சாவித்திரி மாங்கல்ய தேவதை மங்கள சண்டிகையை மாங்கல்யம் பெற பூஜித்த மந்திரம்
மங்களே மங்கள தாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களே ஸ்ரீ
மாங்கலயம் தேஹிமே ஸதா
இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்..
மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
மாங்கல்ய மகரிஷி அகத்தியர்,வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர்.
இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது.
மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள்,
மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு ..
திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும்உள்ளது ....
திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர்.
இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.
உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.
உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம்.
தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
: திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.
திருமணம் நிச்சயம் ஆனவுடன், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு பத்திரிகைவைத்து தங்கள் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டுகின்றனர்.
திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.
மங்களாம்பிகை
மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும்,
அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர்,
அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து
22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ.
தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட
நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 8 - மதியம் 12 மணி, மாலை 6 - இரவு 8 மணி .
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தீர்க்காயுள், தீர்க்க சுமங்கலி மந்திரம்.
ஓங்கார பூர்விகே தேவீ வீணா புஸ்தக தாரிணி
வேதம்பிகே நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே||
ஓங்காரத்தை முன்னிட்டவளே, வீணை புஸ்தகம் தரித்த வேத மாதாவே.
என்னை என்றும் சுமங்கலியாக வாழச்செய்.
காலையில் எழுந்ததும் திருமாங்கல்யத்தைத் தொட்டுக்கொண்டு
மும்முறை சொல்வது நல்லது.
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!
(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!
திவ்ய மங்கள கற்ப்பூரத் தீப தரிசனம்
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!
தீர்க்க சுமங்கலீ பவ:
ReplyDeleteவழக்கம்போல் அருமையான திரு உருவப் படங்களுடன்
ReplyDeleteஅரிய தக்வல்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
”மங்கள நாயகி மங்களாம்பிகை”க்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
ReplyDeleteதிருமாங்கல்யப்படங்கள் பார்க்கவே திவ்யமாக,மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன. ;)))))
ReplyDeleteஇந்த இடையாற்றுமங்கலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமசாமி ஐயர் என்பவரால், ஆரம்பித்து வைக்கப்பட்டதே திருச்சியில் இன்றும் பிரபலமாக உள்ள E R H S ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
ReplyDeleteதிருச்சி சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது.
இடையாற்றுமங்கலம்
ராமசாமி ஐயர்
ஹையர் செகண்டரி
ஸ்கூல்
என்பதன் சுருக்கமே E R H S
இந்த தங்களின் 460 ஆவது பதிவும் வழக்கம் போல அழகான படங்கள் + அருமையான விளக்கங்களுடன் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல புகைப்படங்கள் மற்றும் பகிர்வு.....
ReplyDeleteமங்கள நலம் தரும்
ReplyDeleteமங்கள நாயகி
மனதில் நிற்கும் அருமையான
புகைப்படங்கள்...
மாங்கள்யெஸ்வரர் பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவழக்கம்போல் அருமையான திரு உருவப் படங்களுடன்
ReplyDeleteஅரிய தக்வல்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நல்ல படங்களுடன் தெய்வப் பதிவு அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மாங்கல்ய முனிவர் பற்றிய தகவல்கள் ஆச்சரியம்... பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
எங்கெல்லாமோ இருக்கும் கோவில்களைத் தேடிப்பிடித்து,அழகான படம்,தலபுராணம், தாத்பர்யம் என்று, எங்களுக்காக எடுத்துச்சொல்லும் உங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteபடங்களுடனான தலம் பற்றிய செய்திப்பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDeleteஉத்திர நட்சத்திர பலன்கள் படித்து தெளிவு பெற்றேன்! ஏனெனில் சென்ற வருடம் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீரங்கம் சென்று இரவில் தாயார் மனைக்கு எழுந்தருளும் பெருமாளை தரிசிக்கும் பாக்யம் கிட்டியது! அத்திருநாளின் முக்கியத்துவத்தை தங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்! மிக்க நன்றி!
ReplyDeleteபடங்களும் தகவலும் அருமை. என் பிள்ளையும் உத்திரம் நட்சத்திரம் தான்
ReplyDeleteவழக்கம்போல் படங்களுடன்
ReplyDeleteபதிவு அருமை...
அரிய தகவல்கள் - பார்த்து மகிழப் படங்கள் - செய்யும் பணி - ஆன்மீகப் பணி பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
46. காமுதபலதா கோவிந்தா
ReplyDelete2480+5+1=2486
ReplyDelete