Monday, July 30, 2012

ஆண்டாள் தரிசனம்








கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலக அன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம்..



முத்தமிழ் வளர்த்த முச்சங்கம் இருந்த பாண்டி நாட்டில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ்... செந்தமிழையும் பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை- அந்தத் திருவரங்கனையும் ஒருங்கே ஆள... ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!

செவ்வாய், மங்களன், சேனாபதி, சேய், குஜன், அங்கராகன், குருதி, நெருப்புகொள்ளி, கனல், பூமகன், ஆரல், பூமிகாரகன், சகோதரகாரகன் வக்கிரன்
என்றெல்லாம் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் பரிகாரத்தலமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது.

குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை விட்டுவிட்டு விட்டுசித்தர் திருமகளாராய் ஆண்டாள் அவதரித்தாள்.சிறப்புமிக்க ஆண்டாள்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டது ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திர நாளன்று கொண்டாடுகிறார்கள். ஆடிபுரத்தில் விரதம் இருந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும்.

நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள்...

'அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை
நிறை வேற்றியும் காட்டியவள் , அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்!

 அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் அவள்.

அரங்கனின் துணையோடு பிரார்த்தனை பலிக்க, வாழ்வு இனிக்க வரம் தருவாள் கோதை நாச்சியார்.


தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும் 
கிளியானாள் துளசி மாலை போலானாள்





ஆண்டாள் தன் மாலையும் கிளியும்
ஒவ்வொரு ஆண்டும் அழகருக்கும் 
திருப்பதி பிரம்மோற்சவம் - ஐந்தாம் நாள் கருட சேவைக்கும்.
அரங்கன் இராப்பத்துக்கும் 
சொந்த ஊர் வடபத்ர சாயிக்கு தினமும் அனுப்புகிறாள்..

ஆண்டாளின் பக்திக்கு பெருமை அளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். 

இதை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின் 
7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த காலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். 

இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். தரிசனம் மிகவும் விசேஷமானது.

இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.

இரண்டாவது பெரிய தேர்:::: திருவாரூர் தேர்தான். தமிழகத்தில் மிகப்பெரிய தேர். இதற்கு அடுத்த மிகப்பெரிய தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்.

ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று  தேரோட்டம் நடைபெறும். ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்தால் பிறவிப்பயனை அடையலாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால் இந்த கோவிலை
`மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர்.

கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க வேண்டி கொள்கிறார்கள்.

வியாசரின் மகனாகிய சுகபிரம்ம முனிவரே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாக கூறுவர்.

பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கையை கேட்கும் இந்த கிளி தாயே..இந்த பக்தன் உன்னிடம் இதை வேண்டினான். அதை  எப்போது நிறைவேற்றப் போகிறாய்  என்று ஆண்டாளிடம் நினைவுபடுத்தும் என்கிறார்கள்.

அதிக சக்தி உள்ள இந்த கிளி ஆண்டாளின் கையில் வைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.


கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவள்ளிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;

இப்படி சூரியனும், சந்திரனும் தினம் உதிப்பது போல்
திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தவள்" என்னும் பெருமை கொண்ட ஆண்டாளின் பேரழகான தத்தை என்னும் கிளி தயாராகிறது

http://jaghamani.blogspot.in/2011/12/blog-post_30.html


தெய்வக்கிளிகள் ! --பேசுகின்றன பதிவில் !!






21 comments:

  1. ஆஹா!

    ஆண்டாள் தரிஸனம் செய்து விட்டு ஆனந்தமாக மீண்டும் வருவேன். ;)

    ReplyDelete
  2. கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோபுரத்தை அன்னாந்து பார்த்ததில் என் கழுத்தே சுளுக்கிக்கொண்டு விட்டது.

    எவ்வளவு உயரம்?

    கோபுர தரிஸனம் கோடி புண்ணியம்.

    உயர்ந்த கோபுரங்களை தரிஸிப்பதால் நம் மனதில் உயர்ந்த எண்ணங்களை அவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  3. தத்தைக் கிளிகளும் அவற்றின் அழகும், செய்முறையும், அவற்றின் முக்கியத்துவமும், ஆண்டாள் பிரஸாதமாக அளிக்கப்படும் அவற்றை வெகு அழகாக மீண்டும் இந்தப்பதிவினில் குறிப்பிட்டு நினைவூட்டியது மகிழ்வளிக்கிறது. ;)

    கிடைத்தவர்கள் பாக்யசாலிகளே !!

    ReplyDelete
  4. முதல் நான்கு படங்களும் சும்மா ஜொலிக்கின்றன. அதுபோலவே அந்த ஆறாவது படமும்.

    அதுவும் அந்த ஆறாவது படத்தில் ஆண்டாளின் திருமாங்கல்யம், அதன் கீழே ஒளிரும் ம்ரகத மாணிக்கக்கல், அதன் கீழே பெருமாள்.

    பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் ஸ்ரீலக்ஷ்மி என்றால் ஆண்டாளின் மனமெங்கும், உடல், பொருள், ஆவி என அனைத்திலும் ரங்கமன்னாரே! ;) முரட்டுக் காசு மாலையும், ஆண்டாளின் கொண்டையும் வெகு அழகு. ;)

    ReplyDelete
  5. /தவழ்ந்த மாலை தவழும் மாலை
    அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும்
    கிளியானாள் துளசி மாலை போலானாள்/

    இந்த வரிகளுக்குக் கீழ் காட்டியுள்ள ஆண்டாளை தங்களின் பதிவுகளில் பலமுறை கண்டுகளித்துள்ளேன்.

    எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத சலிக்காத ஓர் அம்ஸமான படம் அது.

    தீர்க்கமான தோற்றம். அமைதியான அழகான, அழுந்தச் சமத்தான, குறுகுறுப்பும், துறுதுறுப்பும் மேலோங்கிய நல்ல களையான முகத்தோற்றம்.

    செதுக்கிய சிற்பம் போன்ற ஓவியம்.
    அது ஓர் பேசும் படம். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். ;)))))

    ReplyDelete
  6. படங்கள் எல்லாம் அழகோ அழகு...
    கிளியின் விளக்கம் அருமை...
    நன்றி சகோதரி...

    ReplyDelete
  7. /ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின்
    7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த காலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். /

    ஆஹா, இதையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.

    இருபுறமும் இரண்டு அசஞ்ஜாடிகளுடன், அம்பாளின் மடியில் பெருமாள் அனந்த சயனம் செய்யும் காட்சி வெகு அருமை.

    அதில் விசிறி மடிப்புடன் பாவாடையும், [பச்சைமாமலைபோல் மேனி என்பார்கள்] இங்கு நல்ல நீலத்தில் மலைபோலக் காட்டியுள்ளதும், பெருமாள் ஸ்ரீபாதம் அருகே, குட்டியூண்டாக கருடாழ்வாரோ என்னவோ, சங்கு சக்ரம் போல கழுத்தில் மாட்டியபடி மிகவும் கலக்கலாக உள்ளது. ;)

    ReplyDelete
  8. //இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.//

    மிகவும் நல்லதொரு தகவல்.
    படிக்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. நேரில் போய் இந்த அரிய காட்சியை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்து விட்டால் ...... !!!!

    ஒற்றுமை பலப்பட்டு விட்டால் ....
    கேட்கவே வேண்டாம்.

    ஆனால் பிறகு பதிவுகள் பக்கம் வரவே முடியாதே! ;)))))

    ReplyDelete
  9. அன்னை ஸ்ரீ ஆண்டாள் பெருமைகள் அறிந்ததில் மகிழ்ச்சி! படங்கள் அருமை!

    ReplyDelete
  10. அனைத்துப்படங்களும், அரிய பெரிய விளக்கங்களும் அருமையோ அருமை.

    ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே பாராட்டிக்கொண்டே போகலாம் தான்.

    ஏற்கனவே தெய்வக்கிளிகள் என்ற பதிவினில் ஏராளமாக எழுதியுள்ளேன். அதில் உள்ள 30% பின்னூட்டங்கள் என்னுடையதே தான்.

    இன்றைய அழகான பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    தொடரட்டும் தங்களின் இதுபோன்ற கிளிகொஞ்சும் அழகான பதிவுகள்.

    பிரியமுள்ள,
    vgk

    ReplyDelete
  11. மேலிருந்து கீழ் நான்காவது படம் முத்தங்கிஸேவை போல ரொம்ப ரொம்ப அழகாக அமைந்துள்ளது.

    அம்பாளின் வலது பாதத்தையும் நன்கு தரிஸிக்க முடிகிறது.

    அம்பாள் மடியில் பெருமாள் அனந்த சயனம் செய்கிறார்.

    பெருமாளின் கிரீடமும் முகமும் மட்டும் காணமுடிகிறது.

    கீழே தாங்கள் காட்டியுள்ள 7 ஆம் நாள் திருநாள் படத்தின் ENLARGE செய்த படம் தான் இது என்று நினைக்கிறேன்.

    தங்கக்கிளியும், ஏராளமான ஆபரணங்களும் தாராளமாகக் காட்டப்பட்டுள்ளன.

    இந்தப்படம் ரொம்ப ரொம்ப ஜோராக அழகாக உள்ளதுங்க!

    பதிவிட்ட தங்கள் திருக்கரங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். பாராட்டுக்கள்.

    வாழ்க, வாழ்கவே! ;)))))

    ReplyDelete
  12. 2009-ல் திருவில்லிபுத்தூர் கோவில் அருகில் வசித்தபோது "வரலஷ்மி பண்டிகையின்போது" எங்க வீட்டில் அம்மன் பின்னல் அலங்காரத்தின் அழகினைக் கண்டு அதுபோல பெரிய சடை அலங்காரம் ஆண்டாளுக்கு கோவிலில் இருந்து கேட்க அதுபோலவே செய்து "ஆண்டாளுக்கு" சாற்றினேன். தங்கள் பதிவினைக் கண்டதும் நினைவுகள் மலர்ந்தன.

    ReplyDelete
  13. கிளி உருவாக்கியிருப்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.அது அதிசயம் எனக்கு.எவ்வளவு அழகா இருக்கு கிளி !

    ReplyDelete
  14. ஆண்டாளின் அற்புத தரிசனம் கண்டு அகமகிழ்ந்தேன்.
    சொக்க வைக்குது கிளியின் அழகும் கிளிமொழியாளின்
    தெய்வீக அழகும்.நன்றி !

    ReplyDelete
  15. ஆண்டாள் தரிசனம்;தந்தது ஆனந்தம்.

    ReplyDelete
  16. என் தெய்வத்தின் படங்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது

    ReplyDelete
  17. தரிசனம் அருமை!

    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  18. தமிழ் இலக்கிய வரலாற்றில் ” பக்தி இலக்கியங்கள் “ வரிசையில் ஆண்டாளுக்கென்று தனியிடம் உண்டு. ” கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்றார் கவிஞர் கண்ணதாசன். தங்களின்
    ” ஆண்டாள் தரிசனம் “ மூலம் அந்த கிளியின் வடிவம் எவ்வெவற்றால் ஆனது என்ற விவரம் தெரிந்து கொள்ள முடிந்தது. பதிவிற்குப் பாராட்டுக்கள்!

    திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
    “ BLOGGER SUNSHINE AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மன்னிக்கவும்! விருதின் பெயர் “SUNSHINE BLOGGER AWARD “ முன்பு மாற்றி சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  20. அற்புதமாய் ஆண்டாள் தரிசனம் அளித்த பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete