்று பார்த்து வியந்து போகுதே, அந்த முதல் படத்தில்!
ReplyDeleteஅனைத்தும் என்ன சாதாரண ஏனோ தானோ மொக்கை மஸாலாப் பதிவுகளா என்ன்!
உலகத்தரம் வாய்ந்தவைகள் !!
தங்கம், வைரம், வைடூர்யம், கோமேதகம், புஷ்பராகம், பவழம், நீலம், பச்சை மரகதம், ப்ளாட்டினம் போன்ற மிகச்சிறந்த பதிவுகள் அல்லவா!
முதல் வேலையாக திருஷ்டி சுற்றிப் போடச்சொல்லுங்கள். ;)))))
சுழலும் உலகங்களுக்கு இடையே உள்ள 450 ஆவது பதிவுக்குக் கீழே உள்ள படம் அடடா, அற்புதம்.
ReplyDeleteசமுத்திரத்தின் ஜலம் அந்த சூர்ய ஒளியில் ஜொலிக்குதே தங்களின் அழகழகான அன்றாடப் பதிவுகள் போலவே!
முழுச்சூர்ய வெளிச்சமாக கோடி சூர்யப் பிரகாஸமாக தாங்களும் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தப் போகிறீர்கள் என்பதை இந்த சின்ன சூர்ய உதயம் நீல வானத்தையும் நக்ஷத்திரங்களையும், கடலையும் கடல் நீரையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறதோ எனக்குத் தோன்றுகிறது. ;)))))
”அழகென்ற சொல்லுக்கு
ReplyDeleteஅருளென்று பொருள்”
முதல் முருகனும் கடைசிக் காவடியும் என பாதிப்படங்கள் அழகாகத் தெரிகின்றன.
மீதிப்படங்களை கண்டு களிக்க முடியாமல் திரை போடப்பட்டுள்ளது.
திறக்காமல் உள்ளது. அதனால் அருள் என்ற பொருள் விளங்காமல் தத்தளிக்கிறேன்.
எனினும் வழக்கம் போல அருமையான படங்களும், அற்புதமான விளக்கங்களும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
மேலும் மேலும் உற்சாகத்துடன் தினமும் இதுபோல ஆன்மிகம் என்னும் அமிர்தம் கலந்த ஞானப்பாலை ஊட்டி மகிழ்விக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
450வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
படங்கள் பேசுகின்றன. அருமை.
முருகன் தரிசனம் அற்புதம் ...450 ம் பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
ReplyDeleteகுருந்த மலை முருகனை பற்றிய தகவல்கள் அருமை. 450வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete”முத்திரைப் பவுனே
ReplyDeleteவித்தக அறிவே
முத்தமிழ் அமுதே
சரணம்”
வாசகர்களாகிய நாங்கள்
தெய்வாம்சம் பொருந்திய
சூப்பர் பதிவராகிய தங்களுக்கும்
அதையே ரிபீட் செய்கிறோம்.
“முத்திரைப் பவுனே
வித்தக அறிவே
முத்தமிழ் அமுதே
சரணம்”
என்றும் இன்று போல
ஆனந்தமாக வாழ்க வாழ்கவே !
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ராஜேஸ்வர்.
ReplyDeletehttp://minminipoochchigal.blogspot.in/2012/03/blog-post_05.html
450 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இதிலும் நாகபந்த சிலை அற்புதம் !
ReplyDeleteமனத்தில் தியானிக்க முருகன் திருவுருவம் சரியாக நிற்கவில்லை. தாங்கள் தொகுத்துள்ள ஒரு படம், என் மனதில் குடிகொள்ள இலகுவாக இருக்கும் போலுள்ளது. நன்றி.
ReplyDeleteமுதலில் உங்கள் 450-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதிலும் அது எனக்குப் பிடித்த முருகனைப் பற்றி இருந்தது, இன்னும் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. முருகனைப் பற்றி இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன். ( நான் குறிப்பாக எந்தக் கடவுளைப் பற்றியும் எழுதாதவன்.)வாழ்த்துக்கள்.
ReplyDeleteexellent. best wishes.
ReplyDeletei want to read the other blogs also.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - 450வது பதிவினிற்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - முருகப் பெருமானைப் பற்றிய படங்களூம் விளக்கங்களூம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete36. வெங்கடரமணா கோவிந்தா
ReplyDelete2413+6+1=2420
ReplyDeleteசெந்தில் என்ற பெயருக்கு தமிழ் பொருள் ???
ReplyDelete