

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடிஅவதரித்த திருநாளை "கருட பஞ்சமி'' எனப்போற்றி வழிபடுகின்றோம்.

கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியம் கிட்டிய கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.
கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.
பெருமாளின் வாகனம் கருடன் !
கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் !!
"ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!

விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என்று பல பெயர்கள் கருடனுக்கு உண்டு!
கோவில் நிகழ்ச்சிகளில், கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும், மங்களகரமான ஒன்று!
கருடக் கிழங்கு என்ற ஒரு கிழங்கு உண்டு. அதை மாவிலை போல் வீட்டு வாசலில் சொருகி வைப்பார்கள், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்க!
மேலே பறக்கும் கருடனின் நிழல், பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புவார்கள்!
கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
எதிரிகளை வெல்வதற்கும், விஷமங்களை முறிக்கவும், மந்திர தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவதற்கும், வாதங்களில் வெல்வதற்கும் கருட மந்திரம் ஜபிப்பார்கள்!

கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால், கருடன் சனி பகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துவர்

சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!
வாயு பகவான் தான் கருடனுக்கு வாகனமாய் அமைகிறார்!
கருடன் வேத சொரூபம். அதனால் குருவுக்குச் சமமானவர்!
கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும்.
நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும்.
அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.

. சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம்.
அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்
சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும்.
சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம்
ஸ்ரீ ரகுநாத பெருமாள்,
ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள்,
நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள்,
வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
தென்னங்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் ஆகிய 6 பெருமாள்கள் காரைக்கால் நகருக்கு பல்லக்கில் அழைத்து வரப்படுவார்கள்..
ஸ்ரீ ரகுநாத பெருமாள்,
ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள்,
நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள்,
வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
தென்னங்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் ஆகிய 6 பெருமாள்கள் காரைக்கால் நகருக்கு பல்லக்கில் அழைத்து வரப்படுவார்கள்..
காரைக்கால் வந்த பெருமாள்களை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சியும் , 7 பெருமாள்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெறும்..
கருட பஞ்சமி அன்று, காரைக்காலில் 7 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி, அருள்புரிகிறார்கள்..

மகா தீபாராதனைக்குப் பின்னர் கருட சேவை புரிந்த பெருமாள்களின் வீதியுலாஉற்சம் நிகழ்த்தப்படுகிறது...

சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி,திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாகும்...
எல்லா பெருமாள்களும் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் ஒருசேர எழுந்தருளி வழிபாடு நடக்கிறது..








கருடனைக்காண ....
ReplyDeleteஇரவு மீண்டும் வருவேன்.
பின்னூட்டம் என்ற
உறவினைத் தொடர்வேன்.;)
கருட சேவை கண்டேன், களிஉவகை கொண்டேன்.
ReplyDeleteநல்ல விளக்கமா சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteபடங்கள் அருமையா இருக்குங்க...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
அறிந்தேன் கருடனின் மகிமையை!
ReplyDeleteவண்ண புகைப்படங்கள் நிறைவு!
இன்றைய அனைத்துப் படங்களும் அருமை தான்.
ReplyDeleteஇருப்பினும் முதல் இரண்டு படங்களும் கடைசிப்படமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.
அவைகள் நன்கு ஜொலிக்கின்றன, தங்களின் அன்றாடப் பதிவுகள் போலவே! ;)))))
நாங்களும் எங்க கிராமதுக்கு போகும்போது கருட சேவை உற்சவன் நடத்துவோம்
ReplyDeleteஒருமுறை குடும்பத்தோடு நான் உத்தரப்பிரதேச வாராணசியில் சில நாட்கள் தங்க நேரிட்டது.
ReplyDeleteநடுவில் ஒரு நாள் அரசாங்க விடுமுறை என அனைத்துக் கடைகளையும் அடைத்து விட்டனர்.
ஏன் என்று நான் கேட்க, இன்று ”கருட பஞ்சமி - கவர்ன்மெண்ட் ஹாலிடே” என்றனர்.
வடக்கே இந்த நாளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை,
[கருடன் போல] நானும் அன்று தான் அறிந்து கொண்டேன்.
அந்த நான்காவது படத்தில், கருடாழ்வார் ஒரு அரைக்கிலோ முரட்டு மீசையுடன் மூக்கும் முழியுமாக ஜோராகத் தெளிவாக இருக்கிறார்.
ReplyDeleteஅவருடைய காதுகள் இருக்க வேண்டிய இடத்தில், அவையென்ன, பகவானின் திருவடிகளாக இருக்குமோ? ;)))))
அடடா, அதற்கு அடுத்த ஐந்தாவது படத்தில் அவரின் மூக்கைப் பாருங்கோ!
ReplyDeleteஎவ்வளவு ஷார்ப்பாக வளைந்து உள்ளது!!
கைகள் இரண்டிலும் அவருக்கு மிகவும் பிடித்த டிபன் ஐட்டமான பாம்பு அல்லவா உள்ளது. ஆனாலும் அந்த டிபனைப் பொறுமையாக உட்கார்ந்து ருசித்துச் சாப்பிட நேரமில்லாமல் பறக்கும் வேலையில் அல்லவா முழுகியுள்ளார்!
மேலே பாஸ் வேறு அமர்ந்துள்ளார்.
முதலாளியுடன் அவசர வேலையாகக் காரில் புறப்பட்டுச் செல்லும், கார் ஓட்டிகளுக்கு [டிரைவர்களுக்கு] சமயத்தில் தன் வயிற்றை கவனித்துக் கொள்ள நேரமே கிடைக்காது. அது போலவே இதுவும்....
வடை, பாயஸம், முக்கியமாக எண்ணெய் அல்லது பால் கொழுக்கட்டை.... அடடா!; பால் பாயஸம் போன்ற அருமையான பலவிதத் தகவல்கள் கொடுத்து இப்படி அசத்துகிறீர்களே.
ReplyDeleteகாலசர்ப்ப [நாகபாஷா] யந்திரம் வேறு, மந்திரம் வேறு என்று பாம்புக்கோலமாகவே போட்டுக் காட்டியுள்ளீர்கள்! சபாஷ்!!
=====
பாம்பென்றும் நினைத்து ஒதுங்கவும் முடியவில்லை. பழுதென்று நினைத்தும் காலை வைத்து மிதிக்கவும் முடியவில்லை என்பார்கள்.
ஏனோ எனக்கு அது தான் இப்போ ஞாபகத்திற்கு வருகிறது.
======
பரமசிவன் கழுத்தில் அமர்ந்து பாம்பு கேட்டது “கருடா செளக்யமா?”
”இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்யமே” ... கருடன் சொன்னது.
அதில் அர்த்தம் உள்ளது.....
என்ற பாடலும் ஞாபகம் வருகிறது.
நல்லதொரு இந்தப் பதிவினைப் பார்க்கும்போது. ;)
கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்
ReplyDeleteகொண்டாடினாலும் அதற்கான
சரியான அர்த்தம் தங்கள் மூலம் இன்றுதான்
தெரிந்து கொண்டேன்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்
ReplyDeleteகொண்டாடினாலும் அதற்கான
சரியான அர்த்தம் தங்கள் மூலம் இன்றுதான்
தெரிந்து கொண்டேன்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
என் சிறுவயதில், என்னை என் தாயார் கருட ஸேவைக்காக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார்கள்.
ReplyDeleteநான் ஏதோ எனக்குப் பிடித்தமான தேங்காய் சேவை, பருப்புச்சேவை, எலுமிச்சம்பழச்சேவை, வெல்லச்சேவை போல ஏதோ ஸ்ரீரங்கம் கோயிலில் தரப்போகிறார்களோ என நினைத்து மிகவும் ஆசையுடன் புறப்பட்டுச் சென்றேன்.
பிறகு தான் கருடஸேவை என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன்.
இதேபோல இன்னொரு சுவையான சிறிய கதையும் உள்ளது. தொடர்கிறேன். பதிவாகத்தான் பகிர்ந்து கொள்ள முடியவில்லயே! உங்களின் பின்னூட்டம் வாயிலாகச் சொல்வதில் ஓர் மகிழ்ச்சி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஓர் சிறிய நகைச்சுவைக் கதை:
ReplyDelete[விரதங்கள் பற்றியது]
==============================
[1]
ஒரு வயதான தம்பதிக்கு ஓர் பெண். அவளுக்குத் திருமணம் ஆகி ஓர் மாப்பிள்ளையும் வந்தாச்சு.
வயதான தம்பதியினர் மிகுந்த ஆச்சாரத்துடன் பல்வேறு விரதங்களை அனுஷ்டிப்பவர்கள்.
மாப்பிள்ளைக்கு இந்த விரதங்கள் பற்றியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது.
கல்யாணம் ஆன புதிதில் ஓர் சதுர்த்தியன்று, மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.
“மாப்பிள்ளே! நீங்கள் இன்று சதுர்த்தி விரதம் இருக்கப்போகிறீர்களா, அல்லது எப்போதும் போல வெறும் சாப்பாடு தானா?” என்று மாமனார் தன் மாப்பிள்ளையிடம் வினவுகிறார்.
அவர் கேட்பது என்னவென்றே புரிந்து கொள்ளாத அந்த மாப்பிள்ளையும், விரதம் தான் என ஏதோ சொல்லி சமாளிக்கிறார்.
தொடரும்.....
[2]
ReplyDeleteஅன்று பகலில் சற்றே கால தாமதம் ஆனாலும், மாப்பிள்ளைக்கு நுனி இலை போட்டு, இட்லி, வடை, பாயஸம், அப்பம், அதிரஸம், அவல், பொரி, இனிப்பு போளி, வெல்லம் போட்ட பூர்ண கொழுக்கட்டைகள், உப்புப்போட்ட மணிக் கொழுக்கட்டைகள், சீயம், பழங்கள் என ஏதேதோ பலகாரங்கள் மிகவும் ருசியாகவும் திருப்தியாகவும் பரிமாறப்பட்டன.
சூடான சுவையான பாலும் வெள்ளி டம்ளரில் தரப்பட்டது.
இவையெல்லாவற்றையும் நன்கு ஒரு பிடிபிடித்து மிகவும் திருப்தியாக சாப்பிட்ட மாப்பிள்ளைக்கு ஒரே குஷியாகி விட்டது.
தொடரும்.
[3]
ReplyDeleteஇது நடந்து ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் மாப்பிள்ளை அவர்கள் தன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார்....
அன்று ஏகாதஸித் திருநாள்.
வழக்கப்படி மாமனார் மாப்பிள்ளையிடம் கேட்கிறார்:
"மாப்பிள்ளை! இன்று ஏகாதஸி ஆச்சே!! என்ன செய்வதாக இருக்கிறீர்கள். விரதம் தானா? அல்லது வழக்கப்படி சாப்பாடு சாப்பிடுவதாக உள்ளீர்களா?” எனக் கேட்கிறார்.
அதற்கும் அந்த மாப்பிள்ளை
”விரதம் தான் மாமா! வரவர இந்த எப்போதும் சாப்பிடும் சாப்பாடே எனக்குப் பிடிக்கவில்லை. தினமுமே விரதமாக இருக்கக்கூடாதா என நினைக்கிறேன்” என்கிறார்.
[சதுர்த்தி விரத சாப்பாடு அவரை இதுபோலச் சொல்ல வைத்தது என்பதே உண்மை.]
உடனே மாமனார் தன் மனைவியைப் பார்த்து, ”அடியே, மாப்பிள்ளையும் இன்று விரதம் தானாம்” என்று உரக்கக் கூறிவிட்டு, தன் காரியங்களைப் பார்க்க எங்கோ வெளியே புறப்பட்டுச் செல்கிறார்.
மாப்பிள்ளை மதியம் மணி ஆக ஆக பலகாரங்கள் சாப்பிட அழைப்பு வரும் என ஏங்கி, பசியுடன் வாசல் திண்ணையில் காத்திருக்கிறார்.
தொடரும்......
[4]
ReplyDeleteவெளியே போன மாமனார் “கிருஷ்ணா ராமா கோவிந்தா” என ஏதோ சொல்லிக்கொண்டே வந்து மாப்பிள்ளையிடம் ஒரே ஒரு துளஸியைப் பெருமாள் கோயில் பிரஸாதம் எனத் தருகிறார்.
பிறகு தன் உத்திரியத்தை கீழே விரித்துக்கொண்டு, கைத்துண்டினை சும்மாடு போல ஆக்கி, அதையே தலயணையாக வைத்துக்கொண்டு, மற்றொரு திண்ணையில் படுக்கையைப் போட்டு, குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார்.
மிகவும் பொறுமை இழந்த மாப்பிள்ளை கடைசியாக சமையல் அறையில் என்ன தான் நடக்கிறது என்பதை அறிய உள்ளே சென்று எட்டிப்பார்க்கிறார்.
அங்கு சமையல் ஏதும் நடந்ததற்கான அறிகுறிகளையேக் காணோம்.
மாமியார் சமையல் அறையில் ஒரு மூலையில் கோழிக்குஞ்சுபோல படுத்துத் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.
மாப்பிள்ளைக்கு பசி வயிற்றைப் பிசைகிறது. மனைவியைத் தன் கூட அழைத்தும் வரவில்லை. இந்தக்காலம் போன்று செல்போன் வசதிகளும் கிடையாது. அந்தக் குக்கிராமத்தில் ஹோட்டல் வசதிகளும் கிடையாது.
உடனே ஊரைப் பார்க்க கிளம்புவதே உத்தமம் என்று முடிவெடுக்கிறார்.
சற்றே புரண்டு படுத்த தன் மாமனாரிடம் தான் ஊருக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்.
“சரி, மாப்பிள்ளை, பார்த்து ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள். இன்று ஏகாதஸி விரதம் வேறு இருந்துள்ளீர்கள். உடம்பு பலகீனமாக இருக்கக் கூடும். அதனால் பார்த்துப்போங்கோ! ;
”ஆமாம் தாங்கள் முதன்முதலாக மேற்கொண்டிருக்கும் இந்த ஏகாதஸி விரதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று மட்டும் சொல்லிவிட்டுப் போங்க” என்றார் ...... மாமனார்.
அதற்கு அந்த மாப்பிள்ளை, மிகுந்த எரிச்சலுடன், ”ஆயிரம் ஏகாதஸி விரதங்கள் இருந்தாலும், ஒரே ஒரு சதுர்த்தி விரதத்திற்கு அது ஈடாகாது மாமா எனச்சொல்லி விட்டு, விருட்டெனக் கிளம்பிச் சென்றார்.
[முற்றும்]
கருட பஞ்சமிக்கான
ReplyDeleteமுழு விளக்கம் அறிந்தேன் சகோதரி...
Karuda Darishnam Babanasanam......
ReplyDeleteI heard such a ward. Now able to see so many Karuda Darshnam through your post. Well done Rajeswari.
Thanks for the post.
viji
கருட பஞ்சமி தெலுங்கர்களுக்கு முக்கியமான பண்டிகை. சகோதரர்களுக்காக விரதம் இருந்து,நாக பூஜை செய்து புற்றுமண் எடுத்து வலது காது மடல், வலது தோளில் வைத்து அவர்களுக்கு பூஜை செய்து அவர்கள் நல்லபடியாக வாழ பூஜிப்போம்.
ReplyDeleteஇன்றைய தினம் அண்ணன் தம்பிகள் சகோதரிகளிடமிருந்து பரிசு, பணம் பெறுவார்கள்.
Is it true? I'd tell my sisters about this!
DeleteIs that so? I'll tell my sisters. Thank you.
Deleteபடங்களெல்லாம் ரொம்பவும் அருமை.
ReplyDeleteபடங்களெல்லாம் ரொம்பவும் அருமை.
ReplyDeleteஅனைத்தும் அருமை அக்கா.... படங்களும் கருத்துகளும் மிக அற்புதம்.....
ReplyDeleteஎப்போதும் போல பல அரிய புகைப்படங்களை இடம் பெறச்செய்து இருக்கிறீர்கள். படங்கள் மிக மிக அருமையாக உள்ளன.
ReplyDeleteகருடரைப்பற்றி நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன். மதுரை அழகர் கோவிலில் உள்ள கருடர் சிலையை பிரகாரத்தை விட்டு வெளியே தூக்கி வரும்போது எடை கூடி விடும் என்று சொல்கிறார்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ReplyDeleteநான் இந்துவாக அல்லாவிடினும் நிறைய விடயங்கள் அறிந்த மகிழ்ச்சீ.வாழ்த்துக்கள் சொந்தமே!:)
ReplyDeleteகருட சேவை கண்டேன்.... மனமகிழ்ச்சி கொண்டேன்....
ReplyDeleteகருட சேவை கண்ணாறக் கண்டேன் !
ReplyDelete3706+11+1+3***=3721
ReplyDelete3 of my comments are removed by the blog administrator ??? ;(((