Sunday, August 11, 2013

கனிந்து காக்கும் கருடபஞ்சமி




கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே


ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
-  கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

 கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எப்போதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
[v8.jpg]

மஹாவிஷ்ணுவின்  வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை "கருட பஞ்சமி'' எனப்போற்றி வழிபடுகின்றோம்...

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். 
அசுவ மேத யாகம் செய்த பலனைத் தருவது கருடசேவை தரிசனம்.
.
கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். 
[gratham.jpg]
அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியம் கிட்டிய  கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். 

 கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.
பெருமாளின் வாகனம் கருடன் ! 
கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம்  !!

"ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!






[v6.jpg]
[badimg7.gif]

24 comments:

  1. பெரிய திருவடியாகிய ஸ்ரீகருடாழ்வார் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக அருமை. மனம் மகிழ்கின்றது!...

    ReplyDelete

  2. ’நலம் நல்கும் நாக சதுர்த்தி’க்குப் பிறகு
    ’கனிந்து காக்கும் கருட பஞ்சமி’யா !

    ஆஹா ...... என்னப் பொருத்தம் .......

    நமக்குள் .......

    இந்தப்பொருத்தம் ..........

    எனப் பாம்புகளும் கருடன்களும் பாட்டுப் பாடுகின்றன.

    >>>>>

    ReplyDelete
  3. இன்றைய படங்கள் எல்லாமே ஜோர் தான்.

    அதுவும் முதல் படத்திலும், மூன்றாவது படத்திலும் காட்டியுள்ள கருடாழ்வாரின் மூக்கு, கிளிமூக்கு மாவடு போல அழகாக இருக்கு.

    பெரிய திருவடிக்கு வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  4. //கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். //

    ஓஹோ அதுதான் விஷயமா !!!!!

    இந்த விரதமிருந்து பெற்ற குமாரர்களாக அனைத்துக் ‘குமார்’களும், அருமையாகத் திகழ்கின்றனரோ ! [ஜெக] மணிப்பயல்கள் தான் ;)))))

    சந்தோஷம். வா ழ் த் து க ள்.

    எதையுமே சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் வாயைத்திறந்து சொல்லிடாதீங்கோ. முத்து உதிர்ந்துவிடும். ........ ;(

    இந்தத்தகவல் எங்களுக்கு இப்போது TOO LATE ஆக்கும் ;(

    >>>>>

    ReplyDelete
  5. //கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. பெருமாளின் வாகனம் கருடன் !//

    பாம்புக்கு எதிரி கருடன் என்பார்கள்.

    இங்கு கருடனுக்கு ஆபரணங்களே பாம்புகளா?

    அதுசரி, ”இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்யமே ! - கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது “

    இருவருமே பெருமாளுடன் அல்லவா உள்ளனர். ;)

    >>>>>

    ReplyDelete

  6. //பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
    பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!//

    நீங்க இதுபோல பல தகவ்ல்களை அள்ளித்தெளித்து இன்று [வலையுலகில்] கொடிகட்டித்தான் பறக்கிறீர்கள். ;)

    காலுக்குக்கீழேயுள்ள [ தங்களைத் தலைமேல் தாங்கிக்கொண்டுள்ள] தங்களின் தீவிர பக்தனைத்தான் கவனிப்பதே இல்லை. ;(((((

    >>>>>>

    ReplyDelete

  7. //கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.//

    //கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எப்போதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டார்கள்.//

    எவ்ளோ மந்த்ரங்களும் தந்திரங்களும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளீர்கள்?

    அதிபுத்திசாலி தான். ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. இன்றைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    சிவன் + சக்தி போல இன்னும் இரண்டே இரண்டு பதிவுகளே பாக்கியுள்ளன.

    சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்தது போல அது நாளை அதிகாலை ஒன்றாகிவிடும்.

    மனமும் உடலும் ஒன்றாகிப்போகும் அதனை நான் ‘சிவசக்தி டவர்ஸ்’ உச்சியிலிருந்து கண்டு களிப்பேன்.

    நீங்கள் நீடூழி வாழ்க !


    ooooo 998 ooooo

    ReplyDelete
  9. thanks for sharing garuda mantra

    ReplyDelete
  10. கருட மந்திரம் ஒரு ஆசார்யன் வழியே கற்றுக்கொள்ளப்பட்டு பின்
    கருட சன்னதிகளிலே சொள்ளபடவேண்டியது அதுவும் கருட உபாசனை செய்பவர்கள் மட்டுமே இதை செய்வதும் வைஷ்ணவ சம்ப்ரதாயம்.

    கருட காயத்ரியையோ அல்லது கருட மந்த்ரத்தையோ தினசரி வீடுகளில் அல்லது கருட பஞ்சமி அன்றும் சொல்லும் பழக்கம் அல்லது வழக்கம் வைஷ்ணவர்கள் வீடுகளிலே இல்லை.

    கருட ஸ்லோகம் வேறு. அதை பெருமாளை சேவிக்க செல்லுமுன் கருடாள்வாழ்ரை நோக்கி சொல்லலாம். சிலர் சொல்லுகின்றனர் .

    கருட புராணம் என்பது வேறு.

    கருட மந்திரத்தையோ அல்லது கருட காயத்ரியையோ அந்த மந்திரம் உபதேசிக்கபட்டவர் மட்டுமே, கருடாழ்வார் சன்னதிகளில் சொல்வது சிலாக்கியம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  11. கருட சேவை கண்டு சிலாகித்தேன் .
    பகிர்விற்கு நன்றி .

    ReplyDelete
  12. நான் கேள்விப்பட்ட வரையில் “கருட புராணம்” என்றோர் புஸ்தகம் உள்ளது.

    அதை வீட்டில் படிக்கக்கூடாது. கோயில் வாசலில் அல்லது நதிக்கரை, குளக்கரை போன்ற பொது இடங்களில் மட்டுமே படிக்க வேண்டும்.

    அதுவும் அதை எப்போதும் படிக்கக்கூடாது.

    பித்ருக்களின் உயிர் பிரிந்து முதல் 10-12 நாட்களில் மட்டுமே, கர்மாக்கள் செய்யும் கர்த்தாக்கள் மட்டுமே படிக்க வேண்டும்.

    அதில் ஒருவரின் உயிர் பிரிந்தபின், அவரின் ஆன்மா, அடுத்த ஓராண்டு வரை, [அவர் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப] என்னென்ன அவஸ்தைகளை அனுபவிக்கிறது என்பதைத் தெளிவாக ஓர் திகில் கதை போல சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    ஆனாலும், நான் அதைப் படித்தது இல்லை. கேள்விப்பட்டதோடு சரி.

    ReplyDelete
  13. கருட பஞ்சமி பற்றிய தகவல்களும், பகிர்வில் சேர்த்திருக்கும் படங்களும் ரசிக்கும் படியாக இருக்கின்றன.....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. இன்று கருடபஞ்சமி பூஜை முடிந்தது. உடன்பிறந்தவர்கள் நாகதோஷம் இன்றி தீர்க்க ஆயுளுடன் எல்லா வழமும் பெற்று வாழ பூஜை.
    தெலுங்கர்களின் ரக்‌ஷாபந்தன்.

    அருமையான படங்கள், தகவல்கள்

    ReplyDelete
  15. அம்மா,

    கனிந்து காக்கும் கருட பஞ்சமி பார்த்தோம். மகிழ்ந்தோம். ஆசீர்வதிக்க பெற்றோம். மிகவும் அருமை. சந்தோசம்.

    என்றும் அன்புடன்,
    தமிழ் பிரியன்.

    ReplyDelete
  16. Used to say that Karuda Puram shouldnot keep in house.
    But I am having the book along with my other anmika books.
    Nice write up regarding Karuda Panchami.
    viji

    ReplyDelete
  17. அஸ்வமேதயாகம் செய்த புண்ணியம் பெற்றோம், கருட சேவை கண்டு மகிழ்ந்தேன்.
    என் அம்மா கருடபத்து என்ற ஸ்லோகம் தினம் சொல்வார்கள்.
    நாச்சியார் கோவில் கல் கருடன், நாங்கூர் கருடசேவை எல்லாம் இறைவன் அருளால் கண்டு களித்து இருக்கிறேன்.
    அருமையான அழகிய படங்களுடன் பதிவு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. கருடனும் நாகமும் எதிரிகள் இல்லையோ?

    க்க்க்க்கும்... சகோதரிகளிடமிருந்து பணம் வசூலிக்கும் நாளாமே இன்று? இப்போது தான் தெரிந்து கொண்டேன் (அடிக்க வரும் சகோதரிகள் எங்கள் ப்லாக் ஸ்ரீராமை அணுகவும்.)

    ReplyDelete
  19. சகோதரிகளும் சகோதரனுக்கு கொடுத்து மகிழும் நல்ல நாள் இன்று.

    ReplyDelete
  20. படங்களும் பகிர்வும் அருமை...
    அழகான படத்தொகுப்பு அற்புதம்...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  21. கருடன் என்றால் கொஞ்சம் பயம் தான்.
    படங்களும் விவரங்களும் தகவல்களாக
    இனிய நன்றி.
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. கருட மந்திரம் அருமை,நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete