வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாளில் குதூகல குடியரசு தின வாழ்த்துகள்!!.
உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றிக் கொண்டாடுகிறோம் குடியரசு தினமாவும் , சுதந்திரத்திருநாளாகவும்..!
நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும்.
ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..
மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் குதூகல குடியரசு தினம் ஆகும்..
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
இனியொரு விதிசெய் வோம் - அதை எந்த நாளும் காப்போம்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க!
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
குடியரசு தின வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள் மேடம். அருமையான படங்களுடனான சிறப்புப் பதிவுக்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்....! படங்களும் பதிவும் அருமை...!
ReplyDeleteமிக்க நன்றி
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
ReplyDeleteநற்றவ வானினும் நனி சிறந்தனவே!..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபள்ளி நினைவு வந்து விட்டது. நீங்கள் பகிர்ந்த பாடல்களால்.
தாயின் மணிக் கொடி, பாடல் எல்லோரும் பாடி கொடி வணக்கம் செய்வோம்.
தண்ணீர்விட்டோ வளர்த்தோம் கேட்டால் மேனி புல்லரித்து கண்ணீர் எப்போதும் வரும்.
அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடியரசுதின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்து
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபடப்பதிவு மிக அருமை....வாழ்த்துக்கள் .தங்களுக்கும் மேன்மையான தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல படங்களுடன் குடியரசு தின வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள். படங்களும் பதிவும் வழக்கம்போல அருமையாக உள்ளன. ;)
ReplyDelete