Tuesday, March 6, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - தொடர் பதிவு...










welcome
Shakthiprabha  அவர்களின் சக்திமிக்க அழைப்பு பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்கிறது..


என் இல்லத்திலிருந்து கொஞ்ச தொலைவில் வலது புறம் ஆரம்பப்பள்ளி.. 
இடது புறம் உயர்நிலைப்பள்ளி...

My High School
பள்ளிக்கூடம் செல்லும் முன்பே எழுதவும் படிக்கவும் கற்றுகொடுத்தவர் அம்மா.
எங்கள் முதல் வகுப்பு ஆசிரியை மேரி செல்வம் அவர்கள் நல்லா படிக்கிற பொண்ணு என்று பாராட்டிக்கொண்டிருப்பார்கள்..
..

இரண்டாம் வகுப்புக்கும் அவர்களே வகுப்பு ஆசிரியை.. 


என் தம்பி முதல் வகுப்பில் சேர்த்தபோது அழுததால் என் பக்கத்திலேயே அமர அனுமதித்தார்கள்..என் தம்பி இரண்டாம் வகுப்பு பாஸானாலும் முதல் வகுப்பு ஆசிரியரை பிரிய மறுத்து முதல் வகுப்பிலேயே நீண்ட நாள் அமர்ந்திருந்தார்..
இப்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்..


மூன்றாம் வகுப்புக்கு நான் பாஸான போது அவர் நான்காம் வகுப்புக்கு வகுப்பு ஆசிரியை ஆக சென்றுவிட்டார்..  நானும் மூன்றாம் வகுப்பில் உட்கார மறுத்துவிட்டு நான்காம் வகுப்பில் போய அமர்ந்துகொண்டேன்..  அவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் என் உறுதியைப் பார்த்து தன் வகுப்பிலேயே வகுப்புத் தலைவி பதவி கொடுத்துவிட்டார்..



வாய்ப்பாடுகள் ,  பாடல்கள் , வீட்டுப்பாடங்கள் எல்லாம் என்னிடம் எல்லோரும் ஒப்புவித்தார்கள்..

உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் அறிமுகம் ஆனது.. நன்கு படிக்கும் சில பள்ளிப் பிள்ளைகளை மட்டும் வரிசையாக உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்று ஆங்கில உச்சரிப்பு சொல்லிக்கொடுத்தார்கள்.. வகுப்பு முடிந்ததும் கிளாஸ்கோ பிஸ்கட் கொடுத்தார்கள்..
நான்காம் வகுப்பில் தோட்டம் போட சொல்லிக்கொடுத்து பாத்தி வெட்டி கொத்துமல்லி விதைகளைத் தூவி அவை வளர்ந்ததும் பறித்து வீட்டில் கொண்டு வந்து உப்பு, புளி , பச்சைமிளகாய் , வெல்லம் எல்லாம் சேர்த்து பாட்டி அம்மியில் அரைத்துக் கொடுத்தார்கள்...
பள்ளிக்கூடம் கொண்டுவந்து எல்லோருக்கும் ஸ்பூனில் கொடுத்தேன் 
அந்த ருசியும் ,மணமும் இப்போது எந்த உணவிலும் ஏன் கிடைப்பதில்லை???

வீட்டுத்தோட்டத்தில் மஞ்சள் செவ்வந்தியும் மல்லிகையும் மலர்ந்த நாட்களில் சித்தி பூவால் தலை அங்காரம் செய்து விடுவார்..தாழம்பூ ஜடை பின்னி விடுவார்..

விநாயகர் சதுர்த்தி அன்று அரிசிப்பொரியை மாலையாகக் கோர்த்து விநாயகருக்கு அணிவித்து கொண்டாடுவோம்... 

சுதந்திரதினத்தன்று தக்கைகளை ஒரே அளவில் வெட்டி கோர்த்து வகுப்பறையில் அலங்கரிப்போம்.
வெள்ளை நிறம் தக்கையில் கிடைத்துவிடும்.. சிவப்பு , பச்சை நிறங்கள் எங்கள் பாட்டி வீட்டில் சாயப்பட்டறை இருந்ததால் தக்கை சரங்களை  சாயம் தோய்த்துக்கொடுப்பது என் பொறுப்பு..
எளிமையான தேசீயக்கொடி அலங்காரம் பள்ளியை நிறைவாக்கும்..

பொட்டு வைக்காமல் வ்ரும் மாணவிகளுக்கு சாணத்தை உருண்டையாக்கி நெற்றில் வைக்கச்சொல்வார்கள்.... ஒருநாள் மட்டும் ஆசிரியை ஆணைப்படி வைத்தேன்..
மறுநாள் சிவப்பு சாந்து பாட்டில் ஒன்று வாங்கி அவர் வருமுன்னே எல்லார் நெற்றியிலும் வைத்து விட்டேன்...   

ஐந்தாம் வகுப்பில் பென்னட் என்னும் தலைமை ஆசிரியர் ...   கடிகாரத்திற்கு சாவி கொடுக்க வரும்போதெல்லாம் பெரிய சுவர் கடிகாரத்திற்கு அருகே அமர்ந்திருக்கும் என்னிடம் . உங்க அம்மாவும் என்கிட்டே தான் படிச்சாங்க.. நான் அவங்க கல்யாணத்திலும் கலந்து கொண்டேனே ! நீ ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை " என்று ஒவ்வொரு முறையும் கேட்பார்,,

என் அப்பாவின் கூடப்பிறந்த தங்கையும் நானும் ஒன்றாகத்தான் அமர்ந்திருப்போம்.. நங்கையும் நாத்தியும் ஒன்றாக என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கலாய்ப்பார்...

என் பெரியம்மா பெண் சாந்தாவும் நானும் எப்போதும் வீட்டிலும் பள்ளியிலும் விடாமல் பேசிக்கொண்டே இருப்போம்.. கையைக்கட்டி வாய்மேல் கைவைத்து  அமைதி வகுப்பில் அமர்ந்திருக்க நாங்கள் அப்போதும் வாய் மேல் விரல் வைத்து மூடியபடியே பேசிக்கொண்டிருப்போம்..நாங்கள் என்ன பேசினோம் என்று இன்றும் இல்லத்தில் எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வி..

. நாங்கள் எல்லாம் சத்த்ம் போட்டு பாடங்களை ஒரே குரலில் ராகமாக படித்துக்கொண்டிருப்போம்..காலையில் ந்டைப்பயிற்சிக்கு எங்கள் வீட்டு வழியாக செல்லும் தலைமை ஆசிரியர் ஒரு நிமிடம் நின்று எங்களுக்கு வணக்கம் சொல்லித்தான் செல்வார் ...

எல்லோரும் அமர்ந்தபடியே வணக்கம் சொல்ல நான் எழுந்து நின்று மரியாதை செய்வதை கேலி செய்வார்கள் தோழியர்.. ஆனால் என்னால் நிற்காமல் அமர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை.. ஆசிரியர்கள் மீது அவ்வளவு மரியாதை உண்டு எனக்கு..

ஐந்தாம் வகுப்பு படித்தபோது பள்ளியில் அனைவரையும் அபிமன்யூ படத்திற்கு அழைத்துச்சென்றார்கள் . கையில் இரண்டு பத்து பைசா நாணயங்களைக் கொடுத்தார் அம்மா செலவுக்கு.. அபிமன்யூ இழப்பையும் கர்ணனின் இழப்பையும் இன்றும் நான் ஏற்றுக்கொண்டதில்லையே.. அன்று அபிமன்யூ படம் பார்த்து அழுத அழுகையில் கையில் இருந்த ஒரு பத்துபைசா உருண்டு தொலைந்துவிட்டது மணலில்.. படம் முடிந்து அந்த காசைக்கண்டு பிடிக்க இன்னொரு காசை கீழே உருட்டினேன். ஆச்சரியம் அந்த மண்ற்பரப்பில் இரண்டு காசுகளும் சேர்ந்தே எனக்குக் கிடைத்தது 

பள்ளி இறுதித்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதை முதல் வகுப்பு ஆசிரியை மேரி செல்வம் பாராட்டிப் பெருமைப் படுத்தியதோடு ராசியான என் புத்தகத்தை வாங்கிப் படித்து அடுத்தவருடம் அவரும் பள்ளி இறுதித் தேர்வு எழுதினார்.. அவர் எட்டாம் வகுப்பே படித்து ஆசிரியர் ஆனவராம்.. அவர் எப்போதும் பள்ளியில் மண் சுவரை சுரண்டி எடுத்து சாப்பிட்டது நினைவில் நிழலாடுகிறது.. 

மிகச் சிறுவயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது வீட்டில் அனைவருக்கும் ஆச்சரியம்.. தாத்தாவின் சித்தர் பாடல்கள் மற்றும் தூக்கமுடியாத புத்தங்களையும் அடுக்கிவைத்துப் படிக்க இந்த வயதில் இதை எல்லாம் படிக்ககூடாது என என்க்கு எட்டாத உயரத்தில் வைத்துவிட்டார்கள்...
Animated Gif School (12)Animated Gif School (13)Animated Gif School (16)
மாமா அலமாரி நிறைய தமிழ்வாணன் புத்தகங்கள் வைத்து இருப்பார்.. அலமாரியில் எழுதி ஒட்டவைக்கப்பட்ட வாசகம் பயப்படுவதால் பாதி ஆயுள் போய் விடுகிறது.. என்பதாகும்.

ஆகவே பயமில்லாமல் எல்லாவற்றையும் படித்துவிடுவேன் ..


தீபாவளிமலர்கள் அத்தனை பெரிதாக படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அப்போதெல்லாம்..எனக்கே எனக்காக தீபாவளிமலர் வாங்கி பத்திரப்படுத்த நினைக்கும் இப்போது விளம்பரங்களே ஆக்ரமித்து வெறுப்பளிக்கிறது..
ஏழாம் வகுப்பில் திரைப்படப் பாடல்களில் பயின்றுவரும் இலக்கிய நயம் பற்றி சுவாரஸ்யமாக பாடம் நடத்துவார் தாமரைச்செல்வன் என்கிற ஆசிரியர்..

ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் நிறைய பேருக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லாததால் தலைப்புச்செய்திகள் எழுதிப் படிப்பதும் , பள்ளி கரும்பலகையில் எழுதிவைப்பதும் நான்தான்.. செய்தித் தாட்கள் ஆங்கிலமும் தமிழும் வாங்கும் ஒரே வீடு வகுப்பில் எங்களுடையதுதான்,,


பக்கத்தில் அமர்ந்திருந்த லஷ்மியிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்க பெயர் எழுதி ஆசிரியரிடம் கொடுத்து சலிப்படைவான் வகுப்புத்தலைவன்..ஆசிரியர் பேசிய மாணவர்களைமட்டும் ஸ்கேலால் அடித்துவிட்டு மாணவிகளை ஒன்றும் சொல்லமாட்டார்.. அதனை எல்லா மாணவர்களும் கையெழுத்திட்டு புகார் கடிதமாக தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்துவிட்டார்கள்..
தலைமை ஆசிரியர் ஆண்பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும் பெண்களைப் போற்றி வைக்கவேண்டும் என்று நீண்ட அறிவுரை கூறி சமாதானப் படுத்தினார் ..

சுதேச மித்திரன் பத்திரிகையில் வரும் வாழ்வின் உண்மைகள் என்கிற பகுதியை வெட்டி சேகரித்து பத்திரப்படுத்திவைத்திருப்பேன்..

தினமும் போர்டில் பழ்மொழி எழுத பயன்படும்...
Photobucket
என் உறவினர் பெண் ராஜேஸ்வரியும் நானும் எப்போதும் முதல் இரண்டு இடங்களை மாற்றி மற்றி பிடிப்பதால் ராஜேஸ்வரி என்று பெயர்வைத்தால் நன்றாக படிப்பார்கள் என்று ஆசிரியர் தன் பெண்குழ்ந்தைக்கும் உங்கள் பெயரைத்தான் வைத்தேன் என்று நெகிழ்ந்து சொன்னார்.. 


அவர் படிக்க வசதி இல்லாமல் தையல்காராக இருந்து முயற்சியால் தமிழ் புலவர் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் ஆனவர் ..




Photobucket

மேற்படிப்பிற்காக விடுதியில் சேர்ந்த முதல் நாளே எல்லோர் கைரேகையும் பார்த்து பலன் சொன்னதில். எல்லோரும் நட்பானார்கள்..எந்த அறிமுகமும் இல்லாத வேறு வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியம் பலன்கள் அனைத்தும் சரியாக இருந்ததாம் ..விடுதி ஜோசியர் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்..

கல்கி, சாண்டில்யன், சுஜாதா நாவல்களை மூன்று நான்கு பேர்களாக சேர்ந்துதான் படிக்கக் கிடைக்கும்.. போரடிக்கும் சாண்டில்யன் வர்ணனைகளை தொடர்ந்து படித்தால் கதையின் சுவாரஸ்யம் குறைகிறது என்று தோழியர் அதனை விட்டுவிட்டு படிக்க கடுப்படிப்பார்கள்..மீண்டும் அந்தப் புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லாததால் ஒருபோதும் அவற்றை விட்டுவிடாமல் போரடித்தாலும் படித்து முடித்தே பக்கங்களைத் திருப்புவேன்..

29 comments:

  1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  3. குட்டிப்பாப்பாவின் அழகழகான அனுபவங்கள், கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. விளையும் பயிர் முளையிலே என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்! ;))))).

    ReplyDelete
  4. முதல் நாள் சாணிப்பொட்டு. மறுநாள் முதல் அனைவருக்கும் ஆசிரியர்/ஆசிரியை வரும் முன் சிகப்பு சாந்துப் பொட்டு. கேட்கவே நல்லாயிருக்கு!

    ஐடியா சூப்பர்!

    ReplyDelete
  5. அன்றே மிகச்சரியாக எடைபோட்டு விட்ட முதல் வகுப்பு ஆசிரியை மேரி செல்வத்திற்கும், பள்ளிக்கு அனுப்பும் முன்பே எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்து விட்ட முதல் குருவான தங்கள் அன்னைக்கும் என் பணிவான நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  6. கொத்துமல்லி, உப்பு, புளி, மிளகாய், வெல்லம் இவற்றைக் கலந்து இடித்து,உருட்டி ஒரு கெட்டியான புது ஈர்க்குச்சியின் [இன்றைய லாலிபப் போல] தலைப்பகுதியில் வைத்து, சப்பிச் சாப்பிடுவது உண்டு தான்.

    நீங்கள் அதையே பஞ்சாமிர்தம் போல அனைவருக்கும் ஸ்பூன் போட்டு விநியோகித்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. துள்ளி விளையாடிய பள்ளி நாட்களை உள்ளம் நிறையச் செய்த பகிர்வு. சூப்பர்.

    ReplyDelete
  8. தலைமை ஆசிரியர் பென்னட், குழந்தையாகிய தங்களைக் குழப்பி விட்டுக் கேட்ட கேள்வியை நான் மிகவும் ரஸித்தேன்.

    நானே அது போல குழந்தைகளிடம் விளையாட்டாகப் பேசி அவர்களை யோசிக்க வைப்பேன்.

    பேரன் பேத்திகளிடம் அவர்களின் அப்பா அம்மா கல்யாண போட்டோ ஆல்பத்தைக் காட்டி, நீ ஒரு போட்டோவில் கூட இல்லையே என்பேன்.

    போங்க தாத்தா! நாங்க அப்போ பிறக்கவே இல்லையே! என்பார்கள் மிகவும் புத்திசாலித்தனமாக. ;)

    ReplyDelete
  9. அபிமன்யூவுக்கும், கர்ணனுக்கும் நானும் மிகவும் வருத்தப்பட்டுள்ளேன். சிவாஜி நடித்த கர்ணன் படம் பார்த்துவிட்டு, அந்தப்பருவத்தில் நானும் அழுதுள்ளேன்.

    தொலைத்த பத்து பைசாவைத் தேடப்போய் இன்னொன்றையும் உருட்டி விட்டு, கடைசியில் இரண்டையும் தேடி எடுத்து விட்டீர்களே! ;))))) சபாஷ்.

    அதிர்ஷ்டம் தான் அந்தப் பத்துபைசாக்களுக்கு. உங்கள் கைராசி அப்படி.

    கைரேகை வேறு பார்த்து ஜோஸ்யம் சொல்லியுள்ளீர்கள். எனக்கு உடனே என் கைரேகைகளுடன் உங்கள் இப்போதே சந்திக்க வேண்டும் போல் உள்ளதே! ;)))))

    ReplyDelete
  10. மிகவும் புத்திசாலியான மாணவியாகிய தங்களின் புத்தகங்களை வாங்கிப்படித்து, தன் படிப்பைத்தொடர்ந்து, பள்ளி இறுதித் தேர்வை எழுதியுள்ள, முதல் வகுப்பில் நீங்கள் படித்தபோது ஆசிரியையாக இருந்த மேரி செல்வம் அவர்களை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    என்னைப் போலவே ஒருவர் என நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  11. இனி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால், நிச்சயம் அதன் பெயர் “இராஜராஜேஸ்வரி” தான் என்பது என்னால் எப்போதோ [18.02.2011 அன்றே] முடிவு செய்யப்பட்டு விட்டது.

    அம்பாள் அருள் எப்படியோ, பிராப்தம் எப்படியோ, பார்ப்போம்.

    ReplyDelete
  12. அழகான அனுபவப்பகிர்வு. பள்ளி ஞாபகங்கள் எப்போதும் இனிமையானவைதான்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  13. வழக்கம் போல அழகழகான படங்களுடன், தங்களின் குழந்தைப்பருவ மலரும் நினைவுகளை, எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தங்களை இது போன்றதொரு அருமையான பதிவிடுமாறு அழைப்பிதழ் அனுப்பிய ஷக்திக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. Rajeswari why you stopped it
    I want some more.....
    innum innum elluthu
    padika asaiyai errukku.
    viji

    ReplyDelete
  15. பள்ளி நாட்களை நினைத்துப்பார்ப்பதே சுகமானதுதான்.

    ReplyDelete
  16. பள்ளி பருவ அனுபவங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    உங்களுக்கு கைரேகை பார்க்க தெரியுமா!
    எத்தனை திறமை உங்களிடம!

    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  17. துள்ளி விளையாடிய பள்ளி நாட்களை உள்ளம் நிறையச் செய்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. பள்ளி வாழ்க்கையை புட்டு புட்டு வச்சுட்டீங்க. விடுதி ஜோஸ்யர் பட்ட பேரு நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. பள்ளி நினைவுகள் பிரமாதமாக இருக்கிறது.....

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  20. நல்ல நினைவுகள். பொம்பிளைப் புள்ளைங்கன்னா பேசீட்டேதான் இருப்பாங்களோ?

    ReplyDelete
  21. குதூகலிக்கும் பள்ளி நாட்கள் மகிழ்ச்சியைத் தருகின்றது.

    ReplyDelete
  22. பள்ளி நினைவுகள் என்பது என்றும் அழியாதது... அதை அழகாக பகிர்ந்தீர்கள்.

    ReplyDelete
  23. ஆஹா....பொக்கிஷமாக நெஞ்சினில் வைத்த நினைவுகள் ஞாபகம் வருதே...
    அருமையான பதிவு.

    ReplyDelete
  24. ராஜேஸ்வரி மேடம்....கலக்கிட்டீங்க...நன்றி...

    பள்ளியில் முதலாவதாகவா....தெய்வமே....
    :bow:

    உங்களை அறிந்து கொள்ள முடிந்தது...

    பென்னட் தலைமை ஆசிரியரின் நகைச்சுவை ரசிக்க முடிந்தது. உங்கள் கொத்தமல்லி சட்னி, நம்மால் விதைச்சு வளர்த்து சமைக்கப்பட்டால் ...அடடா படிக்கவே சுவைக்கிறது.. :)

    உங்களைப் பற்றிய புரிதல் இன்னும் இனிக்கிறது மேடம். நன்றி.

    ReplyDelete
  25. இந்த மாதிரி பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டதைப் படிக்கும் போது “ ஓ... அது அந்தக் காலம் “ என்று தோன்றுகிறது. சுவையான நினைவுகள் கோர்வையாக எழுதப் பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. அன்பின் இராஜ இராஜெஸ்வரி - மலரும் நினைவுகள் - நினைத்து நினைத்து மகிழும் நினைவுகள் - துவக்கப்பள்ளி வாழ்க்கை மறக்க இயலாத ஒன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete