Sunday, August 4, 2013

சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி




ஓம் சாகம்பர்யை வித்மஹே சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத். - சாகம்பரி காயத்ரி

மண்ணில் விளைபவை அனைத்தும்  அந்த 
மகேஸ்வரியின் படைப்பே  என்பதால் அன்னைக்கு நன்றி 
சொல்லும் விதமாக காய் கறிகளால் அலங்கரிக்கிறார்கள்.

மகேஸ்வரனிடம் மகத்தான வரங்கள் பெற்ற ஆணவத்தால் துர்க்கமன் என்கிற அரக்கன், மண் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரம். அரக்கனது அட்டூழியம் தாங்காமல், பூமிதேவியே வாடிப்போனதனால், விளைச்சலே இல்லாமல் பசி, பஞ்சம், பட்டினியால் வாடிய மக்கள் பசி மயக்கத்திலும் அம்பிகையைத் துதித்தார்கள். 

 அசுரன் துர்க்கமனை அழித்ததால் துர்க்காதேவி என துதிக்கப்பட்டாள்..!/

 தன் அம்சமாக சாகம்பரி தேவியைப் படைத்து, உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும்படி அருளினாள்...!
சாகம்பரி தேவியின் அருளால்தான், இன்றும் பயிர்கள் 
அனைத்தும் விளைவதாக ஐதிகம்.
பயிர்வளரச் செய்து உயிர்காப்பவள் என்பதால் அவளுக்குக் காய்கறிகளாலேயே அலங்காரம் செய்து சாகம்பரி எனத் துதிக்கும் வழக்கம் வந்தது.
உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் வருந்தி, தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் வெள்ளமாகப் பெருக, ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி,  குளங்களையெல்லாம் நிரம்பின. 

தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர, உலகம் சுபிட்சமானது. 

தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்றும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்றும் வணங்கி வழிபடுகிறோம்..

சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். 
அன்று முதல் சாகம்பரி தேவி வழிபாடு தொடர்கிறது. 











19 comments:

  1. அபூர்வமான அழகான படங்கள்.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. மனம் நிறைய மகிழ்விக்கும் எங்கள்
    மாரியம்மனை இன்று விடியலிலே தரிசனம் செய்ய
    இயன்றது.

    மாரியாத்தா ! சமயபுரத்து காளியாத்தா
    பாரனைத்தும் காப்பவளே என்
    பேரனையுமே பேசவைக்க அருள் புரிவாய்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. நல்ல படங்கள்.....

    தில்லியிலும் ஒரு கோவிலில் இப்படி அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள்....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ”சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி”க்கு

    அடியேனின் அன்பு வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. அத்தனைப்படங்களும் அழகோ அழகு.

    கண்களில் ஒத்திக்கொண்டேன் [என் மடிக்கணனியை.]

    >>>>>

    ReplyDelete
  6. எப்படித்தான் இவ்வளவு படங்களைக் கஷ்டப்பட்டு சேகரித்து, சேமித்து வைத்து, அவ்வப்போது ஒருங்கிணைத்து, நினைவாகக் கோர்வையாக அழகாக தொகுத்துக் கொடுக்கிறீர்களோ !!!!!!

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. பளபளப்பான பசுமையான காய்கறிகள் போன்றே ருசியோ ருசியாக உள்ளன, தங்கள் பதிவுகளும் ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. ஒவ்வொன்றையும் விபரமாக ரஸித்து ருசித்து நிறைய கருத்துக்கள் கூறத்தான் ஆசையோ ஆசையாக உள்ளது.

    இருப்பினும் இன்று அதற்கான மன அமைதியான சூழ்நிலை அமையவில்லை. ;(

    >>>>>

    ReplyDelete
  9. அனைத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    தொடரட்டும் தங்களின் ஆன்மிக சேவை, எனக்கு மிகவும் பிடித்தமான தேங்காய்ச்சேவை போலவே! ;)

    ooooo 991 ooooo

    ReplyDelete
  10. கனிகளையும் காய்களையும் ஆரோக்கியத்திற்கு அள்ளித்தரும் அன்னை சாகம்பரி. எத்தனை வடிவங்கள். தங்கள் முனைப்புக்கும் அழகிய சித்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அம்பாளுக்குரிய நவராத்திரிகள் போல, இன்னும் ஒன்பது ராத்திரிகளே பாக்கியுள்ளன; விஜயதஸமி போல அம்பாள் வெற்றி இலக்கினை எட்ட. ;)))))))))

    என் மனமார்ந்த அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  12. உங்கள் பதிவு ஒன்றில் சாகம்பரிதேவி குறித்து வாசித்ததாக நினைவு. இருந்தால்தான் என்ன. அழகிய படங்களுடன் அரிய தகவல்களும் தரும் உங்களுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Very very pretty. How dedicated the fruits and vegetables are made to decarete Devi. Really very nice. But I heard Sakambari alankaram during puratasi Powrnami day.
    viji

    ReplyDelete
  14. இன்றுதான் சாகம்பரிதேவி பற்றி அறிந்து கொள்கின்றேன்.

    படங்களும் பதிவும் மிக அருமை!

    என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  15. superb pictures of sagambari devi - useful information

    ReplyDelete
  16. வணக்கம்!

    அன்னையின் இன்னருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

    வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. சாகம்பரி தேவி எல்லாவளத்தையும் எல்லோருக்கும் அள்ளி தரட்டும்.
    படங்கள் எல்லாம் அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மிக வித்தியாசமான சாகம்பரிதேவியின் காய்கறி அலங்காரம்.
    எங்கும் கண்டதில்லை. அருமை. மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. சாகம்பரிதேவியின் காய்கனிகளின் அலங்காரக்காட்சி அழகு.அத்தனை படங்களும் கண்ணைக்கவர்கின்றன..நன்றி.

    ReplyDelete