Thursday, March 29, 2012

சக்ரவர்த்தித் திருமகன்கள்..

Image DetailEarth-14-june.gif (23976 bytes)Image Detail
2012 ஆம் ஆண்டின் 100 வது பதிவு..
 ராம ராம’என்பது இனிமையான தாரக மந்திரம் . தாரகம்’ என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் பத்துத் திக்குகளிலும் தேர் செலுத்த வல்லவரான அயோத்தி சக்ரவர்த்தி தசரதன் நவமியில் நமக்களித்த சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன்
 
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் 

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ஸ்ரீ ராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
Triprayar
கேரள மாநிலம் திருச்சூருக்குத் தென்மேற்கே திருப்பரையார் ராமர் ஆலயத்தில் அனுமன் அரூபமாக திருஷ்டா சீதா, திருஷ்டா சீதா (கண்டேன் சீதையை) என்று சொல்லிக் கொண்டு இரவும் பகலும் ஆலயத்தை வலம் வருவதாகவும்; அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்கிறார் என்பது ஐதீகம்...
 

 கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை கண்டேன் ராகவா!
அண்டருங் காணாத அரவிந்த வேதாவை 
லங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)
காவி விழிகளில் உன் உருவெளி மின்ன 

 

கனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால் 
நான் சொல்லுவதென்ன

பூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன 
புத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன
பாவி அரக்கியர் காவல்சிறை துன்ன பஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன  
கண்டேன்

 

ஆலய மடப்பள்ளியில் எவ்வளவு பெரிய பாத்திரத்தில் பிரசாதம் தயார் செய்தாலும், பணியாளர் ஒருவரே எவர் உதவியுமின்றி பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விடுகிறார். 

காரணம், பிரசாதம் இறக்கும்போது அனுமனும் ஒரு கை கொடுத்து உதவுவதாக நம்பிக்கை...

Triprayarappan
Triprayar Sree Rama
மஹா விஷ்ணுவைப் போல் அருட்காட்சி தரும் ஸ்ரீ ராமர், இலட்சுமணன், பரதன் சத்ருக்னரின் விக்ரகங்கள் ஆற்றில் மிதந்து வந்து கரை சேர்ந்த விக்ரகங்கள் முறையாக 
திருப்ரையார், திருமூழிக்களம்,  கூடல்மாணிக்கம் பாயம்மெல் 
போன்ற இடங்களில் வக்கெல் கைமால் என்பவரால்
நான்கு திருக்கோவில்களில் பிரதிட்டை செய்யப்பட்டது..

நாலம்பலம் என்று வழங்கப்படும் இந்த நான்கு சகோதரர்களின் ஆலயத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷம்...

கோவையில் சில டிராவல்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள்..

ஸ்ரீ ராமர் கரன் என்ற அரக்கனை போரில் வென்றார்..
மூலவர் விகரஹம் பிரம்மா , சிவன் ஆகிய அம்சங்களும்
அடங்கியுள்ளதால்,  த்ரிமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஐயப்ப சுவாமியின் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது...
முக்கியமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் பூரம் திருவிழா - மலையாள வழக்கப்படி மீனம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது..

ஏகாதசித் திருவிழா ...  நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.. 

ராமர் கோவிலில் மீனூட்டு (மீன்களுக்கு உணவு அளித்தல்) என்ற மிகவும் பிரபலமான வழிபாட்டு முறை - நேர்த்திக்கடன் - மிகவும் விசேஷம், 

பக்தர்கள் கோவிலின் எல்லையில் இருக்கும் நதிக்கரையில்,
மீன்களுக்கு அரிசி தானியங்களை வழங்குகிறார்கள்..

கொச்சியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
திருச்சூரிலிருந்து சாலை வழியாக எளிதாக திரிப்ரையார் வந்தடையலாம்  

Triprayar Sree Rama temple- view from the Bridge.

Deepastambham Mahayshwariyam!!
a traditional lamp-post carved from stone, before Triprayar Sree Rama Temple

 TRIPRAYAR RAMA TEMPLE
 

37 comments:

  1. வாழ்த்துக்கள்.ஒரு பக்தி படம் பார்த்த உணர்வு.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.....

    தொடர்ந்து பக்தி மணம் கமழட்டும்....

    ReplyDelete
  3. 2012ம் ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ராமன் அழகில் கேரள அழகும் சேர்ந்து பதிவு ஜொலிக்கிறது.
    ஸ்ரீ ராமர் படங்களில் மூன்றாவது படம் ஓப்பன் ஆகவில்லையே.

    திருப்பரையார் கோவில் பற்றி இதுவரை கேள்விப் பட்டதில்லை.பதிவையும் தகவல்களையும் படங்களையும் பார்த்த பின் செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

    காலையில் ஸ்ரீ ராமர் தரிசனம் மனதிற்கு இதமளிக்கிறது.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  5. குளத்தினருகில் கோவில் தென்னைகள் சூழ அற்புதம்.

    யானையின் முகப்படாமும்,சாமரம் குடையும் யானை அணி வகுத்து நிற்கும் அழகும் கண்ணைக் கவர்கிறது.எங்கிருந்து இப்படி அற்புதமான படங்கள் கிடைக்கின்றன? அருமை !!!!

    ReplyDelete
  6. 2012ன் 100வது பதிவிற்கு வாழ்த்துகள். சிறீராம யெயம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. 2012 ஆம் ஆண்டின் 100 ஆவது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    89 நாட்களில் 100 பதிவுகள்.

    100/89*100 = 112.36% அபார உழைப்பு.

    Hearty congratulations, Madam.;)))))

    ReplyDelete
  8. கடைசியில் காட்டப்பட்டுள்ள அலங்கரித்த யானைகளின் அழகான அணிவகுப்பு, வெகு விரைவில் வெளியாகப்போகும் தங்களின் 500 ஆவது பதிவினை வரவேற்க தயாராகி விட்டதாகத் தோன்றுகிறது,எனக்கு.

    என் மனம் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, அந்த சுப வைபவத்தை எண்ணிப்பார்க்கையில். ;)))))

    ReplyDelete
  9. ”சக்ரவர்த்தித் திருமகன்கள்”

    அழகிய பொருத்தமான தலைப்பு.
    படங்கள் யாவும் நல்ல அழகு.

    கருத்துக்கள் யாவும் கற்கண்டு தான்.

    சுவைத்து மகிழ்ந்தேன்.;)))))

    ReplyDelete
  10. நாலம்பலம் பற்றிய செய்திகள் அருமையாகவும் புதுமையாகவும் உள்ளன.

    கோவைக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தால், தரிஸிக்க வேண்டியவைகள் ஏற்கனவே ஏராளமாக மனதில் உள்ளன.

    அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும் எனத் தோன்றுகிறதே!

    ReplyDelete
  11. நாலம்பலம் பற்றிய செய்திகள் அருமையாகவும் புதுமையாகவும் உள்ளன.

    கோவைக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தால், தரிஸிக்க வேண்டியவைகள் ஏற்கனவே ஏராளமாக மனதில் உள்ளன.

    அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும் எனத் தோன்றுகிறதே!

    ReplyDelete
  12. தியாகப்பிரும்மமோ, துளசி தாஸரோ வீணை வாசிக்கும் படத்தில், ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகன ஹநூமத் ஸமேத ஸ்ரீ ராமச்ச்ந்திரமூர்த்தி [அனைவர் கழுத்திலும் மாலையுடன்] எழுந்தருளும் படம் மிகச்சிறப்பாக உள்ளது.

    அதில் மற்றொரு அதிசயம் ....
    அந்த கிருஹத்தின் லக்ஷ்மி உள் பகுதியில் இருந்து இவர்களை கரம் கூப்பி வணங்குவது, [முகம் பார்க்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல அமைந்துள்ளது] தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.;)))))

    ReplyDelete
  13. 2
    =

    ஸ்ரீராமஜயம்
    ===========

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    தங்களின் இதுபோன்ற ஆன்மிகப்பணிகள் தொடரட்டும்.

    எல்லாம் சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் அமையட்டும்.

    ஸ்ரீராமபிரான் நம் அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. வழக்கம் போல படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. Congragulations dear for doing 100th post this year.
    Post means each and everyone is like muthu, manikam, vaiduriam, Gomethakam,.
    This temple is near my fathers house.
    The offerening in this temple is Vedi Valipadu.
    I mean firing one cracker is the offerening.
    Very happy to see the post.
    viji

    ReplyDelete
  16. viji said...
    Congragulations dear for doing 100th post this year.
    Post means each and everyone is like muthu, manikam, vaiduriam, Gomethakam,.
    This temple is near my fathers house.
    The offerening in this temple is Vedi Valipadu.
    I mean firing one cracker is the offerening.
    Very happy to see the post.
    viji

    கேரளத்தில் நிறைய கோவில்களில் வெடி வழிபாடு பிரசித்தம்..

    அதிலும் திருப்பரையாறு கோவிலில் நம் பிரச்சினைகள் தீர வெடி வழிபாடு செய்வது ரொம்ப விஷேஷம்..

    கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !!

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தியாகப்பிரும்மமோ, துளசி தாஸரோ வீணை வாசிக்கும் படத்தில், ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகன ஹநூமத் ஸமேத ஸ்ரீ ராமச்ச்ந்திரமூர்த்தி [அனைவர் கழுத்திலும் மாலையுடன்] எழுந்தருளும் படம் மிகச்சிறப்பாக உள்ளது.

    அதில் மற்றொரு அதிசயம் ....
    அந்த கிருஹத்தின் லக்ஷ்மி உள் பகுதியில் இருந்து இவர்களை கரம் கூப்பி வணங்குவது, [முகம் பார்க்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல அமைந்துள்ளது] தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.;)))))/

    அருமையாய் மனம் நிறைய ரசித்து உற்சாகப்ப்டுத்தி கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள் ஐயா..

    ஊக்கப்படுத்தலும் உற்சாகப்படுத்தலும் இல்லாமல் சாத்தியப்படாது சாதனைகள்..

    ReplyDelete
  18. raji said...
    ராமன் அழகில் கேரள அழகும் சேர்ந்து பதிவு ஜொலிக்கிறது.
    ஸ்ரீ ராமர் படங்களில் மூன்றாவது படம் ஓப்பன் ஆகவில்லையே.

    திருப்பரையார் கோவில் பற்றி இதுவரை கேள்விப் பட்டதில்லை.பதிவையும் தகவல்களையும் படங்களையும் பார்த்த பின் செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

    காலையில் ஸ்ரீ ராமர் தரிசனம் மனதிற்கு இதமளிக்கிறது.பகிர்விற்கு நன்றி

    அருமையான கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  19. Manimaran said...
    வாழ்த்துக்கள்.ஒரு பக்தி படம் பார்த்த உணர்வு.

    வாழ்த்துக்கள்
    வழங்கியதற்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  20. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு.....

    தொடர்ந்து பக்தி மணம் கமழட்டும்....

    கருத்துரை வழங்கியதற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  21. விச்சு said...
    2012ம் ஆண்டின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    வாழ்த்துக்கள்
    வழங்கியதற்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  22. kovaikkavi said...
    2012ன் 100வது பதிவிற்கு வாழ்த்துகள். சிறீராம யெயம்.
    வேதா. இலங்காதிலகம்.

    வாழ்த்துக்கள்
    வழங்கியதற்கு இனிய நன்றிகள் தோழி !

    ReplyDelete
  23. வாழுதுகள். அற்புதம் தொடரட்டும். . .

    ReplyDelete
  24. ராம நவமியை ஒட்டிய ரம்மியமான பதிவு.

    ReplyDelete
  25. @வை கோபாலகிருஷ்ணன் சார்

    //தியாகப்ரும்மம் வீணை வாசிக்கும் படத்தில்//

    அது வீணையன்று.தம்புரா.


    //அதில் மற்றொரு அதிசயம் ....
    அந்த கிருஹத்தின் லக்ஷ்மி உள் பகுதியில் இருந்து இவர்களை கரம் கூப்பி வணங்குவது, [முகம் பார்க்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல அமைந்துள்ளது] தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.//

    அது முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல.அறையின் நிலை வாசல்படி. நிலை வாசல் படியின் மேலே கஜலக்ஷ்மி படம் மாட்டி இருப்பதை கவனிக்கவும்.
    மேலும் நிலை வாசல் படியின் ஒரு பக்கத்தில் பிறை விளக்கு பிரகாசிப்பதையும் கவனிக்கவும்.

    எனக்கு தோன்றியதை கூறினேன்.தவறாக எண்ண வேண்டாம்

    ReplyDelete
  26. சச்சின் போல ஒரே ஆண்டில் சதமடித்ததற்கு என் வாழ்த்துக்கள். வழக்கம்போலவே அருமையான படங்களோடு நல்ல பதிவு

    ReplyDelete
  27. raji said...
    @வை கோபாலகிருஷ்ணன் சார்

    *****தியாகப்ரும்மம் வீணை வாசிக்கும் படத்தில்*****

    //அது வீணையன்று.தம்புரா.//

    தகவலுக்கு மிக்க நன்றி மேடம்.

    தம்புராவை வீணை என தவறாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன்.

    எனக்கு சங்கீதக்கருவிகள் பற்றிய ஞானம் மிகக்குறைவே.

    அதையும் ஒத்துக்கொள்கிறேன்.

    =========================

    *****அதில் மற்றொரு அதிசயம் ....
    அந்த கிருஹத்தின் லக்ஷ்மி உள் பகுதியில் இருந்து இவர்களை கரம் கூப்பி வணங்குவது, [முகம் பார்க்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல அமைந்துள்ளது] தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.*****

    //அது முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல.அறையின் நிலை வாசல்படி. நிலை வாசல் படியின் மேலே கஜலக்ஷ்மி படம் மாட்டி இருப்பதை கவனிக்கவும்.

    மேலும் நிலை வாசல் படியின் ஒரு பக்கத்தில் பிறை விளக்கு பிரகாசிப்பதையும் கவனிக்கவும்.//


    அடடா, அது நிலை வாசப்படியே தான் அதில் ஒன்றும் எனக்கு சந்தேகமே இல்லை.

    மஹாபாரதத்தில் DEEP CONCENTRATION பற்றிய ஓர் கதை உங்களுக்கே தெரிந்திருக்கும்.

    நானும் இங்கு அதைச் சொல்ல விரும்புகிறேன்.

    ooooooooooooooo

    “அர்ஜுனா, மரம் தெரிகிறதா?” என்று கேட்கிறார் துரோணாச்சார்யார்.

    ”இல்லை குருவே”

    “கிளைகள் தெரிகின்றனவா?”

    “இல்லை குருவே”

    “இலைகள் தெரிகின்றனவா?”

    “இல்லை குருவே”

    ”பறவையாவது தெரிகிறதா?”

    “இல்லை குருவே”

    பறவையின் கண்களைக் குறிவைத்து அம்பெய்வதுதானே போட்டி?

    பறவையே தெரியவில்லை என்கிறானே! என்று துரோணாச்சாரியாருக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது.

    “பின் என்ன தெரிகிறது அர்சுனா?” என்று கேட்டார்.

    “பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன, குருவே” என்கிறான் அர்ஜுனன்.

    ஆஹா! இவனல்லவா மாணவன்!
    இதுவல்லவோ பரிபூரண மன ஓர்மை!
    [Concentration] துரோணாச்சாரியார் வியந்து மகிழ்ந்தார்.

    ஒரு புள்ளியில் மனதைக் குவிப்பது என்றால் இது தான். டோட்டல் கான்சன்ட்ரேஷன் பற்றிய முக்கியமான மஹாபாரதப்பாடம் இது. அர்ஜுனனின் வெற்றிக்குப்பின்னால் இருந்தது இது தான்.

    ooooooooooooo

    இந்தப்படத்தை நான் பல கோணங்களில் பார்த்து மகிழ்ந்தேன்.

    அதில் ஒரு கோணத்தில் நான் அர்ஜுனனாகவே மாறிப்போனேன்.

    எனக்கு முதலில் புலப்பட்ட நிலைவாசல்படியோ, கஜலக்ஷ்மி படமோ, பிறை விளக்கோ ஏன் அந்த ஸ்ரீராமரோ கூட கண்ணுக்குத் தெரியவில்லை.

    முகம் பார்க்கும் கண்ணாடியில் ஆண்டாள் போன்ற ஒருத்தி நிற்பதாகவேத் தோன்றியது, அதுவும் ஒருசில வினாடிகள் மட்டும்.

    படங்கள் நான் வரைவதைவிட, பிறர் வரைந்த படங்களை ரஸித்து மகிழ்வதில் நான் சற்றே வித்யாசமானவன்.

    அதனால் என் கருத்தில் [பின்னூட்டத்தில்] தங்களுக்குச் சற்று குழப்பம் ஏற்பட்டதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை.

    ===============================

    //எனக்கு தோன்றியதை கூறினேன்.தவறாக எண்ண வேண்டாம்//

    யாரையும் எதற்கும் எப்போதும் நான் தவறாகவே நினைப்பது கிடையாது.

    தாங்கள் தங்களுக்குத் தோன்றியதைத் துணிந்து கூறியது உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  28. படங்களும் கூடிய பதிவு அருமை .

    ReplyDelete
  29. இந்த வருடத்தின் 100வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ராம்

    ReplyDelete
  30. Mrs. RAJI Madam,

    எனக்காக திரும்ப அந்தப்படத்திற்கு வாருங்கள். அந்த நிலைப்படியைச் சுற்றியுள்ள 3 சட்டங்களையும், ஒரு ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் உள்ள மிகப்பெரியதொரு முகம் பார்க்கும் கண்ணாடியின் சட்டங்களாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    மேலே உள்ள லக்ஷ்மிபடம், சுவற்றில் தொங்கும் தம்புரா, பிறை விளக்கு, ராமரின் வில், ராமர், ஸீதை, லக்ஷ்மணர், பரதன் சத்ருகனன், ஹனுமன், தியாகப்பிரும்மம் போன்ற மற்ற விஷயங்கள் அனைத்தையும் [மரம், கிளைகள், இலைகள், பறவை இவற்றை அர்சுனன் மறந்தது போன்று] தாங்களும் மறந்து விட்டு உற்று நோக்குங்கள்.

    அந்தப்பெண், நிச்சயமாக ஒரு நிலைக் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பமாகத் தோன்றிடுவாள்.

    ஆனாலும் இது கொஞ்சம் சிரமமான கார்யம் தான்.

    பெரும்பாலானவர்களுக்கு இதை உணர முடியாது என்பதே உண்மை.

    JUST TRY YOUR LEVEL BEST &
    IF NOT ENJOYABLE, PLEASE IGNORE IT.

    vgk

    ReplyDelete
  31. @வை கோபாலகிருஷ்ணன் சார்

    முதலில் நானும் தங்களைப் போல அதைக் கண்ணாடி என்றே நினைத்து விட்டேன்.பின்னர் படத்திலிருந்து கண்களை அகற்றும் கடைசி நொடியில் அந்த கஜலக்ஷ்மி படம் கண்ணில் பட்டு விட்டது.பின்பு மீண்டும் படத்தைப் பார்த்த போதுதான் அது கண்ணாடி அல்ல என்பதையே உணர்ந்தேன்.

    (உண்மையில் முதலில் பதிவு படிக்கும் சமயம் எனக்கு அந்த படம் மட்டும் ஓப்பன் ஆகவே இல்லை.வெறும் வெள்ளையாக இருந்தது.ஸ்ரீ இராம பிரான் தியாகப் பிரும்மத்துடன், எனக்கு காட்சி தர கொஞ்சம் வேடிக்கை காட்டி விட்டு பின்னர்தான் காட்சியளித்தார்)

    ReplyDelete
  32. திருத்தல வரலாறும் படங்களும்
    மிக அருமை சகோதரி.

    ReplyDelete
  33. 2012//100ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  34. எங்கும் நிறைந்திருக்கும் நம் இறைவன் உங்களின் சிறப்பான பணியினை, தொடர்ந்து நிறைவாக செய்யும் வல்லமையும், ஆற்றலையும், அருள்வானாக! நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள் எம் இறைவனைப் பற்றிய நெஞ்சம் நெகிழும் பதிவினை பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete
  35. 2012 இல் 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
    அருமையான பதிவு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  36. 66. லக்ஷ்மணாக்ரஜா கோவிந்தா

    ReplyDelete
  37. 2609+11+1=2621

    ;) அழகான பதிலுக்கு நன்றி !

    ReplyDelete