Friday, October 4, 2013

மஹாளய அமாவாசை






"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார் தெய்வப்புலவர் திருவ்ள்ளுவர் ..

பித்ருக்களின் ஆராதனைக்கு ”மஹாளயம்” என்று பெயர்.

நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள். 

தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். 

[bhugnam-on-plate.jpg]
இங்கே கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது. - 

மஹாளய அமாவசை தினத்தில் மறைந்த முன்னோர்களை 
நினைத்து வணங்கிபடையலிடுவது வழக்கம்.
அமாவாசை தினங்களை  மிகவும் புனிதமாக கருதுவtதால்
‘நிறைந்த நாள்’ என்ற பெயரும் உண்டு. - 
இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. 

செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் தெய்வமான பிதிர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். 
சிரார்த்த கடன்களை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். 
பல வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது..!

முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீய சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோர்களான பித்ருக்களுக்கு வழிபாடு செய்யவேண்டியது அவசியம்..!
பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் போது அமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் ,
சந்திரனின் தென்பாகமும்  சூரியனுக்கு  நேராக நிற்கிறது. 
விஞ்ஞான ரீதியாக பித்ருக்கள் லோகம் பூமியை சமீபிக்கும் 
காலம் கணிக்கப்பட்டு மஹாளய பக்ஷமாக வழங்கப்படுகிறது
தங்கள் தலைமுறைகளுக்கு மரபணுக்கள் மூலம் அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். 

இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும்
ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது. 
 
நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். 
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.
வேறொரு நாட்டில் இருக்கும் நண்பர் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது, எப்படி அந்த நாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ, அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ரு கடன் அதாவது கடமை, அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச் சேரும்
பித்ருலோகத்தில் வாழும் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது  சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். 
இதுதான் இந்து மதத்தின் மகோன்னதம்!
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி.
தலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான்.
மஹாளய அமாவாசை தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம். 
வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

21 comments:

  1. Nice information .. thanks for sharing...

    ReplyDelete
  2. விளக்கமான சிறப்பு பகிர்வு அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. மஹாளயத்தின் சிறப்பு, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமை அனைத்தும் எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள்! நல்லதொரு ஆன்மிகப் பதிவு! பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு.
    வாருங்கள் ! அனைவரும் பித்ரு பூஜை செய்து
    நன்மைகள் பல பெறுவோம்.

    ReplyDelete
  5. அறியாதன அறிந்தேன்
    அழகியபடங்களுடன் கூடிய விரிவான
    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. படங்களுடன் விளக்கம் மிகவும் அருமை.......நிறைய தெரிந்து கொண்டேன் இன்று !

    ReplyDelete
  7. படங்களுடன் விளக்கம் அருமை அம்மா...

    ReplyDelete
  8. ’மஹாளய அமாவாசை’யை முன்னிட்டே என்னால் இன்று உடனடி வருகை தர முடியாமல் உள்ளது.

    மீண்டும் பிறகு வர முயற்சிக்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  9. மிகவும் அருமையான விஶயங்கள். பித்ருகளுக்காக செய்யவேண்டிய கடமைகள். நிரைய விஶயங்கள் தெரிந்துகொள்ள முடிவதில் மிக்க ஸந்தோஸம்.அன்புடன்

    ReplyDelete
  10. வழக்கம்போல் சிறந்த படைப்பு. எனவே...வழக்கம்போல் நன்றி!

    ReplyDelete
  11. ஒவ்வொரு விளக்கங்களும் அல்வா போல மிருதுவாகவும் இனிமையாகவும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    >>>>>

    ReplyDelete
  12. உங்களைத்தவிர வேறு யாராலும் இவ்வளவு விளக்கமாக இதனை எடுத்துக்கூறி புரிய வைக்கவே முடியாது. ;)))))

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  13. பஞ்சமில்லாமல் இத்தனைப்படங்களையும் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்து, ஓடியோடி சேகரித்து, ஒருங்கிணைத்துத் கொடுத்துள்ளது, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    எப்படி? எப்படி? எப்படி? !!!!!

    இரவு தூக்கத்தையும் முழுமையாக இழந்து கடும் உழைப்பு உழைக்கிறீர்களே !

    உங்களுக்கு தினமும் 24 மணி நேரங்களே போதாது போலிருக்கிறதே !!

    தயவுசெய்து உடம்பையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என ஒருவித வாத்சல்யத்துடன் கூடிய தனி அக்கறையினால் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  14. தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் எங்களுக்காகத் தந்து வருவதால், அது சற்றே சிறியதாகவும், ஒரு பத்துப் படங்களுக்கு மேல் இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    உங்களின் கடும் உழைப்பினைக்கண்டு பயந்துபோய், மனதில் கவலை கொண்டு, தங்களின் மேல் எனக்குள்ள தனி அக்கறையினால் இதை இங்கு சொல்லியுள்ளேன்.

    தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்காதீங்கோ.

    >>>>>

    ReplyDelete
  15. மிகவும் அற்புதமான படங்களுடன், அட்டகாசமான விளக்கங்களுடன் இன்று கொடுத்துள்ள பகிர்வுக்கு என் நன்றியோ நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வாழ்க ! வாழ்க!! வாழ்க !!!

    நீடூழி வாழ்க !!!!

    இதுபோல பயனுள்ள பதிவுகளை சுருக்கமாகவும் சுவையாகவும் மேலும் மேலும் தினமும் தருக !!!!

    பிரியமுள்ள
    VGK

    -oOo-

    ReplyDelete
  16. பித்ருக்களுக்கான தர்ப்பணத்தில் யாருமற்ற அனாதைகளுக்காகவும் மந்திரங்கள் சேர்த்த நம் பாரம்பர்யம் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  17. பெற்றோர் இருக்கும்போது அவர்களைக் கவனியாமல் பித்ரு கடன் என்பதை சடங்காகச் செய்வதில் பலனுண்டா? மாறுபட்டக் கருத்து பிரசுரிக்க விரும்பாவிட்டால் விட்டு விடலாம். பல விஷய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. அந்த முதல் படம் அழகான வண்ண‌ச்சேர்க்கைகளுடன் அருமையாக இருக்கிறது.
    மிகச் சிறந்த பதிவு ராஜராஜேஸ்வரி! வாழ்த்துக்கள்!
    திருவள்ளுவரின் குறள் தொடங்கி பதிவு முழுமையும் அருமை!

    ReplyDelete
  19. அருமை!
    மஹாளய பட்சத்தில்தான் விட்டுப்போன பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது!(காருணீக பித்ரு)

    ReplyDelete
  20. எள்ளும் நீரும் தரும் பலன்களைப் பார்த்தேன். அவை அவர்களை சென்றடையும் என்பது உண்மை ஆனாலும் நம் முன்னோருக்கு நாம் செய்கின்றோம் என்னும் திருப்தியே மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்

    ReplyDelete