Tuesday, December 17, 2013

தித்திக்கும் திருவாதிரைத் திருநாள்











பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

http://www.youtube.com/watch?v=0-776rFhr_8  - இந்த சுட்டியில் பாடல் கேட்கலாம் 
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகின்றது. திருவாதிரையை சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்பர். 

திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்திரனாகும். 
அதனால் இதற்குச் சிறப்பு ஓங்குகிறது.

சிவபிரானை ஆதிரை முதல்வன் என்றும், ஆதிரையான் 
என்றும் சிறப்புப் பெயர்களால் போற்றுகிறோம்..!

மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாள் 
ஆதிரை நன்னாளை ஒட்டியே எழுந்தது 

படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் 
என்பவை சிவத்தின் ஐந்து வகையான தொழில்களாகும்.

பஞ்ச கிருத்யம் என்ற ஐந்தொழில்களையும் உணர்த்தும் வகையில் அமைந்தவை ஈசனின் திருநடனங்களாகும்.

உலகம் தோன்றிய காலம் முதல் நடைபெறும் தாண்டவத்தை நடராஜர் பொன்னம்பலத்தில் ஆடிக் காட்டி வருகிறார். இக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம் பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என ஐந்து சபைகள் உள்ளன.

 சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமான் புரியும் திரு நடனத்தை, சிவகாமசுந்தரி கண்டு மகிழ்வது, ஆன்மாக்களின் பிறவிப் பிணியைப் போக்குவதற்கே 

 பொன்னம்பலம் என்ற கனக சபையில் ஸ்படிக லிங்கத்துக்குத் தினமும் ஆறுகால பூஜையும், ரத்தின சபாபதிக்கு இரண்டாங் காலத்தில் அபிஷேகமும் நடைபெறுகிறது.

ஆனி, மார்கழி மாத விசேஷத் திருவிழாக்களின்போது, பத்தாம் நாள் பரமேஸ்வரனும் அம்பிகையும் முன்னும் பின்னுமாக மாறி மாறி நடனம் செய்து கொண்டு, சிற்சபைக்கு எழுந்தருளும் காட்சியே அனுக்கிரக தரிசனமாகும். 
சிற்சபை மண்டபம்  சேக்கிழார் திருத்தொண்டர் 
புராணத்தை எழுத இடமாக அமைந்தது..!

தில்லையில் இறைவனுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.


சிவபிரான் நடராஜ மூர்த்தியாகத் தில்லை ஸ்தலத்தில் அருள் நடனம் புரிவதால், சிதம்பரத்தில் முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் தொடங்கப்பட்டு, அதைச் சார்ந்த பெருவிழாவும் கொண்டாடப்பட்டதையே திருவாதிரைத் திருநாளின் மூலகாரணம். 

 களி நடனத்தைக் கண்டுகளிக்கவே, அன்று களி தயாரிக்கப்பட்டு 
உண்டு களிக்கிறோம்..!

நடராஜரின் திருவீதி உலாவில் திருச்சாந்தும் அளிக்கப்படும்..!

கொடிய அசுரர்களான கமலன், கமலாக்ஷன், வித்யுத்மாலி ஆகியவர்களைச் சம்ஹாரம் செய்து, தன் பயங்கரச் சிரிப்பினாலேயே அவர்களுடைய மூன்று பெருங்கோட்டைகளை அழித்து, சிவன் புரிந்த தாண்டவம் திரிபுரஸம்ஹாரத் தாண்டவம் ,,!

மனிதனுடைய இதயத்தில் இருக்கின்ற இறைவனே சிதம்பரம் பொன்னம்பலத்திலும் இருக்கின்றார் என்பதை உணர்த்தவே, மனித உடல் போல் அம்பலம் அமைக்கப்பட்டுள்ளது.   

மனிதஉடலில் இதயம் நடுவே இல்லாமல் இடதுபுறம் தள்ளியிருப்பதுபோல, மூலஸ்தானம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளதைக் காணலாம்.

சிதம்பரத்தில் மிக முக்கியமானசிதம்பர ரகசியம் சித்சபையில்
சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது 

ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது
கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். 

இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். 

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். 

இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் 
இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. 

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம்
சிதம்பரம் என்ற தில்லையாகும்.

அவனே அவனே என்று கூறாமல், சிவனே சிவனே என்று ஆருத்ரா தரிசன நாளில் கூறி வாழ்த்தி வணங்கி நலம் பெறலாம்..!

[nataraja3.jpg]




28 comments:

  1. தித்திக்கும்
    திருவாதிரைத்
    திருநாள் நல்வாழ்த்துகள். ;)

    >>>>>

    ReplyDelete
  2. அனைத்தும்
    அழகான
    அதி
    அற்புதமான படங்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  3. களிப்பூட்டிடும் களி ;)

    கோவைக்களி ;)

    தித்திக்கும் ருசியோ ருசி ;)

    >>>>>

    ReplyDelete
  4. காரசாரமான கூட்டு -
    காய்கறிகளின் கூட்டணி -
    காட்சிக்காகக்
    காட்டியுள்ள படம் அருமை - புதுமை ;)))))

    >>>>>

    ReplyDelete
  5. அனைத்துமே
    அருமையான
    அற்புதமான
    அசத்தலான விளக்கங்கள் ;).

    >>>>>

    ReplyDelete
  6. பொன்னார் மேனியனே .....

    மிளிர்கொன்றை போல
    மின்னிடும் பாடல் ;)

    >>>>>

    ReplyDelete
  7. முக்கண்ணனை மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாகத் தங்களின் பதிவுகளில் தரிஸிப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    இந்த மகிழ்ச்சி என்றும் தொடருமா என்பது இன்றும் சிதம்பர ரகசியமாகவே ! ;(

    கார்த்திகை அமாவாசையும் போய் கார்த்திகையும் போய் மார்கழி பிறந்து மார்கழி அமாவாசையில் ஆங்கிலப்புத்தாண்டும் பிறக்க உள்ளது.

    சிவனே ! சிவனே !!

    >>>>>

    ReplyDelete
  8. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    களிப்பூட்டிடும் அழகான இன்றைய வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    சிவாய நம ஓம் !

    ஓம் நமச்சிவாய !

    சிவ சிவா !

    oo oo oo oo

    ReplyDelete
  9. நடன சிவன் படங்களும், நல்ல பல விவரங்களும் படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  10. தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. படங்களும் விளக்கங்களும் அற்புதம். கண்டிப்பாக ஒரு முறையேனும் ஆருத்ரா தரிசனத்திற்கு சிதம்பரம் போக வேண்டும் என்று ஆவலை ஏற்படுத்துகிறது தங்களின் இந்த பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. பாடலுக்கான இணைப்புக்குச் சென்று கேட்டு மகிழ்ந்தோம். என்னவளும் கூடவே குதூகலமாகப் பாடி மகிழ்ந்தாள். இதிலாவது ஓர் இணைப்பினை ஏற்படுத்திக்கொடுத்ததற்கு சந்தோஷம், மகிழ்ச்சி, நன்றிகள். ;)

    என்னவள் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும் போதே, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டிகளில் கலந்துகொண்டு, வெள்ளி டம்ளர் பரிசு பெற்றவள். அதில் பரிசு வாங்கிய தேதியுடன் இவளின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னும் இங்கு எங்களிடம் தான் உள்ளது.

    இந்தப்பாடலைக் கேட்டதும் அந்த இனிய நினைவலைகளில் இன்று மூழ்கிப்போக முடிந்ததில் மகிழ்ச்சி. ;)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..

      குடும்பத்தோடு குதூகலமான ஆடலும் பாடலுமான மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கும் ,
      இனிய அருமையான அனைத்து கருத்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..! வாழ்த்துகள்..!

      Delete
    2. //இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "தித்திக்கும் திருவாதிரைத் திருநாள்":

      வணக்கம் ..வாழ்க வளமுடன் ..

      குடும்பத்தோடு குதூகலமான ஆடலும் பாடலுமான மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கும், இனிய அருமையான அனைத்து கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..! வாழ்த்துகள்..! //

      வெள்ளி டம்ளர் மட்டுமல்ல, ஓர் வெள்ளி ஜோதி விளக்கும் பரிசாகக் கொடுத்துள்ளார்கள். இப்போது தான் பரணையில் வெள்ளி சாமான்கள் வைத்துள்ள பெட்டியை எடுத்துத் திறந்து சரி பார்த்தேன். அவைகளை அப்படியே போட்டோ எடுத்துக்கொண்டேன். பொக்கிஷம் அல்லவா ! ;)

      வெள்ளி டம்ளரில் இவள் பெயருடன் போட்டுள்ள வாசகம்:
      ”லால்குடி வட்டம் பாவை விழா பரிசு 1962”

      அது போல வெள்ளி ஜோதி விளக்கில் :
      ”லால்குடி பாவை மாநாடு 1963”

      அப்போது இவளுக்கு 8 அல்லது 9 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஓதுவார் ஒருவர் சொல்லிக்கொடுத்த பாடல்களாம் இவைகள்.

      எப்போதுமே ஒவ்வொரு ஆண்டுமே இதுபோன்ற பாட்டுப்போட்டிகளில் இவளுக்கு முதல் பரிசு தானாம். ;)

      அதன் பிறகு 1964 முதல் வெள்ளிப் பொருட்களை நிறுத்தி விட்டு, எவர்சில்வர் பாத்திரங்களாகக் கொடுக்க ஆரம்பித்து விட்டனராம்.

      அதில் ஒருமுறை இரண்டு பெரிய எவர்சில்வர் தூக்குகள் கிடைத்தனவாம்.;)

      தங்களின் அன்பான பதிலுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  13. படங்கள் அனைத்தும் அதி அற்புதம்... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. களி நடனத்தை கண்டு களிக்கவே, அன்று களி தயாரித்து உண்டு களிக்கிறோம்.
    அருமை.
    படங்கள் எல்லாம் மிக அற்புதம். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அம்பலத்தரசின் ஆனந்தத் தாண்டவப் படங்களுடன் அருமையான பதிவு சகோதரி!

    களி நடமிடுவோனின் களிப்பினை உணர்த்த - உணரக் களி தயாரித்து நிவேதித்து வணங்குதல் தகவல் கூடுதல் சிறப்பு!

    அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  16. AADUM ARASE. AMBALATHARASE.
    AANANDHATH THAANDAVANE.
    ARUMAI NATARASANE

    SUBBU THATHA

    ReplyDelete
  17. திருச்சிற்றம்பலனாதனின் படங்களுடன் ,திருவாதிரை சிறப்பும் அறிந்து கொண்டேன். நன்றி.
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  18. ஆருத்ரா தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  19. சிதம்பர ரகசியம்.... போட்டு உடைத்து விட்டீர்களே. மார்கழியில் சிதம்பரம் சென்றதில்லை. பதிவும் படங்களும் அழகு.

    ReplyDelete
  20. ஆருத்ரா தரிசனம் கண்டு அகமகிழ்ந்தேன்.. திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  21. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - தித்திக்கும் திருவாதிரைத் திருநாள் -- ஆருத்ரா தரிசனம் பதிவு அருமை - எதத்னை எத்தனை படங்கள் - எத்தனை எத்தனை விளக்கங்கள் - எத்தனை எத்தனை வை.கோவின் மறுமொழிகள் - அத்தனையும் அருமை அருமை.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. அருமையான படங்களுடன் கூடிய பதிவு ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகளை விளக்கிய விதம் அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  23. இறைவன் ஆகாய வடிவில் இருக்கிறார் என்பதை உணர்த்தும் சிதம்பர ரகசியத்தைப் புரிந்து கொண்டேன். படங்கள் மிக அழகாக அருமையாக அமைந்துள்ளன.

    ReplyDelete
  24. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  25. அருமையான ஆருத்திரா தரிசன மகிமை படிக்க,பரவசப்பட,பக்தியுடன் அழகாகவுள்ளது. படித்தேன்.பரவசம். அன்புடன்

    ReplyDelete
  26. அருமையான படங்கள். ஆருத்ரா தரிசனம் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.....

    ReplyDelete