
ஆண்டுதோறும் அரங்கன் அலாதியான அமர்க்களமாக தீபாவளி கொண்டாடுகிறான் ..

சூடித்தந்த சுடர்க்கொடியான் ஆண்டாளை கைத்தலம் பற்றிய பெரியாழ்வாரின் மாப்பிள்ளையாக ஸ்ரீரங்கநாதர் திவ்ய தம்பதியாக தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடி அருள் பொழிகிறார் ஸ்ரீரங்கத்தில் ...

முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர்.
கோவில் ஊழியர்களுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த்தூள் வழங்கப்படும்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நம்பெருமாளுக்கும், தொடர்ந்து ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள், விரலி மஞ்சள் ஆகியவை நம்பெருமாள் சார்பில் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளி அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.
பின்னர் மூலவர், உற்ஸவருக்குப் புத்தாடை, மலர் மாலை அலங்காரம் முடிந்ததும், ஆழ்வார், ஆச்சாரிய உற்ஸவர்கள் பெரிய சந்நிதிக்குக் கிழக்கே உள்ள கிளிமண்டபத்தில் பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பர்.
பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ரங்கநாதருக்காக தீபாவளி சீர் தரக் காத்திருப்பார்.
நம்பெருமாள் சந்தனு மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம் அலங்காரம் முடிந்தபின் பெரியாழ்வார் அரங்கனுக்கு தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்குவர்.
நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர் வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். வேத பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க, சீர் தரப்படும்.

நம்பெருமாளின் இந்த -ஜாலி (சாளி) அலங்காரம் - தீபாவளி தரிசனம், பக்தரின் வறுமை போக்கும். ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு இராது என்பது நம்பிக்கை.







ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான படங்கள்! பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என வருத்தம்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய அழகிய விளக்கத்தை இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனதைவிட்டு அகலாத படங்கள் பொருத்தமான விளக்கங்கள்
ReplyDeleteநல்ல தரிசனம் நன்றிங்க.
ReplyDeleteதீபாவளிக்கு முன்னால் நம்பெருமாளை உங்கள் பதிவு மூலம் சேவிக்க முடிந்தது.
ReplyDeleteநீங்கள் எனது பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்துள்ள இக்கட்டுரையின் தொடுப்பை என் பதிவிலேயே கொடுத்து உங்களுக்கு நன்றியும் கூறியுள்ளேன்.
http://wp.me/p2RUp2-e
நன்றி
அனைத்து படங்களும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையான படங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅரங்கன் கொண்டாடும் தீபாவளி பற்றிய அற்புதமான பதிவு.படங்களின் மூலம் அரங்கனை சேவித்து புண்ணியம் சேர்த்துக்கொண்டோம். நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteபழனி.கந்தசாமி said...
ReplyDeleteரசித்தேன்//
நன்றி ஐயா..
Seshadri e.s. said...
ReplyDeleteஅருமையான படங்கள்! பதிவிறக்கம் செய்ய முடிமுடியவில்லை என வருத்தம்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!/
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய அழகிய விளக்கத்தை இரசித்தேன். வாழ்த்துக்கள்!/
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள்..
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteமனதைவிட்டு அகலாத படங்கள் பொருத்தமான விளக்கங்கள்..//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Sasi Kala said...
ReplyDeleteநல்ல தரிசனம் நன்றிங்க./
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
அருமை அருமை.இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஸ்ரீரங்கத்துக்கு நேரே வந்த உணர்வு. எவ்வளவு அழகான படங்கள். தீபாவளி சரித்திரத்தையும் அழகாகச் சொல்லிப் பகிர்ந்திருக்கிறீர்கள். மிக மிக நன்றிமா ரங்க சேவை அமிர்தம்.
@@ Ranjani Narayanan said...
ReplyDeleteதீபாவளிக்கு முன்னால் நம்பெருமாளை உங்கள் பதிவு மூலம் சேவிக்க முடிந்தது.
நீங்கள் எனது பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்துள்ள இக்கட்டுரையின் தொடுப்பை என் பதிவிலேயே கொடுத்து உங்களுக்கு நன்றியும் கூறியுள்ளேன்.
http://wp.me/p2RUp2-e
நன்றி//
இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ‘திவ்ய தம்பதியரின் தீபாவளி’ என்ற பதிவின் தொடுப்பை இணைத்திருக்கிறார். அருமையான புகைப்படங்கள். தீபாவளித் திருநாளுக்கு முன்பாக திவ்ய தம்பதியரை சேவித்து ஆனந்தப் படுவோம்!
நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி//
எமது பதிவை இணைத்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
இனிய தீபாவளி வாழ்த்துகள் !!
Easy (EZ) Editorial Calendar said...
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅருமையான படங்கள்... வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்களுக்கு இனிய நன்றிகள்..
RAMVI said...
ReplyDeleteஅரங்கன் கொண்டாடும் தீபாவளி பற்றிய அற்புதமான பதிவு.படங்களின் மூலம் அரங்கனை சேவித்து புண்ணியம் சேர்த்துக்கொண்டோம். நன்றி...//
அற்புதமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஅருமை அருமை.இராஜராஜேஸ்வரி.
ஸ்ரீரங்கத்துக்கு நேரே வந்த உணர்வு. எவ்வளவு அழகான படங்கள். தீபாவளி சரித்திரத்தையும் அழகாகச் சொல்லிப் பகிர்ந்திருக்கிறீர்கள். மிக மிக நன்றிமா ரங்க சேவை அமிர்தம்.//
அமிர்தமாய் அருமையாய் கருத்துரைகள் வழங்கி சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...
நல்ல படங்கள். எங்கள் ஊர் ஆண்டாளும் இருப்பது அழகு.
ReplyDeleteஅருமையான திவ்வியதம்பதிகளின் தீபாவளி தரிசனம் தங்களினால் பெற்றுகொண்டோம் .மிகவும் நன்றி அம்மா.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஸ்ரீ ரங்கத்தை போலவே எங்கள் ஊர் பக்கமும் ஒரு ஆலயம் உள்ளது. வேலூருக்கு அருகில் பள்ளிகொண்டான் என்ற ஊரில். ஸ்ரீரங்க தரிசனம் போலவே இருக்கும்.பதிவில் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி, மின்வெட்டுக் காரணமாய் உடனே வர முடியலை. இன்னிக்குத் தான் இரண்டு மணி நேரமாத் தொடர்ந்து மின்சாரம் இருக்கு. :)))))
ReplyDeleteநீங்கள் பதிவில் சொல்லி இருக்கும் விஷயங்களை நானும் கேள்விப் பட்டேன். இங்கே ஸ்ரீரங்க வாசிகளும் கூறினார்கள். மதுரையிலும் வடக்குகிருஷ்ணன் கோயிலில் தைலச் சக்கையும் அரைத்த மஞ்சளும் தீபாவளிக்கு முதல்நாள் தருவார்கள். இனிமையான பதிவுக்கும், அழைப்புக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteதங்கத்தாலும், வைரத்தாலும் இழைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
அன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteதிவ்ய தம்பதியரின் தீபாவளி - பெர்இயாழ்வார் மாப்பிள்ளை ரங்க நாதருக்கு தீபாவளீ சீர் அளிப்பது பற்றிஅய் வீலக்கம் அருமை - படங்கள் அத்த்னையும் கண்ணைக் கவர்கின்றன - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
திவ்ய தம்பதியரின் தீபாவளி:
ReplyDeleteமுதல் படம் சும்மா ஜொலிக்குது.
மிடுக்கோடு தீபாவளி கொண்டாடும் பெருமாள்
பெரியாழ்வாரின் மாப்பிள்ளையாக
சூடித்தந்த சுடர்க்கொடியாளான ஆண்டாளின் கணவராக் .....
சூப்பரான தகவல்கள்.
>>>>>
நெற்றியில் அழகாக நாமம் போட்டுள்ள யானையாரும் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை போலவே மிடுக்காக உள்ளார்.
ReplyDeleteஉடம்பில் தொங்கும் மணிகளும் கால்களில் கொலுசும் அழகாக உள்ளன.
நல்லதொரு பதிவுக்கும், படங்களுக்கும்,அரிய பொக்கிஷமாக விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள், நன்றிகள்.
நம்பெருமாளின் இந்த - ஜாலி [சாளி] அலங்காரம், சீர் வரிசைகள், தீபாவளி தரிஸனம் எல்லாவற்றையும் பற்றிய விளக்கங்கள் அருமை.
ReplyDeleteஅனைத்துப்படங்களும் ஜோராக
வை ர மா க மின்னுகின்றன.
-oOo-
[எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது]
What a stuff of un-ambіguity аnd prеservenеѕs
ReplyDeleteof prеcious fаmіlіaritу on the topіc
of unρreԁiсted еmotіons.
Ϻy site: best acnе treament ()