Wednesday, February 20, 2013

கியா .. கியா,, கிளிகள்..







நம் நாட்டில் அழகுப்பறவையான கிளி மதுரை மீனாட்சி அம்மனின் தோளில்  அழ்காக அமர்ந்து  இருக்கும் ...

சூடித்தந்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் தோளிலும் அமர்ந்திருக்கும் தூது சென்று தன் தலைவியின் சொற்களை கண்ணனிடம் சொல்லும் திறமை பெற்றது ..

அருணகிரி நாதர் கிளி வடிவில் இருந்து 
 கந்தர் அனுபூதி பாடியதாக வரலாறு கூறும் ..

 பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் மண்மூடிக்கிடந்தபோது அந்த மண்மேட்டில் அமர்ந்து ரங்கா ரங்கா என்று இடைவிடாமல் கூவ , சோழமன்னன் அந்த இடத்தை அக்ழ்ந்து அரங்கனை தரிசித்து கோவிலும் கட்டியதாக புராணம் தெரிவிக்கும் ..  கிளி மண்டபம் திருவரங்கத்தில்  பிரசித்தி பெற்றது ..

காம தேவனின் வாகனம் கிளி...
கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை. 

பல தெய்வங்களும் திருவிழாக்களில் கிளி வாகனங்களில் 
ஊர்வலம் வந்து அருள்பாலிப்பதுண்டு ...

திருமயிலை மயூரவல்லித்தாயார் 
கிளி வாகன சேவை 

இப்படி நம் நாட்டில் தெய்வீகப்பற்வையாக , ஜோதிடம் சொல்லும் பறவையாக வீடுகளில் விரும்பிவளர்க்கும் செல்லப்பறவையாக , சர்கஸ்களிலும் , சிங்கப்பூர் போன்ற காட்சிச்சாலைகளில் சைக்கிள் ஓட்டி  , சாகசங்கள் பல் செய்து மகிழ்விக்கும் வண்ண எழில் மிகு கிளிகள் மனதை கொள்ளைகொள்ளும் ...
success, victory, isha, sadhguru, yoga, mediation, kundalini, win win, you can win, secret, businesssecret, life, flexible, isha foundation, great, thumbs up, personality, inter personal skills, skills, failure, looser, luck, fortune, talent, clarity, confidence, belief, embrace, like, dislike, calculation, sense, aspiration, vision,
நியூசிலாந்து நாட்டில் காணப்படும் கியா என்ற கிளி வகைகள் 
வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டு வியக்கவைக்கின்றன ...

 கியா வகை கிளிகள் மிக சாமர்த்தியமானவை.

 நன்கு பூட்டி வைத்து இருக்கும் உணவை சாமார்த்தியமாக எடுப்பதில் 
மிகுந்த வல்லமை படைத்தது.

கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.

அதன் பலம் மிகுந்த அலகு மற்றும் கால்களால் எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக உடைத்து விடும். 
www.thedipaar.com
நியூசிலாந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உடமைகளை காருக்குள் பூட்டி வைத்துவிட்டு சென்று இருந்தாலும், இந்த கியா கிளிகள் கார் கண்ணாடிகளை தங்கள் அலகால் உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை திருடி சென்று விடும்
www.thedipaar.com
அதே போன்று கார் பீடிங், டயர் மற்றும் ஏரியல்களை சேதப்படுத்தி விடும். 

இந்த கியா கிளிகளை பற்றி அறியாத சுற்றுலா பயணிகள் தனது லாட்ஜ் ஜன்னல் கதவை திறந்து வைத்துவிட்டு போட்டோ எடுக்க வெளியில் 
சென்று விட்டால்  ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து  அலகில் கிடைத்தவ்ற்றை எல்லாம் சேதப்படுத்திவிடுமாம் ...


.File:Nestor notabilis - damaging car.jpg
File:Bold kea close-up.jpg






கொலம்பியா நாட்டில் உள்ள ஹோட்டலில்  வளர்க்கப்படும் பஞ்ச வர்ண கிளிகள் இரண்டும் குரங்கு ஒன்றும் பிரிக்க முடியாத நண்பர்களாக 
 கிளிகளும் குரங்கிடம்  அன்பு பாராட்டுவது ஆச்சரியப்படுத்துகிறது ...



17 comments:

  1. Aha ha .....
    Enna samarthiyam kilikalukku.....
    Very interesting post Rajeswari.
    I enjoyed the pictures as usual. Thanks.
    viji

    ReplyDelete
  2. There's definately a lot to find out about this issue. I really like all the points you made.
    My website : louis vuitton briefcase

    ReplyDelete
  3. புத்தகம் வாசிக்கும் அழகைக் கண்டு வெகு நேரம் இருந்து விட்டேன் அழகோ அழகுங்க.

    ReplyDelete
  4. அழகான கிளிகள். கொஞ்சுமொழி பேசும் பஞ்சவர்ணக் கிளிகள்!

    ஆனால் எப்படி இப்போது எம்மை கிலிகொள்ளவைக்கும் கிளியாக மாறியது....:)
    ம்ஹும்... அறிந்திராத அறிய வேண்டிய தகவல்!

    பகிர்வுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. கிளி கொஞ்சும் தங்களின் இந்த 825 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  6. ”கிளியை வளர்த்து பூனை கையில் அல்லது குரங்கு கையில் கொடுத்தது போல” என்று பெண்களைப்பெற்ற தாய்மார்கள் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

    இங்கு கடைசி இரண்டு படங்களில் நேர் விரோதமாக அல்லவா உள்ளது.

    >>>> இடைவேளை >>>>

    ReplyDelete
  7. கியா.... கியா.... கிளிகள்

    தலைப்பு அருமை. ஏதோ கியா கியா எனக்கீச்சிடும் கிளிகளோ என நினைத்துப்படிக்கும் போது ‘கியா’ என்றே ஒரு வகைக்கிளிகள் என்ற பின்னால் வரும் விளக்கமும் அருமை.

    >>>>>

    ReplyDelete
  8. முதல் படத்தில் வாழைமரத்தினில், கொட்டும் [சொட்டும்] மழையினில் மூன்று கிளிகள் அழகோ அழகாக. ;)

    ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!!!

    >>>>>

    ReplyDelete
  9. பிறகு பெயிண்ட் அடிக்கும் கிளிகள், புத்தகம் படிக்கும் கிளிகள் என வரிசையாக அழகழகான கிளிகளைப்பறந்து பறந்து போய் பிடித்து வந்து இங்குப்பதிவினில் படங்களாகக் காட்டிட உங்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

    நீங்க தான் இதிலெல்லாம் கில்லாடிக் கிளியாச்சே!! ;))))))

    >>>>>>

    ReplyDelete
  10. மீனாக்ஷி, ஆண்டாள், அருணகிரிநாதர், ஸ்ரீரங்கம் கிளிமண்டபம், காமதேவனின் வாஹனம், பல கோயில்களில் நடைபெறும் கிளி வாஹன சேவைகள், ஜோதிடம் சொல்லும் கிளிகள், சர்க்கஸ் கிளிகள்,

    *சைக்கிள் ஓட்டும் சிங்கப்பூர் கிளிகள்*

    [*”பிரியா” என்ற ரஜினி நடித்த படத்தில் கூட இதைப்பார்த்துள்ளேன்*]

    என ஏராளமானத் தகவ்வல்கள் தந்து அசத்தோ அசத்தென அசத்தியுள்ள சமத்தோ சமத்துக்கு நன்றிகள்.

    >>>>>>>

    ReplyDelete
  11. உங்களைப்போலவே மிகவும் சாமர்த்தியசாலியான “கியா”க் கிளிகள் பற்றிப் படித்ததும் வியந்து போனேன்.

    உலகில் உள்ள உறுதியான பொருட்களைக்கூட தன் கூர்மையான அலகினால் ஒரு கைப்பார்த்து விடுமா?
    ஹைய்ய்ய்ய்ய்யோஓஓஓஓ!

    உறுதியான உள்ளத்துடன் வைராக்யமாக இருந்த என்னையே உலுக்கி எடுத்து விட்டதே ஒரு கிளி ! ;))))))

    பிறகு இதெல்லாம் என்ன பிரமாதமான விஷயமாக்கும்? [ Nothing ]

    >>>>>>>

    ReplyDelete
  12. நியூசிலாந்து கிளிகள் கில்லாடியாவைகள்.

    திருட்டுக்கிளிகள்.

    உங்கள் பதிவினில் உள்ள செய்திகளைப்படித்தாலே கிலி ஏற்படுகிறதே!

    கீழிருந்து பத்தாவது படம் [காருக்கு உள்ளே ஒருவர் - வெளியே கார் கண்ணாடி மீது கிளி] எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    நாங்கள் சோளிங்கருக்கு காரில் போனபோது, அங்கு ஒரு மிகப்பெரிய குரங்குப்பட்டாளம், இதே போல காரின் முன்புறக்கண்ணாடிகளில் குதித்து எங்களை வரவேற்று மகிழ்ந்தன [மகிழ்வித்தன].

    எங்கு போனால் நம்மாட்கள் இருக்கிறார்களே, என சந்தோஷப்பட்டுக்கொண்டோம்.

    >>>>>>>>

    ReplyDelete
  13. இன்றைய தங்களின் பதிவு வெகு அருமையாக உள்ளது.

    இன்னும் நிறைய எழுத வேண்டும் எனவும் ஆசையாகத்தான் உள்ளது.

    வேறு சில குறுக்கீடுகளும் உள்ளன.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooooo

    ReplyDelete
  14. I got this site from my pal who shared with me about this web site and at the
    moment this time I am browsing this web page and reading very informative content
    at this place.
    my web page: louis vuitton purses

    ReplyDelete
  15. படங்கள், தகவல்களுடன் பகிர்வு மிக அருமை.

    ReplyDelete
  16. என்ன இவ்வளவு பயங்கரமான கிளியாக உள்ளதே கியா..
    எப்படித்தான் பூட்டிவிட்டுச் செல்வது?...ஆச்சரியம். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. நம் நாட்டுக் கிளிகள், அயல்நாட்டு கியா கிளிகள் என்று பதிவு போட்டு அசத்திவிட்டீர்கள்.

    புத்தகம் படிக்கும் கிளியும், இரண்டு கைகளிலும் மரக்கட்டையை வைத்துக் கொண்டு வித்தை செய்யும் கிளியும் அருமை.

    பார்க்க அழகாக இருக்கும் கியா கிளிகளின் முரட்டு சுபாவம் ஆச்சரியப் பட வைக்கிறது.

    ReplyDelete