வல்லரசு நாடாக பிரகடன்ப்படுத்தும் அமெரிக்கர்களையே ஆச்சர்யத்துடன் வியந்து நோக்கச் செய்திருக்கிறார்கள் சீனர்கள்...
பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரஷ்ய கடற்படையில் பல ஆண்டுகளாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் சும்மா மியாவ் கியாவ் என்று பேசிக்கொண்டிராமல் பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்த சீனர்களால் பல கோடி ரூபாய் செலவில் காட்சி பொருளாக மாற்றாமல் உருப்படியான
ஆடம்பர ஓட்டலாக மாற்றம் செய்யப்படுவிட்டது நாமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்...
கப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்றுவிட்டது ரஷ்யா...
கப்பலின் கீழ் தளங்களில் வெடி மருந்துகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை வைத்திருந்த அறைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஆடம்பர அறைகளாக மாற்றப்பட்டன.
கப்பலில் மொத்தம் 148 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த மரங்களை இழைத்து நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக ஒவ்வொரு அறையும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் அறைகள் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப் பட்டுள்ளன.
சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட சில போர் விமானங்கள், பீரங்கிகள், கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் தியான்ஜின் நகர கடற்கரைக்கு சிறிது தூரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த கப்பல்.
கடற்கரை அழகை காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வழக்கமான ஓட்டல்களில் தங்குவதை விட கடலுக்குள் வண்ண விளக்குகளுடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த கப்பல் ஓட்டலில் தங்குவதை பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த கப்பலில் ஒரு சில நாட்கள் தங்குவதற்கு மட்டும் சில
லட்சங்கள் கட்டணமாக பெறப்படுகிறது.
நம் நாட்டில் இதுபோன்ற கப்பல்களை விலைக்கு வாங்கி, கப்பலின் ஒவ்வொரு பகுதியையும், துண்டு துண்டாக உடைப்பதற்காகவே, சில இடங்களில் துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.
உடைத்த பகுதிகளைக் கிடைக்கும் விலைக்கு விற்று விடுகின்றனர்.
இது சுற்றுசூழலை மாசுபடுத்தும் ஆபத்தான பணியாகும்..
சீனர்களின் சிந்தனைக்கும், நம் சிந்தனைக்கும் எத்தனை வித்தியாசம் !
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளானலும் இன்னும் வளரும் நாடாகவே வளர்ந்துகொண்டே....இருக்கிறோம்..
நமக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகளெல்லாம் கூட தகுதியான தலைமையைத் தேர்ந்தெடுத்து தம்மை அடிமைப்படுத்திய நாடுகளின் முன் தலைநிமிர்ந்து நடைபோடுகின்றன்..
The first aircraft-carrying cruiser Kiev,
நல்ல பதிவு. நம்மைப் பற்றி நாமே எத்தனை தடவை சொல்லிக்கொள்வது? அலுத்து விட்டது.
ReplyDeleteபடங்களும் குறிப்புச் செய்தியும் அட்டகாசம்.
ReplyDeleteஅழகழகான படங்களுடன் அற்புதமான செய்திகளையும் சுமந்து வந்துள்ளது இந்தக் கப்பல்.
ReplyDelete”உல்லாச உலகம்”
ReplyDeleteபொருத்தமான தலைப்பு.
பார்க்கும்போதே உல்லாசத்தை உணர வைப்பதாக உள்ளது.
சீனாக்காரர்கள் கடும் உழைப்பாளிகளாகவே உள்ளனர்
ReplyDeleteஅவர்களால் எதையும் மலிவு விலையில் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தவும் முடிகிறதே!
இது ஒரு மிகப்பெரிய அளவிலான சாதனை தான்.
//நடுவே சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சில போர் விமானஙகள், பீரங்கிகள், கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன//
ReplyDeleteஅதில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் பொடிப்பயல்கள் பார்க்க ஜோராகவே உள்ளனர். ;)))))
இன்று பெரும்பாலான படங்கள் நல்லாப் பளிச்சென்று உள்ளன.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நல்ல விஷயங்களைப்பாராட்டியே ஆகனும்
ReplyDeleteபடங்களும் பதிவும் super.
ReplyDeleteReally nice post.
ReplyDeleteI liked it.
viji
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
நல்லதொரு பகிர்வு. சீனர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ReplyDeleteபடங்கள் வெகு அழகு.
ReplyDeleteகடைசியல் நீங்கள் சொல்லியது சத்தியமான வார்த்தை. நாம் தவறாக தேர்ந்தெடுத்த நம் தலைமைகளுக்கு தங்களுக்குப்பின் தலைமைப்பொறுப்புகளுக்கு தங்கள் வாரிசுகளை உருவாக்குவதும் வெளிநாட்டில் சொத்து சேர்ப்பதும் மட்டுமே குறிக்கோள்களாய் கொண்டு செயல்படும்போது என்னத்த சொல்றது??
எத்தனை உழைப்பும் கோடியும் சேர்ந்த அழகு !
ReplyDeleteஉல்லாசம் உல்லாசமாகவே பார்க்கப்படும் விதம், மிகச் சிறப்பு. நல்ல படங்களுடன் அருமையான இடுகை வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
உல்லாசப் படகு உருவான விதம்னு சொல்லி சன் டீவில ஒரு நிகழ்ச்சிய வெகு சீக்கிரம் எதிர் பார்க்கலாம்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.in/
வாவ் , என்ன ஒரு ஐடியா சார் ஜி ?
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteஉல்லாசக் கப்பல் - ரஷ்யாவினால் பயன் படுத்த இயலாதென சீனர்களிடம் விற்கப்பட்ட கப்பல் ஆடம்பர தங்கும் விடுதியாக பல கோடி ரூபாய் செலவில் மாற்றிய சீனர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. எத்தனை எத்தனை படங்கள் - அத்த்னையும் அழகு - அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...
ReplyDelete28. மதுசூதன ஹரி கோவிந்தா
ReplyDelete2356+6+1=2363
ReplyDelete