Saturday, October 5, 2013

சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் நவராத்ரி




ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

என லலிதா சஹஸ்ரநாமத்திற்கு இணையான அபிராமி அந்தாதியில் சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனையை அன்னை அபிராமியை வணங்கிப்போற்றி  சௌபாக்யங்கள் வர்ஷிக்கும் நவராத்ரி தினங்களை ஒன்பது நாட்களும்  கொலுவைத்து கோலாகலமாய் கொண்டாடிக்களிப்போம் ..

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது தான் அர்த்தம்.

உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் முக்கிய தத்துவம் ...

சர்வ வல்லமை படைத்த பராசக்தி  நவராத்ரி விரதத்தால்  மகிழ்ந்து 
சகல சௌபாக்கியங்களும்  அருள்கிறாள்..!..
புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், 
கன்னி இராசியில் சஞ்சரிக்கும்  தட்சணாயண காலமாகும்.

அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் நம் நாட்டில் நிலவுவதால்  இந்த காலத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால்  பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். 

புது வாழ்வு பிறக்கும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை   ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டு பண்டிகையாகக் கொண்டாடி  உடம் நலத்தைப் பேணி வந்துள்ளது மருத்துவ ரீதியிலும் ,கொலு வைத்து கொண்டாடும் பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது


நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும்  முதன்மைத்  தேவைகளான கல்வி, செல்வம், வீரம்  என்கிற மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே  விரத்தின் நோக்மாகும். 

முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் 
வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும்..

அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி 
மஹாலஷ்மியை வழிபடவேண்டும். 

இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். 

நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை -கலைமகள் விழா - ஆயுத பூஜை என- சிறப்பிடம் பெறுகிறது 

புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமியான   9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுகிறோம் ..!






24 comments:

  1. வணக்கம்
    அம்மா

    நவராத்திரி பற்றிய பதிவு மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா படங்களும் அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நவராத்திரி நன்னாளில் கண்குளிர வண்ணப் படங்களுடன் கொலுவும்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் நன்றாகச் சொன்னீர்கள். படங்கள் வழக்கம் போலவே அருமை.

    ReplyDelete
  4. நன்மையை தரும் நவராத்திரியின் அழகான பதிவு. நன்றி அம்மா

    ReplyDelete
  5. very nice post about navarathiri. please write how to conduct simple pooja from first day to ninth day during navarathiri

    ReplyDelete
  6. சுண்டல் படங்கள் தான் டாப்.
    நாவில் நீர் ஊற வைத்தது.
    சக்தியின் அருள் பெறுவோம்
    அவர்களை வணங்கி.
    திருஈங்கோய் மலை சென்று வந்தோம்.
    ஆனால் மலை ஏற முடியவில்லை.
    மரகத லிங்கம் திருடு போனதாகக் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  7. ஆராக்கியத்தை உணர்த்தும் பண்டிகைகள் அற்புதமாக படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்புங்க.

    ReplyDelete
  8. கொலுவைப் பற்றிய பல தகவல்களையும் அழகிய படங்களையும் தந்திருக்கிறீர்கள் இப்பதிவில் . நகைகள் ஜொலிக்கும் படம் சூப்பர்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  10. எனக்கு எப்போதும் பிடித்தமான கீழிருந்து ஆறாவது வரிசைப்படத்திற்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    தாமரை மேல் அமர்ந்து இரு கரங்களிலும் எனக்குப்பிடித்தமான செந்தாமரைகளை ஏந்தி, மற்ற இரு கரங்களால் செல்வத்தை வர்ஷிக்கும் மஹாலஷ்க்ஷ்மி அம்பாளுக்கு என் இனிய வந்தனங்கள்.

    மிகவும் லக்ஷ்மீகரமாக என் மனதை வசீகரிக்கும் படம் அல்லவா அது !

    எத்தனை முறை நீங்கள் காட்டினாலும், பார்க்கப் பார்க்க எனக்கு அலுக்கவே அலுக்காத மிக அழகான அற்புதமான படம் அது.

    >>>>>

    ReplyDelete

  11. பெண்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் சேர்த்து இந்தப்பதிவின் மூலம் புரட்டாசி மாதத்தில் புரதச்சத்தினை அளித்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    சுண்டல்களும் இதர திண்பண்டங்களும் அருமையோ அருமை.

    பிரஸாதத்தைக் கண்ணில் காட்டியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    அவை யாவும் சுவையோ சுவையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  12. கடைசியில் காட்டியுள்ள கொலு பொம்மைகள் கண்ணைக் கவர்வதாக உள்ளன.

    குறிப்பாக தஸாவதார பொம்மைகள்.;)))))

    >>>>>

    ReplyDelete
  13. ’செளபாக்யங்கள் வர்ஷிக்கும் நவராத்ரி’ என்ற தலைப்பில், இந்த அழகான பதிவின் மூலம் செளபாக்யங்களை எங்களுக்கும் வர்ஷித்துள்ள, என் பிரியமான அம்பாளுக்கு, என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான் இனிய நல்வாழ்த்துகள்.

    சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்து விடைபெறுகிறேன்.

    பிரியமுள்ள VGK

    -oOo-

    ReplyDelete
  14. படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல சூப்பரோ சூப்பர் தான்.

    சந்தோஷம் அளிக்கும் பண்டிகை துவங்கி விட்டது.

    இனி ஒவ்வொருநாளும் உங்கள் பதிவுகள் எங்கள் கண்களுக்கு விருந்தாக அமையப்போவது நிச்சயம். ;)

    >>>>>

    ReplyDelete

  15. ’செளபாக்யங்கள் வர்ஷிக்கும் நவராத்ரி’ என்ற தலைப்பில், இந்த அழகான பதிவின் மூலம் செளபாக்யங்களை எங்களுக்கும் வர்ஷித்துள்ள, என் பிரியமான அம்பாளுக்கு, என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான் இனிய நல்வாழ்த்துகள்.

    சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்து விடைபெறுகிறேன்.

    பிரியமுள்ள VGK

    -oOo-

    ReplyDelete
  16. நவராத்திரி நன்னாளில் படிக்கத் தித்தித்தது தங்கள் அற்புதமான பதிவு!

    ReplyDelete
  17. அற்புதமான படங்கள்...
    அழகான பகிர்வு அம்மா.

    ReplyDelete
  18. படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல சூப்பரோ சூப்பர் தான்.

    சந்தோஷம் அளிக்கும் பண்டிகை துவங்கி விட்டது.

    இனி ஒவ்வொருநாளும் உங்கள் பதிவுகள் எங்கள் கண்களுக்கு விருந்தாக அமையப்போவது நிச்சயம். ;)

    >>>>>

    ReplyDelete
  19. நவராத்திரியின் சிறப்பை அறிந்தோம்
    நம முன்னோர்கள் காலத்தோடு ஒத்து வாழ்வதற்காக
    அனைத்து வகையிலும் யோசித்துச் செய்து போன
    விஷயங்க்கள் அறிய மெய் சிலிர்த்தேன்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. மிகச்சிறப்பான படைப்பு.. நவராத்திரிக்குரிய அனைத்து தகவல்களையும், அதற்கான படங்கள், மற்றும் படையல்களையும் அறிந்துகொள்ள முடிந்த்து. அதுவும் தலைப்பிற்கு அடுத்து முதலில் உள்ள மின்னுகிற படம் மனதை கவர்ந்தது.

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
  21. முதல் படத்தில் சுப-லாப லக்ஷ்மி ஜொலிப்பதும் HAPPY NAVRATRI சொல்வதும் ஹாப்பியாக உள்ளது. ;)

    ReplyDelete
  22. பண்டிகை கொண்டாடுவதின் அர்த்தம் தெரிந்து கொண்டாடும் போது மேலும் மகிழ்ச்சி.
    புரதசத்து பெருகி, உடல் நலத்தோடும், மனநலத்தோடும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க தேவிகள் அருள்வார்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete