Sunday, August 25, 2013

சிரிக்கும் சிங்காரப் பறவைகள்..!









சிந்திக்கதெரிந்த மனிதனுகே செந்தமானது சிரிப்பு 
என இனி சொந்தம் கொண்டாடமுடியாது போலிருக்கிறது ..!

"சிரிக்கும் ஆற்றலை இயற்கை மனிதர்களுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறது என்று யார் சொன்னது, எங்களுக்கும்தான் அளித்திருக்கிறது" என்று சிரிப்பாய் சிரிக்கின்றன நியுசிலாந்து நாட்டில் காணப்படும் ஒரு வகை ஆந்தைகள். 

இவற்றின் பெயரே சிரிக்கும் ஆந்தைகள்தான். 

சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு, பைத்தியம் பிடித்தவன் நிறுத்தாமல் வெறித்தனமாக சிரிப்பது போல இவற்றின் சிரிப்பு இருக்கும் என்கிறார்கள் 
சிரிக்கும் ஆந்தைகள் கூட்டமாக கூடிச் சிரிப்பதைக் கேட்டு அலறி அடித்து ஓடியவர்கள் ...

 சுமார் 15 இன்ச் உயரம் இருக்கும் இந்த ஆந்தை, சிவப்பு நிற உடலோடும் வெள்ளை நிற முகத்தோடும் காட்சியளிப்பதனால் இதனை வெள்ளை முக ஆந்தை என்றும் அழைப்பார்கள். 

இதில் வடக்குத் தீவு ஆந்தைகள், தெற்குத் தீவு ஆந்தைகள் என இருவகைகள் இருக்கின்றன. 

தெற்குத் தீவு ஆந்தைகள் சற்று பெரியதாக இருக்கும்.  இரண்டு வகைகளிலும் ஆண் ஆந்தைகள் பெண்களை விட சிறியதாக இருப்பது விந்தை ..! 

மழை குறைவான, மலைப்பாங்கான இடங்களில் தங்கியிருக்கும். பல்லி, பூச்சிகள், சிறு பறவைகள் போன்றவைதான் இதன் டயட். 

பாறை இடுக்குகள், பெரிய பாறைகளுக்கு அடியில் போன்ற பாதுகாப்பான இடங்களில் காய்ந்த புற்களைப் பரப்பி அதன் மீது சமயத்தில் இரண்டு முட்டைகள்தான் இடும்.

 இந்த ஆந்தையார் பறக்கும்போது தான் சிரித்து சிரித்து பயமுறுத்துகிறார்..
பெரும்பாலும் இருள் சூழ்ந்த நேரத்தில் அல்லது மழை வருவதற்கு முன் அல்லது தூறல் போடும் இரவுகளில் ஆந்தையாரின் கச்சேரியை நாம் ரசிக்கலாம். 

இது தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதற்கு கூவுவதற்கு போலவும், ஒரு குட்டி நாய் குரைப்பது போலவும், வேதனை கலந்த வீறிடல் போலவும் இருப்பதாக கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

சிரிக்கும் கூக்கபுர்ரா (Laughing Kookaburra; Dacelo novaeguineae) மரங்கொத்தி குடும்பத்தின் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா சிரிப்பது போன்ற அழைப்பொலிக்கு (call) பெயர்பெற்றது.

ஆஸ்திரேலியாவின் மீன்கொத்திப் பறவையினம் Kookaburra கூக்கபுர்ரா மனிதனைப்போல சிரிக்கும்:-) ஹாஹா..... 
அங்கே சென்றிருந்த போது கேட்டு ரசித்தேன் ..!












20 comments:

  1. சிரிப்பு ..
    எவ்வளவு அற்புதமான விஷயம்..
    மானிடற்கு மட்டுமல்ல எங்களுக்கும்
    இக்குணம் உண்டென விளங்கும்
    பறவைகள்..
    அதிசயமாக பார்த்தேன் சகோதரி..
    பகிர்ந்த அழகான செய்திக்கும் படங்களுக்கும்
    நன்றிகள் பல...

    ReplyDelete
  2. பறவைகளின் சிரிப்பு இதுவரை அறியாத செய்தி. நன்றி

    ReplyDelete
  3. சிரிக்க வைத்த சிங்காரப்பதிவு.

    சிரித்தேன், ரஸித்தேன், மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  4. சிரிக்கும் பறவைகளைப் பார்த்தால் முகமும் சிரிப்பது போலவே இருக்கிறது.பறவைகள் சிரிக்கும் வீடியோ போடவில்லையே!போடுவீர்கள் என்று எதிர்பார்ப்புடன் படித்துக் கொண்டு வந்தேன்!
    நன்றி சிரிக்கும் பறவைகள் பற்றித் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. சிட்டுகுருவி சிட்டு குருவி சேதி தெரியுமா ?
    சிரிக்கும் பறவை இருப்பது உனக்குத் தெரியுமா ?
    அதிசய தகவல் .

    ReplyDelete
  6. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. செல்லக் கிளிகள் சொல்லும் மொழிகளும் அற்புதமாய் இருக்கும்

    ReplyDelete
  8. சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  9. பார்க்கும்போதே மனமும் படபடவென இறக்கை
    அடித்து பறக்கின்றது கற்பனை வானில்...

    மிக அருமை!

    நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  10. சிங்காரச் சிட்டுகளை
    சிந்தையிலே எண்ணும்போது
    மங்காத மகிழ்வுவந்து
    மனத்தை நிறைக்கிறதே!....

    மிகமிக அருமை! ரசித்தேன்!

    நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  11. சிரிக்கும் பறவைகள் அற்புத வண்ணங்களில் கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றன.

    ReplyDelete
  12. படங்களும் தகவல்களும், ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  13. சிங்காரப்பறவைகள்... சிரிக்கிறது.... படங்கள் எல்லாம் அனிமேஷன் அழகுப்பா...

    அதிலும் ஆந்தைப்பற்றி சொன்னது படித்தவுடன் எனக்கு வியப்பு...

    ஆந்தை சிரிக்கும் படம் செம்ம க்யூட்... அழகா கண்ணை சுருக்கிண்டு சிரிக்கிறதேப்பா...

    அழகு அழகு....

    அருமையான க்யூட்டான பகிர்வுப்பா.. அன்பு நன்றிகள் இராஜிம்மா...

    ReplyDelete
    Replies
    1. மஞ்சூஊஊஊஊ ..... ரொம்ப சந்தோஷம் மஞ்சு. நான் சொல்லி எழுத நினைத்தவற்றில் ஒருசிலவற்றை நீங்க எழுதினது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது.

      //ஆந்தை சிரிக்கும் படம் செம்ம க்யூட் .... அழகா கண்ணைச் சுருக்கிண்டு சிரிக்கிறதேப்பா.. அழகு அழகு .....//

      இதைப்படித்ததும் நானும் [அந்த ஆந்தைபோலவே] சிரிச்சுட்டேன்..ப்பா. ;)))))

      பிரியமுள்ள கோபு



      Delete

  14. சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்றுதான் தெரியும். .ஒரு வேளை சிரிப்பதுபோல் ஒலிக்கும் என்று அர்த்தம் கொள்ள வேண்டுமோ. .

    ReplyDelete
  15. மனம் விட்டு சிரிக்க இயலாத சூழ்நிலைக்கு மனிதன் நெருக்கித் தள்ளப்படும் வேளையில் - சின்னஞ்சிறு பறவைகள் சிரித்து மகிழ்கின்றன!.. வாழ்க... வளங்கொண்டு வளர்க!..

    ReplyDelete
  16. சிரிக்கும் பறவைகள் புதிய தகவல்கள்...
    படங்கள் அருமை...

    ReplyDelete
  17. ஆம் சிரிக்கும் பறவை! இத் தகவல் புதிது.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. கூகுபரா சிடிங்க் ஆன் த கோல்டன் ட்ரீ என்று சிறுவயதில் நர்சரி ரைம் பாடியதோடு சரி.. படம் இப்பத்தான் பார்க்கிறேன்.
    ஆந்தை சிரிப்பதைப் படித்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறதெ?!

    ReplyDelete
  19. சிரிக்கும் பறவைகள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி மேடம். படங்கள் அனைத்தும் அசத்துகின்றன.

    ReplyDelete