நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து….பரமன் அருள் தரும் சாதனம்…
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
ஆதியும் அந்தமும் =நாராயணனே அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே பகலும் இரவும் = நாராயணனே
நாராயணா அரி நாராயணா நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா நாராயணா லட்சுமி நாராயணா
ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம், கருணா மூர்த்தி, ஸ்ரீ இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர்
கண்ணனடியினை எமக்குக் காட்டும் வெற்பு
கருதுமவர் இருவினையும் கடியும் வெற்பு
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு
......... ......... ............ . .................
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
திருவரங்கத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் திருவடிகளை மையமாக வைத்து பாதுகா சஹஸ்ரம் என்ற ஸ்லோகத்தையே ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியவர் இயற்றியிருக்கிறார்.
முழுக்க முழுக்க இறைவனின் திருவடிப் பெருமைகளையே உரைக்கும் இந்த சுலோகங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. ஒரே இரவுக்குள் இந்த “பாதுகா சஹஸ்ரம்” என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் முழுவதையும் அவர் எழுதி முடித்தார் என்பது
இதன் சிறப்பு.
வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர்.
உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர்
மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகரும் ஒருவர்.
திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருவது சிறப்பு..
ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள், வடமொழி வேதத்திற்கு இணையானவை என நிலைநாட்டியவரும். சரணாகதித் தத்துவத்தை நிலைபெறச் செய்தவரும் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகரே ஆவார் !
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதையைத் தொழுது, ‘கோதாஸ்துதி’ பண்ணினார்
ஸ்ரீ தேசிகர்
ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் என்னும் கரந்தத்தை ஒரே ஒரு இரவில் இயற்றி முடித்தார். மகிமை மிகப் பொருந்திய இந்த நிரதிசய க்ரந்தம் எழுதுகையில் பொங்கிய உள் ஆனந்தமும் பிரகாசமும் நிறைந்தது
பரதன் ஸ்ரீஇராமரின் பாதுகைகளைக் கொண்டு, நந்தி கிராமத்தில் வைத்து பூஜித்து, ஸ்ரீ இராமரை நினைத்தே இராஜ்ஜியம், பதிநான்கு வருடம் நடத்தினான்.
ஸ்ரீ மஹா தேசிகரின் ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் என்னும் படைப்பு, காலம் கடந்ததா அல்லது காலத்திற்கு உட்பட்டதா?
அற்புதமான பதங்கள், ஆழ்வார்களின் திரு கல்யாண குணங்களோடு அமைந்திருக்கும் பாதுகா சகஸ்ரம். உயிர்களுக்கு ஆதாரமான ஆனந்தமும், பேரறிவுமே இரண்டு பாதங்களாகக் கொண்ட, ஜீவர்களுக்கு (உயிர்களுக்கு) உய்ய இனி காலத்தில் சுழலாது இருக்க பிறவியறவே ஏற்படுத்திய பாசுர பதங்கள் கொண்டுள்ளது
ஸ்ரீமாந் வேங்கட நாதார்யா : கவிதார்க்கிகேஸரீ
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிததத்தாம் ஸதாஹ்ருதி
என்று சொல்லி பாதுகா சஹஸ்ரத்தை அருளிய நிகமாந்த தேசிகரை மனதால் நினைத்து வணங்கவேண்டும்.
சுக பாக்கியங்கள் ஏற்படுவதற்கு 50 வது சுலோகத்தை ஜபிக்கவேண்டும்.
பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம்
பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே:
க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:
பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட
நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய்.
உன்னைத் தீய மக்கள் அண்டிவிடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய்;
இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்?
என்பது பொருளாகும்
சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு
ரஸவாதம் என்று பெயர்.
இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன.
ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின்
தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது.
இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று
அனைவராலும் போற்றும்படியாக மாறிவிடுகின்றனர்.
தங்கத்தால் செய்யப்பட்ட சடாரிதான் நம்முடைய
தலை எழுத்தைத் தங்கமாக மாற்றும் என்று அவசியம் இல்லை.
இந்த வெள்ளிச் சடாரியும் மாற்றும்.
உக்கமும் தட்டோளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்
அதிகாலையில் மிக நல்ல தரிஸனம்.
ReplyDeleteஅனைத்துப்படங்களும் அழகோ அழகு.
கண்களில் ஒத்திக்கொண்டேன்.
அதுவும் அந்த இரண்டாவது படத்தில் அம்பாள் எத்தனை கம்பீரமாக அழகாக அருமையாக வீற்றிருக்கிறாள் !!!! ;)))))
மிகவும் சந்தோஷமாக உள்ளது. நன்றிகள்.
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅழகான , கம்பீரமான , கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!
பாதுகா சஹஸ்ரம் தகவல்கள் அனைத்தும் அருமை... படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
காணக் கிடைக்கா அற்புத திருவுருவப்
ReplyDeleteபடங்களுடன் பதிவு மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅற்புதமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
தமிழும் தெய்வத்தன்மை உடையது என்பதை அறிவித்த பெரியவர்கள் வாழ்க
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteதெய்வத்தன்மை மிக்க தமிழின் பெருமையை உணர்ந்த கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
தங்களின் பெட்டகத்தில் உள்ள, அருமையான கருத்துக்களும், புகைப்படங்களும் தங்களின் பதிவுகளுக்கு வலு சேர்க்கின்றன. மிகவும் சிரத்தையுடன் தெய்வத்திற்கு அலங்கரிப்பது போன்று, பதிவுகளையும் புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன.
ReplyDeleteஅழகிய புகைப்படங்களும், கருத்துக்களும் சிறப்பாக இருக்கின்றன.
பகிர்விற்குப் பாராட்டுக்கள்!
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteசிரத்தையான அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!
அற்புதமான படங்கள்... சிறப்பான தகவல்கள் என இன்று அருமையான பகிர்வு.
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅற்புதமான , சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
பாதுகா சஹஸ்ரம் மிகவும் அரிய ஒரு பொக்கிஷம்.
ReplyDeleteஒவ்வொரு ச்லோகத்திற்கும் ஒரு தனி தன்மை இருக்கிறது.
நவ க்ருஹங்களை நாம் வைஷ்ணவ கோவில்களில்
நாம் பார்க்க இயலாது.
நவ கோள்கள் நாராயணிடம் பணிவுடன் அவன் பாதுகா சேவகம் செய்வதாக ஒரு வைஷ்ணவ பெரியவர் என்னிடம் சொல்லி,
எந்த எந்த கோளுக்கு எந்த பாசுரம் படிக்கவேண்டும் எனவும்
சொன்னார்.
சுப்பு தாத்தா.
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
அளப்பரிய பாதுகைகளின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைத்த கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..!
தமிழும் தெய்வத் தன்மை வாய்ந்தது என்றும் பாதுகையை பற்றியும் வெள்ளிச் சடாரி பற்றியும் அறிந்தேன் அனைத்தும் அற்புதம் படங்களின் மூலம் தரிசனமும் பெற்றேன் நன்றி ....!
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....!
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteதமிழின் தெய்வத்தன்மையனறிவித்த அற்புதமான
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
தமிழும் தெய்வத் தன்மை வாய்ந்தது என்றும் பாதுகையை பற்றியும் வெள்ளிச் சடாரி பற்றியும் அறிந்தேன் அனைத்தும் அற்புதம் படங்களின் மூலம் தரிசனமும் பெற்றேன் நன்றி ....!
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....!
அருமையான் பாடல், பாதுகா சஹஸ்ரம் பற்றிய தலவல்கள் எல்லாம் மிக அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
ஆண்டாள் அத்தனை அத்தனை படங்களிலும் கொள்ளை கொள்கிறாள்.
ReplyDeleteஆண்டாள் மடியில் ரங்க மன்னார் .......அருமையான திருக்கோலம்.
காணக் கண் கோடி வேண்டும். நன்றி....
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
அறியப்பாடாத தகவலுடன் பகிரப்பட்ட படங்கள் ஒவ்வொன்றும்
ReplyDeleteமனக் கண்ணில் ஒட்டிக் கொண்டது தோழி ! அருமையான இப் பகிர்வுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
அறியப்பாடாத தகவலுடன் பகிரப்பட்ட படங்கள் ஒவ்வொன்றும்
ReplyDeleteமனக் கண்ணில் ஒட்டிக் கொண்டது தோழி ! அருமையான இப் பகிர்வுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகளுக்கும் ,பாராட்டுக்களுக்கும் , வாழ்த்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..!
பாதுகா சகஸ்ரத்தின் அருமைகளையும் தெரிந்து கொண்டேன்.. ஆண்டாள் கண்ணாடி அறை சேவை படங்கள் அனைத்தும் அருமை....
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
பாதுகா சகஸ்ரம் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
ஒரு சிறிய சந்தேகம் - "//சாதாரண பொருள் ஒன்றை தங்கமாக்கும் வித்தைக்கு பெயர் ரசவாதம்//".
ReplyDeleteநான் கேள்விப்பட வரைக்கும் இரும்பை தங்கமாக மாற்றும் வித்தைக்கு பெயர் தானே ரசவாதம்? சாதாரண பொருளை தங்கமாக மாற்ற முடியுமா?
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
இரும்பு சாதாரண பொருள் -உலோகம் தானே ..!
படங்கள் தெள்ளத் தெளிவாக, அழகாக இருக்கின்றன. அருமை.
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteஅழகான அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
படங்களும் பதிவும் பிரமாதம் வெற்பு எனும் பதத்தின் பொருள் தெரியவில்லையே..வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
பரமபதத்தில் இருந்த க்ரீடா பர்வதமே வேங்கடமலை;
ஆதிசேடனே மலையுருவில் வேங்கடவனைத் தாங்கி நிற்கிறார்
வெற்பு என்பது மலை என்கிற பொருளில் இங்கு அமைந்திருக்கிறது..