600 வது பதிவு ...
//I would like to pass on this Very Valuable Award
|
To Mrs. RAJARAJESWARI Madam of "MANIRAJ" BLOG who is THE FITTEST PERSON to receive this Award from me
|
Mrs. RAJARAJESWARI Madam
vgk
-oOo-oOo-oOo-oOo-oOo- //
|
Ms. RIYAA KATHIR, http://acolorfulbutterfly-
[ A C O L O U R F U L B U T T E R F L Y ] அவர்களால் அருமையாக வழங்கப்பட்ட விருது
சமீப காலங்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று இடைவிடாத பயணங்களால் விருது பதிவுக்கு உடனடியாக வருகைதர முடியவில்லை .. மன்னிக்கவும்..
என்னதான் விமானத்தில் பறந்தாலும் , காரில் பயணித்தாலும் ரயில் பயணம் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1946 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அடிகள் விஜயம் செய்திருந்ததை அறிவுப்புப்பலகையில் கண்டது வியப்பளித்தது....
2013 ஆம் ஆண்டுக்குள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால்
ரயில் சக்கரங்கள் சுழலாது என்று ஒரு அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பு பல நிலையங்களில் எழுதி வைத்திருப்பதைக் காணமுடிந்தது....
நிறைய முறை பார்த்த இடமென்றாலும் பதிவு எழுத வந்தபிறகு நிறைய செய்திகள் காட்சிப்படுகின்றன...
விருதினை எனக்குப் பதிவுலகில் கிடைத்த பொக்கிஷமான ,
நவரத்தினமாக ஒளிரும் பின்னூட்டங்கள் தந்து ஊக்குவிக்கும் அன்புத்தோழி
நவரத்தினமாக ஒளிரும் பின்னூட்டங்கள் தந்து ஊக்குவிக்கும் அன்புத்தோழி
விஜயலஷ்மி மேடம் அவர்களுக்கு
THE BEST ENCOURAGER விருதினை அர்ப்பணிக்கிறேன்.....
THE BEST ENCOURAGER விருதினை அர்ப்பணிக்கிறேன்.....
FOR ME ..... "YOU ARE THE BEST" ! ;)))))
ரிஷபன்July 6, 2012 12:21 AM
இனிப்பு செய்திகளை வழங்கி திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். இன்னும்.. இன்னும் நிறைய இதேபோல நீங்கள் அவார்ட்/பிரசுரம் வாங்க வேண்டும் என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.. இராஜராஜேஸ்வரி மேடத்திற்கு கொடுத்தது நிச்சயம் தகும்.. வாழ்த்துகள் மேடம். ///
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..
//தங்களால் ஏற்றி வைத்த இந்த சிறிய அகல் விளக்குக்கு அடிக்கடி எண்ணெயும்/நெய்யும் ஊற்றி, திரியை நன்கு தூண்டிவிட்டு அணையாமல் காத்துவரும், அரும் பணியைத் தொடர்ந்து செய்து வருவதால், இந்த விருதினை திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு கொடுப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
இதுவரை நான் வெளியிட்டுள்ள 300 க்கும் மேற்பட்டப் பதிவுகள் அத்தனைக்கும் ஒன்று விடாமல் வருகை தந்து, ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானத்தை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்கள்.
தாங்களே, அவர்களுக்குக் கொடுத்தது தான் ’தகும்’ என்று சொல்லியுள்ளது எனக்கும் மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.//
இராஜராஜேஸ்வரிJuly 6, 2012 3:28 AM
YOU ARE THE BEST FOR RECEIVING AND AWARDING ..... ;)))))
FOR ME ..... "YOU ARE THE BEST" ! ;)))))
MAIL MESSAGE On 8th July, 2012 FROM நுண்மதி:
//திருமதி. ராஜராஜேஸ்வரி அவர்களும் தங்களைப் போலவே உற்சாகமளித்து வருபவர். சில பதிவுகளில் இவரின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் படிப்பாரோ என எண்ணி வியந்திருக்கிறேன்.//
தாங்கள் சொல்வது போல, என் பதிவுகள் பலவற்றிற்கும் அவர்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அளித்து வருவது எனக்கும் மிகுந்த உற்சாகம் தருவதாகவே உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.
ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வது போல, என் பதிவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் படிப்பவராக இருப்பார்கள் என்று நிச்சயம் என்னால் சொல்லமுடியாது.
நாம் எல்லோரும் பொதுவாக எழுத்து எழுத்தாக, வார்த்தை வார்த்தையாக, வரிவரியாக, பத்தி பத்தியாக வாசிப்பவர்களே.
ஆனால் அவர்கள் சுவாமி விவேகாநந்தர் போல பக்கம் பக்கமாக, வேகவேகமாகப் படிக்கும் திறமையும் மற்றும் ப்டித்ததை கற்பூரம் போல உடனடியாக மனதில் கிரஹித்துக் கொள்ளும் தனித்திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே, நான் இதுவரை கண்டுபிடித்ததோர் உண்மை.//
தி.தமிழ் இளங்கோJuly 7, 2012 5:08 PM
வயது வித்தியாசமின்றி எல்லோரையும் ஊக்கப் படுத்தும், உங்களுக்கு “ BEST AND THE BEST ENCOURAGER “ அவார்ட் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! உங்களால் அதே அவார்டிற்கு தேர்வான மணிராஜ் வலைபதிவாளர் திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு எனது வாழ்த்துக்கள்! தங்களுக்கு இந்த விருதினைத் தந்த சகோதரி ரியா காதிர் அவர்களுக்கு நன்றி!
VijiParthibanJuly 6, 2012 10:39 PM
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.. ராஜேஸ்வரி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
கோமதி அரசுJuly 6, 2012 6:44 PM
உங்களிடம் விருது பெற்ற இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
angelinJuly 6, 2012 7:17 AM
வாழ்த்துக்கள் கோபு சார் :)))
ரியா பொருத்தமானவருக்கு தான் அவார்ட் வழங்கியிருக்காங்க
நீங்களும் அவ்வாறே ராஜேஸ்வரி அக்காவுக்கு வழங்கியிருக்கீங்க
இருவருக்கும் வாழ்த்துக்கள்
AthisayaJuly 6, 2012 4:25 AM
விருது◌ாற்றமைக்காக பாராட்டி நிற்கிறேன் சொந்தமே.விருதை பெற்ற மற்றய சொந்தத்திற்கும் என் வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!
"AWESOME BLOGGER AWARD"
to five bloggers whose blogs
I feel - are awesome!!!
1. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
to five bloggers whose blogs
I feel - are awesome!!!
1. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
[மணிராஜ்]
http://jaghamani.blogspot.in
அன்புள்ள விஜயலக்ஷ்மி மேடம். வாங்க. தங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.
மணிராஜ் என்ற பதிவினில் எழுதும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களின் பதிவுகளுக்கு நான் எழுதும் பின்னூட்டங்களை தாங்கள் தினமும் மிகவும் ரஸிப்பதாகவும், அந்தப்பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்த பிறகு பிறகு அவ்ர்கள் தந்துவரும் படங்களை மீண்டும் ஓர் முறை போய் பார்ப்பதாகவும் எழுதியிருப்பதைப் படிக்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஏதோ நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதிவரும் பின்னுட்டங்கள் உங்களைப் போன்ற ஒரு சிலருக்காவது ரஸித்துப் படிக்க பயன் படுவதாகச் சொல்வதும், அதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் FEEDBACK தருவதும் என்னை சந்தோஷப்படுத்துகிறது.//////////
மணிராஜ் என்ற பதிவினில் எழுதும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களின் பதிவுகளுக்கு நான் எழுதும் பின்னூட்டங்களை தாங்கள் தினமும் மிகவும் ரஸிப்பதாகவும், அந்தப்பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்த பிறகு பிறகு அவ்ர்கள் தந்துவரும் படங்களை மீண்டும் ஓர் முறை போய் பார்ப்பதாகவும் எழுதியிருப்பதைப் படிக்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஏதோ நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதிவரும் பின்னுட்டங்கள் உங்களைப் போன்ற ஒரு சிலருக்காவது ரஸித்துப் படிக்க பயன் படுவதாகச் சொல்வதும், அதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் FEEDBACK தருவதும் என்னை சந்தோஷப்படுத்துகிறது.//////////
இனிய மனம் நிறைந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறேன்...
தங்களின் வெற்றிகரமான 600 ஆவது பதிவுக்கு
ReplyDeleteஎன் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள்.
MY HEARTIEST CONGRATULATIONS, Madam! ;))))).
தாங்கள்,
ReplyDeleteசின்னஞ்சிறுபெண் போலே
சிற்றாடை உடையுடுத்தி ..................
வலையுலகில் கால் ஊன்றி
த்ளிர்நடையுடன் முதலடி
எடுத்து வைத்தத் திருநாள்:
21...01...2011
நேற்று தான்
வந்ததுபோலத்
தோன்றுகிறது எனக்கு.
அதற்குள் 600 பதிவுகள்.
அஸாத்யமான சாதனை தான்.
தங்கள் பதிவு ஒவ்வொன்றும்
ReplyDeleteஒருசிலரின் பதிவுகள் போல
ஏனோ தானோ பதிவுகள் அல்ல!
நேர்த்தியான
அழகான
அற்புதமான
அட்டகாசமான
கண்ணுக்கும்
மனதுக்கும்
மகிழ்ச்சியளிக்கும்
ஏராளமான
தெய்வீகப்
படங்களைத்
தாராளமாகத்
தந்து விடுவீர்கள்!
அது மட்டுமா?
ஒவ்வொன்றையும் பற்றி,
தகவல் களஞ்சியமாக
எவ்வளவு அரிய பெரிய
கருத்துக்களை
அள்ளி அள்ளித்
தருவீர்கள்!!.
அவற்றைக் காணவும்
கண்டு களிக்கவும்
எங்களுக்குக்
கோடிக்கண்கள்
இருந்தாலும்
பத்தாது
அல்லவோ!!!
மிகவும் சந்தோஷமாக உள்ளது.
உங்களின் பதிவுக்ளுக்கு நான் தினமும் ஆவலுடன் வரும்போது
ReplyDeleteஒரு கோயிலுக்குள் செல்லும் உணர்வே எனக்கு ஏற்பட்டு வந்தது.
அதில் ஆழ்ந்து ஒவ்வொன்றையும் நான் சுவைத்திடும் போது
கோயிலின் கருவறைக்குள் தாங்களே என்னைக் கூட்டிச்சென்று,
எனக்கு மட்டுமே ஸ்பெஷலாக திவ்ய தரிஸனம் செய்து வைப்பது
போல பலமுறை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போய் உள்ளேன்.
21.01.2011 முதல் இன்று 14.07.2012 வரை உள்ள
ReplyDeleteமொத்த நாட்கள் 5 4 1 மட்டுமே.
இந்த 5 4 1 நாட்க்ளில் ஆனந்தமான
6 0 0 பதிவுகளைத் தந்து, எங்கள்
அனைவரையும் ஆனந்தப்படுத்தி
மிகப்பெரியதொரு சாதனை புரிந்துள்ளீர்கள்.
ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!!
பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்
ReplyDeleteஇதைவிட அதிக சாதனை புரிந்தவர்கள்
ஆங்காங்கே இருக்கக் கூடும்.
ஆனால், நீளம், அகலம், ஆழம், தூய்மை
மற்றும் தரத்தினில் தங்களின் பதிவுகளுக்கு
முன்னால் அவையாவும் தவிடுபொடியாகும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
”தரத்தினில் நான் தங்கமென்று”
தரணியில் புகழை எட்டி விட்டீர்கள் !
அதுவும் சுத்தத்தங்கம் !.
பத்தரை மாத்துத் தங்கம்!!
கொங்கு நாட்டுத் தங்கம்!
கோவைத் தங்கம்!!
தங்களின் பதிவுகள் யாவுமே, படிப்பவரின்
மனதினில் உள்ள அழுக்குகளைப் போக்கி,
தெய்வாம்சத்துடன் கூடிய தெளிவினைத்
தர வல்லதாக உள்ளது என்பதே உண்மை.
;)))))
தினமும் எத்தனை எத்தனை
ReplyDeleteஸ்வாமிகளையும் அம்பாளகளையும்
மூலவர்களையும், உற்சவர்களையும்
கோயில்களையும் குளங்களையும்
கோபுரங்களையும் கொடிமரங்களையும்
யானைகளையும் வாஹனங்களையும்
ஸ்லோகங்களையும் ஸ்தோத்திரங்களையும்
காட்டிக்காட்டி மனம் மகிழச்செய்துள்ளீர்கள் !
அடேங்கப்பா, அடேங்கப்பா
எத்தனை விநாயகர்கள்
எத்தனை ஆஞ்சநேயர்கள்
எத்தனை நடராஜர்கள்
எத்தனைப் பெருமாள்கள்
எத்தனை சிவபெருமான்கள்
எத்தனை அம்பாள்கள்
அத்தனையும் தந்தல்லவா
அசத்தினீர்கள் !! ;)))))
மறுக்கவோ மறக்கவோ முடியாதே !
தெய்வீகப்பதிவுகள் மட்டுமா?
ReplyDeleteயானைகள், பூனைகள்,
குருவிகள், கிளிகள்
பறவைகள், விலங்குகள்
புஷ்பங்கள், தோட்டங்கள்
செடிகள், கொடிகள், மரங்கள்
இலைகள், கிளைகள்
வெளிநாட்டுக் காட்சிகள்
கட்டடங்கள் கட்டுமானங்கள்
நடனம் நாட்டியம் கலை கலாச்சாரம்
இஞ்சி, கருவேப்பிலை முதல்
கடுக்காய் ... பட்டை வரை
அனைத்தையும் பற்றி எழுதி
பட்டையைக் கிளப்பியதை
பலரும் அறிவோமே !
541 நாட்களில் மிகத்தரமான தங்கமான
ReplyDelete600 பதிவுகள் என்பது 110.90 சதவீதம் என
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தினமும் ஒரு பதிவுக்கு மேல்,
[ 1.11 பதிவுகள் வீதம் ] தந்து அசத்தியுள்ளீர்கள்.
30 நாட்கள் உள்ள ஒரு மாதத்திற்கு
33 அல்லது 34 பதிவுகள் வீதம் தந்துள்ளீர்கள்
அதாவது 100 நாட்களுக்கு 111 பதிவுகள் என்ற
அடிப்படையில் தந்துள்ளீர்கள்..
அசராத தங்களின் கடும் உழைப்பை
கொடிமின்னல் போல பளிச்சென்று
காணமுடிகிறது, அதுவும் தங்களின்
ஒவ்வொரு பதிவுகளிலும்.
மனம் நிறைந்த
இனிய மகிழ்வுடன் கூடிய
அன்பான பாராட்டுக்கள்.
நேயர் விரும்பம் போல
ReplyDeleteநான் விரும்பிக் கேட்டுக்கொண்டபடி
குறிப்பிட்ட நாளுக்கு ஒருநான் முன்பாகவே
இலக்கை எட்டி சாதனை புரிந்துள்ளது
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தங்கள் தாயாரை விட்டு, தங்களுக்கு இன்று
திருஷ்டி சுற்றிப் போடச்சொல்லுஙகள்.
இந்த சாதனைகள் சோர்வில்லாமல் தொடரவும்
மேலும் பல்வேறு உச்ச நிலை வெற்றிகளை
உன்னதமாகத் தாங்கள் எட்டிடவும்
என் அன்பான வாழ்த்துகள்;
மனமார்ந்த ஆசிகள்.
இந்தத் தங்களின் 600 ஆவது
ReplyDeleteபதிவினை முழுவதும் படித்துவிட்டு
மீண்டும் வருவேனாக்கும்.
ஜாக்கிரதை.! ;)))))
இனிய விருதுகள் என்ற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள இந்தப்பதிவு மாபெரும் விருந்து சாப்பிட்ட உணர்வை அளிக்கிறது.
ReplyDeleteவிருதினை தாங்கள் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டதால், அந்த விருது மட்டுமின்றி, இந்த விருதினில் சம்மந்தப்பட்ட அனைவருமே மிக்வும் பெருமை அடைகிறோம்.
நன்றி, நன்றி, நன்றி !!!
vaazhthukkal!
ReplyDeleteadengapaaaaaaa!?
eththanai vannamayamaana padangal.!
இரண்டாவது மூன்றாவதாகக் காட்டியுள்ள படங்களில் அந்த மஞ்சள் மகரந்தப் பூக்களும், சுதந்திரமாகச் சுற்றித்திரியும் பட்டாம் பூச்சிகளும், இருபுறமும் அசையும் திரைச்சீலைகளும் ... ஆஹா
ReplyDeleteஎத்தனை அழகாக உள்ளன! ;))))
//ஆன் - லைனில் புக் செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளை பிரிண்ட் - அவுட் எடுக்காமல் செல்போனில் பதிவு செய்து டி டி ஆரிடம் பார்வைக்குக் கொடுத்தாலே போதுமானது என்கிற வசதியால் ஒரு நாளைக்கு நான்கு லட்சத்திற்கும் அதிகமான A 4 size பேப்பர்கள் மிச்சப்படுகிறதாம் . பேப்பர் செய்ய வெட்டப்படும் மரங்களும் தடுக்கப்படுகிறதாம்.. //
ReplyDeleteமுதலில் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியான கேள்விப்பட்டதோர் செய்தி தான்.
தினம் ஒன்றுக்கு நான்கு லக்ஷம் A4 Size தாள்கள் மிச்சமாகிறது என்பதும், அதனால் பேப்பர் தயாரிக்க வெட்டப்படும் மரங்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பதும், கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
நல்லதொரு தகவல் தான், அதுவும் இன்று நம் தகவல் களஞ்சியத்தின் வாயிலாக. ;)))))
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் அன்புக்கரங்களால்
ReplyDeleteதங்களுக்குப் பதிவுலகில் கிடைத்த பொக்கிஷமானவரும், நவரத்தினமாக ஒளிரும் பின்னூட்டங்கள் தந்து ஊக்குவிப்பவருமான தங்களின் அன்புத்தோழி
Viji's Craft
http://viji-crafts.blogspot.in/
I Love Craft
http://viji-crafts.blogspot.in/
அவர்களுக்குப் பகிர்ந்து அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
My Heartiest Congratulations to Mrs.Vijayalakshmi Krishnan, Madam.,
vgk
அடுத்து அடுத்து காட்டியுள்ள அனைத்து ஒளிரும் படங்களும் அழகோ அழகாகவே உள்ளன.
ReplyDeleteபார்க்கப்பார்க்க மிகவும் பொறாமையாகவும் உள்ளன.
மொத்தத்தில் ஜொலிக்கும் பதிவாகவல்லவா இந்த 600 ஆவது பதிவு அமைந்துள்ளது! ;)))))
Superb!
மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎன்னுடைய பதிவுக்கு அன்புடன் வருகை தந்து என்னையும் தங்களையும் சேர்த்து வாழ்த்திச் சென்ற அன்புள்ளங்களான
ReplyDeleteதிரு. ரிஷ்பன் அவர்கள்
செல்வி நுண்மதி அவர்கள்
திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள்
திருமதி விஜிபார்த்திபன் அவர்கள்
திருமதி கோமதி அரசு அவர்கள்
திருமதி ஏஞ்சலின்[நிர்மலா]அவர்கள்
திருமதி அதிசயா அவர்கள்
திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
ஆகிய அனைவரின் பின்னூட்டங்களுடன், இங்கு தாங்கள் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி இருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
For me "YOU ARE THE BEST'
என்பதை இங்கும் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள்.
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!
என்றும் பிரியமுள்ள
vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதங்களின் வெற்றிகரமான 600 ஆவது பதிவுக்கு
என் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள்.
MY HEARTIEST CONGRATULATIONS, Madam! ;))))).
த்ங்களின் அன்பான வழிகாட்டலும், ஊக்குவித்தலும் , வாழ்த்துகளும் , அளித்த விருதுகளும் , பாராட்டுக்களுமே வெற்றிகரமான 600 ஆவது பதிவுக்கு காரணம் ..
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.
600 க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎம்மாடி 600 ஆஆஆ..... வாழ்த்துக்கள் சகோ.... 600-ங்றது சாதாரண விசயமில்லை... ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க :) :)
ReplyDeleteகன்னுபட்டுட போகுது வலைப்பதிவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க!
படங்களும் பதிவும் அருமை .
ReplyDeleteஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து நன்றி கூறியமை மிகவும் அருமை
கோபு சார் சொன்ன மாதிரி for us YOU ARE THE BEST.,!!!!
எப்பவும் நீங்க தான் அக்கா தகவல் களஞ்சியமாய் நிறைய விஷயங்களை பகிர்வீர்கள் ..
இன்று கோபு சார் :)) ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய் கவனித்து !!! தி பெஸ்ட் :))) YOU ROCK!!!!
உங்களிடமிருந்து விருதை பெற்றுக்கொள்ளும் விஜி மேடத்துக்கும் வாழ்த்துக்கள் .
May The Almighty in Whose Praise and with Whose Bountiful Grace you are privileged to reach this coveted honour may Shower on you all His Best on all the days to roll.
ReplyDeletesubbu rathinam
“ BEST AND THE BEST ENCOURAGER “ என்ற AWARD – டினை
ReplyDeleteதிரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இருவருமே மற்ற பதிவர்களை உற்சாகப் படுத்தும் Straight Forward எண்ணம் கொண்டவர்கள்.
மேடத்திடமிருந்து இந்த நல் விருதினைப் பெற்ற விஜயலக்ஷ்மி மேடத்திற்கு நல் வாழ்த்துக்கள்!
600 ஆவது பதிவு உங்கள் உழைப்பின் வெற்றி! பயணம் தொடரட்டும்!
உங்களின் 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவை. கோபாலகிருஷ்ணன் சார் சொன்ன மாதிரி 541 நாட்களில் 600 தங்கமான பதிவுகள் தருவது மிகவும் வியப்பானது தான்.
எழுத்தின் மேல் உள்ள உற்சாகம் தான் காரணம் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் இன்னும் நிறைய தங்கமான பதிவுகள் தருவதற்கு.
எனக்கும், மற்றும் அனைவருக்கும் நன்றி சொன்னதற்கு நன்றி.
இந்தவாரம் அழகான அருமையான வாரம் தான்.
உங்களிடம் விருது பெற்ற விஜயலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
படிக்க மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது..
ReplyDelete600 பதிவுகள் என்பது சாமான்யமான விஷயம் அல்ல.
கடின உழைப்பும்,விடா முயற்ச்சியையும் காட்டுகிறது.
கிடைத்த பல வித அங்கீகாரங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்றவை
என் வாழ்த்துகள் உங்களுக்கு
குறுகிய காலத்திற்குள் 600 பதிவுகள் என்பது அசத்தலான, அசாதாரண சாதனை! மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிருந்து பெற்றதற்கு வாழ்த்துக்கள் அம்மா, உங்கள் கடுமையான பணி நிமித்தத்திற்கு மத்தியிலும் இறை சேவை செய்து வருவது குறித்து மகிழ்கிறேன்.
ReplyDeletecongratulations madam for 600 posts
ReplyDeleteஉயரியத் தொழில் நுட்பத்துடன், சிரத்தையுடன், ஆர்ப்பரிக்கும் கடலென பதிவுகள். முத்துக்கள் சிதறி இருக்கின்றன. வேண்டுவோர் பலன்பெறட்டுமென அழகான, அற்புதமான பகிர்வுகள்! இறையை நினைப்பதும், இறை நாமத்தை உச்சரிப்பதற்கும் பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். வாழ்த்துக்கள்! உங்களின் தொடர் பணி சிறக்கட்டும்!
ReplyDeleteஉங்களின் 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா. VGK ஐயா கூறுவது போன்றே 541 நாட்களில் 600 தரமான பதிவுகள் தருவது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.எழுத்தின் மேல் உள்ள ஆர்வம் தான் காரணம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் இன்னும் நிறைய தங்கமான பதிவுகள் தருவதற்கு.எனக்கும், மற்றும் அனைவருக்கும் நன்றி சொன்னதற்கு நன்றி. தாங்களிடம் விருது பெற்ற விஜயலக்ஷ்மி அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
I was away to NorthIndia for a pilgrimage tour.
ReplyDeleteThe first thing after I return from there is to see Rajeswaris blog.
What a pleasent surprise!!!!!!!!!!!!!
I have been awarded!!!!!!!!!!1
Mothirakaiyal valankapatta viruthu!!!Thanks Thanks.
Karumbuthinna kuli!!!!!!!
Enna athirstam enakku!!!!!!
I am excited.
I will comeback after i sometimes.
viji
வாழ்த்துக்கள்! மேலும் பல நல்ல தகவல்களை எங்களோடு பகிருங்கள்! நன்றி!
ReplyDelete// angelin said...
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை .
ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து நன்றி கூறியமை மிகவும் அருமை
கோபு சார் சொன்ன மாதிரி for us YOU ARE THE BEST.,!!!!
எப்பவும் நீங்க தான் அக்கா தகவல் களஞ்சியமாய் நிறைய விஷயங்களை பகிர்வீர்கள் ..
இன்று கோபு சார் :)) ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய் கவனித்து !!! தி பெஸ்ட் :))) YOU ROCK!!!!//
அன்புள்ள நிர்மலா,
//கோபு சார் சொன்ன மாதிரி for us YOU ARE THE BEST.,!!!!//
உங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போடணும். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால், நீங்களே என் சார்பில், 2 ஸ்பூன் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் எனக்காகவும், ஒரு ஸ்பூன் உங்கள் அக்காவுக்காகவும்.
OK யா?
For All of us
M A D A M I S T H E B E S T !
அக்காவா ! கொக்கா!!
Thank you NIRMALA ... Bye for now.
அன்புடன்
கோபு
//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDelete“ BEST AND THE BEST ENCOURAGER “ என்ற AWARD – டினை
திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இருவருமே மற்ற பதிவர்களை உற்சாகப் படுத்தும் Straight Forward எண்ணம் கொண்டவர்கள்.//
ஐயா, வணக்கம்.
எங்கள் இருவரையும் பற்றி நன்கு புரிந்துகொண்டு பாராட்டியுள்ளதற்கு எங்கள் இருவரின் அன்பான இனிய நன்றிகள் ஐயா.
அன்புடன்
VGK
[வை.கோபாலகிருஷ்ணன்]
//கோமதி அரசு said...
ReplyDeleteவை. கோபாலகிருஷ்ணன் சார் சொன்ன மாதிரி 541 நாட்களில் 600 தங்கமான பதிவுகள் தருவது மிகவும் வியப்பானது தான்.//
ஆமாம் மேடம். தினமும் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவு, அதுவும் WITH RICHEST PICTURES / PHOTOS / FULL DETAILS என்று ஜொலித்திடும் பதிவுகளாகத் தருவது, மிகப்பெரிய வியப்பாகத்தான் எனக்கும் உள்ளது. தெய்வாம்சம் நிறைந்த பதிவராக உள்ளார்கள். ;)))))
//எழுத்தின் மேல் உள்ள உற்சாகம் தான் காரணம் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்//
சாதாரண உற்சாகம் அல்ல. படு உற்சாகம் இவர்களுக்கு. எப்படித்தான் TIME MANAGEMENT செய்கிறார்களோ?
//வாழ்த்துகள், இன்னும் நிறைய தங்கமான பதிவுகள் தருவதற்கு//
தங்கம் விலை தினமும் ஏறுவதற்கே இவர்கள் தினமும் நமக்குத் தந்துவரும் தங்கமான பதிவுகளே காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ;)))))
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், மேடம்.
அன்புடன் தங்கள்,
vgk
//VijiParthiban said...
ReplyDeleteஉங்களின் 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.
VGK ஐயா கூறுவது போன்றே 541 நாட்களில் 600 தரமான பதிவுகள் தருவது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.எழுத்தின் மேல் உள்ள ஆர்வம் தான் காரணம் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் இன்னும் நிறைய தங்கமான பதிவுகள் தருவதற்கு//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும் என்னுடைய + தங்கள் அக்காவினுடைய மனமார்ந்த நன்றிகள், மேடம்.
மேலே திருமதி கோமதி அரசு மேடம் அவர்களுக்கு நான் எழுதியுள்ள பதிலே தங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.
//எனக்கும், மற்றும் அனைவருக்கும் நன்றி சொன்னதற்கு நன்றி. //
தங்கள் அக்கா தன் பதிவினில் தங்களுக்கும், மற்ற அனைவருக்கும் நன்றி சொன்னதற்கு, தாங்கள் அவர்களுக்கு நன்றி சொன்னதற்கு, என் நன்றிகள்.
நன்றி... நன்றி... நன்றி !
அன்புடன் vgk
வெற்றிகரமான 600 ஆவது பதிவுக்கு
ReplyDeleteஎன் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள்.
Hey very nice blog!
ReplyDeleteMy blog post - Sugavani.com
3622+21+1=3644 ;))))))))))))))))))))))))
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சியூட்டிடும் பதிவு. ஏராளமானவர்கள் நம் இருவரையும் பாராட்டிப்பேசியுள்ளது சந்தோஷம் அளிக்கிறது.
அடியேனுக்கான தங்களின் பதில் ஓர் நிறைகுடமாக திகழ்கின்றது. ;)))))