வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு
பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே பண்டிகையின் புராண வரலாறு.
நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை ...!
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, வண்ணப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம் ..!
விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி முன்பு நாம் படிக்கும் புத்தகங்களை வைத்து அவளிடம் கல்வியை வரமாகக் கேட்கும் சரஸ்வதி பூஜை நம்முடைய கல்விக்கான பூஜை.
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை பூஜை செய்து வணங்குவது மிகச் சிறந்தது. இது சரஸ்வதி தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை, திருவோணம் நட்சத்திரம் உச்சமாகும் விஜயதசமி. நாளில் நிறைவு பெறுகிறது.
தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் சமுதாயம் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டாவது தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைபூஜிப்பது சரஸ்வதி பூஜையாகும்.
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம்.
அறிவுத் தெய்வமாகிய வாணி காளிதாசனுக்குக் காட்சி தந்ததால் "சாகுந்தலம்' என்ற காவியம் பிறந்தது. கலை மகளின் அருளால் கம்பன் இராமாயணம் எழுதினார். கலாதேவியின் அருளால் பேசவே முடியாத குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்.
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteஉங்களுக்கும் சரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள்.படங்களும்,பகிர்வும் அருமை.நன்றி
ReplyDeletethanks for sharing info about saraswathi pooja
ReplyDeleteசரஸ்வதி தேவியின் படங்கள் மிக மிக அழகு. அழகான தரிசனம்.
ReplyDeleteசெய்யும் தொழிலே தெய்வம்!!!!!!!!! அழகான பதிவு.
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதஸமி பற்றி கொடுத்துள்ள அனைத்து விளக்கங்களும் அறிந்தோம். மகிழ்ச்சி. ;)
ReplyDelete>>>>>
கம்ப்யூட்டர் மெளஸுக்கு விபூதிப்பட்டை பூசி குங்குமம் இட்டுக் காட்டியுள்ள படம், பார்க்க வேடிக்கையாக உள்ளது.
ReplyDeleteகாலத்திற்கு ஏற்ற கோலம் தான்.
செய்யும் தொழிலே தெய்வம்,
அதில் நாம் காட்டிடும் திறமையே செல்வம் ! ;)
>>>>>
முதல் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteஅதில் அசையும் அன்னங்களும், தாமரை மலர்களும், தண்ணீர்ரும், மயில் தோகையும், மர இலைகளும், செடிகொடிகளும், கொட்டும் அருவியும், ஜொலிக்கும் அம்பாளின் ஆபரணங்களும், புடவைத்தலைப்புகளும் அழகோ அழகு.
அம்பாளை நல்லதொரு தீர்க்கமான வடிவில் பார்த்ததில் சந்தோஷம். ;)
>>>>>
கடைசி படமும் கண்ணைக் கவர்வதாகவே உள்ளது.
ReplyDeleteவழக்கம் போல் பிரஸாதங்கள் ருசியோ ருசியாக உள்ளன.
அனைத்துக்கும் பாராட்டுக்கள்.
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
-oOo-
அத்தனையும் மனதை கொள்ளை கொள்கின்றது சகோதரி!
ReplyDeleteசரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!
பக்தி சரஸ்வதி பூசை வாழ்த்து.
ReplyDeleteஇனிய பதிவும் படங்களும். அன்பு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்களுக்கும் சரஸ்வதி பூஜை தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்களும் செய்திகளும் அருமை...
ReplyDeleteமெளஸ் படம் வெகுவே அழகு!
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
சரஸ்வதி பூஜை குறித்த விரிவான தகவல்களும் அழகிய படங்களும் கண்ணைக் கவர்ந்தன! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசரஸ்வதிபூஜை நல்வாழ்த்துக்கள். சரஸ்வதிபூஜை விளக்கங்களுடன் படங்களும் மிகவும் அருமையாக இருக்கு.
ReplyDeleteமவுசுக்கு வந்த மவுசு! புதுமை! ஆன்மீக பதிவுகளைப் படைக்கும் உங்கள் சுட்டிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகண் கொள்ளாக் காட்சிகளாக சரஸ்வதி பூஜை படங்கள்.. அருமை!..
ReplyDeleteபடங்களும் விளக்கமும் அருமை...
ReplyDelete
ReplyDeleteநவராத்திரியின் சிறப்புக்களை நல்ல வரிகளில் அழகாகச் சொல்லிச் சென்றதிந்தப் பதிவு!
தங்களுக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா. தங்களின் இறை பற்று வியக்க வைக்கிறது, மற்றவர்களிடமிருந்து மாறிபடுத்தி காட்டுகிறது. அனைத்தும் அருமை அம்மா. பகிர்வுக்கு நன்றீங்க.
ReplyDeleteVery fine write up dear.Let the Saraswathi bless you to write more and more.
ReplyDeleteviji
அருமையான படங்களும் விளக்கங்களும் ஆன்மிக இன்பத்தை திகமாக்குகின்றன...நன்றி...
ReplyDelete