வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
ஒற்றை தண்டமும் பொக்கை வாய் சிரிப்பும், கொண்ட
கடவுளாக காந்தி உருமாறுவதை உணர முடிகிறது.
காந்தி தன் வாழ்நாளில் பல இடங்களில் ஆசிரமம் அமைத்தார்
எதையுமே வழிபாட்டு தலமாக, கோவிலாக மாற்றவில்லை
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம் பாளையத்தில் காந்தி கோவில் உள்ளது. இங்கு மூலவராக மகாத்மா காந்தி- கஸ்தூரிபா சிலைகள் உள்ள கோவிலில் தினசரி 2 காலபூஜைகள் நடந்து வருகிறது
ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியை யொட்டி
சிறப்பு பூஜைகள், அபிசேகம் நடக்கும்,
மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் செந்தாம்பாளையத்தில் உள்ள
மகாத்மா காந்தியின் கோவிலில் மக்கள் மலரஞ்சலி செலுத்தி
தேச பக்தியுடன் வழிபடுகிறார்கள்..!.
சிறப்பு பூஜைள், வழிபாடுகள் என கோவில் விழாக் கோலம் கொள்கிறது..
காந்தி பிறந்த நாளிலும் , சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றின்போதும் மக்கள் கூடி வழிபாடு செய்வது வழக்கம்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இருந்து பெரும் திரளான மக்கள் காந்தி ஜெயந்தி அன்று செந்தாம்பாளையம் காந்தி கோவிலில் கூடி வழிபாடு செய்வது வியப்பளிக்கிறது..!.
அம்மன் கோவில்களில் செய்யப்படுவது போலவே கோவிலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரைக் கொண்டு அபிஷேகமும் பால், தயிர், தேன், இளநீர், தானிய அபிஷேகங்கள் செய்யப்படுகிறது..!
கோவிலின் முதன்மை தெய்வமாக மகாத்மா இருக்கிறார்.
காந்தி தவிர கோவிலில் அமைந்துள்ள சிவன், சனீஸ்வரன் சிலைகளுக்கும்
சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது..!
கோவிலை சேந்தாரம்பாளையம் கிராம மக்கள் 1997ம் ஆண்டு கட்டியது.
முதல் தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது.
காந்தி கோவிலுக்கு முன்பு, மகாத்மாவின் துணைவியார் கஸ்தூரிபா காந்திக்கும் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டும். கோவிலுக்கு வந்து செல்லும் பாதையை செப்பனிட்டு நல்ல சாலையாக அமைத்துத் தர வேண்டும் எனவும். கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து ஏராளமான மக்கள் கோவிலுக்கு வர ஏற்படு செய்து வருகிறார்கள்..!
காந்தி கோவில் கட்டிய வையாபுரி முதலியார் பல இடங்களில் தேச விடுதலைக்கு பாடுபட்ட காந்தியின் சிலை உடைந்து பராமரிக்கப்படாமல் இருப்பதை கண்டு வேதனை அடைந்து தெய்வமாக மதிக்கப்பட வேண்டிய காந்திக்கு கோவில் கட்ட வேண்டும் என்று கருதி இந்த காந்தி கோவிலை கட்டினாராம்..!
காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யபடுகின்றன. .
கோவிலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர், தானிய அபிஷேகங்கள் செய்யபடுகின்றன.
மகாத்மாவுடன் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவரான வையாபுரி அவர்கள் முயற்சியல் செந்தம்பாளையம் ஊர் பொது மக்களின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டது
மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்த கோவில்
கோவை சரவணம் பட்டியிலும் அமைந்துள்ளது..
கோவில் வாசல் மற்றும் சுற்றுப் புறத்தை கூட்டி, தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்கிறார்.கதர் ஆடை அணிந்த பெரியவர் ஒருவர், "பளீர்' தோற்றத்துடன்....!
பூஜைக்குரிய தேங்காய், பழம், சந்தனம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருட்களுடன் கோவிலை திறக்கிறார்.
கோவையில், 1947ல் பிறந்த தங்கவேலு சுதந்திரம் வாங்குவதற்கு பட்ட கஷ்டங்கள் குறித்து பெரியவர்கள் பேசுவதை, கேட்டு வளர்ந்ததால், காந்திஜி மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் ஏற்பட்டது.
ரத்தம் சிந்தி யுத்தம் செய்து பெற்ற சுதந்திரம் ..!
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் ..சர்வேசா கருகத்திருவுளமோ ..??
அவரைப் பொறுத்தவரை, காந்திஜிதான் கடவுள். காந்திஜிக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி ஏற்றி, வந்தே மாதரம் பாடல்கள் பாடி, "மகாத்மா காந்திக்கு ஜே' என்ற, கோஷத்தை, மந்திரம் போல சத்தம் போட்டு சொன்னபடி, கற்பூர ஆரத்தி காட்டுவதற்கும், வெளியே பொதுமக்கள் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது.
சுதந்திர தினம் என்பதால், ஜிலேபி, கடலை உருண்டை, சாக்லெட் போன்ற, இனிப்புகளும், காந்திஜியின் சத்திய சோதனை புத்தகமும், தேசிய கொடியும் வழங்கப்படுகிறது.
இது முடிந்ததும், , தன் இரண்டு சக்கர வாகனத்தில், ஆயிரக்கணக்கான தேசிய கொடிகளையும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவரது இருசக்கர வாகனத்தை, சிறிய தேர் போல செய்து, அதனுள், காந்தி சிலையை வைத்திருந்தார்.
காந்தி மார்க்கெட் சென்று பொதுமக்கள் முன், சுதந்திர தினத்தின் சிறப்பையும், காந்திஜியின் போதனைகளையும் எடுத்துச் சொல்லி, தேசிய கொடி, காந்தி படம், சத்திய சோதனை புத்தகத்தை வழங்கிவிட்டு, அடுத்த இடத்திற்கு விரைகிறார்.
காந்திஜியின் போதனைப்படி, எளிய வாழ்க்கை வாழ்ந்த தங்கவேலு, மும்பை சென்று தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்வுக்கு வந்து வருமானத்தில் பெரும்பகுதியை சமூக சேவை, பார்வையற்றோர், ஊனமுற்றோர்களுக்கு உதவி, அவர்களுக்கு பக்க பலமாக இருந்தார்.
தனது எளிமை மற்றும் சமூக பணியின் காரணமாக,
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின், நண்பரானார்.
இவரது வளர்ச்சி பிடிக்காத, சிவசேனாவின் பால்தாக்கரே, "தமிழன்' என்று, இனம் சார்ந்த, பிரித்தாளும் அரசியலில் இறங்கினார்.
"இந்தியர் அனைவரும், ஒரு தாய் மக்கள்' என்ற எண்ணம் கொண்ட தங்கவேலு, இதனால், மனம் வேதனையடைந்து, கோவையை வந்தடைந்தார்.
தீவிர காந்திய பிரசாரத்தில் இறங்கியவர், காந்திஜிக்கு, கோவில்
கட்ட முடிவு செய்து, தன் சொத்தை விற்று, கோவில் கட்டினார்.
காந்தி கோவிலில், தினமும் வழிபாடு உண்டு.
இவரை ஈர்த்த திருவள்ளுவர் மற்றும் காமராஜரும் தற்போது,
தெய்வமாக கோவிலுனுள் காந்தி அருகே இருக்கின்றனர்.
ஊரும், உறவும் ஆரம்பத்தில், ,தங்கவேலுவை ஒரு மாதிரியாக பார்த்தாலும், இப்போது, "இப்படி ஒரு அபூர்வ மனிதர் நம்மிடையே இருக்கிறாரே...' என்று, மரியாதையுடன் பார்க்கின்றனர்.
வாழ்வாதாரத்திற்கு, பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார்..
நேரம் கிடைக்கும் போதெல்லாம், பள்ளி, கல்லூரி மற்றும் பொது
இடங்களுக்கு சென்று, காந்தியின் கொள்கைகளை பிரசாரம் செய்கிறார்.
நேர்மையும், எளிமையும் கொண்ட, ஒரு உண்மையான காந்தியவாதியாக வாழும் தங்கவேலு, , . மற்றவர்கள் பார்வையிலே, எப்படி இருந்தாலும் .....
"திருவள்ளுவரும், காந்தியும், காமராஜரும் கோவிலினுள் சிலையாக, பேசாமல் நின்று கொண்டு இருக்கின்றனர். கோவிலுக்கு வெளியே, பேசிக்கொண்டு இருக்கிறார் தங்கவேலு, ..' என்று பெருமைபடுகின்றனர் கோவை மக்கள்..
பொள்ளாச்சி சந்தையில் உள்ள மாரியம்மன் கோவில் கோபுரத்தில்
முதல் அடுக்கின் மையத்தில் காந்தியடிகள், அவருக்கு வலது புறம் ராமகிருஷ்ண பரமஹம்சர், இடது புறம் புத்தர் இருப்பதைக்காணலாம் ..! .
மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும்
காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்
இலங்கையில் வல்வை சிவன் கோவில் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில், மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவச் சிலையைக் காணலாம்.
பொள்ளாச்சி சந்தையில் உள்ள மாரியம்மன் கோவில் கோபுரத்தில்
முதல் அடுக்கின் மையத்தில் காந்தியடிகள், அவருக்கு வலது புறம் ராமகிருஷ்ண பரமஹம்சர், இடது புறம் புத்தர் இருப்பதைக்காணலாம் ..! .
மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும்
காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்
இலங்கையில் வல்வை சிவன் கோவில் கோபுரத்தின் தெற்குப் பக்கத்தில், மகாத்மா காந்தியின் நூல் நெய்தபடி உள்ள திருவுருவச் சிலையைக் காணலாம்.
Yonge Street towards Richmond Hill
Statue of Mahatma Gandhi at the Padmavati temple in Ralegan Siddhi.
Mahatma Gandhi Temple in Gandhinagar
9.5 Feet Bronze Statue Of Mahatma Gandhi
சம்பல்பூரில் உள்ள காந்தி கோவில்
The Gandhi Mandir At-Bhatra, P.O. Dhanupali, Sambalpur – 768005, Orissa, India,
- NOVEL IDEA:About 1,012 students of Amar Concept School dressed as Gandhi took out a rally, organised by YUVA, an NGO, to promote Gandhian principles and to get listed in the Guinness Book of World Records on Beach Road on Saturday in Visakhapatnam
இதுவரை அறியாத கோவில்
ReplyDeleteஅறியாத அரிய செய்திகள்
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மகாத்மாவை வணங்குவோம்... வையாபுரி முதலியாரையும் தங்கவேலையும் போற்றுவோம்!!
ReplyDeleteகாந்தி பிறந்த நாளில் ஒரு வித்தியாசமான சிறப்பு பதிவு. செந்தாம் பாளையம் காந்தி கோயில் பற்றி விரிவான செய்திகள். மற்ற ஊர் காந்தி கோயில்கள் குறித்தும் குறிப்புகள். அனைத்தும் அருமை. வாழ்க எம்மான்! காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பான நாளில் சிறப்பான தகவல்கள் அடங்கிய பகிர்வு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....
ReplyDeleteWe remember Gandhi
ReplyDelete's birthday
but have conveniently forgotten him.
subbu thatha
http://wallposterwallposter.blogspot.in/
அரிய தகவலை தெரிவித்தமைக்கு நன்றி
ReplyDeleteஅரிய தகவல்கள்....
ReplyDeleteபல இடங்களில் கோவில்கள் கட்டியிருப்பது இன்றைய உங்கள் பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
அரிய புகைப்படங்களுக்கு நன்றி!
ReplyDeleteபுதிய அரிய தகவல்கள் !
ReplyDeleteஅறிந்து கண்டு மகிழ்வுற்றேன் .
பகிஎவிர்க்கு நன்றி.
அறிந்திடாத விடயங்களை அறிவித்தமைக்கு நன்றி!
ReplyDeleteகாந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
இதுவரை அறியாத பல அற்புதமான விஷயங்களை அறிய முடிந்ததில் மகிழ்ச்சியே.
ReplyDelete'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்பதற்கு காந்தி கோயில் ஒரு நல்ல உதாரணமாகத் தெரிகிறது.
>>>>>
அனைத்துப் படங்களையும் வெகு அருமையாகத் திரட்டிக்கொடுத்துள்ளது, மிகச்சிறப்பான செயலாகும்.
ReplyDeleteதங்களின் வித்யாசமான கடும் உழைப்பினைக் காண முடிகிறது. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>
ReplyDeleteதிரு. வையாபுரி முதலியார் அவர்கள் பாராட்டுக்குரியவரே,
//உள்ளே சிலையாக உள்ளவர் வெளியே கோவைத் தங்கவேலுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார் //
அருமையான பொருத்தமான உரையாடல்கள். ;)
>>>>>
கடைசியில் காட்டப்பட்டுள்ள ஆறு படங்களும் சூப்பராக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
>>>>>
வெற்றிகரமான தங்களின் இந்த ஆயிரத்து ஐம்பதாவது [1050] பதிவினைக் கண்டதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. ;))))))
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
நீடூழி வாழ்க !
-oOo-
எத்தனை எத்தனை தகவல்கள், அத்தனையும் மிக அருமை.
ReplyDeleteமகாத்மா காந்தி பற்றிய அரிய தகவல்கள் மிக சிறப்பாக செய்திகளும் படங்களும் அமைத்து அசத்தி விட்டீர்.
பாராட்டுக்கள் வாழ்த்துகள். நன்றி அம்மா.
இன்றும் இங்கு எத்தனை புதிய தகவல்கள்!
ReplyDeleteஅருமை! நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
காந்தி கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஇதற்காகவே ஈரோடு போக வேண்டும் என்று தோன்றுகிறது.
நன்றி பகிர்விற்கு.
காந்தி ஜயந்தி அன்று மட்டுமல்லாமல் என்றும் அவரது நினைவினைப் போற்றுவோம். evolution of temples இப்படியும் இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம்மில் ஒருவராய் வாழ்ந்தவரைப் போற்றுவது சரி. ஆனால் அவரைத் தெய்வமாக்குவது.....?
ReplyDeleteமகாத்மா காந்தி பற்றிய பல அரிய தகவல்களிற்கு மிக நன்றி.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இப்படியும் ஒரு கோயில் இருக்கிறதோ? இது எனக்கு முற்றிலும் புதிது.. ஆச்சரியம்... நம்ப முடியவில்லை..
ReplyDeleteதிரு. வையாபுரி அய்யா அவர்களுக்கும், தங்கவேலு அய்யா அவர்களுக்கும் வணக்கங்கள்.
ReplyDeleteமகாத்தமா காந்திக்கு ஜே!
ஆஹா! காந்தி மகான்!
கைராட்டையே ஆயுதம்,
கதராடையே சோபிதம்
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது படங்களை பார்க்கும் போது.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்
நன்றி.
மகாத்மாவின் கோவில்களை பார்த்து ரசித்தோம். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteதேடித்தேடி எடுத்து சிறப்பாக தொகுத்து கொடுக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
தேனீயைப் போல திரட்டித் தந்த அற்புத தகவல்கள்!.. மிக்க நன்றி!..
ReplyDeleteமஹாத்மாவிற்கு கோயில். அதுவும் படங்களுடன். எவ்வளவு அரிய
ReplyDeleteசேகரங்கள். படித்தேன்.ரஸித்தேன். எவ்வளவு உழைப்பு. அன்புடன்