நம: சிவாப்யாம் நவயௌவ நாப்யாம்
பரஸ்பராஸ்லிஷ்ட்ட வபுர்த்தாப்யாம்
நாகேந்த்ர கன்யா வ்ருஷகை தனாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
அபிஷேகப் பிரியரான சிவபெருமானை அபிஷேக ஆராதனைகளுடன் இரவு முழுவதும்விழித்திருந்து சிவபெருமானை வழிபாடு செய்யும் தினமே சிவராத்திரி.
மாசி மாதகிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் வரும் இப்புனித நாளை ஆலயங்களிலும்வீடுகளிலும் பக்தியுடன் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் சிவராத்திரியன்று பன்னிரு சிவாலயங்களுக்குச் சென்றுவழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பன்னிரு சிவாலயங்கள் தோன்றியதற்கான புராண வரலாறும் கூறப்படுகிறது.
பஞ்ச பாண்டவர்கள் வேள்வி நடத்திய போது, அதற்காக புலிமுகமும் மனித உடலும்கொண்ட புருஷா மிருகத்தின் பால் தேவைப்பட்டது.
அந்த மிருகம் சிவனை மட்டுமேவழிபடும் வழக்கமுடையது.
அதன் எல்லைக்குள் செல்பவர்களைப் பிடித்துத்துன்புறுத்தும்.
அதன் பாலைக் கொண்டு வருவதாகக் கூறி பீமன் சென்றான்.
பீமனிடம் கிருஷ்ண பகவான் பன்னிரண்டு சிவலிங்கங்களைக்கொடுத்தனுப்பினார்.
பீமன் கோவிந்த நாமத்தைக் கூறிக்கொண்டே புருஷா மிருகத்திடம்
பால் கறக்கச்சென்றான்.
சிவபூஜையில் இருந்த மிருகம் கோவிந்த நாமத்தைக் கேட்டு விழித்துபீமனைப் பிடித்துக் கொண்டது.
உடனே பீமன் தன்னிடமிருந்த லிங்கங்களில்ஒன்றைக் கீழே வைத்தான்.
உடனே புருஷா மிருகம் பீமனை விட்டுவிட்டு லிங்கத்தைவழிபடத் தொடங்கி விட்டது.
பீமன் ஓடத் தொடங்கினான். மீண்டும் மிருகம்அவனைத் துரத்திக் கொண்டு ஓடிவர, மீதமிருந்த பதினோரு லிங்கங்களையும்ஒவ்வொன்றாகக் கீழே வைத்துவிட்டு பீமன் ஓடிக் கொண்டிருந்தான்.
பன்னிருலிங்கங்களும் சங்கர நாராயணராகக் காட்சி அளித்தன.
அதைக் கண்ட மிருகம் அரியும் சிவனும் ஒன்றே என்ற உண்மையை உணர்ந்து தன் அறியாமையிலிருந்துவிடுபட்டது.
பீமனிடமிருந்த பன்னிரு லிங்கங்களும் கீழே வைக்கப்பட்டு விட்டதால், மிருகம்அவனைப் பிடித்துக் கொண்டது.
அவனுடைய உடலின் பெரும்பகுதி அதன் எல்லைக்குள்இருந்ததால் அவனைவிட மறுத்தது.
தர்மபுத்திரரிடம் இதற்கான தீர்வைக்கேட்டபோது,
"மிருகத்தின் பக்கமே நியாயம் இருக்கிறது' என்று கூறினார்.
அவரது பாரபட்சமற்ற தீர்ப்பைக் கேட்ட புருஷா மிருகம் மனம்
மகிழ்ந்து பீமனை விடுவித்து பாலையும் கொடுத்தது.
பீமன் லிங்கங்களை வைத்த பன்னிரண்டு இடங்களிலும்
சிவாலயங்கள் தோன்றின.
1. திருமலை மகாதேவர் ஆலயம்: குழித்துறையிலிருந்து தேங்காய்ப்பட்டினம்செல்லும் சாலையிலுள்ள முஞ்சிறை என்னும் தலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
மூலவரான மகாதேவர் உருத்திராட்ச வடிவில் சுயம்புவாகக் காட்சி அளிக்கிறார்.திருமாலும் இங்கு கோவில் கொண்டுள்ளார்.
2. திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்: தாமிரபரணிக் கரையில் நாற்சதுர மண்டபமாகஅமைந்துள்ளது. இங்கு நந்தி, கொடிமரம் போன்றவை இல்லை. இங்கிருந்த நந்திசுற்றுப் புறத்தில் மிகுந்த சேதம் விளைவித்ததால் அதன் ஆற்றலை மறையச்செய்துவிட்டதாக வரலாறு.
3. திற்பரப்பு மகாதேவர் ஆலயம்: இவ்வாலயம் தக்கலையிலிருந்து குலசேகரம்வழியாக கேரளா செல்லும் பாதையில் அமைந் துள்ளது. இங்கு மூலவர்உக்கிரமூர்த்தியாய் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மன், சாஸ்தா,விநாயகர், கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
4. திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்: தக்கலையிலிருந்து பேச்சிப்பாறைசெல்லும் பாதையில் இத்தலம் உள்ளது.
மூலவர் நந்தீஸ் வரர். கருவறையைச்சுற்றி திருமாலின் தசாவதாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
5. பொன்மனை மகாதேவர் ஆலயம்: தக்கலையிலிருந்து சுருளக்கோடு வழியாக குலசேகரம் செல்லும் பாதையில் உள்ளது.
மூலவர் தீம்பிலேஸ்வரர் லிங்க வடிவில்காட்சி அளிக்கிறார்.
6. பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: தக்கலையிலிருந்து சுருளக் கோடுசெல்லும் பாதையில் இந்த ஆலயம் உள்ளது.
மூலவரான கிராதமூர்த்தி லிங்கவடிவில் காட்சி அளிக்கிறார். ஒரு சந்நிதியில் நாய் வாகனத்தோடு பைரவர்காட்சி தருகிறார்.
7. கல்குளம் நீலகண்ட சுவாமி ஆலயம்: தக்கலைக்கு அருகே உள்ள கல் குளத்தில்நீலகண்ட சுவாமி ஆலயம் உள்ளது. முகப்பில் ஐந்து நிலைக் கோபுரமும் திருக்குளமும் காணப்படுகின்றன.
பிற உபதேவதைகளும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றன.
இறைவன் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.
8. மேலங்கோடு கால காலர் ஆலயம்:
வேணி மலைக்கும் பத்மநாப புரத்துக்கும்இடையே இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் காலகாலர் என்றழைக்கப் படுகிறார்.
இங்கு சிவராத்திரி விழா மட்டுமே முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
9. திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயம்: பத்மநாபபுரத்திலிருந்து ஐந்துகிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் உள்ளது. லிங்க வடிவில் காட்சி தரும் மூலவருக்கு சடையப்பர் என்ற பெயரும் உண்டு.
10. திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம்: தக்கலையிலிருந்து தென் மேற்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் இயற்கையாகவே அமைந்துள்ள பாறைமீது செதுக்கப்பட்டுள் ளதாகத் தோன்றுகிறது. இவர் பரிதிபாணி என்ற பெயருடன் திகழ்கிறார்.
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம்: தக்கலை- கருங்கல் நெடுஞ்சாலையிலுள்ள பள்ளியாடி என்ற ஊருக் கருகே இக்கோவில் அமைந்துள்ளது. இரண்யாட்சனை திருமால் பன்றி உருவெடுத்து பூமியைப் பிளந்து சென்று அழித்தார்.
வெற்றி பெற்ற களிப்பில் பன்றி வெறியாட்டம் போட்டபோது, சிவபெருமான் அதன்ஒரு கொம்பை முறித்து சுயநிலைக்குக் கொண்டு வந்தார். அத்தலமே திருப்பன்றிக்கோடு என அழைக்கப் படுகிறது.
12. திருநட்டாலம் ஆலயம்: நாகர்கோவிலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில்ஒரு குளத்தின் இருகரைகளிலும் இரு கோவில்கள் உள்ளன. முதல் ஆலயத்தில்அர்த்தநாரீஸ் வரரும் இரண்டாவது ஆலயத்தில் சங்கரநாராயணரும் காட்சிதருகிறார்கள்.
பக்தர்கள் சிவராத்திரியன்று இரவில் 70 கி.மீ. தூரம் ஓடி வந்து பன்னிரண்டுஆலயங் களிலும் சிவலிங்க தரிசனம் செய்கிறார்கள்.
இது சிவாலய ஓட்டம்எனப்படுகிறது.
ஓட்டத்தின் போது, "கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தைஎழுப்புவர்.
ஒரு வாரத்திற்கு முன்பே விரதம் ஆரம்பித்து சிவாலய ஓட்டம்முடிந்ததும் சுசீந்திரத்திற்குச் சென்று மும்மூர்த்திகளைத் தரிசித்துவிரதத்தை முடித்துக் கொள்கின்றனர்.
இரவு முழுவதும் இறைவனுக்கு நீர், பால், நெய் ஆகியவற்றால் இடைவிடாமல் அபிஷேகம் செய்வதற்கு தாராபூஜை என்ற சிறப்பு முறை பின்பற்றப்படுகிறது.
சிவராத்திரியன்று செய்யப்படும் கிருததாரை என்ற சடங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
படித்ததும்
ReplyDelete“கோவிந்தா! கோபாலா!!”
என்று சொல்லியபடி ஓட்டமெடுக்கச்செய்யும்
நல்ல பதிவு.
சிறப்பான விளக்கங்கள்.. சிவ கோவிந்த தரிசனம் அற்புதம்..
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
சிவராத்திரி,மற்றும் பன்னிரு சிவாலய்ங்கள் பற்றிய அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேடம்.
ReplyDeleteபடங்கள் அழகாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.
இது வரை நான் அறியாத அரிய தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல்கள்... அழகான படங்கள்...
ReplyDeleteபல பல புதிய கேள்விப் படாத தகவல்கள் தந்துள்ளீர்கள்!! கோவிந்தனின் படம் நெஞ்சத்தை விட்டு அகலவே இல்லை. சிவனும் பிடிவாதமாய் அகத்துள் அமர்ந்துவிட்டார்.
ReplyDeleteNice explanations and asusual colourful post...;)
ReplyDeleteஇதுவரை கேள்விப்படாத அரிய தகவல்
ReplyDeleteபடங்களுடன் பகிர்வும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள் அம்மா.
அருமையான பதிவு ...சில தடவை சிவாலய ஓட்டமும் கண்டு ரசித்திருக்கின்றேன்...
ReplyDeleteநல்ல பகிர்வு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteWhile i was in service, one of my college is from Kanyakumari District,
ReplyDeleteEvery year she very emotionally express of this oottam.
But i never visited anyy one of these temples.
Reading your post making me think of those days. Thanks Rajeswari.
viji
nice stills and good post thank you
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDelete18. கஷ்ட நிவாரண கோவிந்தா
ReplyDelete2293+2+1=2296
ReplyDelete