நதிஸ்தோத்ரம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
பாகீரதி வாரணாஸி யமுநா ச ஸரஸ்வதீ பல்குநி சோணபத்ரா
ச நர்மதா கண்டகீ ததா கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி அக நாசி வியத்கங்கா
துங்கபத்ரா பலாபஹா ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா குந்தா மந்தாகிநீ சைவ
க்ருதமாலா ஹர்த்ருதா மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்ஸ்வாமி புஷ்கரணீ
சைவ ஸத்ய புஷ்கரணீ ததா சந்த்ர புஷ்கரணீ சைவ ஹேமபுஷ்கரணீ
ததா கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா
(பாகீரதி, வாரணாசி, யமுனை, சரஸ்வதி, பல்குநி, சோணபத்ரா, நர்மதை, கண்டகீ, கயா, ப்ரயாகை, சரயூ, திரிவேணி, மணிகர்ணிகா, க்ருஷ்ணவேணீ, பீமரதி, கௌதமி, வியத்கங்கா, துங்கபத்ரா, பலாபஹா, ஹைமவதீ, வேத்ரவதீ, வேதவதீ, காயத்ரீ, கோசீகீ, மந்தாகிநீ, தபதீ, ஸ்வாமி புஷ்கரணீ, ஸத்ய புஷ்கரணீ, சந்த்ர புஷ்கரணீ, ஹேம புஷ்கரணீ, கௌமேதகீ, குருக்ஷேத்ரம், பதரீ, த்வாரகா ஆகிய எல்லா புண்ணிய நதிகளுக்கும் நமஸ்காரம்.
என் துன்பங்கள், மன விகாரங்கள் முதலான அழுக்குகளை நீக்கி என்னைப் புனிதனாக்குவீர்களாக, நமஸ்காரம். )
(ஆடிப்பெருக்கு தினமான ஆடி பதினெட்டாம் தேதியன்று எந்த நீர்நிலையிலாவது நீராடி, இத்துதியைப் பாராயணம் செய்தால், குறிப்பிட்ட அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும்.
புண்ணியம் பெருகும்.)
ஆடிப் பதினெட்டு அன்று காவேரிக் கரைக்கு சென்று மஞ்சள், மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து வழிபடுவர்
தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்சும சக்திகள் வெளிப்படுவதாகவும்; பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும்; உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன.
காவேரி நதியால் பயன் பெறும் மக்களும் மற்றவர்களும் ஒவ்வொரு வருடமும் ஆடிப் பதினெட்டில் காவேரி நதியை வழிபட்டு வருவது மரபு.
வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.
உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று "பதினெட்டாம் பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காவேரி அதிக சக்தியையும் புனிதத்தையும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.
காவேரி அதிக சக்தியையும் புனிதத்தையும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.
அணியார் பொழில் சூழ் அரங்கநகராம் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார்.
அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட்கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும்.
இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட்கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும்.
இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.
பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார்.
அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சி நடைபெறும்.
மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!
அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சி நடைபெறும்.
மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!
VERY VERY GOOD MORNING TO YOU !
ReplyDelete&
GOOD NIGHT TO MYSELF.
BYE FOR NOW .....
I WILL COME AGAIN LATER.
>>>>>
”ஆனந்தம் பெருக்கும் ஆடிப்பெருக்கு” என்ற தங்களின் இன்றைய பதிவே பேரானந்தம் பெருக்குவதாக உள்ளது.
ReplyDeleteஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !
இன்னும் பத்தே பத்துப்பதிவுகளே பாக்கியுள்ளன.
அதனாலும்
ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே ! ;)))))
>>>>>
ReplyDelete//(பாகீரதி, வாரணாசி, யமுனை, சரஸ்வதி, பல்குநி, சோணபத்ரா, நர்மதை, கண்டகீ,கயா, ப்ரயாகை, சரயூ, திரிவேணி, மணிகர்ணிகா, க்ருஷ்ணவேணீ, பீமரதி,கௌதமி, வியத்கங்கா, துங்கபத்ரா, பலாபஹா, ஹைமவதீ, வேத்ரவதீ, வேதவதீ, காயத்ரீ, கோசீகீ, மந்தாகிநீ, தபதீ, ஸ்வாமி புஷ்கரணீ, ஸத்ய புஷ்கரணீ, சந்த்ர புஷ்கரணீ, ஹேம புஷ்கரணீ, கௌமேதகீ, குருக்ஷேத்ரம், பதரீ, த்வாரகா ஆகிய எல்லா புண்ணிய நதிகளுக்கும் நமஸ்காரம்.
என் துன்பங்கள், மன விகாரங்கள் முதலான அழுக்குகளை நீக்கி என்னைப் புனிதனாக்குவீர்களாக, நமஸ்காரம். )//
இதை இவ்வளவு அழகாக எடுத்துச்சொன்ன “ஸ்வீட் சிறுவாணி நதிக்கரை” அம்பாளுக்கு முதல் நமஸ்காரங்கள்.
>>>>>>
//(ஆடிப்பெருக்கு தினமான, ஆடி பதினெட்டாம் தேதியன்று எந்த நீர்நிலையிலாவது நீராடி, இத்துதியைப் பாராயணம் செய்தால், குறிப்பிட்ட அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும். புண்ணியம் பெருகும்.)//
ReplyDeleteநீர் நிலை + நதி வசதிகள் அருகில் இல்லாதவர்கள், இந்த இவர்களின் பதிவினைப்பார்த்து, அந்த ஸ்லோகங்களைப் படித்தாலே போதும், அனைத்துப் புண்ய நதிகளிலும் நீராடிய பலனுக்கு மேல் பலனும், புண்ணியத்துக்கு மேல் புண்ணியமும் கிட்டும். [வீட்டு ஷவரிலேயே ஸ்நானம் செய்தாலும் கூட ;))))) ]
>>>>>
ReplyDelete//ஆடிப் பதினெட்டு அன்று காவேரிக் கரைக்கு சென்று மஞ்சள், மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து வழிபடுவர்//
ஆஹா, நல்ல சந்தோஷமான தகவல் தான்.
ஏதோ இந்த ஆண்டு, இயற்கையில் வருண பகவான் கண் திறந்துள்ளதால், மேட்டூர் அணை நிரம்பி, அகண்ட காவிரிக்கும் [திருச்சி காவிரிக்கும்] போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது ;) மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களைப்போன்ற புண்யவதிகளால், மாதம் மும்மாரி பொழிந்து, இந்நிலை நீடித்தால் பரவாயில்லை.
பத்தினிப்பெண்கள், பெய் என்றால் பெய்யுமாமே ........ மழை. ;)
>>>>>
ReplyDelete//உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று "பதினெட்டாம் பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காவேரி அதிக சக்தியையும் புனிதத்தையும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.//
காவிரி நதியின் சிறப்பினைத் தங்கள் வாயால் புகழ்ந்து பேசியுள்ளது, வேதங்களும் சாஸ்திரங்களும் நேரில் வந்து சொன்னதுபோல என் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்பெஷல் நன்றிகள்.
காவிரி போற்றுதும் .. காவிரி போற்றுதும்.
>>>>>
எல்லாப்படங்களும் ஜோர் ஜோர்.
ReplyDeleteஅம்மாமண்டபச்சிறப்புக்களும், யானை மேல் அமர்ந்து பெருமாள் காவிரி அன்னைக்கு அளிக்கும் பரிசுப்பொருட்களும், திரும்பச்சென்று பெருமாள் ஆண்டாளுடன் மாலை மாற்றிக்கொள்வதும், அழகிய நிகழ்ச்சிகள் தான்.
இதை இன்று ரெங்கநாயகி தாயார் மூலம் கேட்பது மேலும் மகிழ்ச்சி தான்
கீழிருந்து மூன்றாம் படமும், அதே போல கீழிருந்து பத்தாவது வரிசைப்படமும் பொங்கிப்பாயும் காவிரியையும், கரைபுரண்டு ஓடும் காவிரியையும் காட்டி சிறப்பித்துள்ளது, அருமையோ அருமை. ;)))))
>>>>>
அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் மிகச்சிறப்பான பதிவாக ஆடிப்பதினெட்டுக்குக் கொடுத்து அசத்தியுள்ளதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteதயவுசெய்து ஆடிப்பதினெட்டின் மிகவும் முக்கியமான ’சித்ரான்னங்கள்’ [தேங்காய் சாதம், புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம், வடை, வடாம், அப்பளம் + சர்க்கரைப்பொங்கல் முதலியன] எனக்காக ஸ்பெஷலாகக் கொடுத்தனுப்புங்கோ;
மறந்துடாதீங்கோ ..... ப்ளீஸ்.
அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ooooo 990 ooooo
[ஹைய்யா ...... ONLY 10 MORE ...... Please discuss]
ரசித்தேன்.
ReplyDeleteபுகழ் பெற்ற ஆடிப்பெருக்கு விழா பற்றி படங்களுடன் சிறப்பான விளக்கம் அருமை
ReplyDeleteஅழகழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு. பொங்கி வரும் காவேரித்தாய் எல்லா மங்கலங்களையும் வழங்குவாளாக.
ReplyDeleteநீரின்றி அமையாது உலகு
ReplyDeleteஆடிப் பெருக்கு விழா படங்களும் தகவல்களும் அருமை
ReplyDeleteபடங்கள் + தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்..
ReplyDeleteThanks for the slokam dear. I just recit it by sitting at home done darshan of all Nadhis by mentally.
ReplyDeleteThanks a lot. Nice post.
viji
ஆடிபெருக்கன்று அழகான பதிவு படங்கள் அனைத்தும் மிக நன்று .
ReplyDeleteநல்ல ஒரு பதிவு.
அனைத்தும் அற்புதம்!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோதரி!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் இருந்து மாட்டு வண்டி ஏறி அம்மா மண்டபம் வந்து ஆடிப்பெருக்கு அன்றைக்கு அரங்கனை தரிசித்தது நினைவிலாடுகிறது. வாழ்த்துக்கள்.
என்னே அழகான படங்கள்.. அற்புதம் .
ReplyDeleteஆடிப் பெருக்கு விவரங்கள் தரவிற்கு மிக நன்றி. இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
Nice post!!
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஆஹா! ஆடிப் பதினெட்டாம் பெருக்கை இங்கிருந்தே கண்டு களித்தேன்.
ReplyDeleteஅரங்கன் இன்று முழுக்க காவிரிக் கரையில் எழுந்தருளி இருப்பார். அவரையும் இங்கே சேவித்து மகிழ்ந்தேன்.
நன்றி!
Very Excellent way of presentations and photographs. Really its a great service to the humanity with divinity.
ReplyDeleteThnaks
மிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் கருத்துரை தந்தமைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல.
ReplyDeleteமிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் கருத்துரை தந்தமைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல.
ReplyDeleteதங்களின் பல இடுகைகளை காணும் பாக்கியம் இன்று தான் கிடைத்தது. நன்றி.
பரமானந்தம்!
ReplyDelete(தேங்காய்சாதம்,புளியோதரை,அக்கார அடிசில் தயிர்சாதம்,அவியல் வடாம் எல்லாம் சாப்பிட்டாச்சு!)
watching sri ranganathar and andal exchanging garlands on aadi 18 will provide good married life - this is new information to us thanks for sharing.
ReplyDeleteதகவல்கள்,படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteஆடிபதினெட்டு பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி அனைவருக்கும் சகல செல்வங்களையும் வாரிவழங்கட்டும். அவள் பாதம் பணிவோம்.
ReplyDelete