அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சூரியனின் உத்தராயன புண்ணிய காலப் பயணம்- அதாவது வடக்கு நோக்கிய நகர்தல் தை மாத முதல் நாளில் தொடங்குகிறது.

அந்த மாதத்தில் வரும் பூச நாளின் அதிகாலையில்,
கிழக்கில் சூரியனும் மேற்கில் முழு நிலவும் நடுவில் ஞானசபையில் உள்ள ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.

இந்த அபூர்வ அமைப்பால்தான் எல்லா ஆலயங்களும் தைப் பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்துகின் றனர்.
அன்றைய நாளில் சூரிய ஒளியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் எனும் மெய்காந்த அலைகள் அதிக அளவில் வெளிப்படும்.

"ஆன்ம விசாரணை என்ற தியானத்தை தினமும் செய்து வந்தால் மெய் காந்த அலைகளைப் பெறமுடியும். தியானத்தின் மூலம் இயற்கையின் உண்மை விளக்கங்களையும் ரகசியங்களையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்' என வள்ளலார் வலியுறுத்திக் கூறியுள்ள வாழ்க்கைத் தத்துவமாகும்..


"தேவையற்ற எண்ணங்களையும் ஆசை களையும் மனதிலிருந்து அகற்ற மனத்தூய்மை வேண்டும். இதை அடைய தியானத்தால் மட்டுமே இயலும். இதுதான் ஆன்ம விசாரணை ஆகும். மனம் ஒருமைப்பட சுவாசம்தான் உறு துணை. சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை என்ற சுவாசத்தால் புருவ மத்தியான சிற்சபை யில் மென்மையான ஜோதியாக உருவெடுக்கும். இதை ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியால் உணரலாம்' என்கிறார் வள்ளலார். தியானத் தால் இயற்கை ரகசியங்களான இயற்கைச் சீற்றம், பேரழிவு போன்றவற்றையும் அறியலாம்.


பிள்ளைப் பருவத்தில் முருகன் அருளால் திண்ணையிலிருந்து கீழே விழாமல் காக்கப் பட்டார்.
ஐந்து வயது குழந்தைப் பருவத்திலேயே சிதம்பர ரகசியத்தை மக்களுக்குக் காட்டினார்.
சக்திதேவியே அண்ணி வடிவில் வந்து இவருக்கு உணவு அளித்துள்ளார். தண்ணீராலேயே இவர் விளக்கெரிய வைத்துள்ளார்.
இராமலிங்கர் தனியறையில் கண்ணாடிமுன் விளக்கேற்றி வழிபட்டார். அப்போது முருகன் கண்ணாடியில் திருக்காட்சி தந்து, எல்லா கலைகளையும் ஓதாது உணர்த்தியருளினார்.

திருவொற்றியூர் பட்டினத்தடிகள் ஆலயத் தில் தொண்டாற்றிய மூதாட்டி, தான் உய்யுமாறு ஓர் அற்புதம் காட்டியருள வேண்டினதால், அவர் கரத்தில் மணலைக் கொடுத்தார் வள்ளலார். அது உடனே சிவலிங்கமாக மாறியது.
கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவரின் வாதநோயை- அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் தீர்த்து வைத்து, வாத நோய் போக்கிய வள்ளலார் என்று பெயர் பெற்றார்.
துலுக்காணத்தம்மன் கோவிலில் பக்தர்கள் வள்ளலாரைப் பாட அழைத்தனர். அங்கு பலி கொடுக்க ஆடு, கோழிகள் இருந்தன. அது கண்ட வள்ளலார், "பலி கொடுப்பது கூடாது; ஆடு, கோழிகளை விடுவித்தால்தான் பாடுவேன்' என்றார். அப்படியே செய்தனர். பின்னர்தான் இவர் பாடினார். அப்போது இவருக்கு வயது 44. அன்று பக்தர்கள் இவருக்கு வள்ளலார் என்ற பட்டம் தந்தனர்.

பல்வேறு ஆன்ம சாதனைகளையும் சமுதாயத் தொண்டையும் செய்த வள்ளலார், இறுதியாக தை மாத வெள்ளிக்கிழமை (30-1-1874) நள்ளிரவு 12.00 மணியளவில், மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு இறைஜோதியில் கலந்தார். இந்த அறை திருக்காப்பீட்டு அறை எனப்படுகிறது.
தைப்பூசத்துக்கு மறுநாள் திருக்காப்பீட்டு அறை திறக் கப்படுகிறது.
அன்று சத்யஞான சபையிலிருந்து வள்ளலார் அருளிய திருவருட்பா பல்லக்கில் எடுத்து வரப்பட்டு திருக்காப்பீட்டு அறையில் வைக்கப்படுகிறது.
நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திருக்காப்பீட்டு அறையை ஜன்னல் வழியாக பக்தர்கள் தரிசிக்கலாம்.
கடலூரிலிருந்து 34 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது வடலூர். வடலூரிலிருந்து பார்த் தால் இராமலிங்கரின் இஷ்டதெய்வமான தில்லை அம்பலவாணரின் ஆலய நான்கு கோபுரங்களும் தெரியும். இந்த புனிதத் தன்மையை முன்னிட்டுதான் ஒளி வடிவ இறைவனுக்கு சத்ய ஞான சபை உருவாக்க வடலூரைத் தேர்ந்தெடுத்தார் வள்ளலார்.
இறைவன் ஒளிமயமானவன். இதை உணர்த்த நிறுவியதுதான் சத்யஞான சபை என்ற கோவில் உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் எண் கோண வடிவில் சத்யஞான சபை அமைக்கப் பட்டுள்ளது.
இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப் புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத் தின்மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபத்தைக் காணலாம். அதற்குப் பின்னே நிலைக் கண்ணாடி உள்ளது.
கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
சத்யஞான சபையில் 1872-ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி தரிசனத் தைத் தொடங்கி வைத்தார்.







அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம்.
மாத பூசங்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்.
ஏழு வண்ணத் திரைகளுக்கும் தத்துவங்கள் உண்டு.
கருப்புத்திரை- மாயையை விலக்கும்.
நீலத்திரை- உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும்.
பச்சைத்திரை- உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும்.
சிவப்புத்திரை- உணர்வுகளைச் சீராக்கும்.
பொன்னிறத்திரை- ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும்.
ஆறு வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்.







இந்த ஏழு திரைகளை விலக்கி ஞான ஒளி யைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்



வள்ளலாரைப் பற்றி வள்ளல் போலப் பல தகவல் அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
பலி கொடுப்பது கூடாது.
ReplyDeleteஉயிர்வதை செய்தல் ஆகாது.
என்ற வள்ளலாரின் கொள்கைகளும்
போதனைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
படங்களும் விளக்கங்களும் ஏழு வண்ண திரைக்கான தத்துவங்களும் அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான படங்கள்.
ReplyDeleteஏழு திரைகளை விலக்கி ஞான ஒளியைக் காண்பதே ஜோதி தரிசனமாகும்.//
ReplyDeleteஜோதி தரிசன விளக்கம், அசத்தும் படங்கள்.
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறூ எல்லாம் மனதுக்கு நிறைவை தந்து விட்டது.
நன்றி.
முதல் படத்தில் சூர்ய உதயமும்,
ReplyDeleteகடைசிபடத்தில் காட்டப்பட்டுள்ள முழு நிலாவும் வெகு அருமை.
அலைமோதுவதாகக் காட்டியுள்ளது மனதை அலைமோதச் செய்யும்படி வெகு அற்புதமாக உள்ளது. ;))))
தங்களின் படத்தேர்வுகள் எப்போதும் அபாரமே. ;)))))
தைப்பூசத்தை ஒட்டிய அருமையான பதிவு.
ReplyDeleteVery nice writing Rajeswari.
ReplyDeleteThe Lasr picture............
Just made me something.
viji
vaLLAlaar patriya padhivukku nandri.ஏழு திரைகளின் தத்துவம் தெரிந்தேன். பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவடலூர் மஹானை பற்றிய பல அறிய தகவல்களுக்கு மிக்க நன்றி! கண்ணை விட்டு அகலாத படங்கள்!
ReplyDeleteTHE VERSATILE BLOGGER AWARD
ReplyDeleteபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
அறிவியல் தகவலோடு, வள்ளலார் பற்றியும் தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteவள்ளலார் கதை தெரிந்துகொண்டேன்.கடைசிப் படம் பிரமாண்டம் தோழி !
ReplyDeleteவள்ளலரைப்பற்றியும்,ஜோதி வழிபாடு பற்றியும் சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன், மேடம்.
ReplyDeleteபடங்கள் அற்புதமாக இருக்கு.
என்னுடைய இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருக்கின்றது. ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
ReplyDeleteஅறியாதன அறிந்தேன்
ReplyDeleteபகிர்வுக்கு உளப்பூர்வமான நன்றி
"LIEBSTER BLOG AWARD"
ReplyDeleteமேலும் ஒரு விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆன்மீகம் சார்ந்த விஞ்சான விளக்கங்களை
ReplyDeleteநான் தேடி வருகிறேன். உங்கள் வலையில் அனைத்துக்குமான
அறிவியல் தகவல்கள் ஏராளம் .
பகிர்விற்கு மிக்க நன்றி .
This year i went there and seen the Jothi.
ReplyDeleteWhat a growd, but I am able to enter inside and seen the Jothi.'
viji
அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete6. நீலமேகஷ்யாமா கோவிந்தா
ReplyDelete2217+7+1=2225
ReplyDelete