உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன
ஸ்ரீமீனாட்சி அம்பாள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.
ஆடிப் பூரம் தினத்தில் அம்பிகை கருவுற்று இருப்பதாக ஆவகணம் செய்து முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம்.
இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அப்போது ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள்.
முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.
இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்யும் வழக்கப்படி அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.
அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் ஆடிப்பூர நாள் ஆகும்.
அகிலாண்ட நாயகி வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தம் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது,
ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.
பூப்புனித நீராட்டுவிழாவும் நடாத்துகின்றார்கள். அம்பிகை மகப்பேறு அருளுபவராகவும், விவாகமாகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய அருள்பவராகவும், தாலிபாக்கியம் நிலைக்க அருள்பவாராகவும் இருப்பதனால் இது போன்ற விழாக்களை நம் முன்னோர் முன்னெடுத்தனர்.
லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.
அம்பிகைக்கு, வகைவகையான வண்ண சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள்.
வளையல் காப்பு தரிசணம் கண்டேன் வணங்கினேன். நன்றி
ReplyDeleteமலர்க்காப்பும் வளையல்காப்பும் அருமை.
ReplyDeleteஎப்படித்தான் இத்தனைக் கடவுளர்களை வசப்படுத்திவிடுகிறீர்களோ? வளைகாப்பு அலங்காரம் அனைத்துமே அற்புதம் தான். காரணமான கலைஞர்களுக்கும், கருத்தில் வடித்த இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் அன்னை அருள் அதிகம் கிட்டுவதாக. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.
ReplyDeleteஆடிப்பூரத்தகவல்கள்,வளைகாப்புஅம்மன்,படங்கள் எல்லாமே அருமை,அழகு.நன்றி
ReplyDeleteவளைகாப்பு கொண்டாடும் [சமீபத்தில்கூட கொண்டாடி மகிழ்ந்த] அகிலம் காக்கும் அன்னைக்கு என் வந்தனங்கள்.
ReplyDelete>>>>>
ReplyDeleteமுதல் படம் மிகவும் அசத்தல்.
பளப்பளன்னு படுஜோரா இருக்குது. ;)
>>>>
ReplyDelete//திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் விசேஷம். "இந்த விழாவின் நான்காவது நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அப்போது ஊறவைத்த பயறு வகைகளை அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு கர்ப்பிணிப் பெண் போலவே காட்சி தருவாள் அம்பாள்." //
எவ்வளவு சந்தோஷமான விஷயம். நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் சம்ப்ரதாயங்களை வழிவகுத்துக்கொடுத்துள்ளார்கள். நினைக்கவே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இதன் கீழ்க்காட்டியுள்ள படமும் அற்புதமாக உள்ளது.
>>>>>>
ReplyDelete//முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், "நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்."//
முளைப்பயிறு கட்டுவது, பாலிகை தெளித்தல் என எவ்வளவோ விஷயங்களில் எவ்வளவோ தாத்பர்யங்கள் இலைமறைவாகக் காய்மறைவாகச் சொல்லப்பட்டுள்ளது. ;)))))
முதல்நாள் ஊறவைத்த பயிறில் அடுத்தநாளே மிக நீண்ட முளை கட்டிவிடுவதைப் பார்க்கவே எவ்ளோ சந்தோஷம் ஏற்படுகிறது!!!!! ;)
>>>>>>
//இந்த வளைகாப்பு வைபவத்தை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு பிள்ளைப்பேறு விரைவில் வாய்க்கும் என்பது நம்பிக்கை.//
ReplyDeleteநம்பிக்கைகள் எப்போதுமே வீண் போவது இல்லை.
தினமும் நல்ல பொழுதாக விடியட்டும். என்றும் நல்லதே நடக்கட்டும்.
>>>>>
ReplyDelete//லோகமாதாவான அம்பிகையே ஆடி மாதத்தில் கருவுற்றிருப்பதாக நினைந்து, ஆற்றங்கரைகளில், அகிலம் காக்கும் அம்பிகைக்கு தேங்காய், பழம், மங்கலப்பொருட்கள், காதோலைக் கருகமணி ஆகியவற்றைப் படைத்து மகிழ்வார்கள்.//
கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
>>>>>
//அம்பிகைக்கு, வகைவகையான வண்ண கதம்பச் சாதங்களை (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல்) ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்து, அம்பிகைக்கு படைத்துவிட்டு, குடும்பத்துடன் குதூகலமாக உண்டு களிப்பார்கள்.//
ReplyDeleteஇந்தப்பதிவினிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த மேற்படி சமாச்சாரங்கள் தானுங்க!
அவ்வாறு ஆற்றங்கரைக்குச் செல்லும் போது எனக்கும் அழைப்பிதழ் அனுப்பினால் என்னவாம்?????
என்னை உங்கள் குடும்பத்தில் ஒருத்தரா நினைக்கவே மாட்டீங்களா? ;((((((
>>>>>
ReplyDeleteஇன்றைய அனைத்துப்படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல் அருமையாக உள்ளது.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவு + பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
தொடர்ந்து மிகக்கடுமையாக உழைக்கின்றீர்கள்.
வாழ்க வாழ்கவே!
ooooo 989 ooooo
மிகமிக அருமை! கண்ணையும் மனத்தையும் கவர்ந்து நிற்கின்றன அத்தனை படங்களும் பதிவும்.
ReplyDeleteபகிர்வினுக்கு நன்றி!
வாழ்த்துக்கள் சகோதரி!
வளையல்களுடன் அலங்காரம் மிக மிக அற்புதம். விளக்கங்களும் சிறப்பு.
ReplyDeleteவளைகாப்பு நாயகி படங்களும் விளக்கமும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம் ஆடிப்பூர அன்னை அருள் பெற்றேன்.
ReplyDeleteமனம் நிறைந்தது.
வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்.
வளையல் அலங்கார படங்கள் அழகு.
ஆடி வெள்ளியன்று வளையல் காப்பு நாயகியை கண்குளிர தரிசனம் செய்தோம். நன்றி!
ReplyDeleteஅற்புத தரிசனம்.. நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteAha!!!
ReplyDeleteArpudha padangal.....
very happy viewing all the pictures.
Me too busy tieing bangles to give all the nearby temples.
viji
அன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது தங்களது வலைபதிவு கிடைத்தது. மிகவும் பிரமாதம். அதில் உள்ள சில செய்திகளையும் படங்களையும் எனது மருமகளின் வளைகாப்பு அன்று வெளியிட விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் அந்த மேட்டரையும் இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களையும் எனது இ மெயில் idக்கு அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன். My e mail id : kparamanandham@gmail.com
ReplyDeleteஅன்புடையீர் வளைகாப்பு பற்றி நெட்டில் தேடும் போது தங்களது வலைபதிவு கிடைத்தது. மிகவும் பிரமாதம். அதில் உள்ள சில செய்திகளையும் படங்களையும் எனது மருமகளின் வளைகாப்பு அன்று வெளியிட விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் அந்த மேட்டரையும் இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களையும் எனது இ மெயில் இக்கு அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன். My e mail id: kparamanandham@gmail.com
ReplyDeleteஅம்மனின் வளையல் அலங்கார படங்கள் மிகவும் அழகாக உள்ளது.
ReplyDelete