துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைன்தேன்
ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
ஏய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்ஙத்தரவணைப் பள்ளியானே!
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்று புராணம் கூறுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது.
தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப்பண்ணு வார்கள்.
கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.
தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதி களுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள், விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.
மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.
அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, பெரிய சந்நிதிக்குக் கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.
பெரிய சந்நிதியில் அருள்புரியும் உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருளி அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு
அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.
இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார்
-ஸ்ரீஆண்டாளின் வளர்ப்புத் தந்தைதான் பெரியாழ்வார் -
தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும்.
வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.
ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
தீபாவளி சீர் பெற்ற பெருமாள், மீண்டும் சந்தனு மண்டபம் வருவார்.
மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.
அதன்பின், கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள்.
அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார்.
பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.
Deepavali Purappadu at Sri Vaikuntanathar Thirukkoil, New Delhi
VERY VERY GOOD MORNING !
ReplyDeleteHAVE A VERY NICE DAY !!
[ஏதோ ஓர் பழக்க தோஷம்]
>>>>>
ஸ்ரீரங்கநாதரின் ஜாலி அலங்காரம்
ReplyDeleteஜாலிலோ ஜிம்கானாவாகத்தான் இருக்கும் போலிருக்கு.
மீண்டும் ஜாலியாக வருவேன்.
>>>>>
முதல் படமும், பின்னலங்காரப்படமும், பளபளப்பான தங்க விமானப்படமும் சும்மா ஜொலிக்குது.
ReplyDeleteமாதுளை முத்துக்கள் நிறத்தில் ஆபாரணங்கள் அருமையோ அருமை.
>>>>>
மொத்தத்தில் சுருக்கமான விளக்கங்களுடன், சுவையான படங்களுடன், கிளிமண்டபத்தில் காக்க வைத்து, சாதனைக்கிளியாய்ப் பறந்து வந்து, தீபாவளிச்சீர் அளித்து மகிழ்வித்துள்ளீர்கள். ;)))))
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நன்றிகள். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் பெருமாளிடம் பரிசுபெற்று தங்கள் சந்நதிக்குத் திரும்பும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித்தாயார் மற்றும் ஆண்டாள் இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது.
ReplyDeleteஆனால் என் ஸ்வீட் ஸ்ரீரங்கநாயகி அம்பாள் [கலந்துகொள்ளத்]
’த யா ர்’ என்று தெரிகிறது. நன்னாப் படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்.
தங்களின் இந்த ஸ்வீட் பதிவினை தரிஸித்தாலே ஆடை ஆபரணங்களுக்கும், பணத்துக்கும் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.
நன்றியோ நன்றிகள்.
[தயாரை தாயாராக மாற்றத் தாங்கள் இப்போ தயரா? ;))))) ]
அன்புடன் VGK
Revised Comment:-
ReplyDeleteஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் பெருமாளிடம் பரிசுபெற்று தங்கள் சந்நதிக்குத் திரும்பும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித்தாயார் மற்றும் ஆண்டாள் இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது.
ஆனால் என் ஸ்வீட் ஸ்ரீரங்கநாயகி அம்பாள் [கலந்துகொள்ளத்]
’த யா ர்’ என்று தெரிகிறது. நன்னாப் படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்.
தங்களின் இந்த ஸ்வீட் பதிவினை தரிஸித்தாலே ஆடை ஆபரணங்களுக்கும், பணத்துக்கும் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.
நன்றியோ நன்றிகள்.
[தயாரை
தாயாராக
மாற்றத்
தாங்கள்
இப்போ
த யா ரா ?
;))))) ]
அன்புடன் VGK
அலங்கார படங்கள் மனதை கொள்ளை கொண்டது... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகான அலங்காரம் ஸ்ரீரங்கநாதருக்கு. சிறப்பான தகவல்கள். நன்றி.
ReplyDeleteஜாலி அலங்காரம் பற்றிய உங்களது பதிவும், பதிவிற்கு அய்யா VGK அவர்கள் தந்த நகைச்சுவையான கருத்திரைகளும் நல்ல ரசனை
ReplyDeleteதி.தமிழ் இளங்கோ has left a new comment on the post "ஸ்ரீரங்கநாதர் ஜாலி அலங்காரம்":
Delete//ஜாலி அலங்காரம் பற்றிய உங்களது பதிவும், பதிவிற்கு ஐயா VGK அவர்கள் தந்த நகைச்சுவையான கருத்துரைகளும் நல்ல ரசனை //
என் அன்புக்குரிய திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களே! வாருங்கள், வணக்கம்.
என் நகைச்சுவையான கருத்துரைகளைப் புரிந்துகொண்டு ரசித்தமைக்கும், இங்கு அதை சுட்டிக்காட்டியமைக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
இன்றே தீபாவளி வந்து விட்டது போன்றதொரு உணர்வு.
ReplyDeleteபடங்கள் கொள்ளை அழகு.
ஆழ்வார் தன் மருகனுக்குச் சீர்தரும் வைபவம். அழகான படங்களுடன் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி!..
ReplyDeleteஆழ்வார் தன் மருகனுக்குச் சீர்தரும் வைபவம். அழகான படங்களுடன் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி!..
ReplyDeleteசிறப்பான பகிர்வு. எங்கள் ஊர் ரங்கநாதரின் ஜாலி அலங்காரத்தை படங்களுடன் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteரங்கநாதர் அலங்காரம் படங்கள் அனைத்தும் அருமை. சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteதரிசித்து மகிழ்ந்தோம்
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
இரங்கநாதர் அலங்காரம், அழகு அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
சிறப்பான பதிவு!
ReplyDeleteஐயா கோபால கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை கமெண்டும் ரசித்தேன்.
கே. பி. ஜனா... has left a new comment on the post "ஸ்ரீரங்கநாதர் ஜாலி அலங்காரம்":
Delete//சிறப்பான பதிவு!
ஐயா கோபால கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை கமெண்டும் ரசித்தேன். //
வாங்கோ திரு. கே.பி.ஜனா சார், வணக்கம்.
என் நகைச்சுவைக்கமெண்டை எல்லோருமே ரஸிக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே, இன்னும் இந்த மேடம் அவர்கள், தயாரை தாயாராக்கத் தயார் இல்லாமல் இருக்கிறார்கள், என்பதில் அவர்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
திருத்தம் செய்துவிட்டால் யாராலும் என் கமெண்ட்ஸ்களை அவ்வளவாக ரஸிக்க முடியாமல் போகும் அல்லவா !
அதனால் மட்டுமே அனைத்தும் அறிந்த அம்பாள் மெளனம் சாதிக்கிறார்கள் என நினைத்து நான் மேலும் மகிழ்கிறேன்.
அன்புடன் VGK
நாம் நமக்கு என்னவெல்லாம் செய்து கொள்ள விரும்புகிறோமோ அவை அனைத்தையும் அவனுக்கும் செய்து மகிழ்கிறோம். இந்த எண்ணை காப்பு , திருமஞ்சனம் எல்லாம் பக்தர்கள்காணக் கொடுப்பினை உண்டா. ?
ReplyDeleteஜாலி அலங்காரம், முன் அலங்காரம், பின் அலங்காரம், பாத சேவை எல்லாம் கண் கொள்ளா காட்சிகள்.
ReplyDeleteதரிசனம் செய்து சகல நன்மைகளும் பெற்றோம்.
நன்றி.
எங்களை ஸ்ரீரங்கத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள்! அப்படியே பெருமாள் கண்முன்னே வந்துவிட்டார்!
ReplyDeleteநன்றி!
அறியாத தகவல்கள்! ஜாலி அலங்காரம்! தீபாவளி சீர்! படித்து மகிழ்ந்தேன்! படங்கள் மிக அழகு! நன்றி!
ReplyDeleteரங்கா! ரங்கா! ஸ்ரீரங்கநாதர் தீபாவளி சீர் பெரும் தகவல்கள் அருமை அழகு. பகிர்வுக்கு நன்றி அம்மா.
ReplyDeleteஅலங்காரம் அழகு. அத்தனை தகவல்கள் புதுமை. அரங்கநாதரை நேரில் வழிப்பட்ட மகிழ்ச்சி. தங்களது இறைப்பணிக்கு நன்றீங்க அம்மா.
ReplyDeleteஅழகான பகிர்வு
ReplyDeleteஅற்புதமான படங்கள்....
அருமை அம்மா...
Its not possible for me to go there enjoy all. But through your writeups and pictures, i felt as if i am there. Thanks dear.
ReplyDeleteviji
அரங்கனின் அலங்கார தரிசனமும் , தீபாவளி சீரும் பதிவை
ReplyDeleteசீரும் சிறப்புமாக திகழவைக்கின்றன..வாழ்த்துகள்...
ஸ்ரீரங்கத்தில் தாயார் எப்போதும் வெளியே வரமாட்டார்.. பெருமாள்தான் தேடிப் போகணும் !
ReplyDeleteவலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/