வளம் எங்கும் பொங்கித் ததும்பும் கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை..
சிவனின் உருவமான லிங்க வடிவத்தில் அழகிய வனப்புடன் இயற்கை எழிலோடு ரம்யமாக அமைந்து சிவன்மலை எனும் சிவவாக்கியரின் சித்தர்மலை ..
கருணை வள்ளலாம கந்தன் முருகன் கடம்பனுக்கு காங்கேயன் என்கிற பெருமை மிகு பெயரும் உண்டு..
தென்னாடுடைய சிவனாம் எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவனின் நெற்றிக்கண்ணின் அக்னிப்பொறியில் உருவாகிய சேயோன் முருகனை கங்கை அன்னை ஆறு தாமரைகளில் ஏந்தி தாயாய் தாங்கியமையால் கங்கையின் மைந்தன் என்கிற சிறப்பால் காங்கேயனுமானன் கந்தக்கடவுளாம் நம் சொந்தக்கடவுள்..
சிவன் மலை என்கிற பெயரால் தந்தை குடியிருப்பாரபென்று தேடிப்போனால் சிவனின் சேயான குகன் மரகத மயூரனாக வந்து அமர்ந்து அருள்பாலிக்கிறார்..
அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது.
பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளதால் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாம் ..
பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளதால் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாம் ..
சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே "சிவன்மலை'யானது எனவும், ஆஞ்சநேயர் சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் செல்லும் வழியில் கீழே விழுந்த துண்டே சிவன்மலை என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
முருகப்பெருமான், வள்ளியுடன் நின்ற திருக்கோலத்தில்
காட்சி தரும் தலம், சிவன் மலை.
காட்சி தரும் தலம், சிவன் மலை.
ஸ்ரீஆஞ்சநேயர், இந்தத் தலத்துக்கு வந்து முருகக் கடவுளை வணங்கிச் சென்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
திருக்கோவில் ஸ்தலமரங்களாக துரட்டிமரமும் .
பழங்கால புளிய மரமும் உள்ளது.
திருக்கோவில் வளாகம் நல்ல அகலமுடையது.சிவன் மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை திருக்கோவில் மலை அமைப்பும் , காங்கேயம் சுற்றுபுற அழகும் , திருப்பூர் சாயக் கழிவால் உயிரிழந்த நொய்யல் ஆற்றின் அழகிய அமைப்பும் காட்சிப்படுகிறது ..
தீராத வினைகளையும் , நோய்களையும் தீர்க்கும்
தலமாக விளங்குகிறது !
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சிவாக்கியர் வாழ்ந்து தவநிலை செய்த கோவில் சிவன்மலை குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் சிலையை செய்தவர் சிவவாக்கியர்.
இவர் இங்கிருந்து சென்னிமலை வரை குகை மூலம் சென்று அங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு பின் அங்குள்ள இன்னொரு குகை வழியாக பழனி சென்றார் என செப்பேடுகள் கூறுகின்றன.
இந்த குகை, கோவில் உள்ளே சிவவாக்கியர் தியான நிலை என்பதற்கு கீழ் உள்ளது இதை சிறியதாக அடைத்து வைத்துள்ளார்கள்
லையுச்சி சென்று சுவாமியை தரிசிக்க 496 படிகள் ஏறவேண்டும்.
அங்கே உச்சிப் பிள்ளையாரின் ஆசி பெற்று
ஆலயத்தின் பரந்த வளாகத்தை அடையலாம்.
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் நம்மை எதிர்நோக்கி நிற்கிறது.
அதன் வழியே நுழைந்தால் தீபஸ்தம்பம், கொடி மரம்,
மயில்வாகனம் நம்மை வரவேற்கிறது.
அதன் வழியே நுழைந்தால் தீபஸ்தம்பம், கொடி மரம்,
மயில்வாகனம் நம்மை வரவேற்கிறது.
உள்ளே இடபுறமாக சூரியனும், புளிய மரத்தடியில் விநாயகரும் உள்ளனர். அடுத்து ஞானாம்பிகை, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகள் உள்ளன.
காங்கேயம் சிவன்மலை சுப்ரமண்யர் ஆலயத்தில் பக்தர்களின் கனவில் முருகன் தோன்றி, குறிப்பிட்ட பொருளை ஆலயத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் வைக்கச் சொல்ல, அந்த ஆண்டு அந்த பொருளை ஒட்டியே நிகழ்வுகள் நடைபெறுவது கலியுகத்தில் காணும் அதிசயம்.. !!
Peacock on the Foot Step
சிவன் மலையால் சிந்தை நிறைந்தது.
ReplyDeleteஜொலிக்கும் தங்கத்தேர் உண்மையிலேயே நன்றாகவே ஜொலிக்கிறது.
ReplyDeleteஆண்டவன் உத்தரவு
ReplyDeleteஅதிசயமாகத்தான் உள்ள்து.
மயிலு படு ஜோர்.
ReplyDeleteசப்பாணியைத் தேடுதோ?
படங்கள் யாவும் வழக்கம்போல் படு ஜோர். கடைசி படம் கலக்கல்.
ReplyDeleteஅடாது மழைபெய்தாலும் .... போல
ReplyDeleteஎங்கெங்கு பயணம் மேற்கொண்டாலும் தினமும் ஓர் பதிவு வெளியிடும் முன்னேற்பாடுகளும், திட்டமிடலும் அருமை.
போகும் போக்கைப் பார்த்தால் சொன்ன இலக்கு, ஓரிரு நாட்கள் முன்பே எட்டிவிடும் போலத்தெரிகிறது.
சந்தோஷம்.
வியக்க வைக்கும் தகவல்களுடன் சிவன் மலையை அருமையாக தரிசித்தேன்! நன்றி!
ReplyDeleteஇவ்வளவு அழகுவாய்ந்த சிவன்மலையை உங்களது பதிவில் பார்ப்பதற்கே அருமையாக உள்ளதே.. இன்னும் நேரில் சென்றால் எப்படி இருக்கும் அம்மாடியோ......
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா...
ஆஹா இடங்களும் படங்களும் அருமையோ அருமை. சொல்லி வேலையில்லை.
ReplyDeleteதங்கத்தேர் சூப்பர். மயிலார் கொடுக்கும் ஃபோஸுக்கே காசு கொடுக்கலாம்.
என்னை நீங்கள் மறந்திருக்கலாம், ஆனா நாம் விடா முயற்சியாக உங்கள் புளொக் வந்தே தீரோணும் என ட்ரை பண்ணிக்கொண்டே இருந்தோம்.
ReplyDeleteஅஞ்சுதான் மெயில் பண்ணினா, ராஜேஸ்வரி அவர்களின் புளொக் இப்போ சரியாகிட்டுது ஓடிப்போங்கோ என, ஓடி வந்திருக்கிறேன்ன்ன்..
புளொக் ஆடாமல் நேரானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
எங்கள் நாட்டுக் கோவிலான சிவன்மலைக் கோவிலைத் தங்கள் வர்ணனைகளிலும்,காட்சிகளிலும் அறிந்தது மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteஅருமையான புகைப்படங்களுடன்.. வழக்கம் போல்.. தெய்வீக மணம் கமழும் பதிவு!
ReplyDeleteகாங்கயம்-சிவன் மலை என்றவுடனே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவு வந்தது. அவர் அவதரித்த ஊர் வேலூர் காட்பாடிக்கு அருகிலுள்ள காங்கேய நல்லூர் என்றாலும், குன்றுதோர் ஆடும் குகனை நினைத்து மகிழும் பொழுதெல்லாம்
ReplyDeleteஅந்த அடியாரும் அகமகிழ்ந்து புன்னகைப்பது தெரிகிறது.
என் மாமானார் பிறந்த நாளுக்கு சிவன் மலையும் , சென்னிமலையும் ஒரே சமயத்தில் பார்த்தோம்.
ReplyDeleteசிவன் மலையில் விவசாயம் செழிக்க நல்ல சகுனம் வந்த்து அறிந்து மகிழ்ச்சி.
அப்படி என்றால் நன்கு மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் செழிக்கும் என்பதில் அய்யம் இல்லை.
மழை இல்லாத காரணத்தால் அரிசி விலை ஏறும் என்று பேசிக் கொண்டார்கள்.
இப்போது கவலை இல்லை.
முருகய்யன் வார்த்தை பொய்க்காது.
அருமையான தகவல்கள்...
ReplyDeleteநான் 30 வருடங்களுக்கு முன் சிவன் மலைக்கு போயிருந்தேன்...
அப்போது தங்கம் வைக்கச்சொல்லி பக்தர் கனவில் உத்தரவாகி இருந்ததாம்...
அந்த சமயத்தில் தான் தங்கம் விலை சவரன் 1000 ரூபாயை தாண்டியதாம்!
படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை ! தங்கத் தேர் சூப்பர் ! தொடர வாழ்த்துக்கள் ... நன்றி சகோதரி !
ReplyDeleteசிவன் மலையில் இப்போது சொம்பில் தண்ணீர்வைத்து வழ்பட்ச்சொல்லி உத்தரவு கிடைத்திருக்கிறதாம்.. எனவே தண்ணீர் பஞ்சம் தீர மழையை எதிர்பார்க்கிறார்கள் மக்கள்...
ReplyDelete3592+6+1=3599
ReplyDelete