Tuesday, July 17, 2012

ஆடிச் செவ்வாய் தேடி ...


 பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே என்று அபிராமி பட்டர் பாடிய  அன்னை ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைக்கும் தாயாக கொண்டாடும்  மாதம் ஆடிமாதம்..

  இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதமான ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம்.தேவர்களின் இரவுக் காலம். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

அம்மனுக்கு உரிய மாதமான ஆடி மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். 

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். 
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
"ஆடிப் பட்டம் தேடி விதை', "
ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', 
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 
"ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 
"ஆடிக் கூழ் அமிர்தமாகும்.'
ஆடி மாதப் பழமொழிகள்  ஆடிவரும் நம் நாவில் ..

 "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்து அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. 

உத்தராயண காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு கற்பக தருவாக அருள் பொழியும் அன்னைக்கும் உரிய காலம் ஆகும். 
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். 
இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். 
வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் 
உதவுபவற்றையே ஆடி மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர் களுக்குத் தருகிறார்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகள் சிறப்பிடம் பெறுகின்றன..


 சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். 
குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தருவதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்குச் செய்யும் விரத பூஜை.. ஔவை நோன்பு கடைப்பிடிப் பதால் கன்னிப் பெண் களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர் களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில் லாமல் செய்யும் கொழுக் கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். 
இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள்.
அதியமானி டம் நெல்லிக்கனி பெற்ற ஔவைதான் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவள்.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம். 


மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.




19 comments:

  1. ஆடி மாதத்தில் நடக்கும் அனைத்து விசேஷங்கள் பற்றிய தொகுப்பு... படங்கள் அருமை !

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எங்க வீட்டம்மா இன்னைக்கு ஆடி செவ்வாய் என்று சொல்லிக்கொண்டு கோவிலுக்குப் போய் வந்தார்கள். உங்கள் பதிவைப் பார்த்த பிறகுதான் இந்த நாளின் முக்கியம் புரிந்தது.

    ReplyDelete
  3. நல்ல அருமையான தகவல் ஆடியைப் பற்றி ... ஆடி மாதம் அம்மனின் மாதம் என்பதும் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் இன்றும் நடைப் பெற்று வருகிறது.. ஆடியில் எல்லா நாட்களும் நல்ல உகந்த நாள்களே ....அற்புதமான பகிர்வு ஆடி செவ்வாய் அன்று ... வாழ்த்துக்கள் அக்கா....

    படங்கள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
  4. எங்க ஊர் பக்கம்லாம் ஆடிமாதம் கூழ் செஞ்சு அம்மன் கோவிலுக்கு கொண்டு போய் ஊத்திட்டு வருவாங்க. ஆனா, ஏன்னு தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  5. ஆடி மாதம் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. Aha!!!!!!
    Fine writings.
    Really now only i came to know about the details of making Kanchi i mean for adi kool..
    The pictures are very fine as usual. Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  7. I cannot control my laughing on seeing the kutty pillayar and his mushik.
    But felt sorry that the HOLY PARENTS not included HIM with them.

    ReplyDelete
  8. ’ஆடிக்கூழ் தேடி குடி’ என்பார்கள்.
    உங்கள் பதிவில் அம்மன் கூழகிடைத்து விட்டது.
    ஒளயையார் அம்மன் விரதம் முன்பு எங்கள் ஊரில் எல்லோரும் சேர்ந்து இருப்போம்.
    ப்ழைய நினைவுகளை உங்கள் பதிவு நினைக்க வைத்து விட்டது.
    எல்லா முக்கிய கோவில்களிலும் ஆடிமாதம் அம்மன் திருவிழாவிற்கு கொடியேறி விட்டது.
    நன்றி அம்மன் தரிசனத்திற்கு.

    ReplyDelete
  9. அருமையான பதிவு

    அற்புதமான படங்கள்

    அசத்தலான விளக்கங்கள்

    அத்தனையும் சிறப்பு.

    ReplyDelete
  10. அருமையான ஆடி மாத பதிவு.!
    நன்றிகள் பல.!

    ReplyDelete
  11. இதுவரை தெரிந்திராததகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. தினமும் இவ்வளவு தகவல்கள் எப்படித்தான் சேகரிக்கிறீர்களே எழுதுகிறீர்களோ?

    வழக்கம் போல் படங்கள் அருமை!

    ReplyDelete
  13. ஆடிமாதம் என்றாலே
    அம்மன் கோவில் கொடைவிழாக்கள்
    கண்முன் நிற்கிறது...
    அன்னை அபிராமியின் திருவருள் கடாட்சம்
    உங்கள் பதிவின் மூலம்...
    நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  14. thanks for sharing the importance of aadi sevvai, aadi velli and food mixed with minerals served as kambamkool

    ReplyDelete
  15. நாலாவது படத்தில் குட்டியூண்டாக நிற்கும் பொடிப்பிள்ளையார், குட்டியூண்டு வெள்ளரிப்பிஞ்சு போல இருக்கிறார். டக்குனு ஒடிச்சுத் திங்கணும்போல உள்ளது.

    குட்டிக்குட்டி கைகால்கள், கிரீடம், குட்டியாக புடலம்பிஞ்சுபோல ஓர் துதிக்கை, இடுப்பில் ஓர் சிவப்பு வஸ்திரம், அடடா அழகோ அழகு!

    ReplyDelete
  16. Super post! Thank You !

    ReplyDelete
  17. உங்க பதிவு ரொம்பவே பிடிச்சிருக்கு.பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. ஆடி செவ்வாய்
    தேடிப் பகிர்ந்த அற்புதப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete