ஏழுமலை சிகரம்மீது இலங்கும் அன்புச் சிகரம்
என்னவே உன் சன்னதியை பக்தர் நெஞ்சம் பகரும்
ஆழிமகள் உறைவிடமே அருளின் மூலச் சுடரே
அழகுவிழி மலர்ந்திடுக அற்றதெங்கள் இடரே.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன் பவளவாய்காண்பேனே.
மிக அரிதான சாளக்கிராமக்கல்லில் சக்கரம் அமைந்திருக்கும்.
சாளகிரம மூர்த்தங்களை கோவில்களில் பூஜையில் வைத்து வணங்குவார்கள்.
திருப்பதியின் ஏழு மலைகளும் பிரம்மாண்டமான சாளக்கிராமக் கற்களே.
மலையில் எந்த இடத்தை வெட்டிப்பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக்காண முடியும்.
சாளக்கிராமம் கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம்.
திருப்பதி மலையேறும் போது, சாலை போடுவதற்கு ஆங்காங்கே மலை வெட்டப்பட்டிருக்கும் இடங்களில் வெட்டுகளில் எல்லாம் சக்கரம் அமைப்பு அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலமாக இருப்பதால், மக்கள் மீண்டும், மீண்டும் காந்தமலையாக ஈர்க்கப்பட்டு நாடி வந்து ஆனந்தம் அடைக்கிறார்கள்.
திருமலை சாளகிராமக்கல் என்பதால் தான் இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பாமல் மலையேறி வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார்.
பின் இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து ஊர்ந்து ஊர்ந்தே திருமலை
ஏறி வெங்கடாசலதியைத் தரிசித்த பெருமை நிறைந்த மலை ..!
தமிழகத்தில் மொகலாய மன்னர்கள் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நம்பெருமாள் உற்சவர் சிலையை காக்க, வைஷ்ண பெரியவர் பெரும் சிரத்தை எடுத்தனர்.
60 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் நம்பெருமாள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டார்.
திருப்பதி திருமலையில் உள்ள வனப்பகுதியிலும், சில ஆண்டு நம்பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக திருப்பதி திருமலையில் உள்ள ஒரு மண்டபத்துக்கு, "ரங்கநாதர் மண்டபம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருமலையில் நம்பெருமாள் இருந்த சம்பவத்தை நினைவு கூறும்வகையில், திருப்பதியில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனி வார ஆஸ்தான உற்சவத்தின்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, மரியாதை திருப்பதி கோவிலுக்கு அனுப்புவது வழக்கமாக இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து, மாலை, வஸ்திரம், பூ, பழங்கள், மஞ்சள், சந்தனம் மங்கலப் பொருட்களை திருப்பதிக்கு அனுப்பி வைப்பது வழக்கம் ..
ஆடி மாதம் முதல் தேதியன்று நடக்கும் உற்சவத்தின்போது, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, ஸ்ரீரங்கம் கோவில் மாலை, பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது
வேங்கடத்தின் பெருமைகள் தந்தமைக்கு நன்றி சகோதரியாரே. ஒரு செய்தி, துறையூருக்கு அருகில் உள்ள பெருமாள் மலைக்குச் சென்றிருக்கின்றீர்களா? நான் பல முறை சென்றிருக்கின்றேன். திருப்பதியினைப் போன்ற கோயில் என்று கூறினார்கள். திருப்பதி கோயிலைப் போலவே, இக் கோயிலினைச் சுற்றி ஏழு மலைகள் இருக்கின்றன என்றும், திருப்பதியினைச் சுற்றி இருக்கும் மலைகளுக்கு உள்ள பெயரே, பெருமாள் மலையினைச் சுற்றி இருக்கும் மலைகளுக்கும் இருப்பதாக கூறினார்கள். இது தங்களின் தகவலுக்காக. பெருமாள் மலையில் தசாவதார மண்டபம் என்னும் பெயரில் ஒரு மண்டபம் இருக்கின்றது. பத்து அவதாரங்களைச் சித்தரிக்கும் கற்சிலைகள் ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் சிலைகளாகவே தோன்றாது. அற்புதமான திறமை. தாங்கள் சென்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன். நன்றி சகோதரியாரே
ReplyDeleteசிறப்பான விவரங்கள், சிறப்பான படங்கள். எந்த இடத்தில் மலையை வெட்டிப் பார்த்தாலும் கல்லில் சக்கர அமைப்புஇருக்கும் என்ற தகவல் எனக்குப் புதிது.
ReplyDeleteசிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்....
ReplyDeleteமிக்க நன்றி.
சிறப்பான படங்களுடன் தகவல்களும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாலை வணக்கம் அம்மா!!
ReplyDeleteஇராமானுஜர் திரு உள்ளத்தில் மலர்ந்த பக்தியை விளக்கிச்சொல்லும் பதிவு இது.
ReplyDeleteபாசுரம் இரண்டுமே அழகு.
பாடிப் பாடி மகிழ்ந்தேன்.
சுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
thans for sharing information about tirupathi with beautiful pictures
ReplyDeleteதிருப்பதி கோவிலுக்கு மாலை மரியாதை ரங்கநாதர் கோவிலில் இருந்து செல்லும் தகவல் இன்றே தெரிந்துகொண்டேன். படங்களும் வெகு சிறப்புங்க.
ReplyDeleteசக்கர அமைப்பு உள்ள படங்கள் அற்புதம்.
ReplyDeleteஎன்னுள் குடி கொண்டிருக்கும் வேங்கடவன் பற்றிய பதிவு!
ReplyDeleteஎன இல்லத்தின் பெயரே திருவேங்கிட அகம் , தான் நன்றி சகோதரி!
அருமையான படங்களும், விளக்கங்களும். திருமலையில் சாளக்ரமங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDelete’வளம் தரும் வேங்கடம்’ என்ற தலைப்பே அருமை. ;)
ReplyDelete>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு. ;)
ReplyDelete>>>>>
ReplyDeleteசாளக்கிராம படங்களும், திருப்பதி ஏழு மலைகளுமே சாளக்கிராம கற்கள் என்பதும், சக்கிர வடிவத்தால் அமைந்தவை என்ற தகவல்களும் அற்புதமாக உள்ளன.
தங்களின் பதிவும் அதுபோலவே காந்தமாக இழுப்பதாகத்தான் எனக்கு உள்ளது. ;)
>>>>>
திருப்பதியில் உள்ள ரங்கநாதர் மண்டபம், ஆண்டுதோறும் அனுப்பப்பட்டு வரும் பட்டு வஸ்திரம் + மாலைகள் + மங்கலப்பொருட்களின் மரியாதைகள் எல்லாமே நன்கு விளக்கியுள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)
ReplyDelete>>>>>
ஸ்ரீராமானுஜர் தன் முழங்கால்களால் திருப்பதி மலையேறியுள்ளது என்பது, அவருடைய தீவிர பக்தியைக் காட்டுவதாக உள்ளது. கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது !!!!!
ReplyDelete>>>>>
மிகச்சிறப்பான படங்கள் + விளக்கங்களுடன் அளித்துள்ள இன்றைய பதிவுக்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteவேங்கடவன் அருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நீடூழி வளமுடன் + நலமுடன் வாழ்க ! என வாழ்த்தி விடைபெறுகிறேன்.
-oOo-
உங்கள் பதிவைப் பார்த்ததும் திருவேங்கடம் செல்ல வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது.
ReplyDeleteவேங்கடவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
இந்தப் பதிவினைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களையும் வேங்கடவன் அருளட்டும். பல புதிய தகவல்கள் திருவேங்கட மலை பற்றி அறிந்துகொண்டேன். நன்றி!
ReplyDeleteஅற்புதமான தகவல்கள்!.. பெருமானின் திருவருள் எல்லாருக்கும் கிடைப்பதாக!..
ReplyDeleteஸ்ரீ ரங்கம் ரெங்க நாதர் கோவிலில் இருந்து வேங்கடவனுக்கு செல்வது போலவே ஸ்ரீ வில்லிபுத்தூர் சூடிகொடுத்த சுடர் கொடி ஆண்டாள் அணிந்த மலர்மாலைகள் கூட வேங்கடவேனுக்கு விருப்பம் என்று அங்கு அனுப்பி வைகப்படுகின்றனவே. திருமலையின் சிறப்புகளை படித்துக்கொண்டே இருக்கலாம் .அத்துனையும் இனிமையான ஒன்று.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை! புரட்டாசி மாதத்தில் நல்லதொரு பெருமாள் தரிசனம்! நன்றி!
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை....
ReplyDelete