
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
-கோதாஸ்துதி
ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம்.
சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.
(ஆடிப்பூர தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்)
http://www.youtube.com/watch?v=V84R23YRcmo


திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!
வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!
வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஸ்ரீஆண்டாளின் அவதார உற்ஸவமான ஆடிப்பூரப் பெருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம், வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க் கிழமையன்று,
பூர நட்சத்திரத்திருநளில் துலா லக்னத்தில் துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாள். தனது தந்தையாராகிய பெரியாழ்வாரையே குருவாகக்கொண்டு கண்ணபிரானிடம் பக்தி செலுத்தி, பரமனாகிய ஸ்ரீரங்கநாதனையே மணவாளனாக அடைந்தாள்.

பூமிப்பிராட்டி ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக பிராட்டி ஆண்டாளானாப் போல உபநிஸத்து தமிழானபடி' ஆண்டாள் திருவாக்கினால் அருளப்பட்டது ..!

பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு
ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள்.
தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.

அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள்.
தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரம். அற்புதத் திருநாளில் நடக்கும் திருவிழாவில்
ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.


கையிலே அழகிய கிளி கொஞ்ச அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலையை
புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது திருப்பதிப் பெருமாளும்,
சித்ரா பௌர்ணமியன்று மதுரையில் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஸ்ரீகள்ளழகரும்,
தினமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீவடபத்ரசயனரும் அணிந்து அழகு கொள்கிறார்கள் என்பது ஆண்டாளின் பெருமை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்.தேக்கு, கொங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டு இன்று வரையும் உறுதியாக இருக்கிறது.
ராமாயண, மகாபாரத வரலாறுகளை குறிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இடண்டாவது மிகப்பெரிய தேராகத் திகழ்கிறது ..!

தற்போது இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால்
3 மணி நேரத்தில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆண்டாள் அவதார நாளான ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் நடைபெறும். ஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பவனிவரும் காட்சியைத் தரிசனம் செய்வது விஷேசம் ..!



Superb
ReplyDeleteMadam.
The first pathigam if it is possible kindly send the same with the appropriate sound like .1.2.3.4 etc
subbu thatha
back to chennai
http://www.youtube.com/watch?v=V84R23YRcmo
Deletehttp://anudinam.org/2011/12/16/sri-goda-stuthi-1/
Deletehttp://kirtimukha.com/mkkmkk/Thiruppavy/Text/vaazhi.htm
GOOD MORNING ! HAVE A VERY NICE DAY !!
ReplyDelete1]
”திரு ஆடிப்பூரத்து ஜகத்துத்துதித்தாள் வாழியே !”
பழமை வாய்ந்த சரக்குகளே ஆனாலும், அவற்றை புதுமையான அசத்தலான தலைப்புகள் கொடுத்து, புத்தம் புதிய பதிவுகளாகத் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.
>>>>>
2]
ReplyDelete//அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். //
”சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ”யை, இன்று பதிவாகச் சூடிக்கொடுத்துள்ள பதிவருக்கு என் அன்பான வந்தனங்கள்.
>>>>>
3]
ReplyDeleteஆண்டாள் படங்கள் + கிளிப்படம் + செய்திகள் அனைத்தும் கிளி கொஞ்சுவதாக உள்ளன.
மேலிருந்து கீழ் இரண்டாவது படத்தில் பின்னலங்காரம் [பின்னல் அலங்காரம்] சும்மாப் பின்னிப்பின்னி எடுப்பதாக உள்ளது.
அது கண்ணைப்பறிப்பதாக சூப்பரோ சூப்பராக அமைந்துள்ளது. ;)))))
>>>>>>
4]
ReplyDelete//ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்..... தேக்கு, கொங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டு இன்று வரையும் உறுதியாக இருக்கிறது.//
தேக்கு, கொங்கு ......
ஆஹா, கொங்கு நாட்டுக் கோவைத்தங்கத்தின் வாயிலாக இதைக்கேட்க, சுவையான நீர் நிரம்பிய குட்டியூண்டு இளம் நொங்கு சாப்பிட்டது போல எனக்கு ஒரே குஷியாக உள்ளதே ! ;)
//ராமாயண, மகாபாரத வரலாறுகளை குறிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இடண்டாவது மிகப்பெரிய தேராகத் திகழ்கிறது ..!
தற்போது இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் 3 மணி நேரத்தில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.//
அருமையான அழகான அரிய தகவல்கள்.
காட்டியுள்ள தேர்ப்படம் ஜோர் படம் !
>>>>>
5]
ReplyDeleteஆண்டாளின் கொண்டை முதல் பொற்பாதங்கள் வரை அனைத்துமே அழகோ அழகு போல, தங்களின் இந்தப்பதிவினில் ஒய்யாரமாக முதலில் காட்டியுள்ள பச்சைப்புடவை + பச்சைக்கிளியுடன் கூடிய ராயச அம்மன் முதல், அடியில் இறுதியாகக் காட்டியுள்ள ‘கோ பு’ ர ம் வரை, அனைத்துமே அழகோ அழகு தான்.
எதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல !!!!!!
மொத்தத்தில் போதை [கோபு ’ரம்’] ஏற்படுத்தும் அசத்தலான பதிவு.
>>>>>
6]
ReplyDeleteமுதல் படத்தில் அம்மனுக்கு மிகப்பெரிய திருமாங்கல்யம் + மஹாமுரடான காசு மாலை ........ அடடா எவ்ளோ ஜோராக இருக்குது.
அனைத்துமே அழகோ அழகு தான் - ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அசத்தலான பதிவாகக் கொடுத்து கலக்கியுள்ள உங்களுக்கு அதை விட மிகப்பெரிய ஆளுயர காசு மாலை அணிவித்தாலும் தகும் தான். ;)))))
>>>>>
7]
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
அன்பான பாராட்டுக்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
வேதங்கள் நான்கு ....
முக்கிய திசைகள் நான்கு .....
ராம லக்ஷ்மண பரத சத்ருகணனாக பிள்ளைகளும் நான்கு ;)
இன்னும் நான்கே நான்கு நாட்களே உள்ளன.
மனதுக்கு ஒரே மகிழ்ச்சிப்பரவஸமாக உள்ளது.
நீடூழி வாழ்க !
ooooo 996 ooooo
ஆடிப் பூரத்தன்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடி பதிவு மனதை நிறைக்கின்றது. எல்லோர் இல்லங்களிலும் வளைகாப்பு வைபவம் நிகழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஆடிப்பூரம் அன்று உங்கள் பதிவைப் படித்ததும் நாள் பூர்த்தி பெறுகிறது
ReplyDeleteஆடிப்பூரத்து அன்று சூடிக்கொடுத்தசுடர்க்கொடியின் தரிசனம். தகவல்கள்,படங்கள்அருமை. ஆண்டாளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeletepadangalum pathivum kollai azhagu !
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர்க் கொடியை
ReplyDeleteஆடிப்பூர ஆனந்த நாளிலே
நாடிவரும் நம்துயர் அகலவென
தேடித்தந்த தேவிநீ வாழ்கவே!
ஆடிப்பூர நன்நாளில் நாயகியவளை போற்றி வணங்கும் பகிர்வு அருமை.
ReplyDeleteமனம் குளிர வணங்கி நிற்கின்றோம். நன்றி.
படங்களும் அதற்கான கருத்தும் அருமை...
ReplyDeleteAha..
ReplyDeleteAdipooramday..
Andal darishanam..
Villiputhur ther....
Very nice very very nice dear.
Thanks for the post.
viji
அருமை!.. அற்புதமான படங்கள்.. ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்ததைப் போல உணர்வு!...
ReplyDeleteபடங்களும் தகவல்களும் மிக நன்று.
ReplyDeleteஒவ்வொரு படமும் அற்புதம். ஆனந்தம் !
ReplyDelete>>>>>
எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பு சலிப்பு இல்லாததே ஆண்டாளின் பெருமைக்குச் சான்று.
ReplyDeleteதொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன் 7/20 இருக்கக் கண்டேன். அதிலேயே நிறைய கருத்துக்கள் கூறிவிட்டதால் இங்கு புதிதாக ஏதும் சொல்லத்தோன்றவில்லை.
அச்சு வெல்லம்போல 996/1000 அல்லவா அது !.
>>>>>
காணொளி கண்டேன்.
ReplyDeleteஅதில் பல கனாக்களும் கண்டேன்.
ஆண்டாளின் கனாக்கள் அவளின் ஆத்மார்த்த பக்தியினால் பலித்துள்ளன.
ஆனால் என் கனாக்கள் .......... !
தொடர் பேருந்தில் நான் கண்டு மகிழ்ந்த ‘அமுதா’ போலவே தான் ஆகின்றது.
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
நம் பிழைப்பு என்றும் நாய்ப்பிழைப்பே தான் .... சந்தேகமே இல்லை.
>>>>>
காணொளியில் ......
ReplyDeleteகோலாட்டம்
தேரோட்டம்
பாலாபிஷேகம்
குதிரை வாஹன வைய்யாளி
தாயாரின் மடியிலே தலை சாய்த்து
ஆனந்தமாகப் பள்ளிக்கொண்டுள்ள
அனந்த சயனப்பெருமாள் ......
என அனைத்துமே அருமையோ அருமை.
>>>>>
’கைத்தளம் பற்றுவதாகக்
ReplyDeleteகனாக் கண்டேன் தோழி’ ;)))))
எல்லாமே சூப்பரோ சூப்பர் !
oo oo oo