Monday, November 12, 2012

ஸ்ரீலட்சுமி குபேர பூஜை.






ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை
கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை
தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.

செல்வவள லக்ஷ்மி மந்திரம்:
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய 
சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள 
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத 
லட்சுமி நாராயண தேவாய நமஹ!
ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதா ந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத் திம் மே தேஹி தாபா யஸ்வாஹா
என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வளம் பெருகும்


 இருபத்தியோரு நூல் சேர்த்து இருபத்தியோரு முடியுள்ள பட்டு அல்லது நூல் சரட்டைக் கையில் கட்டிக் கொள்ளவேண்டும். 

தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்தால் மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் 
கிடைக்கும் அஷ்ட ஐஸ்வர்யம் பெருகும். வறுமை நீங்கும்.  வித்தை, சந்ததி, பக்தி ஆகியவைகளை  அளிக்கும் வெகு அபூர்வமான பூஜை

இழந்த பொருட்களை திரும்பப்பெறலாம்! சுபோகங்களை அடையலாம்!

இந்திரன், அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு, ஐராவதம் என்றழைக்கப்படும் வெள்ளை யானையையும் வாகனமாய் பெற்றான்! 

தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார்.சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர்.

மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத் தில் அமர்ந்திருப்பவரும், 
மரகதம் போன்று ஒளிவீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமானின் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடைய வரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானைப் போற்றி வளம் பெறலாம்..

குபேர எந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.. 
தீடிரென்று செல்வச் செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. குபேர எந்திரம் இருக்கும் இடத்தில் பிரபஞ்ச சக்தியின் மூலம் செல்வம், பணப்பழக்கம், ஆகியவை உருவாக்கும் தன்மை உடையது. 

பூஜை செய்த குபேர எந்திரத்தை அலமாரி, பணப் பெட்டி, ஆகியவற்றிலும், எடுத்து வைக்கலாம்.

சக்தி வாய்ந்த எந்திரமும், சக்தி வாய்ந்த மந்திரமும் ஒன்று கூடும் பொழுது வெற்றி நிச்சயம். இந்தக் கட்டத்தில் உள்ள எல்லா எண்களையும் குறுக்கு நெடுக்காகக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 72- வரும். இது செல்வத்தைப் பெற்றுத் தரும் சக்தியைக் கொண்ட ஒரு மாய எண்ணாகும். இந்த  எண்களைக் கொண்ட சக்கர கட்டமைப்பும் உங்களுக்கு செல்வச் செழிப்பை உருவாக்குவதாகும்.  
குபேர பூஜையுடன் தனலட்சுமி , சௌபாக்யலட்சுமி யந்திரம் அல்லது படத்தையும் பூஜை செய்யவேண்டும்.

தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது செல்வம் பெருக வழி வகுக்கும் சிறந்த பலனைத் தரும்.

குபேர பூஜை:
நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணராகிய மகாவிஷ்ணுவின் மார்பில் குடி கொண்டிருப்பவள் லட்சுமி. நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தன்று விஷ்ணுவையும் அவர்மனைவியான லட்சுமியையும் பணத்திற்கு அதிபதியான குபேனையும் பூஜித்தால் பஞ்சமில்லாமல் பணம் பெருகும் என்பது ஐதீகம்.

நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அகலவும், காரியத்தடைகள் நீங்கவும், கடன் பிரச்னைகளிலிருந்து மீளவும், இல்லத்தில் வளம் கொழிக்கவும், செல்வம் செழிக்கவும் லட்சுமி குபேரன் ஆசி தருவான்!


கங்கா ஸ்நானம் செய்தபின் பூஜை செய்ய வேண்டும். லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; 

காசியில் கங்கையில் நீராடி அன்னபூரணியை வணங்குவர். அன்று அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும்.





 
தங்கத்தாலான கால பைரவரும்  தீபாவளி தினத்தன்று மட்டுமே வீதியுலா வருவார்.










34 comments:

  1. அழகான படங்கள்... பகிர்வு மிகவும் அருமை... நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. காணக்கண் கோடி வேண்டும் ...
    யாரையாவது த்ருஷ்டி சுத்திப்போடச் சொல்லுங்கள்.

    திருமதி
    ராஜ ராஜேஸ்வரி க்கும் அவரது குடும்பத்தாருக்கும்
    எங்களது தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    அழகான படங்கள்... பகிர்வு மிகவும் அருமை... நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..

    வலைச்சர தகவல் பகிர்வுக்கு நிறைவான நன்றிகள்..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. sury Siva said...
    காணக்கண் கோடி வேண்டும் ...
    யாரையாவது த்ருஷ்டி சுத்திப்போடச் சொல்லுங்கள்.

    திருமதி
    ராஜ ராஜேஸ்வரி க்கும் அவரது குடும்பத்தாருக்கும்
    எங்களது தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி./

    தம்பதி சமேதராக வந்து வாழ்த்தி ஒளிதந்தற்கு மிகவும் நன்றி ஐயா..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அற்புதமான படங்கள் பகிர்வுக்கு நன்றி

    தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அனைத்து படங்களும் மிக அருமை......இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. அழகான படங்கள், தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. I had to Kasi somany times b ut never had the Darshan of Golden Annapoorni. But here i am seeing HER. Thanks for sharing pretty pictures dear.
    happy Deepawali to you.
    viji

    ReplyDelete
  9. தீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
    என இத்திருநாளில் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  10. பூஜை விளக்கமும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. அன்புச் சகோதரி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களை அன்போடு கூறிக்கொள்கிறேன்.

    அருமையான ஆன்மீக வலைத்தளம் இது. முன்பும் வந்து பார்த்துப் படித்துவிட்டு போயிருக்கிறேன். பின்னூட்டமிடுவது இதுதான் முதல்தடவை.

    இம்முறையும் வந்து பார்த்துவிட்டு போகமுடியாமல் ஸ்ரீலக்ஷ்மி குபேரரும், அருமையான அழகான மஹாலக்ஷ்மி மற்றும் ஏனைய சக்திகளும் என்னை நிறுத்தி பதிவிடப் பணித்துவிட்டனர்..:)

    உங்களின் இவ் வலைப்பூவும் பதிவுகளும் ஆன்மீகப் பசிக்கு அருமையான உணவுச்சாலை..:)
    அறிந்திராத, அபூர்வமான, அற்புதமான விஷயங்கள் எத்தனை எத்தனை. தேடித்தேடி படங்களுடன் சிறப்பாக விளக்கமும் தந்து பதிவிடுகிறீர்கள்.

    சிறப்பான பகிர்வுகள். அத்தனையும் அருமை! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    மிக்க நன்றி! சோதரி!!!

    ReplyDelete
  14. இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. r.v.saravanan said...
    அற்புதமான படங்கள் பகிர்வுக்கு நன்றி

    தீபாவளி நல் வாழ்த்துக்கள் ..



    அற்புதமான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. அனைத்து படங்களும் மிக அருமை......இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்) //

    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..
    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. padmaja said...
    அழகான படங்கள், தீபாவளி வாழ்த்துகள்!//

    அழகானகருத்துரைக்கு இனிய நன்றிகள் ..
    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. viji said...
    I had to Kasi somany times b ut never had the Darshan of Golden Annapoorni. But here i am seeing HER. Thanks for sharing pretty pictures dear.
    happy Deepawali to you.
    viji //

    தங்க அன்னபூரணி தரிசனம் பெற்ற தங்கமான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. கவியாழி கண்ணதாசன் said...
    தீபத்திருநாளில் எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க
    என இத்திருநாளில் வாழ்த்துகிறேன் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  20. s suresh said...
    பூஜை விளக்கமும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! //


    கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. Sasi Kala said...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  22. ரெவெரி said...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

    நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  23. இளமதி said...
    அன்புச் சகோதரி!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களை அன்போடு கூறிக்கொள்கிறேன்.//

    கருத்துரை வழங்கியதற்கு
    அன்பான நன்றிகள்..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  24. Matangi Mawley said...
    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..



    நன்றிகள் ..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. மனத்தைக் கொள்ளை கொள்ளும் தீபாவளி சிறப்புப் பகிர்வுக்கு
    மிக்க நன்றி சகோதரி .உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
    நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் !............

    ReplyDelete
  27. தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. மிக அழகான ஓவியங்கள்!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. தீபாவளி வாழ்த்துகள்.
    மின்சாரம் எப்போவாவது வருவதால், மிகவும் பிந்தி விட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  30. ”ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை” சென்ற ஆண்டைப்போலவே சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.

    படங்கள் விளக்கங்கள் எல்லாமே அருமை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. குஞ்சாலாடுகள், அகல் விளக்குகளினால் காட்டப்பட்டுள்ள கோலம், குபேர யந்திரம் ஆகியவை மிகவும் சூப்பர்.

    ReplyDelete
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை” சென்ற ஆண்டைப்போலவே சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.

    படங்கள் விளக்கங்கள் எல்லாமே அருமை.

    பாராட்டுக்கள்.//

    வணக்கம் ஐயா..

    அருமையான கருத்துரைகளால் உற்சாகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  33. தீபாவளி அன்று லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்வது?

    ReplyDelete