




யுகாதித் திருநாள் படைக்கும் கடவுள் பிரம்ம தேவனின்
திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உகாதி என்ற சொல் "யுகா" என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது.
இதன் அர்த்தம் புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது.
இந்த நாளில் வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரித்து
அழகு படுத்துகிறார்கள்.
குடி பாடுவா’ என மகாராஷ்டிர மாநில மக்களும், சிந்தி மக்கள்
‘செட்டி சந்த்’ எனவும் புத்தாண்டு திருநாளை கொண்டாடுகின்றனர்.
‘செட்டி சந்த்’ எனவும் புத்தாண்டு திருநாளை கொண்டாடுகின்றனர்.
உகாதி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்கள் வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பார்கள்..
அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து புத்தாடை அணிந்துகொண்டு வீட்டில் பெரியவர்களிடம் ஆசி பெற்ற பின்னர் உகாதி ஸ்பெசல் இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வார்கள்..
பானாக்கம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம்.
கோடைகாலத்தில் உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. உகாதி நாளன்று இந்த பானம் செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

சைத்ர மாதத்தின் முதள்நாள்தான் பிரம்மன் உலகத்தை படைத்தார் என்று பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது
எனவே இந்த நாளில் புதிய செயல்கள் செய்ய நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வசந்தகாலத்தில் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.
எனவே இந்த நாளில் புதிய செயல்கள் செய்ய நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வசந்தகாலத்தில் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.
உகாதி விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவு உகாதி பச்சடி. இதில் மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு, என அறுசுவையும் கலந்து செய்யப்படுகிறது.

வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்தவே இதுபோன்ற உணவுகளை வருடத்தின் முதல்நாள் செய்யப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் வாழும் மரத்தியர்களால் யுகாதி புத்தாண்டு பிறப்பு வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் மராத்தியர்களும் இந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் அதிகாலையில் எழ்ந்திருந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து வீட்டின் முன்புறம் பல வர்ண பொடிகளால் "ரங்கோலி" என்று அழைக்கப்படும் கோலமிட்டு வீட்டின் வாயிலில் மாவிலை தோரணங்களினால் அலங்கரிப்பார்கள்..

வீட்டின் முன்புறம் "குடி" என்றுஅழைக்கப்படும் ஒரு முளைக்கம்பின் மேல்புறம் ஒரு சொமபினை கவிழ்த்து வைத்து அதை பட்டு துணியினால் சுற்றி பூக்களால் அலங்கரித்து நிறுத்தி வைத்து வழிபடுவார்கள்.
குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதத்தை உண்பார்கள்.
யுகாதி மகா உற்சவம் - ஸ்ரீசைலம் சிவன் கோவில்
வாழ்க்கை என்பது கசப்பும் இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
யுகாதி தின விருந்தில் பண்டிகையின் முக்கிய இனிப்பு பண்டமான "புரண் போளி" இடம்பெறுவது விஷேசம்...

புத்தாண்டு தினத்தை ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது ஒரு முக்கிய சடங்காகும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். யுகாதி பண்டிகை முன்னிட்டு, வாசனை திரவியங்கள் மூலம் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்..
யுகாதி பண்டிகை அன்று திருப்பதி கோவிலில் தேவஸ்தானம் சார்பில் “ஸ்ரீநந்தன நாம” ஆண்டுக்கான புதிய பஞ்சாங்கம் வெளியிடப்படும்..

;
ReplyDeleteவசந்தத்திருநாள் யுகாதி வாழ்த்துகள்.
படத்தில் காட்டியுள்ள முந்திரி மிதக்கும் பால் பாயஸமும்,வடைகளும் நாக்கில் நீரை வரவழைப்பதாக உள்ளன.
ReplyDeleteவேப்பம்பூக்களை
ReplyDelete”அப்படியே ... சாப்பிடுவேன்” [அலம்பிவிட்டு]
ஒரே நாளில் ஒரு பதிவிலிருந்து இரண்டு பதிவுகள் ஆகிவிட்டதே!
ReplyDeleteபோகும் போக்கைப்பார்த்தால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பதிவுகள் வீதம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை தான்!
அந்த அளவுக்கு ஞானமும், ஆர்வமும். நேரமும், கடும் உழைப்பும், சிரத்தையும், எல்லாவற்றையும் விட வீட்டிலுள்ளவர்களின் ஒத்துழைப்பும் உள்ளதே!
கொடுத்து வைத்த மகராசி தான். ;)
இனிய உகாதி வாழ்த்துக்கள்...
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
போளி பிரமாதம்.நெய்யை ஊற்றிச் சாப்பிடத் தூண்டுகிறது.சரி இன்று கிராண்டுக்குப் போயிட வேண்டியதுதான்!
ReplyDeleteநூதன ஸம்வத்ஸரோ சுபா காஞ்சலு!
How are you madam ?Happy telugu new year wishes for your family and you.
ReplyDeleteஆஹா! தேங்காய் + வெல்லம் பூர்ணத்துடன் சுடச்சுட நாலு போளிகள் உருக்கிய நெய்யினை அதன் தலையில் அபிஷேகித்து, பார்சல் .... ப்ளீஸ். அர்ஜெண்ட்டா வேணும்.... ப்ளீஸ்.
ReplyDeleteFrom this day upto Dasami these days are called Vasantha Navarathri.
ReplyDeleteAmbal pooja, Sundaragandam parayanam are done these days.
Happy Ugadi for you and your followers too.
viji
அனைவருக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ் நாட்டில் தமிழர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
ReplyDeleteசீரியல் பல்புடன் வெங்கிடஜலாபதி அழகு.. தட்டுல சாப்பாடு பார்க்கும்போதே பசிக்குது.
ReplyDeleteஎங்கூட்லயும் இன்னிக்கு பால்பாயசமும் பூரண்போளியும் செஞ்சு சாப்பிட்டாச்சு..
ReplyDeleteமச்சாவதாரப் பெருமாள் கண்ணுக்குள்ளயே நிக்கிறார்..
எங்கள் வீட்டில் பானகத்தில் புளிக்கு பதில் எலுமிச்சை ரசம் சில சொட்டுகள் சேர்ப்பது வழக்கம்
ReplyDeleteஃபோட்டோல இருக்கற பாயசம் நீங்க பண்ணினதா?
ReplyDeleteபொரி உருண்டைதான் தராம ஏமாத்திட்டீங்க.இதுவாவது உண்டா?
உம்மாச்சி படங்களும் வேப்பம்பூ படமும் சூப்பர்.
ReplyDeleteraji said...
ReplyDeleteஃபோட்டோல இருக்கற பாயசம் நீங்க பண்ணினதா?
பொரி உருண்டைதான் தராம ஏமாத்திட்டீங்க.இதுவாவது உண்டா?/
வசந்தமே வருக !
அசத்திவிடக் காத்திருக்கிறேன்..
உகாதிப் பச்சடியும் அதையொட்டிய பண்டிகையும் புதிய செய்தி எனக்கு !
ReplyDeleteநன்றி ! :)
ReplyDelete60. சாரங்கதரா கோவிந்தா
ReplyDelete2574+6+1=2581
ReplyDelete