முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா
வரம்தா வரம்தா பிருந்தாவனம்தா வனம்தா
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
என்ன செய்ய நானும் தோல்பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்பாவைதான்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
சீதாராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியா செய்தி இல்லை எங்கள் கிருஷ்ணஸ்வாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
அந்த அர்ஜுனனுக்கு நீயுரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாரது போவயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கே என் ஜீவனே
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரம் கலந்த சிம்மாமாகி இரணியனை கொன்றாய்
ராவணன்தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காவலும் தந்தாய்
இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும்தான் உன் தாரம் நானே
உன் திருவடிபட்டால் திருமணம் ஆகும் என்றே ஏங்குகிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா
வரம்தா வரம்தா பிருந்தாவனம்தா வனம்தா
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
உலகமே ஒரு நாடகமேடை நாடகமேடைக்குள் எத்தனை கதாபாத்திரங்கள் ஆட்டுவிக்கும் சூத்ரதாரி இறைவன்..
உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் மாதம் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
புராண ,இலக்கிய , அரசியல், சமூக விழிப்புணர்வு, பஞ்ச தந்திரக்கதைகள், தேசபக்தி ஊட்டும் கலை நிகழ்வுகள் என்று பொம்மலாட்டம் தொடாத துறை எதுவும் இல்லை..
அழிந்து வரும் பாவைக்கூத்து என்று அழைக்கப்படும் கலையைப் பாதுகாக்க இந்த தினம் அர்பணிக்கப் பட்டுள்ளது...
ஒருவரே பல குரலில் பேசியும் அதே சமயம் பொம்மைகளை நடிக்க வைத்தும் பிரம்மிக்க வைப்பார்.
உதய்பூரில் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகளுக்கு தனியாக
ஒரு தியேட்டர் வைத்து கலைநிகழ்ச்சி நடத்துகிறார்கள்...
.
என்ன ஒரு அழகான கலை என்று நினைத்து வியப்புடன்
பொம்மலாட்டம் மேலே மக்களுக்கு ஒரு மோகம் உண்டு.
பூனாவில் பத்துநாளாக் கொண்டாடும் கண்பதி விழாவில்
அங்கங்கே பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்..
பல்கலைக்கழக அறிஞர்களின்
ஒத்துழைப்பு கிடைத்ததனால் பொம்மலாட்டத்துறை
பல நவீன பரிணாமங்களை இன்று அடைந்துள்ளது.
அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு கலை துறையான பொம்மலாட்ட நாடகக் கலையை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்குவது கலைஞர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
வியட்நாம் நாட்டில் Water Puppet Show பிரசித்தம். இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்..தண்ணிக்கு மேலே இந்த பொம்மைகள் போடும் ஆட்டம் காண்பவரை வியக்க வைக்கும்......
இதில் வரும் ட்ராகன் உருவத்திலிருந்து......தீ வரும் அதுவும் ஜுவாலையாக...........அப்போது ஒரு நிமிட்ம் 3D படம் பார்க்கும் உணர்வுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னை மறந்து பார்க்கவைக்கும் சிறப்பு கொண்டது அத்தனை உழைப்பு.!.தண்ணீருக்கு அடியிலிருந்து இதை செய்வது பிரமிப்பு தரும்....
கம்போடியாவில் கூட இந்த கலை மிகவும் பிரசித்தம்.அவர்களது பொம்மைகளும் அதன் அசைவுகளும் பின்னே இருக்கும் காட்சிகளும் அவ்வளவு இயறகையாக உயிரோட்டமாக இருக்கும்.
ReplyDeleteஉதய்பூரில் சென்ற சம்மரில் பொம்மலாட்டம் கண்டு களித்தேன்.
நம்ம ஊரில் கூட சில இடங்களில் த்ரௌபதி கதை போன்றவை அரிய காட்சியாக இருக்கிறது எனினும் அழிவிலிருந்து காக்கும் நிலைதான் என்பது வருத்தத்திற்குரிய விஷயமே
ஆடலரசனையே கெடிகார முட்களைப் போன்ற வடிவில் அவரின் சூலாயுதத்தை சுழற்ற வைத்து ஆட வைத்துள்ள படம்
ReplyDeleteஅழகோ அழகு. ;)))))
பைசா சாய்ந்த கோபுரம் போன்ற ஒன்று மேலும் கீழும் பக்கவாட்டிலும் சாய்ந்து சாய்ந்து ஆடுவது ஜோர் ஜோர் !
ReplyDeleteபொம்மலாட்டப்பதிவுக்கு மிகவும் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
தங்களின் தனித்தன்மை பளிச்சிடுகிறது. ;)))))
கைவிரல்களின் நிழலில் முயல்குட்டியைக் காட்டும் படமும் நல்லதொரு கற்ப்னை தானே!
ReplyDeleteசூப்பர்!
கைவிரல்களின் நிழலில் முயல்குட்டியைக் காட்டும் படமும் நல்லதொரு கற்ப்னை தானே!
ReplyDeleteசூப்பர்!
எந்தத் தலைப்பிலும் அழகழகான அனிமேஷன் படங்களை எங்கேயோ ஓடிஓடிப்போய் தேடித்தேடிக் க்ண்டுபிடித்து
ReplyDelete[சிட்டுக்குருவியாகட்டும், தண்ணீர் சிக்கனமாகட்டும், கருவேப்பிலையாகட்டும், கத்திரிக்காயாகட்டும், இஞ்சியாகட்டும்] அழகான நீள அகல ஆழமான கருத்துக்களுடனும் ‘துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கி’
போன்ற குறள்களுடன்........]
பதிவிட யாரால் முடியும்?
மனமார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அழகிய பகிர்வுகளுக்கு நன்றிகள்.
Vivek has left a new comment on your post
ReplyDelete"கண்ணிலே கலை வண்ணம் --உலக பொம்மலாட்ட தினம்":
அழிந்துகொண்டு இருக்கும் நம் பாரம்பரிய கலாச்சாரங்களை இவ்வளவு தெளிவாய் அருமையாய் பகிர்ந்தமைக்கு நன்றி .//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
இன்று பொம்மலாட்ட தினம் என்பதை தங்களின் பதிவுமூலம் அறிந்தேன். அருமை.
ReplyDeleteநல்லதோர் பகிர்வு....
ReplyDeleteபொம்மலாட்டதுக்கும் ஒரு நாள் உண்டு எண்டு எங்களுக்கு இந்த அழகான ,கலைநயமும் ,கருத்தும் நிறைந்த பதிவு...
ReplyDeleteநம்ம ஊரிலும் தோல் பாவை கூத்து உண்டு...இப்போது தக்ஷின சித்ரா போன்ற இடங்களில் WORKSHOP நடத்தி அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்...
பொம்மலாட்ட தின வாழ்த்துகள்....
ReplyDeleteஅருமையான பகிர்வு..பொம்மலாட்ட கலையை நேரில் பார்பதுபோல உங்கள் படங்கள்...சூப்பர்..
ReplyDeleteWow Great Rajeswari.
ReplyDeleteNow only i knew that there is a day for this subject.
Very cute pictures. I enjoyed the animations well dear,
viji
பொம்மலாட்ட தினம் ஒன்றி இருப்பதே இப்போதுதான் தெரியும். படங்கள் மிக மிக அருமை.
ReplyDeleteபொம்மலாட்டம் பற்றி அரிய தகவல்கள் அற்புதமான படங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
அடேயப்பா! எத்தனை படங்கள். ஒவ்வொன்றும் அழகு.....
ReplyDeleteஎங்க ஊர் குதுப்மினார் ஆடுவது பயமா இருக்கே....
எத்தனை கலைகள் இஃதனைத்தையும் எல்லோரும் அறிவார்களா. நம் பாரம்பரியக் கலைகள் அருகி வருவதைப் பார்க்கும்போது மனம் வாடுகிறது.உங்கள் பதிவுகளின் சிறப்புக்கு காரணமே உங்கள் ஆர்வமும் இவற்றை யாவரும் அறிய வேண்டும் என்னும் வேட்கையும் தான். பாராட்டி மாளவில்லை. வாழ்த்துக்கள்.
ReplyDelete58. அர்ச்யாவதாரா கோவிந்தா
ReplyDelete2561+6+1=2568
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteஅசத்தும் படங்கள்
பொம்மலாட்டத்தைச் சிறப்பிக்கவென்று ஓர் தினம் கொண்டாடப்படும் செய்தி புதிது எனக்கு.
ReplyDeleteபடங்கள் - அருமையான தெரிவு. முதலாவது மூன்றாவது படங்களிலுள்ள பொம்மைகள் வெகு அழகு.