Friday, August 30, 2013

யோகங்கள் அருளும் யோக ராமர்


Sita Ram
கும்பமகத்து வாயுமைந்தன் கோதண்டாத்தானொடு கூடியே 
பலித் தலமேகி தீர்த்தவாரியாடியே உத்திர மணக்கோலத்துமிருந்து
தொழுதேத்தக் கண்டோம் மெய்யே - வாயு மைந்தருக்கு நவவியாகரணபட்டமுங் கிட்ட கருவான தலமிதே’

-என திருமூலர் திருவாக்கில்  வியப்புடன் வணங்கிப்போற்றும் ஆஞ்சநேயருக்கு  சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் ஆச்சாரியனாய் இருந்து உபதேசிக்கும்  குரு அம்சமாய்  கோலம் கொண்டு கல்வி விருத்திக்கும் ஆரோக்ய மேம்பாட்டுக்கும் ஒருசேர ஞானமொடு சேர்க்க யோக  ராமச்சந்திர மூர்த்தியாக அருள்கிறார்..!
 Sita Ram
ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், சீதாபிராட்டியுடன் அமர்ந்து வீராசனத்தில் , சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கும் அரிய அமைப்பில் அருள்கிறார்...இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாகத்திகழ்கிறது.! .

கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமக்காக  ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ராமர்-சீதை  மூர்த்திக்கு அருகில் ஆஞ்சநேயரும் அமர்ந்த நிலையில் கையில் ஓலைச்சுவடியைத் தாங்கி நிற்பது விசேஷம்.
தன்னைத்தியானிப்பவர்களுக்கு தாயார் செண்பகவல்லி நாச்சியார் இனிய மன அமைதியை அருள்கிறார்..
கடன் சுமை நீக்கி தீராத நோய் தீர்த்து  பிறவி இல்லாது இறைவனோடு உயிரை இணைக்கும் சக்தி உடையவள் செண்பகவல்லித் தாயார் தைரியத்தையும் தெம்பையும் ஊட்டுகிறாள்..!
[Gal1]
 கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், ஆஞ்சநேயர் உள்ளனர்
வால்மீகி மகரிஷி உள்ளிட்ட சப்தரிஷிகளும் பல்வேறு சித்தர்களும்  நாரத மகரிஷியும் பிரம்மதேவரும் கொங்கணர். கோரக்கரும் பிருகு மகரிஷியும். தொழுது பேறுபெற்ற புண்ணிய ஆலயம் இது.

ஆவணி மாதத்தில் இரண்டாம் வெள்ளிக்கிழமை, இன்றும் வால்மீகி மகரிஷி, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் முதலான பல சித்தர் பெருமக்களுடன் தசரத சக்ரவர்த்தி அரூபமாக திருக்கோயிலுக்கு எழுந்தருளி ராமச்சந்திரமூர்த்தி, தன் நாச்சியார் சீதாபிராட்டியுடனும் இளைய பெருமாள் லட்சுமணருடனும்  கருடன் மேல் எழுந்தருளும் காட்சியைக் கண்டு தொழுது இன்புறுகின்றனர். 
ஆவணி இரண்டாம் வெள்ளியன்று ராமர், சீதை, லட்சுமணருடன் கருட சேவை காட்சி தருவார். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி கண்டு திரும்புவார். பங்குனியில் நடக்கும் ராமநவமி விழாவில், உத்திரத்தன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கும்.
யோகராமச்சந்திரமூர்த்தியை ஆஞ்சநேயர்  குருவாய் பெற்றதாலேயே. மிகுந்த ஞானம், கூரிய நுண்ணறிவு, வேகமாக சரியாகச் செயல்படுதல், மாறாத பிரம்மச்சாரியம், சத்யம் போன்ற சீரிய பண்புகள் நிறைந்து ஒழுக்கங்களையும்  ஒருங்கே அமைப்பெற்றார்..!

உலகத்தின் தோற்றத்திற்கும்  இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும்  வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன? என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தனக்கு சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், ராமபிரானை வேண்டினார். 

சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, ""எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்' என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு,
 "யோக ராமச்சந்திரமூர்த்தி' என்ற பெயர் ஏற்பட்டது.


அக்கினி பகவானும் வாயுபகவானும் வருண பகவானும் தொழுது போற்றிய தலவிருட்சமான செண்பக மரம், மிகவும் புண்ணியமானது. 

[Gal1]
மிகவும் சிறப்புற்றுத்திகழும் தல் விருட்சமான செண்பகமரத்தை சிரத்தையுடன் வணங்கித்தொழுது செல்வத்தில் குபேரனையும் மிஞ்சி இருப்பவர் நீருக்கு அதிபதியான வருணபகவான் ..!. 
ஞானத்தில் ஓங்கி இருப்பவர்கள் வாயுவும் அக்கினியும்.

கோயிலுக்குப் பின்புறமுள்ள கோட்டை மலையில்
வேணுகோபாலர் கோயில் உள்ளது..
[Image1]
 திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 48 கி.மீ.யில் (வேலூரில் இருந்து 32 கி.மீ.) உள்ள சந்தவாசலிலிருந்து 7 கி.மீ. சென்று படவேடு அடையலாம். பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவு..கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயில் இருக்கிறது

18 comments:

  1. புதியதோர் கோயில் பற்றியும் அதன் அருமை பெருமைகள் ப்ற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

    வேதமாகவும் வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் விளங்குவதாகச் சொல்லி தன் சின்முத்திரையுடன் கூடிய வலக்கரத்தை ஹனுமனின் நெஞ்சில் பதித்த ’யோக இராமச்சந்திரமூர்த்தி’க்கு என் நமஸ்காரங்கள்.

    படங்களும் விளக்கங்களும் தலைப்பும் வழக்கம்போல் அருமையாக உள்ளன.

    ஏதோ இன்று இதைப்படிக்கவும் கருத்தளிக்கவும் கொஞ்சமாவது எனக்கும் யோகம் இருந்ததில் மகிழ்ச்சியே.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  2. திருவண்ணாமலை மாவட்டம் தான் எங்களுடையது என்றாலும் இக்கோயில் பற்றிய சிறப்பை இப்போதே தெரிந்து கொண்டேன். படங்களும் விளக்கமும் அருமைங்க.

    ReplyDelete
  3. யோக ராமர் கோவில் பற்றிய விளக்கம், படங்கள், திருமூலர் பாடல் பகிர்வு எல்லாம்,அற்புதம், அழகு.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. யோகராமரின் திருவருள் பெற்று எல்லாரும் இன்புற்று வாழ வேண்டும்!...

    ReplyDelete
  5. Can you let us know the exact location of Boga Ramar Temple.

    ReplyDelete
  6. where is this location?
    subbu thatha

    ReplyDelete

  7. படங்களுடன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நகைகளும் புஷ்பமாலைகளுமாக முதல் படம் ஜொலிக்கிறது. ;))))) Very Nice !

    ReplyDelete
  9. கடைசி படத்தில் உள்ள கருடனைப்பார்த்தால், அந்தக்கால T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரத்தில், இதே போன்ற முகமும், முரட்டு மீசையும் [சுமார் ஒரு கிலோ வெயிட் உள்ள மீசை] வைத்து ஒருவர் உரலில் உலக்கையால் பொடி இடிப்பது போல ஆங்காங்கே பெரிய படத்தை வைத்திருப்பார்கள். அந்த ஞாபகம் வருகிறது. ;)))))

    ReplyDelete
  10. இரண்டாவது காட்டியுள்ள ஸீதா+இராமர் படம் ஏதோ சோகை உடம்பு போல, Brightness இல்லாமல், எழுச்சி ஏதும் இல்லாமல், பழம் பிழிந்தது போல், சாயம்போன புடவைபோல உள்ளதே!

    மிகவும் பழமைவாய்ந்த படமாக இருக்குமோ என்னவோ !

    ReplyDelete
  11. மேலிருந்து கீழ் முதல் 5 வரிசைப்படங்கள் மட்டும் திறந்துள்ளன. அதன் பிறகு 6, 7 திறக்கவே இல்லை.

    அதுபோல கீழிருந்து மேலே மூன்றாவது படமும் திறக்கவே இல்லை.

    ஏதோ திறந்த வரை, காட்டியவரை, நானும் தரிஸித்தவரை O.K.,

    எல்லாவற்றையும் முழுமையாகப்பார்க்க பிராப்தமும் வேண்டும். அது தான் நமக்கு [எனக்கு] இல்லை. ;(

    ReplyDelete
  12. படவேடு ரேணுகாம்பாள் கோயிலை ஒவ்வொரு ஊரிலிருந்தும் அடைய துல்லியமாக கிலோமீட்டர் கணக்கிட்டுச் சொல்லியிருப்பது, தனிச்சிறப்பு.

    போகும்போது ஒருவழியிலும், வரும்போது வேறு வழியிலுமாக ஏ.ஸி. காரில் ஆனந்தமாகப் பயணித்து, கிலோமீட்டரை கணக்கெடுத்து வைத்திருப்பீர்களோ என்னவோ! ;))))) கொடுத்து வைத்த மகராஜி !

    ReplyDelete
  13. Nice informations and pictures. Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  14. தெரியாத இடம் பற்றி அழகிய புகைப்படங்களுடன் நல்ல தகவல்கள்
    நன்றி

    ReplyDelete
  15. யோகராமர் கோயில் பற்றிய உங்கள் பதிவினையும் அதற்கு திரு VGK தந்த “நோட்ஸ்” களையும் இன்று படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள

      திருச்சி
      திருமழபாடி
      திரு.
      தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு,

      வணக்கம்.

      என்னிடம் அதிகப்பிரியம் கொண்ட உங்களைப்போன்ற ஒருசிலர் என்னுடைய பின்னூட்டங்களைப் [நோட்ஸ்களைப்] படிப்பதற்காகவே மட்டுமே, இந்தத்தளத்திற்கு அடிக்கடி வருவதாகச் சொல்லி மகிழ்ந்துள்ளனர்.

      அவர்களில் பலரும் பெண்கள். இங்கு நேரிடையாக உங்களைப்போல அதை அவர்கள் தெரிவிக்க மாட்டார்கள்.

      எனக்கு டெலிபோனிலும், சுட்டிகளிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அவர்களின் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வர்கள்.

      அவ்வப்போது மிகவும் உரிமையுடன் என்னைக் கேலியும் செய்வார்கள். கிண்டலும் செய்வார்கள். பாராட்டியும் மகிழ்வார்கள்.

      என் பின்னூட்டங்களுக்கு, இந்தப்பதிவரிடமிருந்து நேரிடையாக FEEDBACK [மறுமொழிகள்] கிடைக்காத எனக்கு, கிண்டலும் கேலியுமே ஆனாலும், அவர்கள் உரிமை எடுத்துக்கொண்டு தரும் இத்தகைய தகவல்கள் மிகவும் ஆறுதல் அளிப்பதாகவே அமைந்தது உண்டு.

      இப்போதெல்லாம் அதாவது இவர்களின் 1008வது பதிவுக்குப்பின், நான் வழக்கமாக இவர்களுக்கு எழுதும் பின்னூட்டங்களில், என் பாணியை மாற்றிக்கொண்டு, சுருக்கமாக ஓரிரு கருத்துக்கள் மட்டுமே அளித்து வருகிறேன்.

      அவை சற்றே மாறுபட்டதாகத் தான் இருக்கக்கூடும்.

      இவர்கள் வெளியிடும் பெரும்பாலான படங்கள் + செய்திகள் REPEAT ஆகி வருவதாலும், அவற்றை ரஸித்து நான் ஏற்கனவே அவ்வப்போது பாராட்டிப் புகழ்ந்து நிறைய எழுதித்தள்ளி விட்டதாலும், இப்போதெல்லாம் அவற்றைப்பற்றியே REPEAT செய்து எழுதுவதில் அதிக ஆர்வம் நான் காட்டுவது இல்லை. ,

      மேலும் நான் எழுதும் பின்னூட்டங்களுக்கு, தங்களைப்போல மறுமொழி கொடுப்பவர்களை மட்டுமே எனக்கு மிகவும் பிடிக்கிறது.

      அந்த மறுமொழி [FEEDBACK] நேரிடையாக பின்னூட்டப்பெட்டி மூலம் தான் தரப்பட வேண்டும் என்பது இல்லை.

      மனமிருந்தால் மார்க்கம் உண்டு. எப்படியும் என் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுவர முடியும்.

      என் பின்னூடங்களைப் [நோட்ஸ்களை] படித்து ரஸித்து தாங்களாவது ஓர் FEEDBACK கொடுத்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.

      மிக்க நன்றி, ஐயா.

      பிரியமுள்ள VGK

      Delete