Saturday, August 10, 2013

நலம் நல்கும் நாக சதுர்த்தி











ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் சர்ப்ப வழிபாடு அமோகமாக நடைபெறும்.

ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது.

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.

மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து சர்ப்பங்கள் இறந்தன.

அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார்.

அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக சதுர்த்தி தினம்.

 வடநாட்டில் கொண்டாடப்படுகிற ராக்கி அல்லது ரட்சாபந்தனுக்கு நிகரானது நாக சதுர்த்தி விரதம்.




 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்க்குடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். இங்கு அனுமார் புளியமரவடிவில் காட்சி தருகிறார். 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பரமகுடி நகரின் மேற்கு கடைசியில் பட்டுப்போன புளிய மரமும், விநாயகர் சிலையும் இருந்தன.

குழந்தைபேறு இல்லாமல் வேதனைப்பட்ட பக்தரிடம் வடஇந்தியாவில் இருந்து வந்த.  ஒரு துறவி அஞ்சநேயர் சிலை ஒன்றை கொண்டு வந்தார். 
புளிய மரத்தில் சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்கிறேன். இந்த ஆஞ்சநேயருக்கு இங்கே ஒரு கோவில் கட்டு உனக்கு புத்ரதோஷம் விலகி புத்ரபாக்கியம் கூடும் என்றார்.

 பக்தர் அங்கு  கோவில் கட்டியதும் பட்டுப்போயிருந்த புளியமரம் தழைத்தது.

இங்குள்ள ஆஞ்சநேயர் உக்கிரம் அதிகமாக இருந்ததால்  திருப்பதி ஜீயர் ஆலோனைப்படி ராமர், சீதை, லட்சுமணன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்பின் அனுமனின் ஆவேசம்  தணிந்தது.

இங்கு ராமர் சன்னதியின் தென்புறம் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கு 12 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.

12  புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்தால் திருமணதடை விலகும்.

24 சனிக்கிழமைகளில் 24 பிரதட்சனம் செய்தால் வேலை வாய்ப்பு கிட்டும்,

 12 வியாழக்கிழமைகளில் ஒவ்வொரு முறையும் 108 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கூடிவரும். கடன் தொல்லை நீங்கும் வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

 ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஐந்து தலை நாகர் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் விக்ரகம் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புத்திரப்பேறு அடைவதாக நம்பிக்கை. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தியாக கொண்டாடும்.அன்று இந்த சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு.

நாக சதுர்த்தி அன்று நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புதுவஸ்திரம் சாற்றி பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.
வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்.


21 comments:

  1. நலம் நல்கும் நாக சதுர்த்தி ......

    நல்லதொரு தலைப்பு.


    >>>>>

    ReplyDelete
  2. மஹாவிஷ்ணுவுக்கும். முருகனுக்கும் பாம்புடன் உள்ள பரிச்சயங்கள் [FRIENDSHIP], யாகத்தில் அக்னியில் விழுந்த பாம்புகளின் சாப விமோசனங்கள் முதலிய கதைகள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  3. வடநாட்டில் இதனையும் கருட பஞ்சமியையும் மிகச்சிறப்பாகவே கொண்டாடுகிறார்கள்.

    இந்த நாட்களில் U.P., M.P., போன்ற மாநிலங்களில் அரசு விடுமுறையே அளிக்கப்படுகிறது.

    >>>>>

    ReplyDelete
  4. பரமக்குடி புளியமர வடிவு ஆஞ்சநேயர், பிறகு சிலை பிரதிஷ்டை, அவருக்கு ஏற்பட்ட உக்கிரஹம், பிறகு அது தணிக்கப்பட்டது, என ஏதேதோ தகவல்கள் சொல்லி இந்தப்பதிவினை ஒருவழியாக முடித்துள்ளீர்கள்.

    ஏதோ அவசரத்தில் அள்ளித் தெளித்து முடித்தது போல எனக்குத் தோன்றுகிறது! எனினும் ஓ. கே.,

    எதற்கும் டென்ஷன் ஆகாமல் சிலரிடம் மனம் விட்டுப்பேசுங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிக்ள்.

    முத்தமிழ் போல இன்னும் மூன்றே மூன்று பதிவுகளே பாக்கியுள்ளன.

    சந்தோஷம்.

    ooooo 997 ooooo

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை.....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்ல தகவல்களுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  7. நல்ல தகவல்களுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  8. நாக சதுர்த்தி சிறப்பு பற்றி,ராஜு தோஷ பரிகாரம் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  9. நாகர் நலம் நல்கி விட்டது என்றே சொல்லலாம்
    தங்கள் பதிவைப் படித்தவுடன் .

    ReplyDelete
  10. நல்லதொரு தலைப்போடு, அழகான படங்களுடன் அருமையான ஒரு பதிவு.

    ReplyDelete
  11. நாக சதுர்த்தி தகவல்களோடு நாக தோஷம் நீக்கும் அனுமாரை பற்றியும் சிறப்பாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete

  12. நம்பிக்கைகள் நம்பிக்கைகள் நம்பிக்கைகள் ....! ! ! படங்கள் அருமை . பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. நம்பி வணங்குபவர்களுக்கு நாகங்கள் துணை செய்கின்றன. நல்ல தகவல்கள். அருமை.

    ReplyDelete
  14. நாகசதுர்த்தி நலம் நல்கும் தான்.
    அருமையான படங்கள், செய்திகள் .
    நன்றி.

    ReplyDelete
  15. எனக்கு ஒரு சந்தேகம், எப்படி உங்களால் தொடர்ந்து படங்களுடனும், பல்வேறு தலங்களைப் பற்றிய , பலரும் அறிந்திராத தகவல்களுடனும் அயராது, அலுக்காது பதிவிட்டுக் கொண்டே இருக்க முடிகின்றது.
    வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete
  16. நாகசதுர்த்தி பற்றி விளக்கம் படங்களுடன் அருமை...
    வாழ்த்துக்கள்... இவ்வளவு படங்கள் எடுத்து பொறுமையாய் பகிர்வு போடுவது என்பது மிகவும் சிரத்தையுடன் செய்யும் காரியம்... அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. info about paramakudi anjaneyar temple is new one thanks

    ReplyDelete
  18. Very nice informations.
    Nice pictures.
    Thanks dear.
    viji

    ReplyDelete
  19. பாம்பு என்றால் நிறையப் பயம்.
    படங்களும் விவரங்களும் தகவல்களாக
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete