Saturday, March 17, 2012

அதிசயமே ! அதிசயமே !!!



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் அதிசயமே

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
 Butterfly glitter
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் அதிசயம் கிராண்ட் கான்யான்.....

உலக இயற்கை விந்தைகளில் கிராண்ட் கான்யானும் இடம் பெறுகிறது.. 
இந்தப் பாறைகள் மணற்பாறை , சுண்ணாம்புக் கற்பாறை, கருங்கல் ஆகியவற்றால் ஆனவை.
இங்கே பாறைகள் பல வண்ண அடுக்குகளாகக் காட்சியளிக்கின்றன. 
இவ் வண்ணங்கள் சூரிய ஒளியில் பிரகாசிப்பதை சுற்றுலாப் பயணிகள் இன்றும் அதிசயமாக கண்டு ஆனந்தித்துக் களிக்கின்றனர்.
கொலரோடா ஆறு இன்றும் ஆண்டொன்றுக்கு பல மில்லியன் டன் மணலையும், சரளைக் கற்களையும் அடித்துச் செல்கிறது. 
எனவே, அரிமானமும் தொடர்கிறது. 
1540-ஆம் ஆண்டில் ஸ்பானியர்கள் இப்பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தனர். 
1919-ஆம் ஆண்டு கொலரோடா பள்ளத்தாக்கு ஒரு தேசியப் பூங்காவாக ஆக்கப்பட்டது. 
இப்பள்ளத்தாக்கின் மொத்த நீளம் 349 கி.மீ., இதில் சுமார் 169 கி.மீ., தேசியப் பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிசய கண்ணாடிப்பாலம் !!
இயற்கை விந்தையான இப்பள்ளத் தாக்கையும், பாறை அடுக்குகளின் பல வண்ணங்களையும் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அரிசோனா என்னும் இடத்தில் ஓடும், "கொலரோடா' என்னும் ஆறு, அங்குள்ள பெரிய பாறைகளுக்கு இடையே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதன் கிளை ஆறுகளும் ஓடிக் கொண்டிருந்தன.
ஆனால், இன்றோ கொலரோடா ஆறு அதல பாதாளத்தில் ஓடுகிறது. ஏன் தெரியுமா? பாறைகளை ஆற்று நீர் அரித்து, அரித்து பெரிய பள்ளத்தாக்கு களையே உண்டாக்கியுள்ளன.
இதை ஆங்கிலத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு எனப் பொருள்படும், "கிராண்ட் கான்யான்' என்று சொல்வர்.
இவ்வாறு கொலரோடா ஆறு உண்டாக்கிய பள்ளத்தாக்குகளில் ஒன்று ஒன்றரை கிலோ மீட்டர் ஆழமும், இருபத்தொன்பது கிலோ மீட்டர் அகலமும் என்றால் ஆற்று நீரின் அசுர அரிப்புத் தன்மை வியக்கத்தானே வைக்கும்.....
animated gif of ATST imperial "chicken walker" decloaking in the Grand Canyon


29 comments:

  1. மேடம் விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...படங்கள் அருமயா சேர்த்து இருக்கீங்க!

    ReplyDelete
  2. அழகான படங்களும் அதிசயத் தகவலும் அருமை!

    ReplyDelete
  3. கண்கொள்ளா காட்சி. இருகண்கள் பத்தாது. நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  4. I remember the day I visited this place along with my son.
    Wounderful memories.
    Thanks for the photos.
    I enjoyed watching it here again.
    viji

    ReplyDelete
  5. அழகான படங்களும் அதிசயத் தகவலும் அருமை!

    ReplyDelete
  6. மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட நல்ல கவிதை!
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க வைத்த படங்கள்!
    நன்றி. நன்றி!

    ReplyDelete
  7. மனதில் ஆழப் பதிந்துவிட்ட கவிதை!
    மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்கள்!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. அழகிய படங்களுடன் வந்துள்ள பகிர்வு. அருமை.

    ReplyDelete
  9. மிக நல்ல பகிர்வு.. அதிசய பள்ளத்தாக்கு கிராண்ட் கான்யான் பற்றிய தகவல்கள் அதிசயக்கின்றன. நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete
  10. வணக்கம்! வண்ணப் படங்கள் சொல்லும் செய்திகள் ஆயிரம்! திரும்பத் திரும்ப பார்க்க வைத்த அதிசயம்!

    ReplyDelete
  11. படங்கள்மீண்டும் பார்த்து பார்த்துரசிக்கத் தூண்டும் நன்றி. நன்றி!

    ReplyDelete
  12. அருமையான படங்கள்.

    ReplyDelete
  13. எனக்கு மிகவும் பிடித்தமான அழகிய அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளைக் கொண்ட இந்தப் பதிவும் அதிசயமே!

    ReplyDelete
  14. அதிசயமே அசந்துபோகும் அதிசயம்
    “கிராண்ட் கான்யான்” என்பதை நாங்களும் அறிய முடிந்தது, தங்களின் அழகான விளக்கங்கள் மூலம்.

    ReplyDelete
  15. இங்கே பாறைகள் பல வண்ண அடுக்குகளாகக் காட்சியளிக்கின்றன என்ற வரிகளுக்கு மேல் காட்டியுள்ள படம் கண்ணைக் கவருவதாக மிக அழகாக உள்ளது. நீல நிறத்தில் தண்ணீர் அசைவது அருமையோ அருமை.

    ReplyDelete
  16. அதிசயக் கண்ணாடிப்பாலம் மிகவும் வியப்பளிக்கிறது.

    சுற்றுலா செல்பவர்களுக்கு இது சொர்க்கமே தான் !

    ஆற்று நீரின் அசுர அரிப்புத்தன்மை உண்மையிலேயே வியப்பளிப்பதாகவே உள்ளது.

    கிராண்ட் கான்யான்=
    மிகப்பெரிய பள்ளத்தாக்கு; பொருத்தமான விளக்கம் தான்.

    ReplyDelete
  17. மூன்றவது படத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சியும், கடைசியிலிருந்து மூன்றாவது படமும்,
    காட்டு மரங்களுக்கு இடையில் சைக்கிள் ஓட்டுபவரும், அதற்கு மேல் உள்ள பாறைகளின் நடுவே அடிக்கடி தீப்பிடிப்பது போன்றும் அதை இரண்டு ஒட்டகக்கால்களுடன் ஒரு கருத்த கேமரா புகைப்படம் எடுப்பது போலவும் ஏதேதோ காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    மிகவும் அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  18. கண்ணுக்கு அருமையான விருந்து
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ஒரு நடை போயிட்டு வந்துறலாம்னு தோணுதுங்க.. படங்கள் பிரமாதம். அளவான விவரங்கள்.

    ReplyDelete
  20. அருமையான படங்கள், கண்களை மலரசெய்யும் அதியம்.
    பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  21. பரவசம் தரும் படங்கள்.நிச்சயம் அதிசயமே!

    ReplyDelete
  22. அழகான படங்களுடன், கொலராடோ ஆறுபற்றியும் அது உருவாக்கிய பள்ளத்தாக்கு அதிசயங்கள் பற்றியும் தகவல்கள் அருமை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  23. Amazing!!! Enjoyed reading it..


    With Love
    Lakshmi

    ReplyDelete
  24. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  25. அரிய தகவல்கள்.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. 51. கோவிந்தா ஹரி கோவிந்தா

    ReplyDelete