திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
"இன்றோ திருவாடிப்பூரம் எமக்காகவன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்
குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை இழந்து பெரியாழ்வார் திருமகளாராய்'
குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை இழந்து பெரியாழ்வார் திருமகளாராய்'
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை "விஞ்சி நிற்கும்" தன்மையளாய்,வந்துதித்த நம் கோதைப் பெண் -
சூடித் தந்த சுடர் கொடி ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று அவதரித்தாள்.
ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரத்தன்று நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறபோது ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது.
சூடித் தந்த சுடர் கொடி ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று அவதரித்தாள்.
ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரத்தன்று நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறபோது ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது.
ஆடிப்பூர நாயகியான ஆண்டாள்
108 வைணவ திவ்யதேச அத்தனை எம்பெருமாள்களும் சுயம்வரத்தில் அருளாசி வழங்க
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
பல்லாண்டு பல்லாண்டு பல்லயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பாசுரங்கள் இசைக்க
இறைவனுடன் இரண்டற கலப்பதற்கு முன் திருப்பாவை,
நாச்சியார் திருமொழி நூல்களை நமக்கு அருளித் தந்துள்ளார்.
எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும்
என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார்.
என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார்.
கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள்.
எனவே ஆடிப்பூரத்தன்று நந்தவனத்திற்கு செல்லும் வேளையில், அவளை வழிபட அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் ...
பகவானின் கைத்தலம் பற்றி, வடிவாய் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கும் ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரம் !!
எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தரும் வளையல்களை அணிந்துகொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் ,சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்த் திருவிழா நடக்கும்,
தமிழகத்திலேயே மூன்றாவது இடம் வகிக்கும்மிகப்பெரிய தேரில் பல தெய்வங்கள் ரிஷிகள் முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ராமாயணம் மகாபாரதத்திலிருந்தும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ள தேரின் வடத்தை இழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் தேவைப் படுகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தேரோட்ட உற்சவம் நடக்கும் தேரின் உயரம் அநேகமாக கோபுரத்தைத் தொட்டு விடும்.
ஆடிப்பூரத்தில் பனை ஓலைக் குருத்துக்களால்
ஆன தேர் ஒன்று தஞ்சாவூரிலிருந்து வந்து சேரும்.
பதினாறு கால்களைக் கொண்ட அந்தச் சப்பரத் தேரை
பல வல்லுனர்களும், கைதேர்ந்த கலைஞர்களும் வடிப்பார்கள்.
பதினாறு கால்கள், பதினாறு வகைச் செல்வங்கள்,
தரும் என்ற நம்பிக்கை உண்டு..
ஆடிப்பூரத்தின் மகிமையைச் சொல்லி இயலாது அம்மன் கோவில்களீல் வளைகளாலேயே அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிப்பாள்.
புட்டுதான் இன்று அன்னைக்குப் பிரசாதம்.
அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உற்சவர் ரங்கமன்னார், வலதுகையில் பெந்துகோல் (தற்காப்புக்குரிய கம்பு), இடக்கையில் செங்கோல் ஏந்தி, இடுப்பில் உடைவாள் செருகி, காலணி அணிந்து நித்ய மணக்கோலம் என்பதால் ராஜகோலத்தில் இருக்கிறார்
பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக காட்சி தந்து அருள்புரிந்தார். எனவே, இங்குள்ள ரங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவாகவும் அருளுவதாக ஐதீகம் உண்டு.
ஆண்டாளிடம் இருந்து அழகருக்கு வருவது அவள் சூடிக் கொடுத்த மாலை! பாடிக் கொடுத்த கிளி!
திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில்நடைபெறும் வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும் வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.
- ஸ்ரீரரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடிபூர உற்சவ விழா. பரமபதநாதர் சந்நிதியில் உள்ள மூலவர் ஆண்டாளுக்கு கண்ணனின் வஸ்த்ராபரண லீலை அலங்காரம்.
- உற்சவர் ஆண்டாளுக்கு கிருஷ்ணர் அலங்காரம்.
ஆடிப்பூர ஆண்டாள் நாயகி படங்கள் அத்தனையும் அழகோ அழகு. சும்மா ஜொலிக்கின்றன. ;)))))
ReplyDeleteமீண்டும் கருத்திட இரவு வருவேன்.
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் விளக்க முடியாத உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது! தகவல்கள் தரம்!
ReplyDeleteஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் அனைத்து தகவல்களும் அருமை....
ReplyDeleteபடங்கள் பற்றி சொல்லவா வேண்டும்...? சூப்பர்.. நன்றி.
பச்சை இலைகளால் ஆன அந்த கிளியின் படம்! எல்லே இளங் கிளியே என்று பாடத் தோன்றுகிறது.
ReplyDeleteஎங்கிருந்துதான் இவ்வளவு அருமையான படங்கள் உங்களுக்குக் கிடைக் கிறதோ. கண்ணே பட்டுவிடும் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண் கொள்ளாக் காட்சிகள்.
ReplyDeleteஆடிப்பூரம் காட்சிகள் மனத்தை நிறைத்து நிற்கின்றது.
ReplyDeleteஅருமையான படங்கள்.
ஆடி ப்பூர ஆண்டாள் தரிசனத்துக்கு நன்றி படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி
ReplyDeleteஆடி ப்பூர ஆண்டாள் தரிசனத்துக்கு நன்றி படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி
ReplyDeleteநேற்று வானொலியில் நாச்சியார் திருமொழி காது குளிரக் கேட்டேன்.இன்று உங்கள் பதிவில் படங்களைக் கண் குளிரப் பார்த்தேன். எழுதியிருப்பதை மனம் குளிரப் படித்தேன்.
ReplyDeleteசென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பல்வேறு அழகான படங்களையும், ஆண்டாள் பற்றிய அருமையான செய்திகளையும் கொடுத்து மகிழ்வித்துள்ளீர்கள்.
ReplyDeleteஎல்லாப்படங்களும் தெய்வாம்சம் பொருந்தியவையாகவ்ம், பக்தியினை நம்முடன் பகிர்ந்து பேசும் படங்களாகவும் உள்ளன.
மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய ஈடு இணையற்ற மாலை. சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் படம் நல்ல அழகோ அழகு.
ReplyDeleteதான் அணிந்த மாலையை அந்தப் பெருமாள் அணிவதாகக் கற்பனை செய்து பார்ப்பது, அதைப்பார்த்து பெரியாழ்வார் வியந்து போய் ஸ்தம்பித்து நிற்பது போலக் காட்டியுள்ள படம் ப்டு ஜோர்.
அதுபோல முரட்டு மாலையுடன் தலையில் கொண்டையுடன் தனித்து நிற்கும் ஆண்டாள் படமும், அதன் அருகே ஆண்டாள்+ரெங்கமன்னார் சேர்ந்துள்ள படமும் கலக்கல் தான்.
ReplyDeleteநிறைய ப்ளாஸ்டிக் கலர் கலர் கூடைகளை / தட்டுக்களை உதிரிப்புஷ்பங்களுடன், பரவலாகக் காட்டியுள்ளது அமர்க்களமாக உள்ளது.
ReplyDeleteகோபுரத்தின் உயரத்தையே தொடும் அளவு மிகப்பெரிய தேர் அதுவும் அதை இழுக்க ஆயிரக்கணக்கான ஆட்கள் தேவை. படத்திலேயே அதன் பிரும்மாண்டத்தை உணர முடிகிறது.
ReplyDeleteஅடேங்கப்பா ... எவ்ளோ ஜனங்கள் மொய்மொய்யென்று!
சூடிக்கொடுத்த மாலையும், பாடிக்கொடுத்த கிளியும் அழகோ அழகு.
ReplyDeleteசென்ற ஆண்டு இந்தக் கிளி பாரம்பர்யமாக எப்படி யாரால் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதையும், அதன் விசேஷம் என்ன, அது கிடைத்து நம் வீட்டு பூஜையில் வைத்தால் எவ்வளவு நம்மைகள் என ஏதேதோ அமர்க்களமாக எழுதியிருந்தீர்கள்.
நன்றாக் நினைவில் உள்ளது. உங்களுக்கு ஓர் கிளி அவ்வாறு அதிர்ஷ்டவசமாக கிடைத்ததையும் எழுதியிருந்தீர்கள்.
நாளைக்கு அநேகமாக அந்தப்பதிவினை வேறு ஒரு தலைப்பில் எதிர்பார்க்கலாம் தானே! ;)))))
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பொதுவாக இன்றைய பதிவு அந்த ஆண்டாள் போலவே அழுத்தம் திருத்தமாக, அழுந்தச் சமத்தாக, அழகாக், மங்களமாக, மனதுக்குப் பிடித்ததாக, அமர்க்களமாக அமைந்து உள்ளது.
ReplyDeleteபதிவிட்டவருக்கும் ஆண்டாள் போலவே, மேலேயுள்ள அனைத்து விசேஷ குணங்களும் ஒருசேர அமைந்திருப்ப்தால் தான், இவ்வளவு ஒரு கண்ணைக்கவரும் பதிவாகத் தரமுடிந்துள்ளது.
ஆண்டாள் பக்தியுடன் மாலையைத் தொடுத்து தான் போட்டுப்பார்த்த பிறகே, பகவானுக்கு போடச் செய்தாள்.
அதுபோலவே தாங்களும் பூக்கள் போன்ற அழகிய படங்களைத் தேடித்தேடி ஓடிஓடி, மிகுந்த சிரத்தையுடன், சேகரித்து, மாலைபோலத் தொடுத்து, தொகுத்து பதிவு என்ற மாலையாக்கி எங்களைப் பரவசப்படுத்தி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
For me / for us
YOU ARE THE BEST .... ANDAAL! ;)
பிரியமுள்ள
vgk
நல்ல அற்புதம் காட்சிகள் ... படங்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது... நேரில்கண்டது போன்ற ஒரு சந்தோஷம் வருகிறது .....
ReplyDeleteஆடிப்பூர நாயகியின் படங்கள் பிரமாதம். ஆடிப்பூரத்தில் பனை ஓலை குருத்துக்களால் ஆன தேர் ஒன்று தஞ்சையிலிருந்து வரும் என்பது என்னைப் போன்றோருக்கு புதிய தகவல்.
ReplyDeleteஅற்புதமானப் படங்கள்.
ReplyDeleteநன்றிகள்.
கடைசி படத்தில் உள்ள ஆண்டாள்
ReplyDelete[ ர ங் க நா ய கி ;))))) அம்பாள் ]
எனக்கு மிகவும் பிடித்த மடிசார் புடவைக்கட்டுடன், அதுவும் கரும்பச்சைக் கலரில் தங்க நிற பார்டரில், ஜொலிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
வெற்றிலையால் செய்த கிளி என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteஆடிப்பூர ஆண்டாள் நாயகி படங்கள் அற்புதம் ..பகிர்வுகள் அபாரம்..பாராட்டுக்கள்..
ReplyDelete3696+9+1=3706
ReplyDelete