Saturday, March 3, 2012

திரு அருளும் திருவஹீந்திரபுரம்:


 DSC01606.JPG
108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகத்திகழும் நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படும்தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார் அருளும் திருவஹீந்திரபுரம்:மிகவும் சிறப்புப் பெற்றது..
Sri Devanatha Perumal with Consorts, Thiruvaheendrapuram

DSC01743.JPG
தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள்
தாயார் ஹேமாம் புஜவல்லி. பார் அனைத்தையும் காக்கும் பெருமை பெற்றவள் என்பதால் பார்கவி என்ற திருநாமமும் உண்டு. இங்குள்ள உற்சவருக்கு "மூவராகிய ஒருவன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

பிரம்மாவுக்குரிய தாமரை, சிவபெருமானின் நெற்றிக்கண், தலையில் ஜடாமுடி, கையில் சங்கு,சக்கரம் ஏந்தி மும்மூர்த்திகளின் அம்சமாக வீற்றிருக்கிறார்.

 கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகள் புகழ்பெற்றவை ...

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்ல தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். 

அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும்.

கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. 

ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. . 

குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் தோசம் நிவர்த்தி ஆகும்.

ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் 
முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.

ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையான ஆஷாட மலை மருத்துவ குணம்  நிறைந்தது..

ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் சிறப்புப் பெற்றவை.

தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர். 

அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது.

தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். 

ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.
நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இவர்களை வணங்கி நல்ல செயல்களைத் துவங்கலாம்!
கடலூரிலிருந்து(3kms) பண்ருட்டி செல்லும் வழியில் திருவகிந்திபுரம் உள்ளது.
DSC01572.JPG
DSC00759.JPG

16 comments:

  1. காலை ஐந்து மணிக்கு இன்று அதிர்ஷ்டவசமாக விழித்திருந்ததால் இந்தப்பதிவில் உள்ள தெய்வங்களை சுடச்சுட சூடாக தரிஸிக்க முடிந்தது. மனம் ஜில்லென்று ஆனது.

    ReplyDelete
  2. மேலிருந்து 2 ஆவது படம் திறக்கப்பட வில்லை. 3 ஆவது படம் இன்றைய மிக மிக சூப்பரான படமாக நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

    அதிலுள்ள ஹேமாம்புஜவல்லித் தாயார் நல்ல கம்பீரம். நகை நட்டுக்களும். புஷ்ப அலங்காரங்களும், புடவைக்கட்டும் படு அமர்க்களமாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  3. கடைசியிலிருந்து 2 மற்றும் 3 ஆவது படங்களில் ஸ்வாமியும் அம்பாளும் நல்ல பிரமாதமான அலங்காரத்தில் உள்ளது பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    அதுலும் 3 ஆவது படம் ரொம்ப டாப்.

    கனகாம்பர கலரில் முரட்டு மாலைகள்.

    ஸ்வாமிக்கு பட்டை பார்டருடன் பச்சைக்கலர் மயில்க்கண் பட்டு, அம்பாளுக்கு அற்புதமாக பட்டுப் பாவாடை அதுவும் ஜொலிக்கும் கேசரிக்கலரில் அரக்கு ஜரிகை பார்டரில். தலையில் கொண்டை அலங்காரம், கழுத்தில் திருமாங்கல்யம்+நிறைய நிறைவான நகைகள் என அதி அற்புதக்காட்சியாக அமைந்துள்ளது. ;)))))

    ReplyDelete
  4. திரு அருளும் திருவஹீந்திரபுரம் இன்றைய திகட்டாததோர் பதிவு.

    பல்வேறு பயனுள்ள தகவல்கள்.
    இன்னும் நடுவில் ஒரே நாள் தான் பாக்கி உள்ளது. IMPORTANT MILESTONE ஒன்றை எட்டுவதற்கு. அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    //கடலூரிலிருந்து 3 KMs பண்ருட்டி செல்லும் வழியில் திருவகிந்திபுரம் உள்ளது//

    பண்ருட்டி போகாமலேயே ஒரு அடுக்கு நிறைய தேனில் பண்ருட்டி பலாச்சுளைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்ட மகிழ்ச்சி கிடைத்தது, இந்தத்தங்களின் பதிவை பார்த்து, படித்து, வியந்து, பின்னூட்டம் இட்ட ஒரு மணி நேரத்தில்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இனி தான் சற்றேனும் நான் தூங்க முயற்சிக்க வேண்டும். Bye for now.

    ReplyDelete
  5. கடலூரில் இருந்து பாலூர் வழியாக பன்ரூட்டி செல்லும் வழியில் இருக்கிறது இந்த கோவில்.... மிக அழகிய கோவில்....

    சிறு வயதில் சென்றிருக்கிறேன்...

    அழகிய விவரங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. திருவஹீந்திரபுரம் திருத்தல பெருமையுணர வைத்த பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  7. வழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அழகான படங்களுடன் மீண்டும் நல்லதொரு பதைவை தந்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. திருவஹீந்திரபுரம் பற்றிய தகவல்கள் அற்புதம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  12. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. பார்த்துக் கொண்டே இருக்கும் படியான படங்கள் - கண்ணைக் கவரும் படங்கள் - அதற்கேற்றால் போல ஸ்தல் புராண விளக்கங்கள் - முழுத் தகவல்களையும் தரும் பதிவு - பாராட்டுகள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. 34. கோகுல நந்தன கோவிந்தா

    ReplyDelete