சின்னஞ்சிறு குருவி போலே நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா,
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
என பாரதியார் சிட்டுக்குருவி பற்றி பாடி புளங்காகிதப்பட்டுள்ளார்
குருவி பறந்து வந்ததாம் குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம் பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம் பாப்பா இன்பம் கொண்டதாம்
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சிறகடிக்க வந்திடு
சின்ன முத்து பாப்பாவுக்கு சிவந்த பழம் தந்திடு
பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்
"அந்த பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; ஆனாலும் இறைவன் உணவு தருகிறார்".
என இயேசு சொன்னார்.
சிறகடித்துப் பறக்கும் பறவைகள் பறவை போலவாழ வேண்டும்;
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
உத்தம ராஜா என் கண்ணு பத்தரை மாதத்துப் பசும் பொண்ணு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க உடனே எல்லாம் தந்திடுங்க
சின்னச் சின்னச் சிட்டுக் குருவி சிறகை விரிக்கும் சிட்டுக் குருவி
உல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிநது வரும் சிட்டுக் குருவியின் மென்மையும் நடக்கும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
வான வில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது வர்ணங்களைக்கொண்ட அழகிய குருவி ஹிந்தியில் இதன் பெயர் நவ்ரங் -நவரத்தினங்களின் ஒன்பது வர்ணம்.கொண்டு வசீகரிக்கும் அந்தக்குருவியை பொன்னுத்தொட்டான் என்று அழைப்போம். ஆங்கிலத்தில் இதன் பெயர் Pitta
மைனாவின் அளவில் குட்டையான வாலுடன் மரத்தில் அடையும் பறவை ,,
பஞ்சவர்ணக்கிளிபோல் நவ வர்ணங்களால் மிளிரும் குருவிகள் தமிழ்நாட்டில் நம் தோட்டங்களுக்கு வருடா வருடம் குளிர் நாட்களில் வரும் ...மற்ற நாட்களில் வட இந்தியாவுக்கும் மத்திய பிரதேசத்திற்கும் சென்று விடுகிறது.
இமயமலைக்குத் தெற்கே பிறந்து குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வருகிறது..!
ஆங்கிலத்தில் இந்தியன் பிட்டா என்றழைக்கிறார்கள்.
பிட்டா என்றால் “சிறு பறவை” என்று தெலுங்கில் பொருள்.
சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் கொண்டிருக்கிறது ..
பச்சை நிற முதுகு,
நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை,
மஞ்சட்பழுப்பு நிற அடி,
கருஞ்சிவப்பு வால்
கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் -
எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு;
மழைக்காலத்தில் நிறைய காணக்கிடைக்கும்..
மாம்பழக்குருவி ,ஆறுமணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக் கட்டிக் குருவி, கஞ்சால் குருவி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் குருவியின் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சருகுகளுடன் ஒன்றி விடுவதால் நம் கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை.
மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை.
இலைகள் அடர்ந்த கிளைகள் இடயே கிளைக்குக் கிளை
சென்று கொண்டிருக்கும். ,
இது இரை தேடும்போதோ தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சருகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும்.
பொன்னுத் தொட்டான் அவசியம் வரும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும்.
கிளிமொஞ்சும் குருவிகள்
ReplyDeleteநல்ல அழகோ அழகு!
அத்தனையும் அழகு!!
அழகுக்கு அழகு சேர்க்கும்
அசத்தலான பதிவு இது.
முதல் படத்தில் உள்ள ஐந்து பாடியும் பறவைகள். ஆஹா!
ReplyDeleteமஞ்சளார் டை கட்டிக்கொண்டு
அடுத்தவள் குட்டிப் ஃப்ராக் அணிந்துகொண்டு
அடுத்தவர் பசுமையான கலரில் நீலத்தொப்பியுடன், கழுத்தில் சிவப்பு டையுடன், நடுநாயக ரெள்டி போல
அடுத்தவர் குளிருக்கு கோட் போட்டப்டி, வாயை என்னமாய்ப் பிளந்து பிளந்து காட்டுகிறார்!
கடைசி ஆசாமி குட்டையாக ஓர் மேலாடைமட்டும் அணிந்து கீழே AK யாகக் காட்சியளிப்பது போல உள்ளதே!
சூப்பர் ப்டம்.
அமர்ந்திருக்கும் கிளையை என்ன ஆட்டு ஆட்டுதுகள்! அடேங்கப்பா!!!
காதல் சிட்டுகள் அனைத்துமே ஜொலிக்கின்றன.
ReplyDeleteபார்க்கப்பார்க்க மகிழ்ச்சியோ
மகிழ்ச்சி தான்.
எனக்குப் பிடித்தமான சிட்டுக்குருவி இப்போ எந்த ஊரில் பறந்து கொண்டிருக்கிறதோ?
கீழிருந்து இரண்டாவது படத்தில் அந்தச் சிறுமியின் தலையில் வந்து அமர்ந்து விட்டாரே ஒரு சிட்டுக்குருவியார்!
ReplyDeleteபேன் பார்க்கப்போகிறாரோ?
முதல் நான்கு படங்களும் வெகு அருமை.
ReplyDeleteஅதுவும் மேலிருந்து நாலாவது படம் ஜொலிக்கும் அழகே அழகு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஜொலிக்கின்றன.!
ReplyDeleteகுருவிகள் பற்றிய பதிவு அழகிய படங்களுடன் அருமையாக உள்ளது. நண்பர் கிருஷ்ணாலையா அட்சயா, தாங்கள் ஆன்மீகப் பதிவிடுகின்றீர்கள். புதிய என் வலைப்பூவிற்கும் அழைக்கின்றேன். வாருங்கள் கிருஷ்ணதாசன் வலைப்பூவிற்கு!
ReplyDeletehttp://krishnadhass.blogspot.com
பறவையினத்தில் எனக்கு மிகவும் பிடித்த அமைதியான பறவைகள் இந்த சிட்டுக்குருவிகள் .பலவர்ண நிறத்தில் மனதை கொள்ளை கொண்டன படங்கள் .
ReplyDeleteசிட்டுக்குருவி என்றால் எனக்கு முதல் மரியாதை படத்தில் வரும் ஏ குருவி சிட்டுக்குருவி பாட்டும் நினைவு வரும்
Aha......
ReplyDeleteLaoooo luooooo....
Like to sing....
Link to hum....
On seeing the pretty birds.
I had seen varities of birds chipping and flying at Kansas in front of the house.I used to enjoy hours together.....
After I came here, my dil wrote me that the birds are searching for youma.
Now after that here I enjoyed seeing all the birds.
Thanks for the post dear.
viji
கண்ணுக்குக் குளுமையான படிப்தற்கு மகிழ்ச்சியான பதிவாக இருந்த்தது. பாரதியின் பாடல் கொண்டு ஆரம்பித்தது இன்னும் சிறப்பு. பல வர்ண குருவிகளும் அழகு, அனால் நமது சம்பல் வர்ண குருவிகளை தொலைத்துக் கொண்டு நிற்கிறோமே, கஷ்டமாக உள்ளது
ReplyDeleteவண்ணக்குருவிகள் நான் கண்டதேயில்லை.
ReplyDeleteகண்டேன் இன்று அழகு படங்களிலே!
சிறப்பு.
ஜகஜக வென்று ஜொலிக்கின்றன ... வாழ்த்துக்கள் சகோதரி ! நன்றி !
ReplyDeleteசிறகை விரிக்குக்ம் குருவிகள் ஜாலம் அழகு.
ReplyDeleteஆஹா என்ன ஒரு அழகு பஞ்சவர்ண குருவிகள் .... படங்கள் அனைத்தும் அருமை... பிட்டா என்றால் "சிறு குருவிகள்" என்று கூறி குவிகளைப் பற்றிய தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அக்கா....
ReplyDeleteSuper photos and article!
ReplyDeleteNice Post!
Thank You!
Atchaya
Krishnalaiya
(http://krishnalaya-atchaya.blogspot.com )
'குருவித் திரட்டு' அருமை.
ReplyDeleteஅதற்குப் போட்டாப் போட்டியாய் கண்கவர் போட்டோக்கள்!
வண்ணவண்ணச் சிட்டுக்கள் சிறகடித்துப் பறக்கின்றன.
ReplyDeleteஎம்மையும் பறக்க வைக்கின்றன.
அசத்தலான பதிவு..
ReplyDelete3586+5+1=3592
ReplyDelete