ஹயக்ரீவர் மூல மந்திரம்
உக்தீக ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய ஸர்வம் போதய! போதய!
நிலை பெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் அதிகரிக்கும் தகைமை பெற்ற உயர்ந்த செல்வம் கல்வி.. ஒருமைக்கண் தான் பெற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைய பெருமை பெற்றது..
அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.
கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்புரியும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட கல்வி தெய்வம்' ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் கோவில்கள் உள்ளன. செட்டி புண்ணியம் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப் புகழ் பெற்றது.
அதற்கு நிகரான சிறப்பை சென்னை காட்டாங்கொளத்தூரை அடுத்துள்ள செட்டி புண்ணியம் கிராமத்தில் இருக்கும் தேவநாதசுவாமி கோவிலும் பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார்.
தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்த ஆலயத்துக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
பள்ளி இறுதித்தேர்வின் போது, மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தை போக்கவும், ஞாபக மறதி இல்லாமல் இருக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் செட்டி புண்ணியம் கோவிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜையின்போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்த பிறகு பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைப்பார்கள். அந்த ரட்சையை கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைத்துள்ளது.
செட்டி புண்ணியம் கிராமம்.
செட்டி புண்ணியம் கிராமம்.
இங்கு 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
கடலூர் அருகே உள்ள திருவ்ஹீந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து செட்டிப்புண்ணியம் கிராமத்தில் எழுந்தருள வைத்தனர்...அவருடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் எடுத்து வரப்பட்டார்.
வரதராஜசுவாமி கோவிலில் தனி சன்னதியுடன் ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன், ஹனுமன், சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிராம பொதுமக்களால் திருப்பார்வேட்டை உற்சாவம் நடத்தப்படுகிறது.
தைவெள்ளி, ஸ்ரீஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ தேசிகன் சாத்துமுறை, பெருமாள் அவதார உற்சவம், விஜயதசமி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், உடையவர் சாத்துமுறை, ஸ்ரீராமநவமி உற்சவங்கள் உபயதாரர்கள் மூலம் நடந்து வருகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு தெற்கே மகேந்திராசிட்டி ஸ்டாப்பிற்கு எதிரில் (லைட் ரூபிங் பேக்டரி) மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செட்டிப்புண்ணியம் கோவில் உள்ளது
Awesome post!!! <3 Lovely pictures.
ReplyDeleteசெட்டிப் புண்ணியம் பற்றிய உபயோகமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
அழகானபடங்களுடன் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteதாங்கள் தினமும் ஒரு பதிவு தருவதுபோல, தினமும் தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteநேற்று தன்வந்தரி கொடுத்த அமிர்தமான மருந்தின் மகத்துவம், இன்று திருமணத்திற்கே, அதுவும் சம்பிரதாயங்களுடன் கூடிய திருமணங்களுக்கே வழிவகுத்துள்ளது!
;)))))
//அர்த்தம் புரிஞ்சி யார் சொல்றா? பல சம்பிரதாயங்களுக்கே அர்த்தம் புரியாம தப்பு தப்பா செஞ்சிட்டிருக்கோம். திருமணச்சம்பிரதாயங்களுக்கு இராஜராஜேஸ்வரி மேடம் சொல்ற காரணங்களைப் புரிஞ்சிகிட்டாவது இனி ஒழுங்கா செய்யணும்//
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
கடைசி படத்தில் காட்டப்பட்டுள்ள கழுதைக்குட்டி [ஒரு வேளை குதிரைக்குட்டியோ?]
ReplyDeleteகுதிரைப்படம் போட்ட புத்தகத்தைப் படிக்கப்போகிறதா? அல்லது தின்றுவிடப்போகிறதா என்று தெரியாமல் ஒரே கவலையாக உள்ளது.
வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக நல்ல படங்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteவெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிக நல்ல படங்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteகல்வி செழித்ததும் கல்விகற்ற குழந்தைகளை மனம் மகிழச்செய்ய குதிரைகள், யானைகள், பூனைகள் என கடைசியில் காட்டி அசத்தப்பட்டுள்ளன.
ReplyDeleteஇரண்டு கருத்த யானைகளுடன் ஓர் வெள்ளைக்காரி.
ReplyDeleteபறங்கிப்பழம் போன்ற அவளின் இயற்கை நிறத்தை இன்னும் பொலிவாகக் காட்டுகின்றன அந்த கருத்த யானைகள்.
அந்தக்குட்டியானையின் துதிக்கையை ஓர் கையால் தூக்கி, வாயில் உள்ள பல்லை பதம் பார்த்து ஆராய்ச்சி செய்து குறிப்புகள் எடுக்கப்போகிறாரோ?
ReplyDeleteஇவ்வளவு படங்களையும், தகவல்களையும் எப்படித்தான் திரட்டுகிறீர்களோ? அதற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeleteவழக்கம் போல் அருமையான பகிர்வு.
ReplyDeleteபூனைகுட்டி பிரமாதம்.
வெள்ளிக்கிழமை என்றாலே தானாக உங்கள் ஞாபகம் வருகிறது சகோதரி.படங்களைப் பார்த்தாலே மனதிற்கு அமைதி !
ReplyDeleteபூஸார் சூப்பர் !
பதிவு அருமை! தாங்கள் அடுத்து, திரு இடை மருதூர் மஹாலிங்கேசுவரர் பற்றி எழுதுங்கள். சிவம் - 2பதிவில் வர இருப்பது இவ்வாலயம். எனது பாணியில் எழுதுகின்றேன். தொடருங்கள்...தொடர்கிறோம். நன்றி!
ReplyDeleteநல்ல க்ஷேத்திரம்.
ReplyDeleteசிறுவயதில் காட்டாங்குளத்தூர் எத்தனையோ முறை சென்றிருக்கிறேன்.. கோவில் கேள்விப்பட்டது கூட இல்லை! எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ. தமிழ்நாட்டில் கோவிலுக்கா பஞ்சம் என்றாலும் நீங்கள் எடுத்துச் சொல்லாவிட்டால் அனேக கோவில்கள் தெரியாதிருந்திருப்பேன்.
ReplyDeleteகுதிரை பந்து விளையாடும் படம் சுவை.
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
50. ஸ்ரீ வத்ஸாங்கித கோவிந்தா
ReplyDeleteFantastic. No words to praise you.
ReplyDeleteThank you.
அனைத்தும் அருமை
ReplyDeleteநமஸ்காரம் சுவாமிஜி ..
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
மனம் நிறைந்த நன்றிகள்..
அனைத்தும் அருமை
ReplyDelete2508+8+1=2517
ReplyDelete