Thursday, July 5, 2012

ஸ்ரீசுதர்சன ஜெயந்தி





"ஸ்நானே, தானே, ஜபாதௌச ச்ராததே சைவ விஷேத
சிந்தநீய சக்ரபாணி: ஸ்ர்வா கௌக விநாசந ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத.'

ஸ்ரீ சுதர்சனர், ஸ்நானம், தானம், தவம், ஜெபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி, எக்காலத் தும் தியானிக்கத்தக்கவர் என பிரம்மன் நாரதருக்குக் கூறுவதாகத் தெரிவிக்கிறது புராணம். 

சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், 
காண்பதற்கு இனியவர் என்று பொருள். 

ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள்.
சுதர்சன வழிபாட்டில் எந்திர உபாசனை மிக முக்கியமானது. 
சுதர்சன சக்கர எந்திர அமைப்பு  செப்புத் தகட்டில் வரிவடிவில் முக்கோணம், ஷட் கோணம் போன்ற கோண அமைப்பில் வழிபடுவது ஒரு முறை; 

விக்ரக ஆராதனை மற்றொரு முறை. சிவப்பு மலர்கள் உகந்தவை. 


சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது; 
தீராத நோய்களைத் தீர்க்கும்; 
போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். 
 எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. 


சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய சுவாமி தேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர்


இராவண னின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்...

காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். 
கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் வென்றான்.
தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள்.
கஜேந்திர மோட்ச வைபவத்தில் சக்கரத்தைக் கொண்டே கஜேந்திரனைக் கவ்விப் பிடித்திழுத்த முதலையை அழித்து, யானையைக் காப்பாற்றுகிறார்.

சக்கரத்தாழ்வார், சுதர்சனர்,சுதர்சன மூர்த்தி, ஆறுச் சாமி, 
என்றெல்லாம் வணங்கப்படுகிறார்,,!
சனி அன்று இவரை வழிபடுவது சிறப்பு. 
சுபங்களை தருபவர்,  நீண்ட ஆயுளை கொடுப்பவர்.  நல்வழி காட்டுபவர்.  சுதர்சனரை வழிபட்டால் வாழ்வில் எல்லா சங்கடங்களும் 
நீங்கி நன்மை உண்டாகும்.

ஸ்ரீசுதர்சனர் வழிபாட்டில் ஆறு மற்றும் அதன் மடங்குகளில் மௌனமாகப் பிரதட்சிணம்  ஆசாரமாகச் செய்வது சிறப்பு...
துவங்குகையில் நெய்விளக்கேற்றி வைத்துவிட்டு, ஒவ்வொரு பிரதட்சிணத்திற்கும் ஒரு பழமோ அல்லது வேறு பொருட் களோ சந்நிதி வாசலில் வைத்து எண்ண வேண்டுமென்ற நியமங்கள் உள்ளன. 
மண்டலத்தை முடிக்கும்போது கோதுமைப் பாயசம் நிவேதனம் செய்வது சுதர்சன பகவானுக்கு உகந்தது.  
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி சந்நிதியில் மிக 
விஷேசமாக வணங்குகிறோம்..
சிறப்பு வாய்ந்த சுதர்சனரின் அற்புதத் திருமேனிகளை 
வணங்கி நலம் பெறலாம்..
ஆந்திர மாநிலம் கடப்பா ஜில்லா புரட்டாட்டூர் சுதர்சனர் திவ்ய தரிஸனம்

6 comments:

  1. ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி பற்றிய பதிவின் படங்களும், விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  2. அருள் தரும் சுதர்சனரைப் பற்றிய பகிர்வு அருமை! அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. சுதர்சனரை பற்றிய அரிய தகவல்களுடன் அழகிய படங்களையும் தந்து எளிமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. படங்கள் அருமை சொந்தமே...தொடருங்கள்.
    http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  5. ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி பற்றிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete