குருவாயூரப்பா - திருவருள் தருவாய் நீயப்பா உன்கோவில் வாசலிலே - தினமும் திருநாள் தானப்பா - தினமும் திருநாள் தானப்பா! (குருவாயூரப்பா)
எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம் - உன் சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன்பாதம் (குருவாயூரப்பா)
உலகம் என்னும் தேரினையே ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன் கையில் சுழலும் அற்புதமே
மலையாள விருச்சிக மாத ஏகாதசி நாள் (தமிழில் கார்த்திகை மாதம்) குருவாயூரில் மிகவும் புனிதமான நாளாகப் போற்றப்படுகிறது..!.
கார்த்திகை மாத ஏகாதசி நாள் மண்டல விரதமிருக்கும்
காலத்தில் நிகழ்கின்றது.
காலத்தில் நிகழ்கின்றது.
அதற்கு முன்வரும் ஒன்பதாவது நாளான நவமி மற்றும்
பத்தாம் நாளான தசமியும் முக்கியம் வாய்ந்ததாகும்.
குருவாயூர் ஏகாதசி நாளன்று கஜராஜன் கேசவனின் நினைவு நாளாகவும் கர்நாடக இசைமேதையான செம்பை வைத்திய நாத பாகவதரை போற்றும் வண்ணம் செம்பை சங்கீத உற்சவமும் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
ஸ்ரீ வல்சம் பயணிகள் தங்குமிடத்திற்கு முன் அமைந்துள்ள கஜராஜன் கேசவனின் சிலைக்கு யானைகளின் கூட்டம் ஊர்வலமாக வந்து, யானைகளின் தலைவன் தனது தும்பிக்கையால் கேசவனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்க, இதர யானைகள் கேசவனுக்கு மரியாதை செலுத்துவது கண்கொள்ளா காட்சியாகும்.
ஏகாதசி நாளன்று, உதயாஸ்தமன பூஜை எனப்படும் (விடியற்காலை முதல் நள்ளிரவு வரையிலான பூஜைகள்) அனைத்து பூஜைகளும் குருவாயூர் கோவில் நிர்வாகமே (தேவஸ்வம்) மேற்கொண்டு வருகிறது.
சீவேலி எனப்படும் யானைகள் பங்கு கொள்ளும் கோவிலை சுற்றிவரும் உற்சவ நிகழ்ச்சிக்குப்பிறகு, அந்நாள் கீதோபதேச நாளாகவும் கொண்டாடப்படுவதால், ஏகாதசியன்று யானைகளின் ஊர்வலம் ஒன்றும் கோவிலில் இருந்து அண்மையிலுள்ள பார்த்த சாரதி கோவில் வரை சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளதை கண்டு பரவசமடையலாம்.
ஏகாதசி நாளன்று இரவில், இறுதியாக ஏகாதசி விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகளுடைய பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றும் நடைபெறும்,
கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தமிழகத்தை சேர்ந்த சங்கீத வித்வான் ஸ்ரீ செம்பை வைத்யநாத பாகவதர் அவர்களின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடகரான செம்மை வைத்தியநாத பாகவதர் திருசெங்கோட்டில் ஒரு கச்சேரியில் பாவன குருபவன புராதீச மாஸ்ரயே என்று பாடிக் கொண்டிருந்தார்.
திடீரென அவரது தொண்டை அடைத்துக் கொண்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் அதற்கு மேல் பாட முடியவில்லை. அவரது சிஷ்யர்கள் அவரை பல வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றும் ஒரு பயனும் இல்லை. எல்லா வைத்தியர்களும், அவர் தொண்டையில் ஒரு பிரச்சனையும் இல்லை. அது எப்படி நின்று போனதோ அப்படியே வந்துவிடும் என்று கூறிவிட்டனர்.
திடீரென்று அவருக்கு நாம் குருவாயூரப்பனைப் பற்றிப் பாடியபோதுதானே நம் குரல் நின்று விட்டது. அந்த குருவாயூரப்பனையே வேண்டிக் கொள்வோம் என்று நினைத்து குருவாயூரப்பன் சன்னதியில் நின்று, குருவாயூரப்பா, நீ கொடுத்த தொண்டை இது. அன்று நான் எந்த இடத்தில் பாட்டை விட்டேனோ அந்த இடத்தில் இப்பொழுது எனக்குப் பாட வரணும்.
அப்படி எனக்குப் பாட வந்தால், இனிமேல் நான் என் வாழ்நாள் முழுவதும் கச்சேரி பாடி கிடைக்கும் எல்லா சம்பாதியத்தையும் உனக்கே சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார்.
அடுத்த நிமிடமே அவர் எந்த இடத்தில் அந்த கீர்த்ததனையைப் பாடி விட்டாரோ அந்த இடத்தில் இருந்து பாட ஆரம்பித்து விட்டார்.
அன்றுமுதல் தன் சம்பாத்தியம் எல்லாவற்றையும் குருவாயூரப்பனுக்கே அர்ப்பணித்து வந்தார்.
ஒவ்வொரு கார்த்திகை மாத ஏகாதசிக்கும் குருவாயூர் வந்து கச்சேரி செய்தார்.
இன்றும் கார்த்திகை மாதம் வரும் ஏகாதசிக்கு
குருவாயூர் ஏகாதசி என்று பெயர்.
அப்போது நடக்கும் பத்து நாள் உற்சவத்தை
செம்பை பண்டிகை என்றே கூறுகின்றனர்.
அந்த சமயம் பிரபல பாடகர்கள் வந்து பாடுவார்கள்.
இதன் காரணமாகத்தான் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில்
செம்பை வைத்தியநாதர் படம் மாட்டப்பட்டிருக்கிறது ..!
செம்மை வைத்தியநாத பாகவதர் தகவல் மிகவும் அருமை அம்மா... அனைத்து படங்களும் மிகவும் விரமாதம்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அருமையான கருத்துக்கள்.. படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅழகான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
Beautiful descriptions
ReplyDeleteகுருவாவூர் ஏகாதசி மகிமை அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைஅளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
அருமையான படங்கள்.
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
அழகான புகைப்படங்கள்..காலையில் குருவாயூரப்பன் தரிசனத்திற்க்கு நன்றிம்மா!!
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅழ்கான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
குறைகள் நீக்கும் குருவாயூரப்பன் தரிசனமும்
ReplyDeleteஅழகிய படங்களும் அனைத்தும் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துகளும் சகோதரி!
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஇளைய நிலாவின் அழகிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
சிறப்பான படங்கள்...
ReplyDeleteகுருவாயூர் ஏகாதசி பற்றி அறிந்து கொண்டேன்... நன்றி. தொடருங்கள்...
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteசிறப்பான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
குருவாயூரப்பனின் தரிசனம் மனமகிழ்வாயிருக்கிறது. அழகிய படங்கள்,
ReplyDeleteசிறப்பானதகவல்கள்.நன்றி.
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅழகிய கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
குருவாயூர் ஏகாதஸி என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இன்றைய தங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது. அருமையான விளக்கங்கள்.
ReplyDelete>>>>>
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteஅழகிய விரிந்த செந்தாமரைகளுடன் கூடிய முதல் படமே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
>>>>>
தமிழக சங்கீத வித்வான் ஸ்ரீ செம்பை வைத்யநாத ஐயர் பற்றிய செய்திகள் மிகச்சிறப்பாக தந்துள்ளீர்கள். ஸ்ரீகுருவாயூரப்பன் அவருக்கு கிருபை செய்தது மெய்சிலிரிக்க வைக்கும் அனுபவமே.
ReplyDeleteநேற்று ஒரு பெரியவர் தங்களின் பதிவினைப்பற்றி மிக அழகாக Google+ இல் வடிவமைத்து, ஸ்ரீகுருவாயூரப்பனை தாமரை மலர்களால் அலங்கரித்து, ஆனந்தக் கூத்தாடியுள்ளதை அகஸ்மாத்தாக நான் காண நேர்ந்தது.
செம்பையைப்பற்றி படித்ததும் அது ஏனோ என் நினைவுக்கு இப்போது வந்தது.
>>>>>
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஇன்றைய பாடலையும் அருமையாக பாடி பகிர்ந்தளித்துள்ளார்
அந்த யூட்ப் வீடியோவை பதிவில் இணைக்க முயன்றேன் ..
ஆனால் இயலவில்லை !
யானைக்கூட்டங்கள், குருவாயூரப்பனுக்கு கைங்கர்ய சேவை செய்த அந்த தனியான ஓங்கி உயர்ந்த உத்தம யானையின் சிலை, ஒளிதரும் தீபவிளக்கு வரிசைகள் என வழக்கம்போல அனைத்துப் படங்களும் மிக அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
குருவாயூரப்பா ... குருவருள் தருவாய் நீயப்பா .... பாடலுடன் தொடங்கி .... அவனருளைப்பெற்ற அந்தப்பெரியவர் செம்பை ஸ்ரீ வைத்யநாத ஐயருடன் முடித்துள்ள பதிவு .... ஜோர் ஜோர்.
ReplyDeleteo o o o o
வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஜோரான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
சிறப்பான தகவல்களுடன், படங்களும் அருமை...
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
செம்பை வைத்தியநாதர் அவர்களைப் பற்றி அழகிய படங்களுடன் அறியத் தந்தீர்கள் அம்மா.
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅழகிய கருத்துரைகள் அளித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
இந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யர்தான் யேசுதாஸ் என்பது சரிதானே. படங்களும் பதிவும் பிரமாதம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteகருத்துரைக்கும் வாழ்த்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..
செம்பை கர்நாடக சங்கீத ஜாம்பவான் வைத்தியநாத பாகவதர் பாடகர் ஜேசுதாஸின் குருநாதர்.
ஒவ்வொரு ஆண்டு சங்கீத உற்சவத்தின்போதும் கே.ஜே.ஜேசுதாஸின் கச்சேரி செம்பையில் நிகழ்வது வழக்கம். அது கேஜேஜேயின் வழக்கமான கச்சேரிகளிலிருந்து மாறுபட்டதும் தனித்துவமானதும் ஆகும்.
ஒரு மாணவன் எந்நாளும் மனதில் வைத்து பூஜிக்கும் தன் குருவிற்கு மானசீகமாக கலையினால் மரியாதை செய்வதைப் போல இருக்கும்.
குருவாயூர் கோயிலுக்குள் இந்து மதத்-தினரை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற கச்சேரியில் பாடுவதற்காக ஜேசுதாஸ் சென்றார்.
அப்போது, அவர் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பாடகர் ஜேசுதாஸ் தாராளமாக செல்லலாம் - என நீதிமன்றம் அனுமதி அளித்தும் அவர் கோவிலின் விதிமுறைகளை அனுசரித்து வெளியிலிருந்தே தரிசித்தார் ..!
நான் அடிக்கடி குருவாயூர் எர்ணா குளத்திலிருக்கும் போது போயிருககிறேன். இவ்வளவு அழகாகபதிவைப் படிக்கும் போது திரும்பவும் குருவாயூர் போனமாதிரி உணர்வு உண்டாகிறது.
ReplyDeleteகுருவாயூருக்கு வாருங்கள்,அந்த குழந்தையின் சிரிப்பைப் பாருங்கள்.
போக முடியுமா,உங்கள் படங்கள் வாயிலாக தரிசனம் கிடைத்தது ஸந்தோஷம். அருமை. அன்புடன்
வணக்கம் அம்மா .. வாழ்க வளமுடன் ..
Deleteதாங்கள் பதிவுக்கு வந்து தரிசித்து அன்புடன் கருத்துரைகள் தந்து மகிழ்ச்சியடையச்செய்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் அம்மா..!
திவ்ய தரிசனம்! பயனுள்ள பகிர்வு!
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteதிவ்யமாய் கருத்துரைகள் அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!
குருவாயூர் சென்றிருந்த போது யானை மேல் குட்டி குருவாயூரப்பன் பவனி வருவதை தரிசித்தோம். அதிகாலை தரிசனமும் (நிர்மால்ய சேவை) கிடைத்தது.
ReplyDeleteசெம்பை வைத்தியநாதர் பற்றிய தகவல் அருமை.
வாருங்கள் ரஞ்சனி ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
Deleteஅருமையான கருத்துரைகள் தந்து மகிழ்ச்சியடையச்செய்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
செம்பை அவர்களுக்கும் குருவாயூரப்பனுக்கும் இடையே உள்ள பந்தத்தை அருமையாக விளக்கியது - இன்றைய பதிவு!..
ReplyDeleteசெம்பை பாகவதர் தகவலும் மற்ற தகவல்களூம் நன்று...
ReplyDeleteபடங்களும் மிக அருமை... பகிர்வுக்கு நன்றி.
படிக்கும் காலத்தில் கேசவன் யானையைப் பற்றிய செய்திகளைப் படித்து இருக்கிறேன். அந்த கேசவனின் நினைவுநாளில் மற்ற யானைகள் செய்யும் மரியாதை நிகழ்ச்சிகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி!
ReplyDelete