ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேய நமாம்யஹம்
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி'ரஸா நமாமி ||
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||
ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||
அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ'கநாசனம் |
கபீச'மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||
ராம ஸேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவன் சிரஞ்ஜீவியான அனுமன்.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டப்படுகிறது.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்
எனும்படி "ராம" என்ற அந்த இரண்டு எழுத்தே ஒரு மஹாமந்த்ரம்... அது ஒன்றே ஸகல நன்மைகளையும் கொடுக்கவல்லது. எப்படி ஒரே மஹாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தாரோ, அது போல அந்த ஒரே ராம மந்த்ரம் பல்வேறு வகையில் பக்தர்களுக்கு அருள வேண்டி விரிவாக்கம் அடைந்துள்ளது.
Thousands of Cocounuts offered as Poornaphalam for Sri Karyasiddhi Hanuman
நல்ல பதிவு. அருமையான் ஹனுமான் படங்கள் . நன்றி
ReplyDeleteநல்ல பதிவு. அருமையான் ஹனுமான் படங்கள் . நன்றி
ReplyDelete”ஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்ச்நேயர்” என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப்பதிவு ஸ்திரவாரம் எனச்சொல்லப்படும் சனிக்கிழமையாகிய இன்றைக்கு மிகவும் பொருத்தமானதே.
ReplyDelete'யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ................'
என்பதற்கு இணங்க, தாங்கள் எத்தனை முறை ஸ்ரீ ஹனுமனைப்பற்றி பேசினாலும், அத்தனை முறையும் புதுமையாகவும், மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதாகவும், வாழ்க்கையில் அதிக நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாகவும் இருப்பதாக மட்டுமே என்னால் உணர முடிகிறது.
>>>>>
படங்கள் யாவும் ஜொலிக்கின்றன!
ReplyDeleteபழங்கள் யாவும் பரவஸமளிக்கின்றன!!
வடைகள் யாவும் நாக்கினில் நீரை வரவழைக்கின்றன!!!
வெண்ணெய்ச்சாத்து, புண்பட்ட ரணப்பட்ட நெஞ்சத்தினையும் குளிர்விப்பதாக அமைந்து போகிறது.
>>>>>>>
எண்களுடன் எழுதப்பட்டு, மோத முழங்கத் தொங்கும் இளநீர்கள் அதுவும் ஆயிரக்கணக்கில் அந்த கடைசி படத்தில் .... என்னை என்னவோ செய்கிறது.
ReplyDeleteமிகவும் ப்ரும்மாண்டம்!!!!
எங்கிருந்து தான் இவ்வாறான அருமையான அதிசயமான படங்களைத் தேடித்தேடி ஓடிஓடிப்போய் கண்டுபிடித்துக் காட்டுவீர்களோ!
வியப்போ வியப்பூஊஊஊ,
எனக்கே எனக்கூஊஊஊஊ.
நம் கார்யம் ஸித்தியாக ...
பூர்ணபலமாக அமையட்டும்.
........ ;))))))
>>>>>>>>
பாரிஜாத தருமூல வாஸினனான ஸ்ரீ ஹனுமனைப்பற்றியும், ஸ்ரீ ராம நாம ஜபத்தையும் அதன் மஹிமையையும் பற்றியும், நீங்கள் சொல்லிக்கேட்பதில் எனக்கு எப்போதுமே ஓர் பேரானந்தம் ஏற்படுகிறது.
ReplyDelete’ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே’ என ஊஞ்சல் பாட்டு பாடுவது போலவும், ஊஞ்சலில் மெய்மறந்து ஆடுவது போலவும், மனதை அங்கலாய்க்கச்செய்து ஆட்டிப்படைக்கிறது உங்களின் அன்றாட அற்புதப்பதிவுகள். ;)))))
’கண்டேன் ஸீதையை’ என்பது போல காண்கிறேன் உங்களின் பதிவுகளை. ;)
>>>>>>>
ஸ்ரீ ராமதூதன், ஸ்ரீ ராமபக்தன், எல்லாம் வல்ல ஸ்ரீ ஆஞ்சநேயன் உங்களை எப்போதும் மேலும் மேலும் பல வெற்றிகள் பெற்று,
ReplyDeleteசெளக்யமாகவும் ....
சந்தோஷமாகவும் ... ஸகல
செளபாக்யமாகவும் வைத்திட அனுக்கிரஹம் செய்யட்டும்.
மனமார்ந்த ஆசிகள்.
பதிவுக்குப் பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
-oOo-
காரிய சித்தி அனுமான் வித்தியாசம்.
ReplyDeleteஇளநீர் காட்சுp புதுமை.
படங்கள் அருமை. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ராம நாம தாரகம் ஸதாஸ்ரயாமி...
ReplyDeleteஸ்ரீராமனின் பாதம் பணிந்து பக்த ஹனுமானின் அனுக்கிரகமும் கிடைத்திட அருமையான படங்களுடன் பதிவதைப் பகிர்ந்திட்ட சகோதரி உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள் பல.
This blog was... how do I say it? Relevant!! Finally I have found something
ReplyDeletewhich helped me. Cheers!
Feel free to surf my web blog :: ray rice jersey youth
திகட்டாத தெள்ளமுதம் !
ReplyDeleteஇன்று காலை கணனியைத் திறந்தவுடன், கார்ய சித்தி ஆஞ்சநேயர்! மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
ReplyDeleteஒரு நல்ல சகுனமாகப் பட்டது.
வடை மாலை அலங்காரம் கண்ணைக் கட்டி நிறுத்தியது.
நன்றி!