Sunday, November 4, 2012

கடலுக்குள் கலாட்டா!

Animated candle in wreathAnimated candle in wreath

merry-christmas-bells-9029.gifled-bells-5004-76l.gifChristmas Bells Lights
Christmas candle surrounded by glowing Christmas lightssanta-gift060.gif




கடலுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் கலாட்டா!



வண்ணங்களின் ஜாலங்களும்,வடிவங்களின் கோலங்களும் அரிதினும் அரிதான கண்காட்சியையே கடலுக்குள் நடத்திக் கொண்டிருக்கின்றன. 


கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் இங்கிலாந்து நாட்டு கடல் உயிரியலாளர்   கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தொடர்புடையதாக 12 கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்.


கிறிஸ்துமஸ் மரம்:பாலிகீட்ஸ் என்ற விலங்கியல் பெயருடைய கடலில் நீந்தும் இந்த உயிரினம் கிறிஸ்துமஸ் மரம் போல காணப்படுகிறது. இதனை கடலில் இருந்து வெளியில் எடுத்தால் இதன் கால்பகுதிகளாக இருக்கும் உணர்விழைகள் அனைத்தும் ஒட்டிக்கொண்டு ஒரு குழாய் போலாகி விடும்.





கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி: கடலில் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து மிதந்து கொண்டே இருக்கும் இந்த உயிரினம் கடல் தாமரையின் குஞ்சுகள் வகையை சேர்ந்தது. இதன் தொப்பி போன்ற தோற்றம் விசேஷமானது.

Glowing mushrooms


காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.


அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. 

கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. 

இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன. 

இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன



கிறிஸ்துமஸ் பனித்துளி: பேபி பிரிட்டில் ஸ்டார் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இந்த உயிரினம் வானத்திலிருந்து பனி உதிர்வது போலவே கடலில் மிதந்து செல்கிறது.

கிறிஸ்துமஸ் வளையங்கள்: ஈகாம்பியா என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இத்தாவர மிதவை உயிரினங்கள் பார்ப்பதற்குக் கிறிஸ்துமஸ் மரங்களில் அழகாக தொங்கவிடப்பட்டிருக்கும் வளையங்களைப் போன்று பளபளப்பாகவும்,சுருள் வடிவிலும் காணப்படும். இந்த உயிரினங்கள் சூரிய வெளிச்சத்திலிருந்து தனக்குத்தானே ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரித்துக் கொள்வது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி: மெழுகுவர்த்தி போன்று தோற்றமளிக்கும் இந்த உயிரினம் ஒருவகையான நட்சத்திர மீனின் குஞ்சு. இதன் உணர்விழைகள் மெழுகுவர்த்தியின் ஜுவாலைகள் எரிவது போன்று தோற்றமளிக்கிறது.

கிறிஸ்துமஸ் மணி: கடலில் மிதந்து கொண்டே தன் வாழ்க்கையை நகர்த்தும் ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்தும் மணிகளைப் போன்று காணப்படுகின்றன. ஆண்டவரின் பிறப்பை அறிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் மணியைப் போலவே உள்ள இந்த உயிரினமும் தாவர மிதவை உயிரினங்களைத் தின்று உயிர் வாழ்கின்றன.
 
கிறிஸ்துமஸ் வாணவேடிக்கை காட்சி:
 பாப்பிள்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இத்தாவர மிதவை உயிரினங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து வானத்தில் வர்ணப்பூக்கள் ஜொலிப்பதைப் போல தோற்றமளிக்கின்றன. வட்ட, வட்டமாக பல அளவுகளிலும்,பல வடிவங்களிலும் கடலில் மிதந்து கொண்டிருப்பது இவ்வுயிரினத்தின் சிறப்பு

கிறிஸ்துமஸ் விளக்கு: டோலியோ லம் என்ற விலங்கியல் பெயருடைய இம்மிதவை உயிரினம் முதுகெலும்புள்ள மற்ற முதுகெலும்புமற்ற உயிரினமாகவும் விளக்கு போன்ற வடிவிலும் இருப்பது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் ராஜாக்கள்: இயேசு கிறிஸ்து பிறந்ததை வானில் தோன்றிய நட்சத்திரம் மூலம் அறிந்த 3 வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஜெருசலேம் நாட்டு மன்னர் ஏரோதுவை சந்தித்து பரிசுப் பொருள்களைத் தந்தார்களாம்.கடலில் வாழும் சிலந்தி நண்டுகளின் குஞ்சுகளும் பார்ப்பதற்கு அந்த 3 ராஜாக்களை நினைவு கூறும் வகையில் இருக்கின்றன.
Spider crab Wallpaper


கிறிஸ்துமஸ் மத்தாப்பு: மத்தாப்பு போல தோற்றமளிப்பவை புரோட்டோ சோவா. இந்த விலங்கியல் பெயருடன் அழைக்கப்படும் ஆதி உயிரினமான இது ஒரு செல் உயிரினமாகவும் இருப்பது இதன் சிறப்பு.

கிறிஸ்துமஸ் தேவதை: வெள்ளை உடையில் தோன்றும் தேவதைகள் போன்றுள்ள ஹெட்ரோ பிராங்கியா என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட சங்குகளும் இருபுறமும் இறக்கைகளை விரித்துக் கொண்டிருக்கின்றன. கடலில் ஜாலியாகச் சுற்றித் திரியும் இந்த உயிரினத்துக்கு ஒடுகள் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு.





கிறிஸ்துமஸ் நட்சத்திரம்: கிறிஸ்துமஸ் நட்சத்திரம் போன்று காணப்படும் இந்த உயிரினம் பெரிய அளவிலான நட்சத்திர மீனின் குஞ்சு. பளபளப்பாகவும்,பல வண்ணங்களிலும் காணப்படும் இவை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தொங்க விடப்படும் நட்சத்திரங்களைப் போல தோற்றமளிப்பது இந்த உயிரினத்தின் சிறப்பு.


Curiosities and bonus pictures


Image



crossota alba

Image[Christmas+Candles+Flowers+2007.jpg]

14 comments:

  1. படங்கள் அத்தனையும் கலக்கல்தான்...

    ReplyDelete
  2. படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது... அழகு அருமை... விளக்கங்களும்...

    மிக்க நன்றி அம்மா...

    ReplyDelete
  3. அருமையான படங்கள்.

    ReplyDelete
  4. கடலுக்குள் இத்தனை வர்ண ஜாலங்களா!
    அனிமேஷன் [தமிழில் என்ன?] மிகவும் அழகு.

    ReplyDelete
  5. அருமை அருமை.. பார்க்கப் பார்க்க அலுக்காத படங்கள்.

    ReplyDelete
  6. அருமையான புகைப்படங்களின் தொகுப்பு.பகிர்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. அழகிய விளக்கங்களுடன் பதிவும் படங்களும் அருமை

    ReplyDelete
  8. அற்புதமான புகைப்படங்கள் ,அருமையான செய்திகள் தொடருங்கள் !

    ReplyDelete
  9. அற்புதமான புகைப்படங்கள் ,அருமையான செய்திகள் தொடருங்கள் !!!!

    ReplyDelete
  10. அனைத்தும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete

  11. உங்களது ஆன்மீகப் பதிவு மட்டுமல்ல அறிவியல் பதிவும் படங்களுடன் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. கடலுக்குள் கலட்டா:

    அழகான படங்கள் + ஆச்சர்யமான தகவல்கள்.

    கடலுக்குள் தான் எவ்வளவு உயிரினங்கள். அவற்றின் உற்பத்திகள். இனப்பெருக்கங்கள். நினைத்தாலே தலையைச்சுற்றுவதாக உள்ளன.

    எப்படித்தான் ஒவ்வொரு தகவலாகப் பிடித்துத்தருகிறீர்களோ!

    விந்தையான கடல்வாழ் உயிரினங்கள் போலத்தான், தாங்களும், ஆனால் பூமியில்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. கடலுக்குள் கலட்டா:

    அழகான படங்கள் + ஆச்சர்யமான தகவல்கள்.

    கடலுக்குள் தான் எவ்வளவு உயிரினங்கள். அவற்றின் உற்பத்திகள். இனப்பெருக்கங்கள். நினைத்தாலே தலையைச்சுற்றுவதாக உள்ளன.

    எப்படித்தான் ஒவ்வொரு தகவலாகப் பிடித்துத்தருகிறீர்களோ!

    விந்தையான கடல்வாழ் உயிரினங்கள் போலத்தான், தாங்களும், ஆனால் பூமியில்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடலுக்குள் கலட்டா:
    //அழகான படங்கள் + ஆச்சர்யமான தகவல்கள்.//

    வணக்கம் ஐயா..


    அழகான ஆச்சரியமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய ந்னறிகள் ஐயா ..

    ReplyDelete