





சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எங்களை
விட்டுப் பிரிஞ்சு போன போன உன்னை கண்கள் தேடுது..
விட்டுப் பிரிஞ்சு போன போன உன்னை கண்கள் தேடுது..
ஏ..குருவி..சிட்டுக் குருவி
உன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு ..கட்டு பொன்னான கூடு....




ஒரு பறவை இனம் அழியும்போது, அதனுடன் இணைந்த ஒரு தாவரமும் அழிகிறது.
இது, விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்து.
அழிவின் விளிம்பில் உள்ள பல பறவையினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று.
அழிவின் விளிம்பில் உள்ள பல பறவையினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று.
ஆலமரம், அரச மரங்கள் வெட்டி வீசப்படும் போது, நாம் அடிக்கடி காணும் ஆகாய்த்தோட்டி - உண்டு காட்டி - இனத்தோடு கலந்துண்ணும் - காகம் இனம் அழியக்கூடும்.


எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக்கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளன.



விரைவில் நம் நாட்டில் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் உயரும். அவர்கள் சேவைக்காக மொபைல்போன் டவர்கள் அதிக அளவில் அமைக்கப்படும்.
மொபைல்போன் டவர்களில் இருந்து வரும் மின், நுண் அலைகளால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தேனீக்கள் இனமும் மொபைல்போன் டவர் மின் அலைகளால் அழிந்து வருகிறது.
மொபைல்போன் டவர்களில் இருந்து வரும் மின், நுண் அலைகளால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தேனீக்கள் இனமும் மொபைல்போன் டவர் மின் அலைகளால் அழிந்து வருகிறது.
Bangaloreans lap up sparrow houses

வீட்டின் வெளிப்புறங்களில் தானியங்கள் சிதறிக்கிடந்த காலமும் , வீட்டில் படர விடப்படும் தாவரங்களும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டன..
இவற்றில் இருந்து வெளியே வரும் பச்சை புழுக்களை சிட்டுக்குருவி தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கும். வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்கும் வழக்கம் மறைந்து விட்டதால், சிட்டுக்குருவிகள் தனது குஞ்சுகளுக்கு நீர்ச்சத்து நிறைந்த உணவு கொடுத்து வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.


\மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதும் . கான்கிரீட் கட்டடங்களின் ஆக்கிரமிப்பாலும் தேடிப்பிடிக்க வேண்டிய நிலைக்கு மாறி விட்டன. தங்குமிடம், உணவுக்கான பிரச்னை ஏற்பட்டதால் இவை பல கி.மீ., தூரம் பயணமாகி இடத்தை மாற்றிக் கொள்கின்றன.

உணவுச்சங்கிலியில் புழுக்களை உட் கொள்ளும் முக்கிய நணபனான சிட்டுக்குருவி இனத்தை காக்க வேண்டும்,
எங்கும் காணப்பட்ட சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை.

இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின்மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன .
இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்
ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது.
ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.



பழக்கப்பட்ட குருவிகள் பறம்புமலையை மூவேந்தர்கள் முற்றுகை இட்டிருந்தபோது நெற்கதிர்களைக் கொண்டுவந்து பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கியதாக ஒரு சங்க இலக்கியப் பாடல் தெரிவிக்கிறது



"குருவி சேர் குன்றம் ஒத்து"என மேருமந்திர புராணமும் இந்தக் குருவி உவமையைக் காட்டுகிறது.




Shut Up Please…















; அனைத்துக்குருவிகளும் அழகோ அழகு. கூழாங்கற்களின் மேல் அமர்ந்திருக்கும் அசையும் குருவி தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteஇனிமே இப்படி படங்கள்லதான் பார்த்துக்கணும் போல இருக்கு..
ReplyDeleteஅனைத்துப்படங்களும் செய்திகளும் அருமை. செல்போன் டவர்களால் அழிவது புதிய தகவல்.
ReplyDeleteஅறிவியல் பூர்வமான அலசல். கூட திருத்தக்க தேவரும், வாமன முனிவரும் வந்து போகும் இலக்கிய எடுத்துக்காட்டுகள் வேறு.
ReplyDeleteஅங்கங்கே உங்க ஸ்பெஷாலிட்டியான புகைப்படக் குவியல்! அம்மாடி! அந்த சிட்டுக்குருவி தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும் அழகு தான் என்னே! கூட்டமாய் முன்னே வந்து வந்து நெல்மணிகளைக் கொத்திக் கொத்தி...
படங்களும் பதிவும் நல்லா இருக்கு
ReplyDeleteசிட்டுக்குருவி தினத்தில் சீரிய பதிவு அருமை.படங்களும் அருமை.நானும் சிட்டுக்குருவி பற்றிய இடுகை இன்று வெளியிட்டுள்ளேன்.http://shadiqah.blogspot.in/2012/03/blog-post.html
ReplyDeleteசிட்டுக்குருவிகள் அத்தனையும் அழகோ அழகு! தகவல்களும் அருமை!!
ReplyDeleteவணக்கம்! சிட்டுக் குருவிகளுக்கு அடைக்கலக் குருவிகள் என்றும் பெயர். முன்பெல்லாம் கிராமங்களில், சிட்டுக் குருவிகள் கொத்தித் தின்பதற்காக, வீட்டு வாசற் கூரையில் புதிதாக அறுத்த நெல் மணிகளைப் பச்சை வைக்கோலுடன் செருகி வைப்பார்கள். உங்கள் பதிவும் படங்களும், பழைய கிராம வாழ்க்கையை ஞாபகப் படுத்தி விட்டன.
ReplyDeleteசிட்டுக் குருவி தினத்தில் எவ்வளவு அருமையான படங்களுடன் அது இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று விளக்கததுடன் அருமையான கட்டுரை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நானும் நேற்று ஒரு பதிவு சிட்டுக் குருவிப் ப்ற்றி போட்டு இருக்கிறேன்.
நல்ல பகிர்வு....
ReplyDeleteஅழகான படங்களுடன் சிட்டுக் குருவிகளுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். இங்கு கல்கத்தாவில் இன்னும் நிறைய சிட்டுக் குருவிகள் இருக்கின்றன.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
அழகழகான குருவிகளின் படங்களுடன் அவை குறித்தத் தகவல்களையும் அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
ReplyDeleteதொகுப்பில் தங்கள் பதிவினையும் இணைத்துக் கொண்டேன். மிக்க நன்றி.
மிகவும் அழகான அசையும் படங்கள்....குறிப்புகளும் பொலிகின்றன.....பகிர்வுக்கு நன்றி..படங்களுக்காக விசேட பாராட்டுகள்
ReplyDeleteஆஹா எத்தனை குருவிகள்! எல்லாத்தையும் இங்கதான் பார்க்கமுடிகிறது.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅசத்திவிட்டீர்கள். எனது அன்பான வாழ்த்துகள்
ReplyDeleteவிதவிதமான சிட்டுக்குருவிகளை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனமே அழிந்து வருவதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படத்தொகுப்புகள்.
வாழ்த்துகள்.
55. பத்மாவதி பிரிய கோவிந்தா
ReplyDeleteசிங்காரமாக இருக்கிறது உங்கள் பதிவு.
ReplyDeleteஅழகழகான புகைப்படங்களுடன் அருமையாக இருந்தது.எண்ணற்ற தகவல்கள். குருவிகளை இப்படி புகைப்படங்களில் தான் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.என்ன செய்வது?
பகிர்விற்கு நன்றி.
ராஜி
2547+2+1=2550
ReplyDelete;) ஆஹா, கூழாங்கற்கள் மேல் குருவியுள்ள பதிவு ;)