வித்யா வந்தம் யஷஸ் வந்தம் லக்ஷ்மீ வந்தம் ஜனம் குரு
ரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி
[திருவடிகளைத் தொழுதவர்க்கு வித்தை, புகழ், ஐச்வர்யம் ஆகியவை தரும் (நீ எங்களுக்கு) ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றைக் கொடு; பகைவர்களை வெல்லும் சக்தியை தா அம்மா!
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது திருப்பாற்கடலில் இருந்து செந்தாமரை மலரில் அமர்ந்த வண்ணம் ஸ்ரீமகாலட்சுமி அவதரித்தாள்.
அந்த மகாலட்சுமியை தேவர்களும், ரிஷிகளும் ஸ்தோத்ரம் செய்த மந்திரமே ஸ்ரீசூக்தம்.
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
கங்கை போன்ற புண்ணிய நதிகள் அன்னையை நீராட்டின அஷ்ட திக்கஜங்கள் தன் துதிக்கையால் நீரை நுகர்ந்து ஸ்ரீமகாலட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. திருப்பாற்கடல் பங்கஜ மாலையையும், திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது.
- பாற்கடலை கடையும் போது திருமகளோடு வெளிப்பட்டஉச்சை சிரவஸ் என்ற குதிரையின் மேல் ஏறி திருமாலை வழிபட வைகுண்டம் வந்தான்.சூரியனின் மகன் ரேவந்தன்..
- காளிந்தி நதியும், தமஸாநதியும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீமகாலட்சுமி பெண் குதிரையாக அவதரித்தாள்.
- சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் வெப்பம் (உக்ரம்) தாங்காமல் தன் நிழலை (சாயாதேவி) பெண்ணாக்கி விட்டு குதிரை வடிவில் காளிந்திநதியும், தமஸாநதியும் சந்திக்கும் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
- பெண் குதிரைவடிவில் இருந்த மகாலட்சுமி உஷா தேவியிடம். உன் கணவர் உன்னை வந்து சேருவார் உனக்காக தன் உக்ரத்தை குரைத்துக் கொண்டான் உங்களுக்கு அஷ்வினி தேவர்கள் குழந்தைகளாக பிறப்பார்கள் என்று வரமளித்தாள்.
- மகாவிஷ்ணு ஆண்குதிரை வடிவில், பெண்குதிரை வடிவில் இருக்கும் ஸ்ரீமகாலட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துப் போக வந்த சமயம் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது
- மகாவிஷ்ணு மகாலட்சுமியிடம் சந்தான வைபவத்தை அளிக்கும் வரம் தந்தார்,,
- இதனால் வைபவலட்சுமி என பூலோகத்தில் உன்னை பூஜிப்பார் நான் உன்னைத் தேடி வந்தது போல் வைபவலட்சுமியான உன்னை பூஜிக்கும் பெண்கள் கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சாபங்கள், தோஷங்கள் நீங்கும். உன்னை பூஜிப்பவர்களுக்கு உன்னுடன் சேர்ந்து நானும் அருள் புரிவேன் என பல வரங்கள் கொடுத்தார். பின்னர் தங்கள் குழந்தையை துர்வஸுக்குக் கொடுத்து ஆசீர்வதித்து விட்டு இருவரும் வைகுண்டம் சென்றார்கள்.
இந்தக் கதையை வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வைத்து படித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜை முடிந்தபின் இயன்ற அளவு (11,21,51 இதைவிட அதிக அளவிலும்) புத்தகங்களை வாங்கி அதனுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள்குங்குமம், தாலிச்சரடு ஒரு ரூபாய் நாணயம் வாழைப்பழம் ஆகிய மங்களப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும்.
புத்திரபாக்கியம், தாலி பாக்கியம், உடல் ஆரோக்கியம், உண்டாகும். வழக்குகள் வெற்றியடையும், மனதில் சந்தோசமும், நிம்மதியும் உண்டாகும். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜையை ஜாதி மத பேதமின்றி எல்லோரும் செய்யலாம்.
இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்கநிதியும், பத்மநிதியும் கிடைத்தன. இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கி 11வது வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்வது விசேஷம் இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் கிடையாது. சுமங்களிகள் கூடியிருந்து பூஜை செய்யலாம்.
இந்த பூஜைக்கு இத்தனை வெள்ளிக்கிழமைகள் தான் என்பது இல்லை. பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய பின்னாலும் கூட நன்றி செலுத்தும் பொருட்டு பூஜையை தொடரலாம்.
ஸ்ரீ பார்வதீ ஸரஸ்வதீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
விஷ்ணுப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
கமலே விமலே தேவி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
காருண்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே ......
சது: ஷஷ்டி கலாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸர்வ மங்கள ஸம்பூரணே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
முரசதிர் வாழ்வினை முழக்குவாய் போற்றி
கரையிலாத் துயர்கடல் கடத்துவாய் போற்றி
உரம்கொள் உலகை உவப்பாய் போற்றி
முதல் படத்தில் காட்டியுள்ள ஜொலிக்கும் லக்ஷ்மி மிக மிக அருமையாக உள்ளது. வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற நல்ல பதிவு.
ReplyDeleteமேலிருந்து கீழாக அந்த ஐந்தாவது படத்தில் பின்னலங்காரம் [பின்னல் அலங்காரம்] ப்டு ஜோர்.
ReplyDeleteகனகாம்பரப்பூவினால் அழகிய கொண்டை போன்ற அமைப்பு, லாக்கொடி, அதைச்சுற்றி மல்லிகை+கனகாம்பரம், தாழம்பூப்பின்னல், அடியே தொங்கும் பட்டுக்குஞ்சலங்கள் என படு அமர்க்களமாக உள்ளது. ;)))))
ReplyDeleteதிருப்பாற்கடலில் அழகிய செந்தாமரையில் தோன்றிய மஹாலக்ஷ்மி அவளை தேவர்களும் ரிஷிகளும் ஸ்தோத்ரம் செய்த மந்திரமே ஸ்ரீ சூக்தம்.
ReplyDeleteஹிரண்ய வர்ணாம் ....... ஆவஹ!
அழகோ அழகு!
முன் அலங்காரத்துடன் ராயஸமாக வீற்றிருக்கும் அம்மன் (4 ஆவது படம்) நல்லாவே இருக்குது.
ReplyDelete2 ஆவது படத்தில் பூர்ண கும்பத்தின் முன் பூர்ணமான அழகுடன் ‘சுப லாப’ கஜலக்ஷ்மியும் செந்தாமரையின் மீது அமர்ந்துள்ளதும், நல்ல தீர்க்கமாகவே உள்ளது.
வித்யா வந்தம் ....... ஜஹி, நல்ல அர்த்தமுள்ள ஸ்லோகம்.
ReplyDeleteபொருளுடன் கூறியிருப்பது அந்த வேண்டும் பொருட்களையெல்லாம் அம்பாள் போல தாங்களே தந்து விட்டது போல மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
குதிரை வடிவில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் சந்தோஷித்து, அஸ்வினி தேவர்கள் பிறந்த கதையை அருமையாகவே சொல்லியுள்ளீர்கள்.
அடடா, கடைசியில் சந்தோஷித்துப் பிறந்த குழந்தையைப்போய் ஒரு முனிவரிடம், அதுவும் கோபிஷ்டரான துர்வாஸு முனிவரிடம் கொடுத்து விட்டு, ஜாலியாகக் கிளம்பி விட்டார்களே! ;(
இந்த சந்தோஷமானக் கதையை பெண்மணிகள் வெள்ளிக்கிழமைகளில் படித்தால் ஏற்படும் பலன்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ;)))))
ReplyDeleteவழக்கம் போல எல்லாப்படங்களும், விளக்கங்களும் வெகு அருமை தான்.
இந்த நிமிஷம் வரை பின்னலங்காரத்துக்கு அடியில் உள்ள ஆறாவது படம் திறக்கவில்லை.
ஈஸ்வரோ ரக்ஷது. அது என்ன படமோ? பார்க்கக்கொடுப்பினை இல்லை எனக்கு.
425 க்கு வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். vgk
This post finds so Lakshmi Kadaksham Rajeswari.
ReplyDeleteviji
லக்சுமியின் பூசைச் சிறப்பையும் அதனோடு பெருமாள் குதிரை உசாதேவி விடயம் என புதிய தகவலை அறிந்து கொண்டேன்.நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteமுடியும் போது இன்றை என் பதிவில் உங்கள் தளத்திற்கு இந்த சின்னவன் கொடுத்திருக்கும் விருதினைப் பற்றியும் தெரிந்துகொள்ள வருகை தரும்படி தாழ்மையுடன் அழைக்கின்றேன்!
லக்ஷ்மி படங்கள் அத்தனையும் கண்ணைப் பறிக்கின்றன.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
ஆறாவது படமான ஓம்ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய செளபாக்ய ஆனந்த லக்ஷ்மியை இன்று தை வெள்ளிக்கிழமை காலை தரிஸிக்க முடிந்தது.
ReplyDeleteபெரிதாக்கி உற்றுப் பார்த்தால்
காமதேனு, பறக்கும் குதிரை என பல விஷயங்கள் உள்ளன.
அழகான ஒன்பது குடங்களில் ஐஷ்வர்ய மழை கொட்டோ கொட்டெனக்கொட்டுகிறதே!
அடியில் ஒரு சிறுவன் அவற்றை ஒரு பாத்திரத்தில் ஏந்துவது போல படு சூப்ப்ப்பராக காட்டப்பட்டுள்ளது.
இதைக்காணாமலும், விபரம் ஏதும் கூறாமலும், ஐஷ்வர்ய லக்ஷ்மி சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டதால் இரவு 11 மணிக்கு மேல் தவியாய்த் தவித்துப்போனேன்.
;(
புராணக் கதை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி !
படங்கள் அனைத்துமே அழகு..... ஜடை பின்னல் ரொம்பவே அழகு....
ReplyDeleteதங்கள் ஆன்மீக படைப்புகள் அனைத்திலும் தங்கள் உழைப்பு தெரிகிறது..
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete11. பசுபாலக கிருஷ்ணா கோவிந்தா
ReplyDelete2259+9+1=2269
ReplyDelete