Tuesday, March 13, 2012

ஜகத் ஜனனி !





சௌந்தர்யலஹரியினை உலகுக்கு அளித்த குரு ஆதி சங்கரரின் வாய்மொழியாக வரும் இசை மனதை நிறைவாக்கும் வல்லமை பெற்றது...

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2) 
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (3) 
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி.

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்.. 
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே.. 
நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)


ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. 
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்.. 
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்.. 
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)


அலை மாமகளே கலை மாமகளே.. (3)


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. 

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த 
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (4)

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்.. 
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)
சக்தி பீடமும் நீ.. .. சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!

அபிராமித் தாயே..அருளே வடிவான உமையவளே...  எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே...
நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், 
நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்....
 நான் வணங்குவதோ உனது மலர்ப்பாதங்களையே...
இமவான் செய்த பேறு அவனுக்கு உமையவள் மகளாகப் பிறந்தது. 

ஆகையால்தான் அவள் மலைமகளென்று பெயர் பெற்றாள். 

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஸநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருஸா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகையே! எல்லாமே உனக்கு அர்ப்பணம் என்று 
ஆத்ம சமர்ப்பண பாவனையுடன்
நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும், 
என் உடல் அசைவுகள் உன் முத்திரைகளின் விளக்கமாகவும், 
நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும், 
நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், 
நான் கிடப்பது உனக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், 
இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்.

 சிவாம்சமாய் அவதரித்த ஜகத்குருவான ஆதி சங்கரரும், அபிராமிப்பட்டரும் நாம் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டுமென்று கற்றுத்தருகிறார்கள்...
கற்பகவிருட்சமாகவும் ,காமதேனுவாகவும் அருளை வர்ஷிக்கும் அன்னையிடம் மதிப்பில்லாத பொருட்களை யாசிப்பதை விட்டுவிட்டு பவானியாக அவளையே பிரார்த்தித்துப் பெறும் வைரவரிகளை நமக்காக அளித்திருக்கிறார்கள்....

மாசறு பொன்னே வருக! - திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! - மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!







21 comments:

  1. Aha!!!!!
    Kalai polithil enna arputha darishnam.......
    Each and every photos are very very pretty. I enjoyed a lot.
    nindrum....
    jobosilba....
    Both the slokams are like heart beat tome.
    being chanting by heart ever ever. Seeing here felt very happy.
    The Devi decorated with bangles.....
    awesome.
    All the pictures you have selected here is so divine.
    Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  2. சகோதரி!
    நீண்டநாட்களாய் தங்கள் வலைப் பக்கம் வராமைக்கு மன்னிக்க!
    வயோதிகம், மறதி,தமிழ் மணத்தில் வரும் பதிவுகளை கண்ணில் படும் சிலவற்றைப் பார்ப்பதும் காரணமாகும்
    இனி தொடர்வேன்
    படங்களும் பதிவும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. காலையில் அம்மன் தரிசனம்

    ReplyDelete
  4. காலையில் அம்மன் தரிசனம்

    ReplyDelete
  5. காலையில் அம்மன் தரிசனம்

    ReplyDelete
  6. அன்னையின் கனிவான முகங்கள் மகிழ்ச்சியை அளிக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  7. அன்னையின் தரிசனம் அற்புதம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  8. சின்மவாகினியின் பெருமையும் ஆதிசங்கரரின் அன்னையுமான ஜகன் மோகினியின் அழகிய வரலாற்றினையும் கண்கவர் காட்சிகளையும் தந்து உள்ளம் மயங்க வைத்துவிட்டீர்கள் .வாழ்த்துக்கள் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. அருமையான பதிவு...ராஜாவின் இசையில் ஜனனி பாடல் மறக்கமுடியாதது .......

    ReplyDelete
  10. ஜகத் ஜனனி !

    தலைப்பே சூப்பர் !

    ஜனனி ஜனனி .. ஜகம் நீ .. அகம் நீ பாடலும், அதன் மேல் காட்டுள்ள படமும் [அதாவது மேலிருந்து கீழாக மூன்றாவது படமும்] காணக்கிடைக்காத ஒன்று. நான் நேரில் பலமுறை கண்டு களித்த நாட்களை எண்ணிப் பார்த்து எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  11. ஸ்லோகத்துடன் காட்டப்பட்டுள்ள அன்னபூரணி படம் பார்த்து அசந்து போனேன். இதை இன்று எங்களுக்குக் காட்சி தந்து அருளியுள்ள உங்களுக்குத் தான் மிகவும் புண்ணியம் உண்டு.

    அந்தப்படத்தை மட்டுமே ஒரு பத்து பின்னூட்டங்கள் கொடுத்து வர்ணிக்க எனக்கும் ஆசை தான். இருப்பினும் சூழ்நிலை எனக்கு சரியில்லை.

    புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    சிரித்த முகம், கோவை[ப்பழ] இதழ்கள், அழகான புஷ்பமாலைகள், நெஞ்சிலே ஜொலிக்கும் ஆபரணங்கள்+கிரீடம், அழகான புடவைக்கட்டு,
    கையிலே அக்ஷய பாத்திரமும், நீண்ட கரண்டியும் .... அடடா!
    அற்புதம் அற்புதம்.. அழகோ அழகு!
    நெஞ்சம் குளிர்ந்து போனது. ;)))))

    ReplyDelete
  12. அழகழகான வளையல்களுடன் காட்டப்பட்டுள்ள அம்மன் ரொம்ப ஜோர். பார்க்கப்பார்க்க பரவஸமாக உள்ளது. எப்படித்தான் இத்தகைய படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடுகிறீர்களோ!

    பிரமிப்பாக உள்ளது. உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.

    You are SO GREAT !

    ReplyDelete
  13. கடைசியில் காட்டப்பட்டுள்ள வட்டவ்டிவப்பூக்கோலம் அழகாக கண்ணைக் கவருவதாக உள்ளது.

    இன்றைய பதிவினை மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பேன், வாசிப்பேன், சூழ்நிலை சாதகமாக அமையுமானால் மேலும் எனக்குத் தோன்றுவதைச் சொல்ல வந்தாலும் வருவேன்.

    இன்றையப் பொழுதாவது இனிமையாகச் செல்ல ஜனனி அருள் புரியட்டும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    மனமார்ந்த நன்றிகள்.

    Bye for now ..... vgk

    ReplyDelete
  14. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  15. Seenivasan KalaiyarasiMarch 13, 2012 at 2:05 PM

    Amudhai pondra Azhagaiyum Arulaiyum Pozhiyum Ambalin Dharisanam..Arumaiyana pathivu..

    ReplyDelete
  16. அண்ணப்பூரணி அம்மனின் படங்கள் கொள்ளை அழகு. பதிவை படிப்பதைவிட படங்களை பார்க்கவே உங்கள வலைப்பூவிற்கு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - படங்கள் அத்தனையும் அருமை - பார்த்துக் கொண்டே இருக்கலாம் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. படங்களும் பதிவும் அருமை...

    தொடருங்கள் ...தொடர்கிறேன்...

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete