”சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்கும்
அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,
காசியிலிருந்து கன்னியாகுமரி வரை நமக்கு
அருள்பாலித்துக் கொண்டிருகிறாள்

அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,
செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,
தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,
இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே.

அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய
காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது
ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.
எல்லா உயிர்களுக்கும் ஓங்கார பிரணவம் எப்படி அமைந்திருக்கின்றதோ,எல்லா அசைவிற்கும் எல்லாத் துடிப்பிற்கும்,எல்லா இயக்கங்களுக்கும் உறைவிடமாக, ஹ்ரீங்கார பிரணவம் அமைந்திருக்கிறதென எல்லா வேதாந்த,சித்தாந்த அருள் நிலைகளும், மகான்களும் முனிவர்களும்,மகரிஷிகளும் கூறியுள்ளனர்
ஓயாது அருள் பாலிக்கும் மகா சக்தி கலியுகத்தில் கண்கண்ட
தெய்வமாக விளங்கிறாள்.
.
அட்சரங்கள்,ஆதி ஒலி எழுத்துக்கள் ஐம்பத்தொன்று.
எனவே அம்பாளுக்கு ஐம்பத்தொரு பீடங்களை உண்டாக்கினார்கள்
மாகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் அமைந்துள்ளது ப்ராமரி தேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 12வது சக்தி பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் தாடை விழுந்த இடமாக கருதப்படுகிறது.

ஜனஸ்தான் பீடத்தில் உள்ள சக்தி, ப்ராமரி (சிப்புகா) என்றும்,
இறைவன் சர்வஸித்தேஷ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ப்ராமரிதேவியை சப்தஸ்ருங்கி என்றும் அழைப்பர்.

நாசிக்கில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள வாணி கிராமத்தில் அமைந்துள்ளது ஆலயம். இது ஏழு மலைச் சிகரங்களின் நடுவில் அமைந்துள்ளதால் சப்தஸ்ருங்கி எனப்பட்டது.
புகழ்பெற்ற யாத்திரைத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது

அம்பிகை இங்கே சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதம் ஏந்தியபடி,
10 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். தேவிக்கு உடல் முழுவதும் செந்தூரம் பூசப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.
காளியைப் போன்றே கருநிற தெய்வமாக விளங்கும் ப்ராமரி தேவியைச் சுற்றி கருப்பு தேனீக்கள் ரீங்காரமிடுமாம்.
தேவி தன் முதல் கையில் தேனீக்களை வைத்துள்ளார்.
அவர் பீஜாட்சர மந்திரமான "ஹ்ரீங்' என்பதை உச்சரிக்குமாம்.

அன்னை மகிஷாசுரமர்த்தினியாகவும் அறியப்படுகிறார்.
எனவேதான், இந்த மலை ஆலய கீழ்த்தள நுழைவாயிலில், மகிஷனாகிய எருமை மாட்டினுடைய தலைப்பகுதி சிலை வைக்கப்பட்டுள்ளது.

எனவேதான், இந்த மலை ஆலய கீழ்த்தள நுழைவாயிலில், மகிஷனாகிய எருமை மாட்டினுடைய தலைப்பகுதி சிலை வைக்கப்பட்டுள்ளது.

ராமாயண காலத்திலிருந்தே நாசிக், பஞ்சவடி ஆகியவை சிறப்புப் பெற்றவை. வனவாசத்தின்போது, கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடி என்ற இந்த இடத்துக்கு ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வந்து ப்ராமரி தேவியிடம் ஆசி பெற்றனராம்.

பக்தர்கள் நினைத்ததை வழங்கும் சக்தியாக
இங்கே ப்ராமரி தேவி அருள் புரிகிறாள்.

ப்ராமதி தேவி உண்மை அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteபாண்டி அருகிலும் ஒரு பஞ்சவடி.... அங்கே இருப்பது ஹனுமான்.
ReplyDeleteஇங்கே தேவி.....
நல்ல பகிர்வு. தகவல்களுக்கு நன்றி.
மிகச் சிறப்பானதொரு பகிர்வு! அருமை! அருமை!
ReplyDeleteAdhi Shakthi Namosthu The
ReplyDeletesubbu thatha
அறியாத தகவல்கள்... அருமையான படங்கள்... நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஹ்ரீங்கார நாயகி பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள்...
ReplyDeleteபடங்களில் சில மட்டும் அழகாக ஜொலிப்பதாக உள்ளன.
ReplyDeleteபெரும்பாலான படங்களில் பயங்கரமான தோற்றத்துடன் அம்பாள் காட்சியளிப்பது, நம்மை நடுங்க வைக்கிறது.
>>>>>
காசி முதல் கன்யாகுமரி வரை பல்வேறு திருநாமங்களுடன் பராசக்தி அருள் பாலித்து வருகிறாள் என்பது நன்கு சொல்லப்பட்டுள்ளது. உண்மைதான்.
ReplyDelete>>>>>
’ஹ்ரீங்’கா ர வடிவம் நல்ல கா ர சாரமாக உள்ளது.
ReplyDeleteஅம்மனின் தாடை விழுந்த இடம் ;)
சக்தி பீடங்கள் 51ல் 12வது இடம் ;)
நல்ல தகவல்கள்.
>>>>>
ப்ராமரி [சிப்புகா] சப்த ஸ்ருங்கி விசித்திரமான வியப்பளிக்கும் பெயர்கள்.
ReplyDeleteஏழு மலைச் சிகரங்களுக்கு நடுவே நாசிக் அருகில் அமைந்துள்ளதால் ஸப்த ஸ்ருங்கி ... ஆஹா !
>>>>>
சிம்ஹ வாஹனம், பதினெட்டு திருக்கரங்கள், அவற்றில் பல்வேறு ஆயுதங்கள், 10 அடி உயர பிரும்மாண்ட நாயகி. அவளின் கருப்பு நிறத்தை மறைக்க உடம்பு பூராவும் செந்தூரம்.
ReplyDeleteஅடடா, ஆச்சர்யமான அசத்தலான தகவல்கள்.
>>>>>
கருப்புத்தேனீக்களின் ’ஹ்ரீங்’ என்ற பீஜாட்சர மந்த்ர உச்சரிப்பு.
ReplyDeleteதேவியின் கைகளிலேயே தேனீக்கள். ;)
அற்புதமாக வர்ணித்துள்ளீர்கள்.
தேனீக்கள் கொட்டிவிடாதா?
நம்மைத்தான் கொட்டும். அம்பாளை எப்படிக் கொட்டும்? ;)
>>>>>
மகிஷனாகிய அந்த எருமைத்தலை சிலை தங்கமாக ஜொலிக்கிறதே !
ReplyDeleteஎத்தனை எத்தனைப் படங்கள் !
எங்குதான் சென்று, சுறுசுறுப்பாய் தேனீக்கள் போல சேகரிக்க முடிகிறதோ !!
ஆண்டவா !!!
>>>>>
இராமாயணத்தில் சிறப்புப்பெற்ற நாசிக், பஞ்சவடி அருகேயுள்ள இந்த கோயில் அம்பாளை ஸ்ரீராமர், ஸீதாதேவி மற்றும் லக்ஷ்மணர் சென்று வணங்கியுள்ளார்கள் என்பதும் மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteமொத்தத்தில் மிகவும் வித்யாசமான பதிவு.
o o o o o o o o
ப்ராம்மரி தேவி பற்றிய தகவல்களும் ஜொலிக்கும் படங்களும் அருமை! மிக்க நன்றி!
ReplyDeleteபுதிய தகவல்கள். அற்புதமான படங்கள். நன்றி
ReplyDeleteஅறியாத அம்மனைப் பற்றி அழகான படங்களுடன் தகவல்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteஎன் அடுத்த பிளாட்டில் உள்ள பெண்ணின் பூஜை அறையை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அவர்கள் நாசிகை சேரந்தவர்கள்.
ReplyDeleteஅங்கு நான் இந்த தேவின் படத்தை பார்த்தேன்.
அந்த தேவின் விளக்கம் இன்று இங்கே கிடைத்தது.
நன்றி தோழி.
விஜி
அற்புதமான பதிவு
ReplyDeleteஅறியாதன அறிந்தோம்
பகிர்வுக்கு மனமாஅர்ந்த நன்றி
ப்ரமரி தேவி பற்றிய தகவல்கள் இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete