

காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே
பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே
ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே
ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே
(ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்)

கருணை ததும்பும் கண்களைஉடையவளே,
ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே,
தாமரை மலரில் வீற்றிருப்பவளே,
வாக்கினிலே இனிமையும் அழகும் கொண்டவளே,
எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத் தக்கவளே,
சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம்.

நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட ஸௌந்தர்யவல்லி அஷ்டக துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி, உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.

ஸர்வமங்கள ஸம்பூர்ணா ஸர்வைஸ்வர்ய சமன்விதா
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ: த்வத்கலாமயி திஷ்டtது
அக்ஞான திமிரம் ஹந்தும் ஸுத்தக்ஞான ப்ரகாசிகா
ஸர்வைஸ்வர்யப்ரதா மேஸ்து த்வத்கலாமயி ஸம்ஸ்திதா
- லக்ஷ்மி ஹ்ருதயம்

அனைத்து மங்களங்களும் நிரம்பியவளும்
அனைத்து ஐஸ்வர்யங்களுடன் கூடியவளுமான ஆதி மகாலட்சுமி தாயே, நமஸ்காரம்.
தங்கள் கலை எப்போதும் என்னிடம் நிரம்பியிருக்க அருள்வீர்களாக.
எனது அக்ஞானமாகிய இருட்டைப் போக்குவதற்கு, தூய ஞான ஒளியை உடையதாகவும் அனைத்து செல்வங்களையும் அளிக்கக் கூடியதுமான தங்களது அந்த கலை எப்போதும் என்னிடம் நிலைத்திருக்க அருள்வாய், அம்மா.
-லக்ஷ்மி ஹ்ருதயம்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் திருமகள் திருவருள் கிட்டும். ஐஸ்வர்யங்கள் பெருகும்.)

எட்டு லட்சுமிகளுக்கும் எட்டு அங்கங்களுடன், ஒரே விமானத்தின் கீழ் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் எனும் அடுக்குமுறையில் அமைக்கப்பட்ட திருக்கோயில் அஷ்டலட்சுமி கோயிலாகும்.

"அஷ்டாங்க விமானம்' என்பது எல்லா இடங்களிலும் அமைக்கப்படக்கூடியது அல்ல.
ஆகம முறைப்படி திருமால் திருக்கோயில்கள் அமையும் பல வகைகளில்
ஒரு வகையான அஷ்டாங்க விமானம் எப்போதும் பசுக்கூட்டங்கள் செழிப்போடு மேய்ந்து கொண்டிருக்கக்கூடிய வளமான நிலத்திலோ,
அல்லது ""ஓம்'' என்னும் பிரணவ ஒலி எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய இடத்திலோதான் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிப்படி, வங்காள விரிகுடா கரையோரம், எப்போதும் பிரணவத்தை ஒலித்துக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தினாலும், எட்டு லட்சுமிகளையும் தரிசனம் செய்து வரும் பாதை ஓம்கார வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாலும், ""ஸ்ரீ ஸ்தலம்'' , ""ஓம்கார க்ஷேத்திரம்'' எனவும் அழைக்கப்படுகிறது.

நான்கு திசைகளும் நான்கு நான்காகப் பிரியும்போது அறுபத்து நான்கு கோணங்கள் உருவாகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள அறுபத்து நான்கு கோணங்களால் அமைக்கப்பட்ட ஆதார பீடத்தில் அஷ்டாங்க விமானம் என்னும் மகாமேரு வடிவ விமானம் அமைத்துக் கட்டப்பட்டு, சென்னையைச் செழிப்பாக்கும் திருக்கோயில் அஷ்டலட்சுமி திருக்கோயில்!
தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், வட இந்தியா மற்றும் அயல்நாடுகளிலிருந்தும் அனைவரும் வந்து தரிசனம் செய்து செல்லும் வகையில் அமைந்துள்ள திருக்கோயில் எட்டு லட்சுமிகளின் அருளாட்சித் தலம்
எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும்.
அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி!

உணவு வளம், உற்பத்திப் பெருக்கம் போன்றவற்றைக் கொடுத்தல், வயிறு தொடர்பான குறைகளை நீக்குதல் ஆகியவற்றுக்காக யானை வாகனத்தில் காட்சி தருபவள் தான்ய லட்சுமி!


எந்தச் செயலுக்கும் மனத்துணிவு இல்லையெனில், செயலை நடைமுறைப் படுத்துவது கடினமாகும். அந்த எண்ணத்திற்கு வலுவூட்டுபவள் சிம்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் தைரிய லட்சுமி!

கன்னிகை இருவர் உதவிபுரிய, கன்னிகை பீடத்தில் நன்னிலையில் அமர்ந்து அருள்பவள் சந்தான லட்சுமி! இவள், "குழந்தைப் பேறு' நல்கும் குணவதி!

வெற்றியை நல்கும் வீரத் திருமகளாக அன்ன வாகனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்பவள் விஜயலட்சுமி.


கல்வியில் சிறக்க குழந்தைகளுக்கு அருளும் வகையில் சரஸ்வதி தேவியாக காட்சி தந்தவள், குதிரை வாகனத்தில் அமர்ந்து அருளும் வித்தியாலட்சுமியாகவும், சகல சௌபாக்கியங்களையும் குறைவின்றி நல்கும் வகையில், சௌபாக்கிய லட்சுமி என்னும் கஜலட்சுமியாகவும் காட்சி தருகிறாள்.




இடது கையில் கமண்டலம் தாங்கி, வலது கையில் வெற்றிலை வைத்து, மனித வாழ்விற்குத் தேவையான செல்வத்தை, வழிபடுவோருக்கு அளிப்பவளே தனலட்சுமி!

இந்த எட்டு வகை லட்சுமிகளும் ஒருங்கிணைந்து, மகாலட்சுமி எனும் வடிவில் திருமாலுடன் திருமணக் கோலத்தில் காட்சி நல்கும் திருமண பிரார்த்தனைத் திருத்தலம் அஷ்டலட்சுமி திருக்கோயிலாகும்.

திருமகள் துணைவனுடன் காட்சி நல்கும் திருக்கோயிலில், திருமகளோடு தொடர்புடைய தசாவதாரங்கள், கமல விநாயகர், குருவாயூரப்பன், சுதர்சனர், தன்வந்திரி, அனுக்கிரக அனுமன் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.


வணக்கம்
ReplyDeleteஅம்மா
திருமகள் திருவருள் என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட பதிவு மிக அருமை படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன்.
ReplyDeleteலக்ஷ்மி கடாக்ஷம் படங்களின் வழி கண் நிறைய.
ReplyDeleteசிறப்பான தகவல்கள் + படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteSoundarya Ashtagam
ReplyDeleteto recite this resuscitates everything that adds upto one's image and personality.
You are Blessed indeed.
subbu thatha.
www.vazhvuneri.blogspot.com
அஷ்ட லட்சுகளையும் பற்றி அறியத் தந்தீர்கள்.. அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு...
வாழ்த்துக்கள் அம்மா.
மங்களகரமான பதிவு.
ReplyDeleteகண் குளிர தரிசனம்.
உங்கள் பதிவின் வழியே எனது கணினிக்கு திருமகள் தேடி வந்தாள்! நன்றி
ReplyDelete”திருமகள் திருவருள்” வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற நல்ல பதிவு.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகு.
செளந்தர்யவல்லி தாயாருக்கு நமஸ்காரங்கள்.
அஷ்டாங்க விமானம் அமைப்பதற்கான சூழ்நிலைகளை ந்ன்கு எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
ஸ்ரீ ஸ்தலம், ஓங்கார க்ஷேத்ரம் முதலியனவும் நன்கு கூறியுள்ளீர்கள்.
பல்வேறு லக்ஷ்மிகளைப்பற்றி வழக்கம்போல பாங்காகச் சொல்லியுள்ளீர்கள்.
அஷ்டலக்ஷ்மிகளைப்பற்றி படிக்க வந்த எனக்கு இன்று எட்டாம் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியே.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
தனம் தரும் கல்வி தரும் என்ற வரிகளை நினைவு படுத்திய பகிர்வுங்க. படங்களும் விளக்கமும் வழக்க்ம் போல வெகு சிறப்புங்க.
ReplyDeleteஇடர் நீக்கிடும் அருட்கடாட்சமாம் அஷ்ட லக்ஷ்மியை
ReplyDeleteஇதயத்தில் ஏற்றி இறைஞ்சிடுவோம்!
பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
அருள் தரும் அன்னை மஹாலக்ஷ்மியின் எட்டு தத்துவங்களையும் விளக்கிய அழகே.. அழகு!..
ReplyDeleteஅருள் தரும் அன்னை மஹாலக்ஷ்மியின் எட்டு தத்துவங்களையும் விளக்கிய அழகே.. அழகு!..
ReplyDeleteதங்களின் எல்லா பதிவுகளும் அருமை.
ReplyDeleteமுக்கியமாக மந்திரங்கள்...
கிடைப்பதர்க்கரியவை ...
ஆனால் என்ன வருத்தம் என்றால் எதையுமே காபி எடுக்க முடியவில்லை.
காபி எடுக்க முடிந்தால் மட்டுமே அதன் முழு பயன்
எல்லாருக்கும் சென்றடையும் ..தெய்வத்தை தொழும் போது
சொல்லி பிரார்த்திக்க முடியும்.
கோப்பி எடுக்கும் வகையில் website can modified ...Thanks
R.SARAVANAN
saraautos@gmail.com
தங்களின் எல்லா பதிவுகளும் அருமை.
ReplyDeleteமுக்கியமாக மந்திரங்கள்...
கிடைப்பதர்க்கரியவை ...
ஆனால் என்ன வருத்தம் என்றால் எதையுமே காபி எடுக்க முடியவில்லை.
காபி எடுக்க முடிந்தால் மட்டுமே அதன் முழு பயன்
எல்லாருக்கும் சென்றடையும் ..தெய்வத்தை தொழும் போது
சொல்லி பிரார்த்திக்க முடியும்.
கோப்பி எடுக்கும் வகையில் website can be modified ...