Wednesday, July 18, 2012

அம்மன் திருவிழா




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
எனக்கென்ன மனக்கவலை-  என் தாய் 
உனக்கன்றோ என்கவலை" 
நடுக்கடலில் சென்றே விழினும்"- காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு என்கிறார் அபிராமி பட்டர்.
நன்றே வருகினும் தீதே விளைகினும் அவளன்றோ நமக்கு காப்பு !
"நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே
ஆண்டவனுக்குத்தான் அடியவர் எத்தனை கவலைகளைக் கொடுக்கிறர்கள் !!
அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர் பீடம்  ஆடித் திருவிழா  பம்பை, உடுக்கை, தாரை, சிலம்பம் இசையோடு வழிபாடு தொடங்கி ஸ்ரீ சக்ர மகாமேரு பூஜை ,  ஏகதின லட்சார்ச்சனை சிறப்பு அபிஷேகம் ,  சிறப்பு அலங்காரம், தீபாராதனை,  அர்ஜுனன் தபஸ் நாடகம்  கணபதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், நவசண்டி மகா ஹோமம் ஆகியவை நடக்கிறது.  மகா 
அபிஷேகம், பிற்பகல்  புஷ்பாஞ்சலி, அம்மனுக்கு ஊஞ்சல் தர்பார்,  நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் ஏழு ஊர் அம்மன் திருவிழா சிறப்பானது..
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டியில் ஏழு ஊர்களுக்குரிய முத்தாலம்மன்கள் அருள் பாலிக்கிறார்கள்...
முத்தாலம்மன் பொங்கல்
இதில் தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி,
டி.கல்லுப்பட்டி சரஸ்வதி,
வன்னிவேலம்பட்டி மகாலட்சுமி,
வி.அம்மாபட்டியில் பைரவி,
காடனேரியில் திரிபுரசுந்தரி,
கிளாங்குளம் சபரி,
கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக காட்சி அளிக்கிறார்கள்..

தேவன்குறிச்சி,டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரபட்டி கிராமங்களின் சப்பரங்களை பக்தர்கள் வி.அம்மாபட்டி கிராமத்திற்கு சுமந்து வந்து அம்மனை எதிர் சேர்வை செய்து அழைத்துச் செல்பவர்களுக்கு கிராமத்தின் சார்பில், வெற்றிலை பாக்கு மரியாதை செய்யப்படும்...

சிட்னியில் துர்க்கை அம்மன் ஆலயத்தின் திருவிழா மக்கள் நிறைந்த திருவிழாவாக துர்கை அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்ட அழகிய காட்சி



17 comments:

  1. மிகச்சிறப்பான படங்களுடன் கூடிய
    மிக நல்ல அழகிய பதிவு.

    எங்கள் ஊராம் திருச்சியிலும் உறையூரில் வெக்காளியம்மன் கோயில் என மிகப்பிரபலமான கோயில் உள்ளது.

    ReplyDelete
  2. கண்களுக்கு விருந்து!

    கவலைக்கு மருந்து!!

    அழகிய ஆக்கம்!

    அளிக்குதே தாக்கம்!!

    ReplyDelete
  3. மூன்றாவது படம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தாலும், காணக்கான இன்பம் தரக்கூடிய சக்தி மிக்க படம்.
    மீண்டும் தரிஸித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.;)

    ReplyDelete
  4. தேர்ப்படங்கள் அனைத்துமே சூப்பரோ சூப்பர் தான்.

    ReplyDelete
  5. மேலிருந்து ஒன்பதாவது படம் கலக்கல்.

    பிறைச்சந்திர வடிவில், புஷ்ப அலங்காரங்களுடன் ஸ்வாமியையும் அம்பாள்களையும் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    மிகவும் புதுமையாகவும் அழகாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

    ReplyDelete
  6. Happy to view the family.
    (Parents along with Ganesh and Kumara).

    What a pretty decaration......
    How the jewels fit to HER.....
    Colourful Saree jajualyamaga minukirathu.
    Aha the Moon with complete flower decoration.......
    So beautiful....
    All the pictures are just telling something Rajeswari.
    Thanks for this pretty and beautiful post.
    viji

    ReplyDelete
  7. எந்தெந்த ஊருலலாம் அம்மன் திருவிழா நடக்குதுன்னு விரிவா சொன்னதுக்கு நன்றி. படங்கள் வழக்கம் போலவே அருமை.

    ReplyDelete
  8. அமர்க்களமான படங்கள்...

    பகிர்வுக்கு நன்றி சகோதரி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  9. எனக்கும் கூட அம்மன் என்றால் ரொம்ப பிடிக்கும்.படங்களும் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  10. அருமை..!

    முதல் படத்தில் எம்பெருமான் சிவன் குடும்பத்துடன் காட்சி தருவது மகிழ்ச்சி.!

    ReplyDelete
  11. அம்பாளின் திருவுருவப் படங்கள் அருமை!!!.......
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  12. அம்பாளின் திருவுருவப் படங்கள் அருமை!!!.......
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  13. அம்மனின் திருவிழா, அம்மனின் தேர்திருவிழா அம்மன் படங்கள் எல்லாம் அற்புதம்.
    தரிசனம் செய்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. ஆடி பிறந்தாலே நாடெங்கும் அம்மன் திருவிழாதான். அதிலும் அப்போது ஒலிபரப்பாகும் எல்.ஆர் ஈஸ்வரியின் கணீரென்ற அம்மன் பாடல்களை மறக்கவே முடியாது.
    நேரத்திற்கேற்ற ஒரு அருமையான ஒரு பதிவு.

    ReplyDelete
  15. அம்மன் படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  16. மிகச்சிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete