Monday, March 26, 2012

வசந்த நவராத்திரி


 Maha Lakshmi Wallpaper



அம்மா பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி  ஆதி பராசக்தி பாலயமாம் 
காஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி  மதுரை மீனாக்ஷி பாலயமாம் 

காப்பவளே! கதி சேர்ப்பவளே! விதி மாய்ப்பவளே! பதி வாய்ப்பவளே!
தீர்ப்பவளே! துயர் தீர்ப்பவளே! அகம் ஆர்ப்பவளே! முகம் பார்ப்பவளே! 
நோற்பவளே! நுதல் வேர்ப்பவளே! சீர் சேர்ப்பவளே! சேய் மீட்பவளே! 
ஏற்பவளே! எனை ஏற்பவளே! என் தாயவளே! என் தாய் இவளே!.. 

 

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
 பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம்

ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் 
சொல்லப்படுவது வஸந்த ருது. 
பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. 
வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் 
தொடங்கக் கூடிய காலம். 
வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.
வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கி மறுநாள் பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். 
இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும். 


வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் 

15 நாட்கள் ஒரு பட்ச்ம் நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும்  ..


மண்டல நாட்கள் பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் 


சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.
வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். 
ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி கொண்டாடப்படும். 
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும்.
அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன், மகாலட்சுமி அலங்காரம் -  தேவகோட்டை,  

பனசங்கரிஅம்மன், BANGALORE 
 

சமயபுரம் மாரியம்மன்


 
Maa Shakambari Devi Temple at Sambhar (Rajasthan)  
 
 

 

 
 
Goddess Lakshmi wallpaper for your desktop 

25 comments:

  1. வசந்த நவராத்திரி அனைத்து கடவுள் படங்களும் அற்புதம்.
    தங்களின் இறைபக்திக்கு நன்மை எப்போதும் உண்டு.

    ReplyDelete
  2. கோவிலே எதிரே வந்தாற்போல் இருந்தது

    ReplyDelete
  3. வசந்த நவராத்திரி வாழ்த்துக்கள். இதைப் பற்றிய அரிய தகவல்களுக்கும் அழகான படங்களுக்கும் மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  4. All that is Bliss and Joy.

    YOU MAY LISTEN TO THE PRAYER HERE ALSO

    SUBBU RATHINAM
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  5. sury said...
    All that is Bliss and Joy.

    YOU MAY LISTEN TO THE PRAYER HERE ALSO

    SUBBU RATHINAM
    http://pureaanmeekam.blogspot.com

    ஆனந்தமளிக்கும் அருமையான பகிர்வுக்கு இனிய நன்றிகள்..நமஸ்காரங்கள்..

    ReplyDelete
  6. வசந்த நவராத்திரி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படங்கள் அனைத்தூம் அருமை. குறிப்பாக எலுமிச்சை அலங்காரம் சிறப்பு.

    ReplyDelete
  7. வசந்த நவராத்திரி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படங்கள் அனைத்தூம் அருமை. குறிப்பாக எலுமிச்சை அலங்காரம் சிறப்பு.

    ReplyDelete
  8. வசந்த நவராத்திரி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படங்கள் அனைத்தூம் அருமை. குறிப்பாக எலுமிச்சை அலங்காரம் சிறப்பு.

    ReplyDelete
  9. வசந்த நவராத்திரி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படங்கள் அனைத்தூம் அருமை. குறிப்பாக எலுமிச்சை அலங்காரம் சிறப்பு.

    ReplyDelete
  10. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வணக்கம்! வசந்த நவராத்திரி என்பது எனக்கு புதிய செய்தி. தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  12. வசந்த நவராத்திரி பற்றிய நிறைய தகவல்கள். படங்களும், பகிர்வும் அருமை.

    ReplyDelete
  13. வசந்த நவராத்திரி பகிர்விற்கு நன்றி :)

    ReplyDelete
  14. எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ இவ்வளவு அழகான படங்களை!அருமை.

    ReplyDelete
  15. வசந்த நவராத்திரியைப் பற்றி தேவி பாகவதத்தில் சிறு குறிப்பு வரும். அதனைப் பற்றிய விளக்க பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. அருமையான, துல்லியமான படங்கள்.

    ReplyDelete
  17. படங்கள் எல்லாமே, லக்ஷ்மி உட்பட அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது.

    அந்தப் பார்வதி தேவிக்குப் பெண்கள் கஷ்டம் புரிஞ்சதால் லகுவாக சகஸ்ரநாமம் சொல்லுவது எப்படின்னு கேள்விகேட்டு நம்ம வயித்துலே பாலை வார்த்தாங்க:-))))
    ராம ராம ராம

    ReplyDelete
  18. வருசத்துக்கு நாலுமுறை நவராத்ரி உண்டு.

    நம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.
    வடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.

    சைத்ர மாசத்தில் வசந்த நவராத்திரி.
    ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.
    புரட்டாசியில் சாரதா நவராத்திரி.
    தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    அனைத்து படங்களும் அற்புதம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. 63. சாலக்ராமஸாரா கோவிந்தா

    ReplyDelete